Tamil Madhura அறுவடை நாள் அறுவடை நாள் – 11

அறுவடை நாள் – 11

This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or persons, living or dead, is entirely coincidental.

அத்தியாயம் – 11

காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்ததும் இரண்டு நாள் விடுமுறை எடுத்து போன ட்ரிப் கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டதை நினைத்து சற்று வருத்தத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தார். 

‘ராஜாராம் கொடுத்திருந்த மூன்று வார கெடுவில் ஒரு வாரம் இப்படி சென்று விட்டது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் இந்த மண்டை ஒட்டு கேசில் ப்ரோக்ரஸ் காமிக்க வேண்டுமே! சரி இன்று போய் தென்னாடனை சந்தித்து விட்டு வரலாம்’

“தென்னாடன் சாய்ந்திரம் வீட்டுக்கு வந்து உங்களை பார்க்கிறேன் சொல்லி இருக்காரு மேடம்” வயிற்றில் பாலை வார்த்தாள் அல்லி. 

!அப்பாடி… கேசில்  ஏதாவது ப்ரோக்ரஸ் தெரிஞ்சதா?”

“ ஓரளவு புரோக்ரெஸ் தெரிஞ்ச மாதிரி தான் இருக்குது மேடம். இன்னைக்கு சாயந்திரம் அத பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா? ஏன்னா இன்னும் சில விஷயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருவதற்கு விரும்பறேன். அதுக்கான தகவல் எல்லாம் இதுல குறிச்சி வச்சிருக்கிறேன்” என்று விஜயாவின் முன் இருந்த கம்ப்யூட்டரில் இருக்கும் டாக்குமென்ட் செய் ஓபன் செய்து காண்பித்தாள்

அதில் கண்களை ஒட்டியவரே “ஏட்ட நான் கூப்பிட்டேன்னு வரச்  சொல்லு” என்றார்

“அந்த சிகப்பு கார் கேஸ் என்னாச்சு?அவங்க நாலு பேரும் என்ன செஞ்சீங்க?”

“சைக்கிள் காரனுக்கு அடி அவ்வளவா இல்ல அப்படின்னு டாக்டர் சொல்லிட்டாரு மேடம். அப்புறம் அவங்க கிட்ட இருந்து வேற எந்த பொருள்களையும் பறிமுதல் பண்ண முடியாததுனால கஞ்சா கேஸ்க்கு நம்மளுக்கு ப்ரூப் கம்மியா இருந்தது. சோ, பான்பராக் இதெல்லாம் சேர்த்துட்டு ஒரு பைன மட்டும் போட்டு அனுப்பி விட்டுட்டாங்க. நாங்களும்  ரிலீஸ் பண்ணிட்டோம்”

“அப்படியா” என்று யோசித்தார் விஜயா. “சரி கிரேசை வரச் சொல்லுங்க”

“கிரேஸ் அந்த பொண்ண விசாரிக்க சொன்னேனே. தற்கொலை கேஸ் 20 வயசு பொண்ணு. ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அப்படின்னு வாட்ஸ் அப்ல தகவல் அனுப்பி இருந்தீங்களே. அதை பத்தி கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க”

“அந்த பொண்ணுக்கு ஏதோ மனநோய் போல இருக்கு மேடம். கல்யாணம் பண்ணது  நல்ல இடம் தான். அவங்க வீட்டுக்காரர்  சொந்த தொழிலில் சம்பாரிச்சுட்டு இருக்கார். 

அங்க அம்மா அப்பா நல்லா பணம் எல்லாம் கொடுத்து சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. இருந்தாலும் அந்த பொண்ணுக்கு கொஞ்ச நாளா தற்கொலை பண்ணிக்கணும்  என்ற எண்ணம் வந்து அடிக்கடி வந்துட்டே இருக்கு போல இருக்கு திடீர்னு வந்து தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கு”

“ஏன் திடீர்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணுது? என்ன விஷயம்னு விசாரிச்சீங்களா? சின்ன வயசுல இருந்தே அப்படித்தானா அந்த பொண்ணு இல்ல இப்ப சமீபத்தில் வந்ததா?”

“அது எப்படி மேடம் சின்ன வயசுன்னு சொல்றது? இப்பயே அந்த பொண்ணுக்கு சின்ன வயசு தான். 18 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.

 சரியான வழிகாட்டுதல் இல்ல. குழந்தை வயசுல கல்யாணம் பண்ண குடும்பத்துக்கு போன உடனே அந்த பொண்ணால வந்து சமாளிக்க முடியாம இருக்கலாம்.

