ஹாய் பிரெண்ட்ஸ்,
நன்றி நன்றி நன்றி. உங்களோட கருத்துக்களையும் ஆதங்கத்தையும் படிச்சேன். தினந்தோறும் செய்திகளையும், கண்ணால் பார்த்த, காதால் கேட்ட நிகழ்வுகளையும் கோர்த்தே ‘வார்த்தை தவறிவிட்டாய்’ உருவானது.
நீங்களும் இதே போல் நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருகிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு அனுப்பிய செய்தியின் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன். அந்த வகையில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரு கதையாக இல்லாமல் பானுப்ரியா எனும் உங்கள் தோழியின் வாழ்க்கையில் நிகழும் திருப்பமாய் நினைக்கிறீர்கள்.
கதையிலாவது அந்த வெகுளிக்கு கண்டிப்பாய் நல்லது செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருகிறீர்கள். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். எனது பொறுப்பு அதிகமாகிவிட்டதாய் உணருகிறேன்.
இனி முக்கியமான இன்றைய பதிவுக்குப் போகலாமா
அன்புடன்,
தமிழ் மதுரா