பாகம் 11
கண்டு கொண்ட காதல் நோயை சொல்லிவிடத்தான்
துடிக்கிறேன்- கையெட்டும் தூரத்தில் நீ இல்லாதால்
என நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்…
காற்றின் உன் வாசத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
************************************************************************************************************************
கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன்!
மெல்லிய குரலில் குமார் கட்டிலில் படுத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தான். உள்ளூரில் வராத காதல் வெளிநாட்டிக்கு வந்ததிலிருந்து நித்தமும் அவனை படுத்தியது. ஸ்ருதியின் நினைவு அவனை அலைக்கழித்து கொண்டிருந்தது.
இது காதாலா! இல்லை நட்பா! என்று குழப்பமான எல்லைக்குள் நின்று கொண்டிருந்தவனுக்கு .. இது காதல் தான் உள்ளம் அடித்து சொன்னது. அவளுடனான இந்த தற்காலிக பிரிவு அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது!
அவளை காணாத பொழுதுகளெல்லாம் வீண் என ஒவ்வொரு வினாடியையும் நகர்த்திக் கொண்டிருந்தான்!
நகரும் நொடிகளோ, அவளுடனான காதலை அவனுக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தது.
உரக்கச் சொன்னால் மட்டும் போதுமா, அவளிடம் சொல்ல வேண்டாமா! அவனின் நெஞ்சம் அவனைப் பார்த்து கேள்விக் கேட்க? அவசரமாக கைப்பேசியை கையில் எடுக்க, பிறகு மனதை மாற்றிக் கொண்டு கீழே வைத்துவிட்டான்!
தன்னுடைய காதைலை அவளின் முகம் பார்த்து, சொல்ல வேண்டும் என்று எனோ அந்த வினாடி அவனுள் ஆசை பேரலையாய் எழுந்தது.
அந்த பொக்கிச நொடிகளை அனுபவிக்க அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது!
எனோ அவளிடம் பேச வேண்டும் என விடாமல் மனம் துடிக்க, சரி சாதாரணமாகவது பேசாலாம் என முடிவு செய்து அவளுக்கு தன் கைபேசியில் அழைத்து பேச ஆரம்பித்தான்!
அவளும் கலகலப்பாக பேசினாள்!
“குமார் உங்களுக்கு ஒரு சந்தோசமான விசயம்!”
“என்ன விசயம்?”
“வண்டி எடுக்க அப்பா ஒத்துக் கொண்டார்!”
“ஹீரே!” குமார் சந்தோச ஒலி எழுப்பினான். “எப்படி சாதிச்சீங்க மேடம்?” குமார் ஆச்சரியமாக குரல் எழுப்பினான்.
“சாப்பிடமாட்டேன் படமோட்டி தான்!”
“நிஜமாவே சாப்பிடலையா?”
“நிஜமாகத்தான்… !”ஸ்ருதி இழுத்து சொன்னாள்
“வாழ்த்துக்கள்!”
“நன்றி”
“நான் ஊருக்கு வந்தவுடன் உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேண்டும்!”
“இப்பவே சொல்லுங்களேன்!”
“இல்லை, இல்லை வந்தே சொல்கிறேன்!”
“ம்.. சரி!” என்று போனை கீழே வைத்தவளுக்கு என்ன முக்கியமான விசயம் என்று சிறிது நேரம் யோசித்து விட்டு தோளை குலுக்கி விட்டுவிட்டாள். குமார் தன்னிடம் காதல் சொல்ல விளைகிறான் என்று அவள் நினைக்கவே இல்லை.
ஏனெனில் இருவரும் ஒரு எல்லைக்குள் நின்று சதிராட்டாம் ஆடிக் கொண்டிருந்தார்கள்! எல்லா விளையாட்டும் ஒரு நாள் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று பெண்ணவளுக்கு புரியவில்லை.
குமாரோ, சந்தோமாக உறங்க ஆரமித்தான்.
*********************
அந்த கல்யாண மண்டபம் கலகலத்துக் கொண்டிருந்தது.
பச்சைப் பட்டுத்தி மயிலாய் நடந்து வந்து தேவதையாய் மணவறையில் அமர்ந்தாள் ஸ்ருதி!!
சாந்தமும்,மிதமான புன்னகையுமாய் அமர்ந்திருந்தவளை பார்த்தவர்களுக்கு அவள் தேவதைப் பெண் போல தெரிந்தாள்!
நம்மை சுற்றி உள்ளவர்களின் வேதனையை உணர்ந்து அவர்களின் கண்ணீரை துடைக்கு முயலும் ஒவ்வொருவரும் தேவதை தான். அழகும்.. பணமும்.. படிப்பும் ஒருவரை தேவதையாய் மாற்றுவதில்லை.
ஸ்ருதியின் பெற்றோரும்,ஸ்வேதாவின் பெற்றோரும் காலில் சக்கரம் சுற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தார்கள்.
ஸ்வேதாவின் பெற்றோரின் கண்களுக்கு தங்கள் மகள் ஸ்வேதாவே மணவறையில் அமர்ந்திருந்ததைப் போன்று இருந்தது. தன் பெண்ணுக்கு செய்ய வேண்டியதையெல்லாம் அவளுக்கு செய்து அழகு பார்த்தார்கள்.
