Tamil Madhura

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 48

நிலவு 48

 

ஆரவின் அருகில் சென்ற கிறு அவன் தோளில் இடித்தாள். அவன் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்டான்.

 

“என்ன அமைதியா இருக்க? ஹீரோ எங்க என்று கேட்குங்குறாபா?” என்று கண்ணடிக்க

 

அவள் இடையில் கைவைத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன், 

 

“நான் முக்கியமான வேலையா இருந்தேனே” என்றான்.

 

“அப்படி என்ன தலை போற வேலை உனக்கு? நான் அங்கே எவளோ கத்திட்டு இருந்தேன், சும்மா வந்து என் கூட பேசினியா?” என்று கிறு கேட்க,

 

“உனக்கு கோபம் வந்தப்போ உன் மூக்கு நுனி சிவந்து கன்னம் சிவந்து அப்படியே பார்பி டோல் போல இருந்த, அப்படியே கன்னத்துல முத்தம் கொடுக்கனும் மாதிரி இருந்தது, அதை எல்லோர் முன்னாடி பன்னி இருந்தால், அவங்க இரண்டு பேருக்கும் விழுந்த அரை அடுத்து எனக்கு  விழுந்திருக்கும், அன்றைக்கு நீ அடிச்சதை இப்போ நினைத்தாலும் கன்னம் எரியிது” என்று கூறஅவள் சிரித்தாள்.

 

” நீ பேசினது அப்போ சரியா? அதான் கோபம் வந்தது, பட் இந்த அளவுக்கு அடிப்பேன்னு நானே எதிர்பார்க்க இல்லை, சொரி” என்றால் தலைக் குனிந்து கவலை தோய்ந்த குரலில்.

 

“நீ அன்றைக்கு பன்னது தான் சரி, திருப்பி இதைப் பற்றி பேசக் கூடாது” என்றான். பின் இருவரும் மீரா இருக்கும் இடத்திற்கு நகர்ந்தனர்.

 

“அச்சு நீ புக் பன்ன ஹோலை கென்சல் பன்னு” என்று மீரா கூற

 

“மீரு இது உன் கனவு டி, ஆனால் இந்த தீப்தி இப்படி பன்னுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை டி” என்றான் அவள் கைகளை பிடித்துக் கொண்டு.

 

“அச்சு எவளோ ஒருத்தி இப்படி பன்னா, என் கனவை நான் மறந்திருவேன் நினைக்காத. இப்போ இல்லைன்னா என்ன? என்றைக்காவது என் கனவை நான் கண்டிப்பா நிறைவேற்றுவேன்” என்று கூற கிறு அதைக் கேட்டு அமைதியாக நின்று இருந்தாள்.

 

மற்றவர்கள் யாரும் அறியா வண்ணம் கிறுவைப் பார்த்தனர். பின் அனைவரும் கெஸ்ட் ஹவுசிற்குச் சென்றனர். அங்கு அமர்ந்து ஆண்கள் பேச பெண்கள் வேலைகளை செய்தனர். இரவு உணவு தயார் செய்யப்பட்டது. கிறு அறையினுள் சோபாவில் அமர்ந்து கண்களை மூடி மீரா கூறியைதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள். 

 

‘என் கனவு, நான் என்ன பன்னும்? ஒன்னுமே புரியமாட்டேங்குதே’ என்று மனதில் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

 

‘இல்லை நான் விளையாடமாட்டேன்’ என்று உறுதி எடுத்தாள். ஆரவ் அவளைப் பார்த்தவன் அவள் அருகில் அமர்ந்து அவளைத் தூக்கி தன் மடியில் அமர வைத்துக் கொண்டான்.

 

“என்ன மெடம் யோசிக்கிறிங்க?” என்று கேட்க,

 

“மீராவைப் பற்றி தான், கடைசி நிமிஷத்துல இப்படி நடந்திருச்சே” என்றாள் கவலையாக.

