Tamil Madhura

வார்த்தை தவறிவிட்டாய் – 9

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

இப்ப கதைக்கு வருவோம்

உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி பானு என்ன செய்வா? சண்டை பிடிப்பாளா?   வீட்டை விட்டு வெளிய போய்டுவாளா? இப்படி பல கேள்விகள்.

அம்மா வீட்டு ஆதரவு இல்லை. படிப்பு மறந்தே போயிடுச்சு. வெளிய அலைஞ்சு வேலை தேடிக்கிற தகுதியோ திறமையோ  இல்லை. இந்த தமிழ் மதுரா இப்படி ஒரு கதாநாயகியத் தந்திருக்க வேண்டாம். சரயுவோட சூட்டிகைல பாதியாவது பானுவுக்கு இருந்திருக்கலாம்னு கம்பேர் செய்து என்கிட்டே ஆதங்கப் பட்டிருந்திங்க. சரயு அம்மா அப்பா இல்லாம தானே போராடி ஒவ்வொரு படியா முன்னேறினா. அவள் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை தைரியமாக்கியது.

பானுவோ அம்மா அப்பா என்று பாதுகாப்பான கூட்டில் வளர்ந்து, தகப்பனால் பத்திரமாய் ஒரு நல்ல குடும்பத்தில் ஒப்படைக்கப் பட்டாள். அவளுக்கு பெரும்பாலான பெண்களைப் போல குடும்பமே  உலகம். இப்படிப்பட்ட பெண் கணவனின் துரோகத்தை எதிர்கொள்ளும் நிலைமை வந்தால்….

இந்தப் பகுதிக்கு  பலம் சேர்ப்பது   பத்மா க்ரஹாமின் கவிதைகள். ஒவ்வொரு வரியும் ரசிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கிறது. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ கதையை நான் தொடங்க நினைத்த நேரம், முகநூலில் அவரது கவிதைகள் சிலவற்றைப் படித்து அசந்துவிட்டேன். ஏனென்றால் அவை அப்படியே பானுவின் மனநிலையைப் பிரதிபலித்தது. பத்மா எனக்குக் கவிதைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்ததுடன். புதிதாகவும் சில கவிதைகளையும் உங்களுக்காக எழுதியிருக்கிறார்.  பத்மா உங்களது கவிதைகளுக்கு மிக்க நன்றி.

Mirror, Mirror on my wall
I want to be pretty, thin and tall
Mirror Mirror if I change my hair
May someone will start to care?
Mirror Mirror if I starve myself,
At least I will be beautiful, forget my health
Mirror Mirror if I cut my wrist,
Will I feel like I exist.

இது காதலில் தோல்வியுற்ற பெண் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பதைப் போன்று வரும். இந்தக் கவிதையை தமிழில் பானுவுக்காக வடித்துக் கொடுத்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இந்த ஆங்கிலக் கவிதையை விட அதிகமான தாக்கத்தை பத்மாவின் கவிதை தரும்.

வார்த்தை தவறிவிட்டாய் – 9

நீங்க படிச்சுட்டு சொல்லப் போகும் கமெண்ட்ஸ் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

தமிழ் மதுரா.