Tamil Madhura

கமலா ப்ரியாவின் “தேவை” கவிதை

தேவை

இந்த உலகம்

வாய்ப்புகளால் சூழப்பட்டது

இங்கே யாரும்

கண்ணீர் விட்டு கரைந்து போக

அவசியமில்லை

போராடத் துணிந்த

எவருக்குமே

பிரகாசமான எதிர்காலம்

படைக்கப்பட்டிருக்கிறது

தகுதியுள்ள எவருக்கும்

உதவிக்கு நீள்வதற்கு

கரங்கள் ஆயிரம்

காத்திருக்கின்றன

அத்தனைக்கும் தேவை

“நான் வாழ வேண்டும்;

சாதித்துக் காட்ட வேண்டும்”

என்ற உந்துதல் மட்டுமே!