அத்தியாயம் 32 காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலியாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டியும் பெரியம்மாவும். ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ
Tag: Thulasi madam
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 31தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 31
அத்தியாயம் 31 பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள். நடு இரவு இரண்டே முக்கால் மணி சுமாருக்கு
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 30
அத்தியாயம் 30 “இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால்
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 29தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 29
அத்தியாயம் 29 “கோவில் வழிபாடு – முதலிய பல உடனடியான பொது நன்மை சம்பந்தப்பட்ட அவசர விஷயங்கள் தீர்ப்பைப் பொறுத்துக் காத்திருப்பதால் ஒரு வாரம் என்பது மிகவும் அதிகமான காலதாமதமாக இருக்குமோ?” என்று கருத்துத் தெரிவித்தார் எதிர்த்தரப்பு வக்கீல். அவருடைய கோரிக்கைக்குப்
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 28தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 28
அத்தியாயம் 28 மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல்
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 27தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 27
அத்தியாயம் 27 கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடியவர்கள் எனத்தாம் கருதிய பட்டியல் ஒன்றை முதலில் தயாரித்துக் கொண்டார் வேணு மாமா. சந்திப்பதற்காக
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 26
அத்தியாயம் 26 கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம்
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 25
அத்தியாயம் 25 தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 24
அத்தியாயம் 24 ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. ‘சொல்லாமற் செய்வர் பெரியோர்’ – என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும்
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 23
அத்தியாயம் 23 வேணு மாமா ரவியைக் கேட்டார். “எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்.” “எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?” சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 22தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 22
அத்தியாயம் 22 பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை. சர்மா புன்முறுவலோடு
தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21தீபம் நா. பார்த்தசாரதியின் ‘துளசி மாடம்’ – 21
அத்தியாயம் 21 ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து