Tamil Madhura

காதல் மொழி ❤️ – (கவிதை)

கடத்திச்செல்லும் நின் குறுகுறு பார்வையில் இழையோடும் ஓராயிரம் காதல் மொழி…

உன் பார்வையின் காந்தமா…பார்வை உணர்த்தும் காதலின்  காந்தமா விடை அறியா மனது…

உன் நினைவுகள் குறுக்கிடும் தருணமெல்லாம் தானாக என் இதழ் நீளும் புன்னகை உணர்த்தும் உன் மீதான காதலை…

அரவணைப்பாய் உன் புயம் சாயும் வேளையில் எல்லாம் உன் காமமில்லா காதலில் கரைந்து தொலைகின்றேன்…

உன் விரல் கோர்த்து நடக்கின்ற போதெல்லாம் நான் என்பதே நீதானடி…என உணர்த்தாமல் உணர்த்தும் உன் விழிகளின் காதல் மொழியில் நித்தமும் உன்னில் திளைத்துக் களிக்கின்றேன்…

ஆம் காதலின் மொழி…அதற்கு கோவம் கூட காதல் தான்…அன்பை வெளிப்படுத்த நித்தமும் போராடும் அன்பின் மொழியும் அதுவே…

வரமாய் அமைந்த காதலில் மௌனம் கூட காதல் மொழி தான்…

ராஜிபிரேமா…