ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி.
விபிஆர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க எனது கதைகள் அனைத்தையும் நினைவு வைத்துக் கொண்டு கமெண்ட்ஸ் தருவது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… வானத்தில் பறக்காத குறை. நன்றி விபிஆர்.
வம்சி – ‘கண்மணியே காதல் என்பது’ பாடினாலும் காதம்பரியின் கேள்வி வம்சியின் ‘காதல் என்பது எதுவரை?’. வஞ்சிக்கொடி மன்னன் ‘நெஞ்சமதில் நீயடி’ன்னு சொன்னாலும் கைத்தலம் பற்றக் கனாக் கண்டானா இல்லையா என்பதில்தான் குழப்பம். இதெல்லாம் நல்லபடியா சால்வ் ஆகி ‘மணமகளே மருமகளே வா வா ‘ன்னு அழைத்து செல்லும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம்.
(பாட்டு சிலருக்கு கேட்கவில்லை என்று சொன்னார்கள். ஃபையர் பாஃக்ஸில் வேலை செய்கிறது)
அன்புடன்,
தமிழ் மதுரா