வணக்கம் பிரெண்ட்ஸ்,
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது பதிப்பாக திருமகள் நிலையத்தில் இந்த புத்தகக் கண்காட்சியில் வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன்ன தோழிகள் கேட்டுப் பார்த்துவிட்டு தகவல் சொல்லுங்கள்.
இனி புதிய கதை பற்றிய அறிவிப்பு. அடுத்த கதையின் பெயர் ‘உன் இதயம் பேசுகிறேன்’. இதுவரை எனக்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா