Tamil Madhura

வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்

ஹலோ பிரெண்ட்ஸ்,
எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது? உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.

எப்படி இருக்கிங்க? சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை  ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப முடியல).

இன்னமும் ஜிஷ்ணுவும் சரயுவும் உங்க நினைவை விட்டு அகலவில்லைன்னு எனக்கு நீங்க அனுப்பின தகவல்கள் மூலம் தெரிஞ்சுட்டேன். எங்களால சரயுவையும் ஜிஷ்ணுவையும் மறக்க முடியாதுன்னு நீங்க சொல்றது என் மனதில் ஒரு திருப்தியை தருகிறது. My purpose is to entertain myself first and other people secondly – John D. MacDonald

எனக்கு பிடிச்சதை நான் ரசிச்ச அதே அளவுக்கு நீங்களும் ரசிச்சதுக்கு நன்றி.

எனக்கு திருப்பதி லட்டு பிடிக்கும், Ferroro Rochet chocolate ரசிச்சு சாப்பிடுவேன் , எனக்குப் பிடித்த ரெஸ்டாரன்ட்டில்  Apple and almond crumbles அருமையா இருக்கும். இப்படி   ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட்.  ஒண்ணு சாப்பிடும்போது மத்தது கூட கம்பேர் பண்ண மாட்டேன்.

நீங்கள்லாம் புத்திசாலியாச்சே…. சாப்பாட்டை பத்தி ஏன் சொன்னேன்னு உங்களுக்குப்  புரிஞ்சிருக்குமே….  ஆமாம், சித்ராங்கதாவை அங்கேயே பார்க் பண்ணிட்டு வாங்க.

விஜயதசமி அன்னைக்கு புதுஸா தொடங்கினா நல்லதாம்… நம்ம புது கதையை அன்னைக்கே தொடங்கிடலாமா? டைட்டில் பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டு  உங்க கமெண்ட்ஸ் பகிர்ந்துக்கோங்க செர்ரி ஃபைஸ்.

அன்புடன்,

தமிழ் மதுரா

[scribd id=241744200 key=key-nKTDiEJZ3VoDpDNU8212 mode=scroll]