Tamil Madhura

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 54

நிலவு 54

 

“என்ன கிறுஸ்திகா அரவிந்நாதன், என்னை மறந்திட்டிங்க போல” என்ற அவள் பின்னிருந்த ஒரு குரல் கேட்க,

 

அந்தக் குரல் காதுவழியாக மூளைக்குச் சென்று அக்குரலுக்கு சொந்தமானவரை படம்பிடித்து காட்ட அவள் உதடுகள் ” அதர்வா” என்று உச்சரித்தது.

 

ஏனோ அவன் கூறியவைகள் ஞாபகம் வர உள்ளுக்குள் நடுங்கினாலும் அதை வெளிக் காட்டாது அவன் புறம் திரும்பினாள்.

 

“ஒரு சின்ன திருத்தம் கிறுஸ்திகா ஆரவ் கண்ணா” என்றாள் பெருமையாக.

 

அப்போதே அவனும் அவளைப் பார்த்தான், நெற்றி வகுட்டில் குங்குமம், கழுத்தில் தாலி உடன் சுமங்கலிப் பெண்ணாகவே இருந்தாள்.

 

“உனக்கு கல்யாணம் ஆயிருச்சா?” என்று அவன் அதிர்ந்து கேட்க,

 

“மிஸ்டர் அதர்வா இதை தான் உங்ககிட்ட இப்போ சொன்னதா ஞாபகம்” என்றாள் நக்கலாக.

 

“பரவால்லியே இப்போ கூட கண்ணை பறிக்கிறது போல சூப்பரா தான் இருக்க” என்று கூற அவள் உடல் கூச அவனை அறுவெறுப்பாகப் பார்த்தாள்.

 

“உனக்கு வெட்கமா இல்லை? கல்யாணம் ஆன பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவியா? சே உன்னை பார்க்கவே அறுவெறுப்பா இருக்கு” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“நீ என்ன சொன்னாலும் சரி உன்னை அடையாமல் நான் விட மாட்டேன், அதுவும் அடுத்த நாள் விடிய முன்னாடி, உன்னால் முடிஞ்சா உன்னை காப்பாத்திக்க” என்று கூற அவளுடைய சப்த நாடியும் அடங்கியது.

 

அவளருகில் வந்த சௌமி

 

“ஏ.கே அது அதர்வா தானே?” என்று கேட்க 

 

அவள் ஆம் என்று தலையாட்டினாள். 

 

“அவன் என்ன சொன்னான்? அவனை யாரு இந்த என்கேஜ்மன்டிற்க்கு அழைச்சது?” என்று அவள் கேட்க,

 

“தெரியல்லை டி, அதை விடு அவன் ஏதாவது உலறுவான், வா நாம போய் நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கிறு சௌமியை அழைத்துச் சென்றாள். 

 

கிறு ஆரவிடம் கூறியிருந்தால் அவள் பாதுகாப்பாக இருந்திருப்பாள். கிறு இதனை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது குடும்ப உறுப்பினர் அனைவருடனும் இருக்கும் போது அவனால் என்ன செய்துவிட முடியும் என்று தவறாக கணக்கிட்டு இருந்தாள். இதுவே அவனுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறியாமல்.

 

நேரம் கடக்க மாலை ஏழு மணியாகியது. கிறு சோர்வில் அமர அதைத் தூரத்தில் இருந்துப் பார்த்த அதர்வா வெயிட்டரிம் சில மாத்திரைகளை ஒரு ஜூசில் கலந்து அவனுக்கு பணத்தையும் வழங்கி அதை கிறுவிடம் வழங்கக் கூறினான். அதே நேரம் அவள் அருகில் ஆரவ் வந்தான்.

 

“என்ன மெடம் ரொம்ப டயர்டா இருக்கிங்க போல?” என்று ஆரவ் கேட்க,

 

“ஆமா கண்ணா, ரொம்ப டயர்ட் தான்” என்று அவன் தோளில் சாய அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு 

 

“நாம வேணுன்னா அவங்க வர முன்னாடி வீட்டிற்கு போலாமா?” என்று கேட்க,

 

“சரி டா” என்றாள் கிறு.