அவளும் அவர்களின் அன்பை மனமாற ஏற்றுக் கொண்டு இரு பெற்றோரின் மகளாய் நின்று கொண்டிருந்தாள்.
மெல்ல நடந்து வந்தவள் மணமகன் அருகில் வந்து அமர்ந்தாள். தன் அருகில் வந்து அமர்ந்தவளை மெல்ல திரும்பி பார்த்தான் பிரணவ்!!!!
பிரணவ் தன்னை திரும்பி பார்ப்பதை உணர்ந்த ஸ்ருதியும் திரும்பி பார்த்தாள். மெல்லிய புன்னகையுடன் அவனை பார்க்க, அவனோ டக் கென்று திரும்பிக் கொண்டான்.
“கொஞ்சம் புன்னகைத்தால் முத்தா உதிர்ந்துவிடும்!” ஸ்ருதி முணுமுணுத்தாள்.
“வாயை மூடிட்டு உட்காருடீ” பிரணவ் கடுப்புடன் கூறினான்.
“நான் ஏன் சும்மா இருக்கணும்!! “ சண்டைக் காரி ஸ்ருதி கொதிதெழுந்தாள்
பிரணவ் அவளை முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
“டார்லிங், தங்கம்ன்னு இந்த வாய் என்னை எத்தனை தடவை கொஞ்சி இருக்கு!”
‘அடப்பாவி தான் விளையாட்டு பேசியதை எல்லாம் இந்த பிசாசு எதோ காதலை கொட்டி சொன்னது போல் சொல்லுதே’ பிரணவ் அதிர்ந்து போய் பார்த்தான்.
அவளோ அசரமால் அவனை பார்த்தாள்.
அசைந்து கொடுத்தாத ஸ்ருதி, பிறகு அத்தனையும் விணாகிவிடும் , வீராப்பாய் மனதில் நினைத்தவள் தன் நிலை இரங்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“திமிர் பிடிச்ச கழுதை!” நன்றாக அவளுக்கு கேட்டுமாறு எரிச்சலாய் சொன்னவன் மந்திரத்தை சொல்வதற்காக திரும்பி அமர்ந்து கொண்டான்.
அவளும் தன் மன உணர்வுகளை மறைத்து கொண்டு அக்னி குண்டத்தை நோக்கி அமர்ந்து மனமார வேண்டிக் கொண்டாள்.
‘அம்மா அகிலாண்டேஸ்வரி, என்னுடைய ஒவ்வொரு நொடியிலும் என்னுடன் இருக்க வேண்டும். என் வாழ்க்கையை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் தாயே! நீயே கதி’ மனதார வேண்டிக் கொண்டு கண்களை திறந்தவளுக்கு முதலில் கண்ணில் பட்டது குமார் தான்.
சிறு திடுக்கிடலுடன் நிமிர்ந்து அமர்ந்தவள், சில வினாடிகளில் தன் உள்ளத்தை நிலைப்படுத்திக் கொண்டு அவனை பார்த்து புன்னகைத்தாள்.
அவர்களுக்கு எதிரே கீழே அமர்ந்திருந்த குமார் மெல்லிய புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
தன் மனதின் உணர்வுகளை உள்ளே புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
இது யாருக்கான தண்டனை. அவன் உள்ளம் அவனை பார்த்து கேள்வி கேட்டது.
இந்த திருமணத்திற்கு வந்திருக்க கூடாதோ?
நூறாவது தடவையாக யோசித்தவன் தலை உலுக்கி விட்டுக் கொண்டான். இல்லை ஸ்ருதியின் கல்யாணத்தில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் சொல்லிக் கொண்டவன், அழுத்தமாக நிமிர்ந்து அமர்ந்தான்.
அங்கு மந்திரங்கள் முடியும் தருவாயில் இருக்க, தன் கையில் இருந்த அட்சதையை தயாரக வைத்திருந்தான் குமார்.
ஸ்வாதியின் பெற்றோரும் தாரை வார்க்க, பிரணவ் வீட்டின் பெரியவர்கள் என்ற முறையில் ஸ்வேதாவின் பெற்றோர் எதிரில் நின்று திருமண சடங்கை முடித்து வைத்தனர். பிரண்வின் தாயும் அந்த சடங்கில் இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்க, மூவராக குமாரின் அருகில் நின்றிருந்தனர்.
மனிதனின் நம்பிகைக்காக உருவாக்கப்பட்டவை தான் சடங்குகள், அவை மனதின் உணர்வுகளை தீண்டும் போது அது உடைக்கப்படுவதில் தவறில்லை! சட்டங்கள் மட்டுமல்ல சில சடங்குகளும் திருத்தப்பட வேண்டியவை தான்!!
பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன், ஸ்வேதாவின் தம்பியின் பிரியத்துடன், குமாரின் மனமார்ந்த வாழ்த்துகளுடன், பிரணவ் ஸ்ருதியை தன் பாதியாய் இணைத்து கொண்டான்!!
உன் வாசமாவாள்!!!