வணக்கம் தோழமைகளே,
போன பதிவுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பழைய பாடல்களுக்கும் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
இன்றைய பதிவு நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று – உமைபுரத்து மக்கள் இடம் பெயரக் காரணமான நிகழ்வு எது? – என்பதற்கு விடையளிக்கும். ஆதிரனின் கதை ஆரம்பத்தில் இருந்தே நெற்கலன், குதிர், குரளி போன்ற அந்த காலத்தில் புழங்கி வந்த சொற்களை முடிந்தவரை பயன்படுத்தி இருக்கிறேன். அந்த வரிசையில் மாட்டு வண்டி, கூட்டு வண்டி, சிவப்பு மழை ஆகியவை இந்தப் பதிவில்.
இனி இன்றைய பதிவு
உதிரி செய்திகள் – திருவண்ணாமலையின் காளை மாடுகள் அந்த காலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் உழுவதற்கும் வண்டியில் பூட்டுவதற்கும் சிறந்தவையாகக் கருதப்பட்டதாம்.
‘சிவப்பு மழை’ கற்பனை இல்லை. பூமியின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது. சிவப்பு நிறத்துக்குக் காரணம் வானில் மிதந்து கொண்டிருக்கும் தூசியில் மழை நீர் கலப்பதால் என்று சிலரும். இல்லை அவற்றில் மனிதரோ இல்லை உயிரினமோ இல்லாத புது விதமான ரத்த செல்கள் கலந்திருக்கிறது என்று சிலரும் வாதாடுகிறார்கள். இலங்கையிலும் கேரளாவிலும் சமீப காலம் வரை இந்த மர்ம மழை பெய்து வருகிறது. இதனைப் பற்றிய ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான விக்கிபீடியா விளக்கம் இதோ – சிவப்பு மழை
பதிவைப் படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.