 

“நான் போய் மாமா, அத்தையிடம் சொல்லிட்டு வரேன்” என்று அவன் ரிங்கை கழற்றி எழுந்துச் செல்ல,

 

“டேய் எதுக்கு இதை கழற்றி வக்கிற?” என்று கிறு கேட்க,

 

“டிஸ்டர்பன்ஸா இருக்கு டி, இங்க பாரு ரெட் ஆகிறிச்சு அந்த விரல்.  நான் திரும்ப வரும் போது அதை போடுறேன்” என்று கூறிச் சென்றான்.

 

‘இவனுக்கு வர வர பொறுப்பு இல்லாமல் போயிருச்சு’ என்று அதை தன் பெருவிரலில் அணிந்துக் கொண்டாள். அப்போது வெயிடர் அவளுக்கு சொப்ட் டிரிங்சை வழங்க அதை குடித்து முடிக்க முன்னரே மயங்கினாள். இவள் பின் வாயிலுக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து இருந்தது அதர்வாவிற்கு அவளை கடத்துவது இலகுவாக இருந்தது.

 

அவளை கையிலேந்தி அவனுடைய காரில் கிடத்தியவன்  சிறிது தூரம் செல்ல ஆரவிற்கு அழைத்தான்.

 

“மிஸ்டர் உங்க பொன்டாட்டி என் கையில் இருக்கா, இன்றைக்கு ஒரு நாளைக்கு மட்டும் அவ என் பொன்டாட்டியா இருக்கட்டும். நான் எங்கே இருங்கேன் அதை உன்னால கண்டுபிடிக்க முடியாது. நீ எதிர்பார்க்காத ஒரு இடத்திற்கு உன் பொன்டாட்டியை தூக்கிட்டு போறேன்” என்று அழைப்பைத் துண்டித்து சுவிச் ஒப் செய்தான்.

 

“அதர்வா” என்று கேட் அருகில் நின்று கர்ஜித்தவன், 

 

“நான் எதிர்பார்க்காத இடம், எது எது”என்று மூளை யோசிக்க, 

 

“கிறு நீ என் பொன்டாட்டி, உன் மேல அவன் சுண்டு விரல் கூட படாது, நான் உன்னை காப்பாத்துவேன்” என்று அவளிடம் பேசியது அவன் மனம்.

 

சிறிது நேரத்தில் ஏதோ பொறி தட்ட உடனியாக அதை உறுதி செய்தவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். 

 

காரில் செல்லும் போது, கண்ணா, கண்ணா என்று முணக,

 

“நீ என்ன சொன்னாலும், இன்றைக்கு ஒரு நாள் நீ என் மனைவியா வாழுறதை உன் புருஷனாலயோ இல்லை அந்த ஆண்டவனாலேயோ தடுக்க முடியாது கிறுஸ்திகா” என்று கர்ஜித்தான்.

 

அந்த இடம் வந்தவுடன் அவளை கையில் ஏந்தியவன் ஒரு அறையில் இருந்த கட்டிலில் அவளை கிடத்தியவன் அவளைப் பார்த்து,

 

“உன் புருஷன் இப்போ நீ எங்க இருக்கன்னு அழைஞ்சி திரிஞ்சுட்டு இருப்பான், இப்போ நீ முழுசா எனக்கு சொந்தமாக போற” என்று கூறி அவள் அணிந்திருந்த லெகங்காவின் துப்பட்டாவில் கைவைக்கும் போது அவனது கையை இறுகப் பற்றியது ஒரு வலிய கரம்.

 

அவன் திரும்பிப் பார்க்க வேட்டையாடக் காத்திருந்த ஆண்சிங்கமாக கண்கள் சிவக்க, நரம்புகள் புடைத்து அவன் முன்னே நின்றிருந்தான் கிறுவின் கண்ணா. 