 

“கண்ணம்மா நம்ம லைப்பில் என்ன நடந்தாலும் அதில் ஒரு நல்லது இருக்கு, நாம யாரும் என்ன நல்லது இருக்குன்னு யோசிக்கிறதை விட்டுட்டு நம்மளை மீறி நடந்த விஷயங்களை பற்றி தான் யோசிப்போம். அதனால் தான் நிறைய பேரோட லைப் வீணாகுது. ஒன்னு இழந்தால் அதை விட பெட்டரா ஒன்னு கிடைக்க போகுதுன்னு அர்த்தம். அதை எல்லாருமே புரிஞ்சுகிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும். சோ மீராவிற்கும் ஏதாவது எதிர்பாராத பெரிய நல்ல விஷயம் நடக்கலாம்” என்று அவள் கன்னத்தில் இதழ்பதித்தான்.

 

அவனை முறைத்தவள் “அஸ்வின் என்ன பன்றான்? அவன் தான் ரொம்ப உடைந்து இருப்பான்” என்று கிறு கூற

 

“ஆமா ஆனால் மீராவோட காதல் அவனை சரிபடுத்தும்” என்றான்.

 

“வா கண்ணா சாப்பிடலாம்” என்று கூறி அவனை அழைத்துச் சென்றாள். 

 

அனைவரும் இரவு உணவிற்குப் பிறகு உறங்கச் சென்றனர். 

 

அஸ்வின் மீராவின் அறையிலேயே இருந்தான். அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தான்.

 

“எதுக்குடா இப்போ முகத்தை தூக்கி வச்சிகிட்டு இருக்க?” என்று கேட்க,

 

“உன்னை இந்த நிலமையில் பார்க்க முடியல்லை டி” என்று அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு அழ

 

“டேய் நீ ஆம்பளை பையன் டா, இப்படி அழற, நீ எப்பவும் கம்பீரமா கெத்தோட இருக்கனும்” என்று கூற

 

“உன் கிட்ட எனக்கு எந்த கெத்தும் தேவையில்லை” என்றான் சிறு குழந்தை போல

 

அவள் புன்னகைத்து கைகள் இரண்டையும் விரிக்க, வேகமாக அவளை அணைத்துக் கொண்டான்.

 

“ரொம்ப வலிக்குதா டி?” என்று கேட்க,

 

“இல்லைப்பா” என்றாள்.

 

‘எனக்கு வலிக்குது டா, ரொம்ப. நான் உனகிட்ட சொன்னால் நீ  கவலையா இருப்ப’ என்று தன்னோடு பேசினாள்.

 

அடுத்த நாள் அனைவருமே சென்னையை நோக்கி பயணமானார்கள். மூன்று நாட்களில் வீராங்கனைகள் ஒவ்வொரு கம்பனிக்காகவும் அறிவிக்கப்பட்டனர். இதில் ஒரு கம்பனிக்கு கமிடியின் மூலம் வழங்கும் ஐந்து வீராங்கனைகள் அதே கம்பனிக்காக விளையாடும் அணியில் நிச்சயமாக இருக்க வேண்டும். 12 பேர் வரை எத்தனை பேரையும் கம்பனிகள் தெரிவு செய்துக் கைள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

 

சில கம்பனிகள் இதில் பங்கு கொள்ளவில்லை எனக் கூற அதையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதியாக 16 அணிகள் உறுதியாயிற்று. அதில் ஆரவ், மாதேஷ், கவினின் கம்பனியும் பங்கேற்கவில்லை. பின் அனைவருக்குமான கோர்ச்சுகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளும் ஆரம்பமாகின. ஆரவும் தன்னுடைய வேலைகளை மும்முரமாக ஈடுபட்டு இருந்தான். மூன்று நாட்களாக அவன் வீட்டிற்கு வரவேயில்லை. இதற்கிடையில் மீராவும் ஒரளவிற்கு குணமாகியிருந்தாள்.

 

‘என்னை மட்டும் தனியா விட்டுட்டு போயிட்டானே இந்த பனைமரம்’ என்று அவனை திட்டியபடியே மூன்று நாட்களும் உறங்கினாள்.

 

ஆரவ் கவினிற்கு அழைப்பை ஏற்படுத்தினான். 

 

“மச்சான் நான் சொன்னது போல மாமா கம்பனியில ஏழுபேரை தவிற வேறு யாருமே சேர கூடாது. பார்த்துக்க” என்று கூற

 

“சரி டா, உன் பிளேன் படி எல்லாமே நடக்குது. இன்னும் இரண்டு நாளில் மெச் நடக்க இருக்கு. இது ஒன் டே மெச். அன்றைக்கே பைனல்சும் நடந்திரும். நீ இன்னும் வராமல் என்ன பன்ற?” என்று கேட்க,

 

“உனக்கு தெரியுமே டா, நான் இப்போ ஹபீஸ் வரும் வரைக்கும் இருக்கேன். அவன் வந்ததுக்கு அப்பொறமா அங்கே போக வேண்டியது தான். நான் நாளைக்கே வந்திருவேன்” என்றான்.

 

“சரி டா, மாதேஷ் அவன் வேலையை சின்சியரா பார்க்குறான் டா. நான் ஷாக்ஆகிட்டேன் டா” என்று கூற

 

“அவன் தலைவரா அவன் பொறுப்பை செய்றான் உனக்கு எதுக்குடா பொறாமை?” என்று ஆரவ் கேட்கும் போதே,

 

“மச்சான் ஹபீஸ் வந்துட்டான். நான் அப்பொறமா பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தான் ஆரவ்.

 

பின் ஆரவும் அங்கிருந்த வேலைகளை முடித்த பிறகு சென்னையை நோக்கிப் பயணமானான்.

 

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அனைவருக்குமே பரபரப்பாகே இருந்தது. ஏனென்றால், அடுத்த நாள் டூனமர்ன்ட் நடக்க இருப்பதால். அன்று காலை பத்து மணியைப் போல் ஆரவ் வீடு வந்து சேர்ந்தான்.

 

நேராக குளியலறைக்குச் சென்றவன், குளித்து வெளியே வரும் போது கிறு காபியையும், காலை உணவையும் எடுத்து வந்தாள்.

 

அவனை அமர வைத்தவள் அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள். 

 

“என்ன மெடம் பேச மாட்டேங்குறிங்க?” என்று கேட்க,

 

அவனை முறைத்தவள் “இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்க. சண்டை போட வைக்காத” என்று ஊட்டிவிட்டாள்.

 

“தனியா விட்டுட்டு போயிட்டேன்னு கோபமா?” என்று கேட்ட உடனேயே அவள் கண்களில் இருந்து கண்ணீர் ‘மலமல’ என்று கொட்ட ஆரம்பித்தது.

 

அவள் கையில் இருந்த தட்டை ஓரமாக வைத்தவன், அவள் முகத்தை கையிலேந்தி

 

“கண்ணம்மா எதுக்கு அழற?” என்று கேட்க,

 

“பிளீஸ் டா, என்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போயிறாத, எங்க போறன்னாலும் என்னையும் சேர்த்து அழைச்சிட்டு போ, நீ இல்லாமல் ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியல்லை. நிம்மதியா மூச்சு கூட விடமுடியல்லை. நீ இல்லாமல் என்னால வாழ முடியாது டா” என்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். 

 

“என்னை இவளோ மிஸ் பன்றியா? அப்போ கண்டிப்பா என்னை ரொம்ப லவ் பன்ற போல இருக்கே?” என்று கேட்க,

 

“ஆமாடா இடியட்” என்று கூறி முடியும் போது அவள் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

 

தன் மூன்று நாட்களின் பிரிவையும் ஈடு செய்தவன் அவளை விடுவித்து அவளை அணைத்துக் கொண்டான்.

