Tamil Madhura

வார்த்தை தவறிவிட்டாய் (Final update)

ஹாய் பிரெண்ட்ஸ்,

வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை ஒவ்வொரு பகுதியிலும் அவர் இருந்தார். முடிவு படித்துவிட்டு அவருக்கு மிகவும் திருப்தி. இந்த முறை  என் தோழிகள் சில பேரிடம் படித்து அவர்கள் எண்ணங்களை  சொல்லுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் வேலைப்பளுவுக்கு நடுவே படித்து சொன்னார்கள். எல்லாருக்கும் முடிவு மிகவும் பிடித்திருந்தது.

உங்க எல்லாருக்கும் 1000 Thanks from my heart to yours.

முன்பே சொன்ன மாதிரி இது ஒரு வித்யாசமான கதை. முடிவும் வித்யாசமாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். இதற்கு பலமாய் பத்மாவின் கவிதைகள்.அதுவும் இந்தக் கடைசி அத்தியாயத்தில் வரும் இந்தக் கவிதையைத்தான் சில மாதங்களுக்கு முன் முகநூலில் படித்தேன்.  நான் நினைத்த அதே முடிவு நாலே வரிகளில் நச்சென்று சொல்லி இருந்தார். சற்று மாற்றி கதையில் உபயோகப்படுத்திக் கொண்டேன். உணர்ச்சி ததும்பும் இந்தக் கவிதைகளை எங்களுக்குத் தந்ததுக்கு நன்றி பத்மா.

இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு முன் ஒரு தோழி அவர் சொந்தக்காரப் பெண்ணுக்கு இதே போல் ஒரு சம்பவம் வாழ்க்கையில் நடந்தது என்று வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. சட்டரீதியாக பிரச்சனையை அணுகுங்கள் தோழி. அத்துடன் அந்தப் பெண்ணின் பாதுகாப்பான வாழ்வுக்கும், அவர்  சுயகாலில் நிற்கவும்  ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கான பதிலை நீங்கள் சிந்தித்தால் மட்டும் போதாது அந்தப் பெண்ணும் சேர்ந்து கண்டறிய  வேண்டும். கண்டிப்பாக கல்வியைத் தொடர வழி செய்யுங்கள். அவருக்கு துணிவையும் நம்பிக்கையையும் தாருங்கள்.

இப்போது கதையைப் பற்றி பார்ப்போம். பூர்வஜாவுக்கு ஏன் கடுமையான தண்டனை தரல என்று கேட்கலாம். கிட்டத்தட்ட நாப்பது வயதில் வேலை இல்லாம நிற்பதே இவளுக்கு ஒரு தண்டனைதான்.  நிஜத்தில் இந்த மாதிரி பெண்கள் எல்லாம் நல்லாவே இருப்பாங்க. இவங்க மேல சபலப்பட்ட ஆண்கள் தான் மனைவி, மக்கள், சொத்து,  மரியாதை எல்லாம் இழந்து கஷ்டப்படுவாங்க.  கதையின் இறுதிப் பகுதியைப்  படிங்க, படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை எழுதுங்கள். உங்களோட எண்ணத்தை அறிய ஆவலா இருக்கேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 15

இந்தக் கதையின் போது நான் சொன்ன மாதிரியே நீங்க சித்ராங்கதாவை மறந்துட்டு பானுவைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது எனக்கு சந்தோஷம். இப்போது விடைபெறுகிறேன். மற்றுமொரு படைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா