Tamil Madhura

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 51

நிலவு 51

 

இறுதியாக AGC அணி வெற்றி பெற்று செம்பியன்ஷிப்பைப்  பெற்றுக் கொண்டது. அவர்களுக்கான மெடல்ஸ், ட்ரோபி என்பவை வழங்கப்பட, அதே இடத்திற்கு பணத்திற்காக விளையாடமாட்டேன் என்று கூறிய நால்வரையும் ஆரவ் மேடைக்கு அழைத்து வந்தான். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கோபம் வந்தாலும் நிகழ்வு முடிந்த பிறகு இதைப் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று விட்டனர்.

 

பின் நிகழ்வு முடிந்த பிறகு அவர்கள் நால்வரையும் நிகாரிகாவிடம் அழைத்துச் செல்ல அதே நேரம் அங்கு கிறுவும் அவள் குடும்பத்தினரும் சென்றனர்.

 

கிறு” என்ன நிகாரிகா என்னை இப்படி பார்க்குற? என் புருஷன் கூட இந்த அளவுக்கு என்னை பார்த்து இருக்கமாட்டான்” என்றாள் நக்கலாக.

 

நிகாரிகா எதுவும் கூறாமல் இருக்க, 

 

“இங்க பாரு உன்னை பழிவாங்கனும், அசிங்கபடுத்தனும் அப்படிங்குற எண்ணம் எனக்கு இல்லை, நீ அன்றைக்கு எங்களோட புனிதமான உறவுகளை கொச்சபடுத்திட்ட, அதனால் உன்னை இவங்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கனும்னு நினைச்சேன், அவளோதான். இப்போ நீ மன்னிப்பு மட்டும் கேளு” என்று கிறு கூற

 

நிகாரிகா தன் தவறை உணர்ந்து,

 

“சொரி, நான் மனசால மன்னிப்பு கேட்குறேன். ஆரவ் எனக்கு இல்லை அப்படிங்குற கோபத்துல, இவளை பற்றி விசாரிக்கும் போது கிடைச்சதை மட்டும் வச்சி பேசிட்டேன். ஐம் ரியலி சொரி” என்று கூறி அங்கிருந்து செல்ல அவள் பின்னே அவளுடைய பி.ஏ வும் செல்ல, அவள் பி.ஏ திரும்பி ஆரவிற்கு கட்டை விரலை உயர்த்திகாட்டிவிற்று சென்றாள்.

 

ஆரவ் அதைப் பார்த்து புன்னகைக்க கிறு அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள். அதே நேரம் இவர்கள் நால்வருக்கும் தமிழ்நாடு சார்பாக நடக்கவிருக்கும் ஸ்டேட் லெவல் விளையாட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் அனைவரும் சந்தோஷமாக சிரித்தனர்.

 

“இந்த பொண்ணுங்க நமளுக்கு துரோகம் பன்னிருக்காங்க அண்ணா” என்று வினோ கூற

 

“இல்லை வினோ, இது எல்லாமே என் பிளேன் தான், இதைப் பற்றி நான் வீட்டிற்கு போனதுக்கு அப்பொறமா சொல்லறேன். இவங்க மேல எந்த தப்பும் இல்லை” என்றான் ஆரவ்.

 

“ஜெசி,கீது, சௌமியை…” என்று அஸ்வின் கேட்க,

 

“அதற்கான பதிலையும் நான் ஊருக்கு போனதுக்கு அப்பொறமா சொல்றேன், நாளைக்கு நம்மள மீட் பன்ன முக்கியமான இரண்டு பேர் வருவாங்க ஊருக்கு. அதனால் நாம சீக்கிரமா ஊருக்கு போய்யாகனும்” என்றான் ஆரவ்.

 

அனைவரும் வீட்டிற்குச் செல்ல, கீது, ஜெசி, சௌமி, ஷ்ரவன்,ஹபீஸ் போன்றோரும் அவர்கள் குடும்பமும் சென்னையில் இருந்து கொடிகாமத்தை நோக்கிச் சென்றனர்.

 

வீட்டிற்கு போய்ச்சேரும் போது நள்ளிரவைத் தாண்டியது. இடையில் சாப்பிட்டுச் சென்றதால் அனைவரும் சென்றவுடன் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்றனர். ஷ்ரவன், ஹபீஸ், வினோ, அஸ்வின் ஒரு அறையில் தங்க, மீரா, ஜெசி, கீது, சௌமி ஒரு அறையில் தங்கினர். கவின், மாதேஷ் ஜோடியும் அவர்களது குடும்பமும் நாளை வருவதாகக் கூறி இருந்தனர்.

 

மற்றவர்கள் பிரஷப்பாகி உறங்க கிறுவின் அறையில் முதலில் குளித்த கிறு ஆரவ் குளித்து வரும் வரையில் பல்கனியில் நின்று இருந்தாள். நள்ளிரவில் வீசிய தென்றல் காற்று அவளை உரசிச் செல்ல அந்தக் காற்றின் குளிர்மையும் அவள் களைப்பிற்கு இதமாக இருக்க மழைச் சாரலும் அவள் நிலவு முகத்தை தீண்டி விளையாடியது. கண்களை மூடி அதை அனுபவிக்க, அவள் கள்வன் பல்கனிக் கதவில் சாய்ந்து அவளை இரசித்தான்.

 

அவள் முகத்தை மழைச் சாரல் தீண்டுவதைப் பார்த்தவன் அவள் அருகில் சென்று அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு அவள் கழுத்துவளைவில் முகம் புதைத்தான். தன்னவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் மெதுவாக கண்களைத் திறக்க ஆரவ் அவளை தன்புறம் திருப்பி அவள் முகத்தில் இருந்த மழைநீரை தன் கைகளால் துடைத்தான்.

 

அவனைப் பார்த்தவள் “ஐ லவ் யூ கண்ணா” என்றாள் தன் காதல் முழுவதையும் தன் வார்த்தைகளிலும், கண்களிலும் நிரப்பி.  ஆரவோ கைகளை கீழே விட்டு அவளையே பார்த்தான். அவனுக்கு தன் காதுகளை தன்னாலேயே நம்பமுடியவில்லை.

 

“இப்போ நீ ஏதாவது சொன்னியா?” என்று ஆர்வமாக கேட்க,

 

“ஆமா” என்றாள்.

 

“எ..எ…என்ன சொன்ன?” என்று கேட்க,

 

அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வர அதை அடக்கியவள், அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவன் கண்களைப் பார்த்து ” ஐ லவ் யூ கண்ணா” என்றாள். 

 

இதைக் கேட்டவன் அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். 

 

“கண்ணம்மா சத்தியமா நான் இதை எதிர்பார்க்க இல்லை டி, எனக்கு ஏதோ கனவு போல இருக்கு, நீ இவளோ சீக்கிரமா சொல்லுவேன்னு எதிர்பார்க்கவே இல்லை” என்றான்.

 

அவனை தன்னிடம் இருந்து விலக்கியவள் அவன் இதழைச் சிறைச் செய்து, இது கனவல்ல நிஜம் என்று நிரூபித்தாள். 

 

“இது கூட கனவு போல இருக்குடி” என்று கூற

 

அவன் தலைமுடியை பிய்த்து இழுக்க,

 

“ஏய் என்னடி ரொமேன்ஸ் பன்னிட்டு இருக்கும் போது திடீர்னு வைலன்சில் இறங்குற” என்று பாவமாய் அவள் முகத்தைப் பார்த்துக் கேட்க,

 

“வேறு எப்படி டா இது நிஜம்னு புரூவ் பன்னறது?” என்றாள்.

 

“சரி விடு. ஆமா ஏன் புரொபோஸ் பன்ன?” என்று கேட்க,

 

“என் கனவு நனவாகனும்னு, நீ ரொம்ப கஷ்டபட்டன்னு எனக்கு புரிஞ்சிது. அது மட்டும் இல்லை எனக்காக நீ எல்லாமே பன்ற, இப்போ இந்த காலநிலை கூட உனக்கு புரொபோஸ் பன்றதுக்கு ஒகேவா இருந்தது” என்றாள் அவன் அணைப்பில் நின்றுக் கொண்டு. 

 

அவள் நெற்றியில் இதழ்பதித்து, “நாளைக்கு பேசலாம், இப்போ தூக்கம் வருது கண்ணம்மா, ரொம்ப டயர்டா இருக்கு” என்று ஆரவ் கூற

 

“எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு, தைலம் தேய்த்து விடுறியா?” என்று ஆரவைப் பார்த்து கேட்க,

 

ஆரவ் அவளைப் பார்த்து சிரித்தான். 

 

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று கிறு கேட்க,

 

“நான் நேற்று சொன்னேனே, நீ என்னிடம் இப்படி கேட்பன்னு, அதற்கு நீ தீர்க்கதரிசியான்னு கேட்ட” என்றான்.

 

அவனை முறைத்து சென்று படுத்துக் கொள்ள ஆரவ் மறுபுறம் அமர்ந்து அவள் தலையை தன் மடிமேல் வைத்து தைலம் தேய்த்து மெல்ல பிடிக்க அச்சுகத்தில் அவள் உறங்கியும் போனாள். அவளை தலையணையில் எழா வண்ணம் உறங்கவைத்து அவளை அணைத்துக் கொண்டு அவள் அருகில் உறங்கினான் கண்ணம்மாவின் கண்ணா. 

 

அடுத்த நாள் காலை அனைவரும் வெகு சீக்கிரமா எழுந்து ஆரவ் கூறிய இருவரின் வருகைக்கான அனைத்து வேலைகளும் தடல்புடலாக நடந்தது. காலை பத்து மணி போல் மாதேஷ், கவின் ஜோடியும் அவர்கள் குடும்பமும் வருகை தந்தது. பெரியவர்கள் ஒரு புறம் அமர்ந்து பேச, சிறியவர்கள் அனைவரும் மற்றைய புறம் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

 

கிறு, “இவங்க மூன்று பேரும் என் பெஸ்ட் பிரன்ஸ்” என்று கூற

 

“அப்போ நாங்கள் யாரு டி?” என்று கேட்டனர் ஹபீசும், ஷ்ரவன்.

 

“ஐயோ சொரி டா எனக்கு மறந்தே போயிருச்சு” என்று 

 

“இவங்க ஐந்து பேருமே என்னோட பெஸ்ட் பிரன்ஸ்” என்று அறிமுகப்படுத்தியவள். தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினாள்.

 

“இவன் என் மீரு. அதாவது நான் தான் அவ, அவ தான் நான்” என்று கிறு கூற மீரு அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.

 

“உங்களை பற்றி ஏ.கே நிறைய சொல்லி இருக்கா, அவ சொன்ன பெயர்களில் உங்க பெயர் தான் அதிகம்” என்றாள் சௌமி. வினோ சௌமியின் குரலில் மயங்கி அவளையே பார்க்க அஸ்வின் காலால் அவன் காலை மிதிக்க,

 

“ஆஆஆஆ” என்று கத்தினான் வினோ.

 

“என்னாச்சு?” என்று ஹபீஸ் கேட்க,

 

“இல்லை ஒரு எறும்பு கடிச்சிருச்சு” என்று கூற சௌமி அவனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தாள்.

 

“இவன் என் முறைபையன் வினோத், மீராவோட அண்ணன்” என்று கூற சௌமி அவனைப் பார்க்க வினோவும் அவளைப் பார்த்தான். இருகண்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க, சௌமி வேகமாக தலையைக் கவிழ்த்திக் கொண்டாள்.

 

இதைப் பார்த்து மற்றவர்கள் மௌனமாக புன்னகைத்தனர்.

 

“இவன் என் புருஷன் ஆரவ் கண்ணா” என்று கூற

 

“இவரை பற்றி நீ சொன்னதே இல்லையே? உங்க மேரேஜ் arranged ஆ? love ஆ?” என்று கேட்க,

 

ஆரவ், “நாங்க எங்க கதையா முழுசா சொன்னதுக்கு அப்பொறமா, நீங்களே சொல்லுங்க” என்று தம் இருவரின் கதையைக் கூற

 

ஷ்ரவன்” சேர் இது கண்டிப்பா லவ் மேரேஜ் தான்” என்றான்.

 

ஹபீஸ் “ஆமா” என்றான்.

 

“இதை பற்றி அப்பொறமா விவாதிக்கலாம், நீ என்ன பிளேன் பன்ன? முதலில் அதை சொல்லு” என்று ஆரவிடம் கேட்டாள் கிறு.

 

“உன்னை விளையாட வைக்க தான் இந்த டூர்னமன்டே நடந்தது. நீ விளையாடனும்னா, அதற்கான சூழ்நிலையை உருவாக்கனும். என்ட் இ்ங்கே மூன்று பேர் இல்லாமலும் நீ விளையாடமாட்டாய். யேன்னா இவங்க விளையாடமல் இருக்கிறதுக்கு காரணம், நீ தான் அப்படிங்குற குற்ற உணர்ச்சியில் இருக்க. அதற்கு  இவங்க எல்லோரையும் கண்டுபிடிச்சி, மாமாவோட டீமில் சேர்க்கனும். 

 

நீ விளையாடுவதற்கான சிடிவேஷன், உருவாக்க பிளேன் பன்னன், உன் அப்பாவோட கௌரவத்துக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டன்னு தெரியும். அதான் அந்த நாலு பிளேயர்ஸ் கிட்டவும் உன்னை விளையாட வைக்குறதுக்காக பைனல் மெச் விளையாட முடியாதுன்னு சொல்லுங்க அப்படின்னு சொன்னேன். அதற்கான காரணம், நிகாரிகா அவளை வச்சி பிளேன் பன்னேன்.

 

நான் கவனிச்ச விஷயம் நிகாரிகாவை அவளோட பி.ஏற்கு பிடிக்காது. அதனால் பணத்தை வச்சி அந்த நான்கு பிளேயர்சையும் விலைக்கு வாங்க சொல்லுங்க அப்படிங்குற ஐடியாவை நான் அவ பி.ஏ விற்கு கொடுத்தேன்.  அவளுக்கு நாம தான் வின் பன்னுவோம்னு சொன்னேன். அவளும் நிகாராவிடம் அதை சொல்ல அவளும் அந்த பொண்ணுங்க கிட்ட பேசினா. நான் ஏற்கனவே இதைப் பற்றி சொல்லி இருந்ததால் அவங்களும் உன்னை விளையாட வைக்கிறதுக்காக, நிகாரிகா கேட்டதற்கு ஓகே சொன்னாங்க.

 

அப்பொறமா நான் நினைத்தது போலவே நீ விளையாட ஒத்துகிட்ட, அதே நேரம் உன் பிரன்சும் வந்தாங்க” என்று ஆரவ் கூறி முடிய கிறு கண்கலங்கி நின்றாள்.

 

ஆரவ் அவளருகில் சென்று அமர அவள் அவனை அணைத்துக் கொண்டாள். 

 

மற்றவர்கள் “ஓஓஓஓ” என்று கத்த அவள் வெட்கத்தில் ஆரவின் மார்பில் புதைந்துக் கொண்டாள்.

 

“ஆமா, அண்ணா இங்க மூன்று பேரையும் எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்று வினோ கேட்க,

 

“அதை நாங்க சொல்றோம்” என்று அவ்விடம் வந்தார்கள் ஆரவ் கூறிய இருவரும்.

 

“வா அஜெய், வா யஷூ” என்றான் ஆரவ்.