 

“கண்ணம்மா எனக்கு ரொம்ப தலை வலியா இருக்கு டி, தைலம் தேச்சு விடுறியா?” எனக் கேட்க,

 

அவனை அமர வைத்தவள் அவன் நெற்றியில் தைலம் தேய்த்து விட்டு தலையை மென்மையாக பிடிக்க ஆரம்பித்தாள்.

 

“நாளைக்கு இதே வேலையை நான் உனக்கு பார்ப்பேன், நீ வேணுன்னா பார்த்துக்கயேன்” என்றான்.

 

“நீ என்ன தீர்க்கதரிசியா?” என்று கேட்க

 

“அப்படியே வச்சிக்கோ” என்றான். 

 

“பேசாமல் இரு, நான் தலையை  பிடிச்சு விடுகிற வரைக்கும்” என்றாள்.

 

அவள் வெண்டைக்காய் விரல்கள் அவன் அலைப்பாயும் கேசத்தில் ஊர்வலம் வர அப்படியே அவனை உறக்கம் ஆட்கொள்ள அவள் மேலேயே சாய்ந்துக் கொண்டான். அவன் எழா வண்ணம் அவனை தலையணையில் உறங்க வைத்தவள் உணவுத் தட்டையும், காபி கப்பையும் எடுத்துச் சென்றாள்.

 

மூன்று மணி போல் எழும் போது, மாதேஷ், கவின், ஜீவி, அனைவரும் அங்கு வருகை தந்தனர். தர்ஷூவை நாளைக்கு டூர்னமன்டிற்கு அழைத்துச் செல்ல இருப்பதால் அவள் டயர்டாகாமல் இருக்க இன்று அவளை ஓய்வு எடுக்க வைத்தான் மாதேஷ்.

 

ஆரவ் கீழே வந்தவுடன் டையனிங் டேபளில் அவன் அமரந்தான். கிறு அவனுக்கு உணவை ஊட்ட கை நீட்டினாள். ஆரவ் மற்றவர்கள் அனைவரையும் பார்த்து சங்கோஜப்பட,

 

“மச்சான் நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம் டா, நாங்க வேணுன்னா கண்ண மூடட்டா?” என்று கவின் கேட்க, மற்றவர்கள் சிரித்தனர்.

 

ஆரவ் அவனை முறைக்க, கிறு அவனுக்கு ஊட்டிவிட்டாள். ஆரவ் உண்டு முடித்தவுடன், ஆரவ், மாதேஷ், கவின், அரவிந், அஸ்வின் தனியாக சென்று பேசினர்.

 

இங்கு ஜீவி, மீரா, கிறு மூவரும் அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். பின் ஆறு மணி போல் மாதேஷ், கவின், ஜீவி அவர்களிடம் கூறி விடைப் பெற்றனர்.

 

அடுத்த நாள் காலை அனைவரும் டூர்னமட்டிற்காக வேலைகளை செய்தனர். அனைவருமே எட்டு மணியைப் போல் டூர்னமன்ட் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தனர். அங்கே விளையாடும் கம்பனிகளின் எம்.டி களும், மற்றைய  கம்பனிகளின் எம்.டி, சி.இ.ஓ வருகை தந்து இருந்தனர். அதில் நிகாரிகாவும் இருந்தாள்.

 

ஆரவ் கவினிடம் சென்றவன்,

 

“மச்சான் மாமாவோட டீமில் எத்தனை பேர் இருக்காங்க?” என்று கேட்க,

 

“ஏழு பேர் டா” என்றான் கவின்.

 

“நான் சொல்கிற பெயர்களையும் மாமாவோட டீமில் சேர்த்துக்க” என்று கூற

 

கவினும் எழுத ஆரம்பித்தான்.

 

“ஏ.கிறுஸ்திகா, ஜெ. சௌமியா, எஸ்.கீதா, என்.ஜெசீரா” என்று கூற

 

மாதேஷ், கவின், ஆரவ், அஸ்வின் புன்னைகத்தனர்.

 

“இன்றைக்கு நீ இங்க விளையாடுவ கிறுஸ்தி” என்றான் ஆரவ்.