வணக்கம் தோழமைகளே,
போன பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி. எனது கேள்விக்கு தேவி பதில் சொல்லியிருந்தார். நன்றி தேவி.
நான் படித்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாரதர் வாயுபகவானிடம் வளர்ந்து கொண்டே செல்லும் மேருபர்வதத்தை அடக்கி வைக்க சொன்னாராம். வாயுவும் தன் பலத்தை மேரு மலையில் காட்டினாராம். ஆனால் கருடன் தன் சிறகுகளால் மூடி மேருவுக்கு ஒரு ஆபத்தும் வராமல் காத்தாராம். எனவே கருடன் இல்லாத சமயம் பார்த்து வாயு தனது வேகத்தை அதிகரித்து மேரு பர்வதத்தின் சிகரத்தைப் பெயர்த்து கடலில் தள்ளினானாம். அதுதான் இலங்கைத் தீவாயிற்று என்று எங்கோ படித்த நினைவு.
போன பகுதியில் ஆதிரன் என்று சொல்லி முடித்திருந்தேன். இன்று யார் ஆதிரன் என்று பார்க்கப் போகிறோம். பழங்காலத்து நிகழ்வை இந்தப் பதிவில் சொல்ல முயன்றுள்ளேன். படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.