ஷாரதா கேட்ட மாதிரி நவராத்திரி ஸ்பெஷல் உண்டோ இல்லையோ நான் படிச்ச விநாயகர் சதுர்த்தி செய்திகளை உங்க கிட்ட பகிர்ந்துகிறேன்.
முதலில் நாம் பார்க்கப் போவது ‘ரிந்து கல்யாணி ரத்தோட்’ எனும் மும்பை பெண்மணி கணேஷ சதுர்த்தியைக் கொண்டாடும் விதம். கேக் மற்றும் பேக் செய்வதில் கைதேர்ந்த இவர் ‘ரினி பேக்ஸ்’ எனும் கேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்த வருடத்தில் ஸ்பைடர்மென், பாஹுபலி என்று பல அவதாரம் எடுத்த பிள்ளையார் இவரது கைவண்ணத்தில் சாக்லட்டில் வடிவமைக்கப் பட்டார். இந்த சிலையை முப்பத்தி ஐந்து கிலோவில் வடிவமைக்க இவருக்கு ஐம்பது மணி நேரமானதாம்.
ஸ்பெஷலா போடுற அளவுக்கு இதில் விஷயமில்லையே என்று சொல்லும் நண்பர்களுக்கு. இந்த சிலையை விநாயக சதுர்த்தி முடிந்தவுடன் கடலில் கலப்பதில்லை. பதிலுக்கு பாலில் கரைத்து, நூற்றுக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சாக்லேட் மில்க் என்று தருகிறார்.
உங்களின் நல்ல மனசுக்கு உங்க வாழ்க்கையும் சாக்லெட் மில்க் போல இனிப்பான இருக்கட்டும் ரிந்து.