 இல்லனா ஏற்கனவே மனசளவில் அந்தப்பொண்ணுக்கு ப்ராப்ளமா இருக்கலாம். பேரன்ட்ஸ் அவங்களோட பிரச்சனையை அடுத்தவங்களுக்கு தள்ளி விட தான மேடம் நினைக்கிறாங்க.

 கல்யாணம் பண்ணி வச்ச எல்லாம் புருஷனோட பாடு. இப்ப வீட்டுக்காரன் வீட்ல இவளை வச்சிருக்கவே பயப்படுறாங்க. திடீர் திடீர்னு தற்கொலை முயற்சி  பண்ணிக்க முயற்சி எடுக்கிறாளாம். 

ஒரு தடவை தூக்கு மாட்டிகிட்டு சாக ட்ரை பண்ணி இருக்கா கடைசி நேரத்துல காப்பாத்திட்டாங்க இரண்டாவது தடவை போன வருஷம்  மருந்து குடிச்சு இருக்கா.அப்பதான் காப்பாத்தி அவங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி மாமியார் சொல்லுச்சு போலருக்கு”

“மாமியார் வீட்டில் போய் விசாரிச்சீங்களா? வீட்டை போய் பார்த்துட்டு வந்தீங்களா”

“எல்லாம் பார்த்தேன் மேடம் நல்லா பெரிய பணக்கார வீடு வீட்டுக்காரர் மாமனார் மாமியார் ஒரு நாத்தனார் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. புடுங்கல்  இல்லாத ஒரு குடும்பம். 

வீட்டில் சமையல் வீட்டு வேலை செய்ய  ஆள் வச்சிருக்காங்க. ஆள் இல்லைனா  மாமியார் சமைக்குமாம்.  இந்த பொண்ணுக்கு சமையல் சரியா வராதாம். இந்த பொண்ணுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது .

வேலைக்கும் போகல சும்மாவே வீட்ல உக்காந்து பேச்சுத்துணைக்குக் கூட ஆள் இல்லாம டிவியையும் மொபைலையும் பார்த்துக்கிட்டே இருந்தா என்ன ஆகும்? இந்த மாதிரியான அண்டர்லையிங்  பிராப்ளம் எல்லாம் வெளியில வந்திருக்கு மேடம். உட்கார்ந்து மண்டைய குழப்பிக்கிட்டு இந்த மாதிரி முயற்சி பண்ணி இருக்கு”

“ரெண்டு தடவை தற்கொலை பண்ற வரைக்கும் இந்த வீட்டுக்காரன் என்ன செஞ்சானாம். அவங்களோட உறவு எப்படி இருக்கு? அக்கம் பக்கத்தில் விசாரிச்சு பாத்தீங்களா”

“வீட்டுக்காரன் கடை வச்சிருக்கான் மேடம் காலையில போனால்  ராத்திரிதான் வருவான். ராத்திரி கடையை பூட்டிட்டு வர்றதுக்கு ஒரு 11 மணி ஆயிடும் போல இருக்கு. வந்துட்டு எங்க பேசுவாங்க நினைக்கிறீங்களா?

அவனுக்கு பொண்டாட்டி ஒரு ஊறுகா மாதிரிதான். அதனால வீட்டுக்காரர் கிட்ட சண்டை போடறதுக்கு கூட இந்த பொண்ணுக்கு சந்தர்ப்பம் கிடையாது.

 ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் ஃப்ரீயா ஞாயிற்றுக்கிழமையும் காலையில சர்ச்சுக்கு போறாங்க. மத்தியானம் வீட்ல சாப்பிடுறாங்க. சாயந்திரம் இவங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போயிட்டு வருவாங்களாம். அதுதான் அந்த பொண்ணுக்கு அவுட்லெட்.

 அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சு பாத்துட்டேன் அந்தப் பையன் வாயைத் திறந்து  சத்தமா பேசி கூட யாரும் கேட்டதில்லை போல இருக்கு. அவன் கடையிலையும் போயி அவன பத்தி விசாரிச்சு பார்த்தாச்சு. எல்லாமே ஓகே தான். இந்தப்  பொண்ணு மேல தான் குறை இருக்கிற மாதிரி படுது”

“இப்ப அந்த பொண்ணு எங்க இருக்கிறா?”

