வணக்கம் தோழமைகளே,
ஒரு முறை வாசகர் ஒருவர் பேசும்போது ஒவ்வோரு சைட்டிலும் கதைகள் முடிந்ததை பாலோ செய்ய கஷ்டமாக இருப்பதாகவும். கதை முடிந்தது தெரிந்தால் படிக்க வசதியாக இருக்கும் என்றும் சொன்னார்.
நாங்கள் கதை எழுத ஆரம்பித்தபோது அமுதாஸ் ப்ளாக்கில் தகவல்களை அப்டேட் செய்து எங்களது கதைக்கான லிங்கினை அமுதாசில் தருவோம். அதே போன்றதொரு பொதுவான இடம் ஒன்றிருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்ததாலேயே இந்த சிறு முயற்சி.
இங்கு யார் வேண்டுமானாலும் வந்து முழுகதை முடிந்ததை ஒரு பின்னூட்டமாக இடலாம். கூடவே அந்தத் தளத்தின் அல்லது ப்ளாகின் லிங்கையும் தரலாம். கதை சில நாட்களுக்கு மட்டுமே ஆக்டிவாக இருக்கும் என்றால் அதனையும் தெரிவிக்கலாம்.
தயவு செய்து இந்தப் பகுதியில் பிடிஎப் பகிரவோ, எழுத்தாளர்களின் விருப்பமில்லாது லிங்க் பகிரவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா