வணக்கம் தோழிகளே,
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். கற்றுக் கொள்வதற்கு வயது பொருட்டல்ல. ஆர்வமும், முயற்சியுமே முக்கியம்.
அந்த வரிசையில் தையல் கலைப் பற்றிய காணொளிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.
இந்தத் தையல் விடியோக்கள் துணிகளைத் தைப்பது பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே. சிலவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மற்ற வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
சில சமயம் ஆல்டர் செய்யத் தரும் பணத்திற்கு புது துணியே வாங்கிவிடலாம் போலிருக்கிறது என்று நினைப்பதுண்டு. அந்த சமயங்களில் தையல் கற்றுக் கொள்ளாமல் போனதற்காக நானே என்னை திட்டியிருந்திருக்கிறேன்.
சமையலைக் கற்றுக் கொள்வதைப் போல அடிப்படை தையலையும் கற்றுக் கொள்வது எந்த நாளும் கை கொடுக்கும்.
இந்தக் காணொளிகளைக் காணுங்கள். ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா