Tamil Madhura

Chitrangathaa – 22

chitrangathaa – 22

ஹலோ பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. உங்க கேள்விகள் எல்லாத்தையும் படிச்சேன். அதுக்கு விடைகள் ஒவ்வொண்ணா பார்க்கலாம்.

சரயுவோட அன்பை, காதலை புரிஞ்சுகிட்டிங்க. சின்ன குழந்தை மாதிரி இருக்கு அவ அன்புன்னு சொன்னிங்க. ஜிஷ்ணுவின் அன்பைக் கூர்ந்து கவனிச்சிங்கன்னா அதிலும் சரயு மேல அவனுக்கிருக்கும் கல்மிஷமில்லாத அன்பும், அக்கறையும் சேர்ந்து வெளிப்படும். இவர்களோடது மனம் சார்ந்த காதல், சிறு வயதில் ஆரம்பித்து அவர்கள் நேசம் படிப்படியாய் வளர்ந்துக் காதலா கனிஞ்சிருக்கு. இதில் ஜிஷ்ணு அவளை அக்கரையாத்தான் பார்க்க முடியும். காதல் பார்வைப் பார்த்தால் இதுவரை ஜிஷ்ணு அவள் மேல் செலுத்திய அன்பே கேள்விக்குறியாகி விடும்.

இதுதான் காதல் இப்படித்தான் காதலிருக்கும்னு ஒரு definition காதலுக்குக் கிடையாது என்பது என் கருத்து. சரயு-ஜிஷ்ணு காதல்தான் சிறந்தது அப்படின்னும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஆச்சிரியத்தோடு பார்க்கும் உலகின் தலை சிறந்த காதலுக்கு எந்த வகையிலும் இந்த அன்பு குறைந்ததில்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்களேன்.

உங்களோட மிகப் பெரிய கேள்வி இவ்வளவு அன்பு செலுத்தின இவங்க ஏன் பிரிஞ்சாங்க? அதுக்கான விடைதான் இன்னைக்கு அப்டேட். இந்தப் பகுதியை நிஜம்மாவே வலியோடதான் எழுதினேன். என்னோட எல்லாக் கதைகளிலும் என் கூடவே வந்து எனக்கு தக்க சமயத்தில் ஆலோசனையும் திருந்தங்களையும் சொல்லும் வனிதாவுக்கும் இந்தப் பகுதி திருப்தி (அவங்க என்னோட தோழி மட்டுமில்ல என்னுடைய மிகப் பெரிய விமர்சகர் கூட… ). நன்றி வனிதா.உங்களது நேரத்துக்கும் ஆலோசனைக்கும்.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி, என் தெலுகைப் படிச்சா… ஆந்திராவில் யாராவது சீத்தலைசாத்தனார் இருந்தா எழுத்தாணியால தலைல குத்திட்டுப் பிராணஹித்தி செய்திருப்பார். நான் என்னதான் வலியோட எழுதினாலும் விஜி சுஷில் கைபட்டு அது தெலுகில் வரும்போது ஜிஷ்ணுவே எனக்கு வேற மாதிரி தெரியுறான். இன்றைய பகுதியில் அவன் பேசினதைக் கேட்டு என் கண்களிலும் நீர். நன்றி விஜி.

சித்ராங்கதா கொஞ்சம் பெரிய கதையாவே வந்துட்டு இருக்கு. உங்களை கதையோட ஒன்ற வைக்க எனக்கு நேரம் தேவைப் பட்டது. இந்தப் பகுதி இடைவேளைன்னு(பகுதி ஒன்றுன்னு கூட நீங்க சொல்லிக்கலாம்) வச்சுக்கலாம். இனிமே மற்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.

இப்ப சொல்லுங்க…. கதை பிடிச்சிருக்கா? சரயு உங்களைக் கவர்ந்தாளா? விஷ்ணு/ஜிஷ்ணு உங்களைக் கவர்ந்தானா? உங்களோட கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க. கதையின் ஒவ்வொரு அப்டேட்டிலும் என்னோட நேரம் மட்டுமில்லாமல் என் குடும்பத்தோட நேரமும் இருக்கு.ஏன்னா அவர்களுக்குத் தர வேண்டிய நேரத்தைத்தான் உங்களுக்குத் தருகிறேன். நீங்க பதிலுக்கு ஒரு வார்த்தை எழுதினால் நான் போகும் பாதை சரியா தவறா என்று கணிக்க எனக்கு வசதியாய் இருக்கும்.

அடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா.