வணக்கம் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. பலர் கதையை ஊகித்து சொல்லியிருந்தீர்கள். அது சரியா என்று இந்த பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள். டைவேர்ஸ் செய்வதற்கு இதெல்லாம் காரணமாக ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தீர்கள். மனித மனம் மெல்லிய உணர்வுகளைக் கொண்டது. உணவும் உடையும் மட்டும் மனதிற்குப் பத்தாது உரிமையுள்ளவர்களிடம் அன்பு, பாசம், அரவணைப்பு, காதல் எல்லாம் எதிர்பார்க்கும். அது கிடைக்கத் தவறினால் தகராறுதான்.
கணவன் மனைவிக்கு பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர்களின் கலகத்தால் பிரிந்த குடும்பம் எத்தனையோ இருக்கிறது. சுமன், தாய்க்கும் தங்கைக்கும் முக்கியத்துவம் தந்ததில் தவறில்லை. ஆனால் வைஷாலிக்கு நல்ல கணவனாக இருந்தான் என்று நினைக்கிறீர்களா? சுமனை வில்லனாக ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அங்கிதாவைக் கண்மூடித்தனமாக நம்புகிறான். அதில் சிறு சதவிகிதமாவது அவனே கதியாய் வந்த மனைவி மேல் வைத்திருக்கலாம்.
நம் நாயகிக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுதலும்.
இன்றுடன் வைஷாலியின் ப்ளாஷ்பேக் முடிந்து சிவபாலனின் கதை ஆரம்பிக்கிறது.
அன்புடன்
தமிழ் மதுரா