“அம்மா வீட்டில் தான் இருக்கிறா மேடம். இப்ப நல்லா இருக்கா. அம்மா அப்பா அவளுக்கு தம்பி தங்கச்சி அண்ணன் சொந்தக்காரங்க தாத்தா பாட்டி எல்லாரும் இருக்காங்க. சுத்திலும் ஆளுங்க இருக்கறதால அந்தப்  பொண்ணுக்கு முகம் தெளிவா இருக்குது. அங்க மாமியார் வீட்டில் இருக்கிற தனிமை தான் இவன் மனநோய்க்கு காரணம்னு நான் நினைக்கிறேன்”

“அப்படியே விட்ற முடியாது கிரேஸ். நானும் ஒரு தடவை அந்த பெண்ணை பார்க்கிறேன்”

“அந்த பொண்ணுக்கு நல்லா தூங்குறதுக்காக மருந்து எல்லாம் கொடுத்து இருக்காங்க மேடம்.  அவ முழிச்சிட்டு இருக்கப்போ போயி நம்ம விஷயத்தை கேட்டுக்கலாம்”

“அப்ப சரி, இன்னைக்கு சாயந்தரம் போல ஒரு ஆறு மணி போல பாக்க வருதா அவ அம்மா அப்பா கிட்ட சொல்லிருங்க. சாயந்தரம்  மாத்திரை எல்லாம் தர வேண்டாம் அவளுக்கு கொஞ்சம் தெளிவா இருக்கணும் புத்தி. அப்பதான் வந்து நமக்கு ஒழுங்கா ஆன்சர் பண்ணுவா”

“சரி மேடம் இப்ப தகவல் சொல்லிடுறேன். அப்ப சாயந்திரம் நீங்களும் நானும் போயிட்டு வந்திடலாமா”

ஏழு மணிக்கு அந்தப் பெண் சோபியாவிடம் பேசிய பொழுது தலையே சுற்றி விட்டது கிரேசுக்கும் விஜயாவிற்கும்

“ஏம்மா.  இவ்வளவு அழகா இருக்க. தெளிவா பேசுற, நல்லா படிச்சிருக்க. இப்படி இருக்கிற பொண்ணு ஏன்  தற்கொலைக்கு முயற்சி பண்ண?”

பதிலே சொல்லவில்லை அவள்

“உன் மாமனார் மாமியார் வீட்டுக்காரர் யாராவது உனக்கு பிரச்சனை கொடுத்தார்களா? என்னதான் பிரச்சனை உனக்கு?”

“எல்லாருமே நல்லவங்க தான் மேடம். எனக்குத்தான் ஒரே குழப்பமா இருக்கு” என்றாள்.

“என்னமா அப்படி ஒரு குழப்பம்”

“வந்து மேடம்… அந்த வீட்டில் ஒரு சாத்தான் இருக்கு” என்றாள்  பயத்துடன் கழுத்தில் போட்டிருந்த சிலுவை இருக்கின்ற வரை இறுக்கிப்பிடித்தவாறே.

“ சாத்தானா”

“ஆமாம் மேடம் இது யாருக்குமே தெரியாது. எனக்கு மட்டும்தான் தெரியும் தினமும் இந்த சாத்தான் என் காது கிட்ட வந்து என் மனசுக்குள்ள புகுந்து ‘உயிரோட இருக்காத, தற்கொலை பண்ணிக்கோ. தற்கொலை பண்ணிக்கோ’ அப்படின்னு கட்டளையிட்டுக்கிட்டே  இருக்கு.

 காதுக்குள்ள முனுமுனு பேசிக்கிட்டே இருக்கு. என்னால தாங்கவே முடியல மேடம். தலையே வெடிச்சிடுற மாதிரி இருக்கு. ஒருவேளை செத்துப் போயிட்டா அந்த குரல் கேட்காது இல்ல அதனாலதான் சாக ட்ரை பண்ணேன்” என்றாள் கண்கள் முழுவதும் பீதியோடு.

“சாத்தான்  எங்கேயும் இருக்கா”

“இங்க வராது மேடம். ஏன்னா எங்க தாத்தா பாஸ்டரா இருக்காரு.அதனால இறைவனின் அருள் இங்க பரிபூரணமா இருக்கு. அந்த பயத்துல அது வரமாட்டேங்குது. எப்ப இந்த வீட்டை விட்டு வெளிய போறேனோ அப்ப மறுபடியும் அது என்னை வந்து  புடிச்சிக்கும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post