 

அவன் கையை அவன் பின் புறமாக மடக்கி மற்றைய கையால் முகத்தில் ஓங்கிக் குத்த அவன் மூக்கிலிருந்து இரத்தம் பீரிட்டு வடிந்தது. அதில் அதர்வா தடுமாற அவன் நெஞ்சில் ஓங்கி மிதிக்க அருகில் இருந்த கண்ணாடிக் கபோர்ட் உடைந்தது. 

 

‘சே, இதை அவசராமா கிளீன் பன்ன வேணுமே’ என்று நினைத்தவன் தன்னவளை அடைவேன் என்று கூறியதும், தற்போது அவனுக்கு வேலை வைத்த கோபம் இரண்டையும் சேர்த்து அவனைப் புரட்டி எடுத்தான். அதர்வாவை அவனுடைய சார்ட் கலரால் இழுத்து நடு ஹாலில் தள்ளிவிட்டான்.

 

“எவளோ தைரியம் இருந்தால் என் பொன்டாட்டியை தூக்கி இருப்ப? இந்த கை தானே தூக்கிச்சி” என்று கத்தி அவனின் கையை முறிக்க 

 

அவன் கத்தும் ஆஆஆஆ என்ற அலறலில் அவ்விடமே அதிர்ந்தது. அதே நேரம் மிடுக்கான தோற்றத்துடன் உள்ளே நுழைந்தார் 

ACP சரண். 

 

“டேய் போதும் டா செத்துரப்போரான்” என்று கூற

 

“இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகாத உங்க இடத்துக்கு அழைச்சிட்டு போ” என்று ஆரவ் கூறினான்.

 

“சரி டா, ஆமா நீ எதுக்கு ஆதியை கூப்பிட்ட அவன் ஏற்கனவே அவன் பொன்டாட்டி விஷயத்தில் டென்ஷனா இருக்கான். நீ இன்னும் டென்ஷன் பன்ற அவனை” என்று கூற

 

“யேன்டா அவனுக்கு என்ன? உன்னை தான் முதலில் அழைச்சேன்  நீ மொபைலை எடுக்க இல்லை. அதான் ஆதியை கூப்பிட்டேன்” என்றான் ஆரவ்.

 

“கொஞ்சம் பிசி டா, ஆதி கல்யாணம் பன்னிட்டான் டா, அதுவும் அவங்க குடும்ப எதிரி சிவபெருமாளோட பொண்ணு கிருஷியை டா” என்று கூற

 

“என்ன? அப்போ கிருஷி சிவபெருமாளோட பொண்ணா?” என்றான் ஆரவ்.

 

“அதை பற்றி அப்பொறமா பேசலாம். ஆமா நீ கரெக்டா உங்க வீட்டிற்கு தான் அவ வருவான்னு எப்படி கண்டுபிடிச்ச?” என்று சரண் கேட்க,

 

“அவன் சொன்னான் நான் எதிர்பார்க்காத இடம், அதனால் நான் அதர்வா இடத்துல இருந்து யோசிச்சப்போ எங்க புரபொடியை  நாங்கள் எப்பவுமே எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் எந்த புரொபடின்னு யோசிக்கும் போது தான் கிறுஸ்தி என் ரிங்கை போட்டது ஞாபகம் வந்தது. அதில் ஜி.பீ.எஸ் டிரெக்டர் இருக்கு அதை வச்சி கண்டுபிடிச்சேன்” என்றான் ஆரவ்.

