ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
ஒரு முறை, எனது அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்த சமயம், என்னுடன் வேலை செய்த பிற நாட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் உரையாடல். அதில் ஒருவனுக்கு பெண்தோழியுடன் உறவு முறிந்ததால் சற்று கவலையாக இருந்தான்.
“வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. மிகவும் சோர்வாக உணர்கிறேன். வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை. எல்லாம் வெறுப்பாக இருக்கிறது”
“பேசாமல் இந்தியப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துக்கொள். உன்னிடம் உண்மையாக இருப்பாள். உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவாள்”
இதற்குப் பொருந்துமாறு ஒரு திருமண பந்தத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியப் பெண்களின் இந்தப் பக்குவமும், மன உறுதியும் , அவர்கள் கட்டிக்காக்கும் பொறுமையும் தான் உலகம் முழுவதும் அவர்கள் விரும்பப்படுவதற்குக் காரணம்.
இந்தப் பகுதியிலிருந்து சிவபாலனின் கதை தொடங்குகிறது.சிவாவின் வாழ்க்கையில் நர்த்தனாவின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு அத்தியாயத்தில் கதை முடிகிறது.
அன்புடன்,
தமிழ் மதுரா