Tamil Madhura

Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29

ஹலோ பிரெண்ட்ஸ்,

உங்களோட கமெண்ட்ஸ் படிச்சேன். நன்றி உங்களது நேரத்துக்கும் கருத்துக்கும். பல புது வாசகிகளைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என் உழைப்பை இனம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. சித்ராங்கதாவின் ஒவ்வொரு பகுதியும் என்னை மிகவும் வேலை வாங்கியது. தகவல்களை போரடிக்காமல் தர ஆசைப்பட்டேன். உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம்

ஹ்ம்ம்… என்ன சொல்றது… முன்னமே நான் சொன்ன மாதிரி சரயுவின் வாழ்வில் இது ஒரு இருண்ட பகுதி. ஜிஷ்ணுவுக்கும் கூட.இந்த சோதனைகளுக்கு ஈடு செய்யும் விதமாகத்தான் இறைவன் சந்தோஷம் நிறைந்த பள்ளிப் பருவத்தை அவர்களுக்குத் தந்தானோ?

என் ஸ்வீட் புஜ்ஜிஸ் ஜிஷ்ணு-சரயுவுக்காக உங்களிடமிருந்து வரும் கண்டனங்களை ‘திட்டத் திட்டத் திண்டுக்கல், வைய வைய வைரக்கல்’ என்றெண்ணிக் கொள்கிறேன். உங்களது அன்புக்கும் வெறுப்புக்கும் நன்றி.அன்பு அதிகமாய் செலுத்துபவர்கள் மேல் உரிமையோடு கோபிக்கத் தோன்றும். நீங்கள் தாராளமாய் உங்கள் கருத்தை சொல்லலாம்.

கண்டிப்பாய் ஒத்துக் கொள்கிறேன் கனமான பகுதிகள்தான். படிக்கும் உங்களுக்கே வலி என்றால், அதனை நூறு முறை கற்பனையில் பார்த்து, எழுத்தில் வடிக்கும் எனக்கு அந்த வலியில்லாமலா இருக்கும்? ஆனால் சரயு இன்னும் சில வேதனைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. எத்தனை துன்பம் வந்தாலும் தளராத, கண்ணீர் விடாத போராளி அவள். கண்டிப்பாய் இதிலிருந்து மீண்டு வருவாள். அவள் என்ன செய்கிறாள் எப்படி மீள்கிறாள் என்பதை முப்பதாவது பகுதியிலிருந்து பார்க்கலாம்.

இந்தப் பகுதியில் ஜிஷ்ணு கல்யாணத்தின் பெயரால் endless loop-ல் எப்படி சிக்க வைக்கப் படுகிறான்? அவனது தொழில் என்னவாயிற்று? இடைப்பட்ட காலத்தில் சரயுவின் நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்.

நிறைய கேள்விகள் வருகின்றன.. பதிலாக அப்டேட்ஸ் முடிந்த அளவு சீக்கிரம் தர முயல்கிறேன். போன முறை இரண்டு பகுதிகள் தந்தேன். இந்த முறை மூன்று பகுதிகள் தருகிறேன். ஒவ்வொன்றிருக்கும் தனியே கமெண்ட்ஸ் தந்தால் நன்றாக இருக்கும். நேரமில்லாத போது அப்டேட்ஸ் தாமதமானால் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.

Chitrangatha – 27,28,29

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.