 

“நீ முதலில் போய் கிறுஸ்திகாவை பாரு அவளை பயப்பட வேணான்னு சொல்லு” என்று சரண் கூற

 

“இல்லை மச்சான் அவளிடம் இதை சொன்னால் பயந்துடுவா, மெச் நடக்க போகுது. அவளால் ஒழுங்காக கன்சன்ட்ரேட் பன்ன முடியாமல் போயிடும், இதை மறைக்கனும். இப்படி ஒன்னு நடந்ததை நாம யார்கிட்டவும் சொல்ல தேவை இல்லை” என்று ஆரவ் கூற 

 

“சரி மச்சான் நான் வரேன்” என்று அதர்வாவை அழைத்துக் கொண்டு செல்ல ஆரவ் தன்னவளைப் பார்க்கச் சென்றான். 

 

உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்தவன் மற்றவர்கள் வரும் முன் ஆட்களை வைத்து புதிய கண்ணாடியை பொறுத்தி வைத்தான்.

 

கிறுவோ முணகிக் கொண்டு இருந்தாள். 

 

‘கண்ணா கண்ணா’ என்று.

 

அவளை கையிலேந்தி சோபாவிற்கு அழைத்து வந்தவன் அவளை சோபாவில் கிடத்தினான். 

 

அவளிற்கு மயக்க மாத்திரைகள் கலக்கப்பட்டு இருந்தை புரிந்துக் கொண்டவன் மிளகாயை அவளுக்கு சாப்பிட வைக்க அவளது மயக்கம் குறைய ஆரம்பித்தது. உறைக்கும் போது கண்கலங்கி கண்களை மெல்லத் திறந்தாள். 

 

“என்னடா இவளோ காரமா இருக்கு?” என்று ஆரவைப் பாரத்து கண்களை கடினப்பட்டுத் திறந்துக் கேட்க,

 

அவன் கண்களால் கையைக் காட்டினான். அதைப் பார்த்தவள் 

 

“ஏன்டா எனக்கு இப்படி அநியாயம் பன்ற?” என்று கேட்டுக் கொண்டே அவன் நெஞ்சில் சாய அவன் தைலத்தை எடுத்து அவள் கன்னத்தில் தேய்க்க அந்தக் காரம் கண்களைத் தாக்க அதன் எரிவு தாங்காமல் கண்களைத் திறந்தாள். கண்ணில் இருந்து கண்ணீர் வடிய அவனை திட்டிக் கொண்டே முகத்தைக் கழுவ ஆரம்பித்தாள். 

 

“யேன் டா இப்படி பன்ன?” என்று கிறு சண்டையிட 

 

“என்ன குடிச்ச? தூங்கி வழியிற, அதான் தூக்கம் வராமல் இருக்க இப்படி பன்னேன்” என்றான் ஆரவ்.

 

“திரும்ப இப்படி பன்னாத கண் எரியுது” என்றாள் கண்களைத் தேய்த்தப்படி.

 

மீண்டும் இவ்வாறு இவளிற்கு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று இருவருமே அறியவில்லை.

 

இரு என்று அவள் கண்களுக்கு அவன் ஊதிவிட ஓரளவு எரிவு குறைந்தது.

 

“பசிக்குது டா, நீ சாப்டியா?” என்று கிறு கேட்க,

 

“இல்லை இரு இரண்டு பேருக்கும் தோசை சுட்டு எடுத்து வரேன்” என்று கிச்சனினுள் புகுந்து தோசையை சுட்டு எடுத்து வந்து கிறுவிற்கு ஊட்டி அவனும் சாப்பிட்டான். கைகழுவி வந்தவன், 

 

“இரு அவங்க எல்லாரும் எங்க இருக்காங்கன்னு கேட்கலாம்” என்று கவினிடம் கேட்க, இன்னும் பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வருவதாகக் கூறினான்.

 

கிறு கால் வலிப்பதால் காலை சோபாவில் வைத்து அவளே பிடிக்க ஆரவ் அதைப் பார்த்து அவள் அருகில் வந்தான்.

 

“என்ன ஆச்சு கண்ணம்மா?” என்று அவன் கேட்க,

 

“கால் வலிக்குது டா” என்றாள்.

 

அவள் கால்களைப் பார்க்க வீங்கி இருந்தது.