Tamil Madhura உன் இதயம் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன் – 16

உன் இதயம் பேசுகிறேன் – 16

அத்தியாயம் – 16

வீட்டிற்கு வந்ததும் ஷாமிலி “அப்பா இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர மாட்டாராம். பாட்டிகிட்ட சொல்ல சொன்னாரு. கிழவி முழிச்சதும் சொல்லிரு” என்று தகவல் சொன்னாள்.

அகிலமும் ஷாமிலியும் பேசிக்கொள்வதில்லை. என்ன விஷயமோ பத்மினிக்கும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சியம் ஷாமிலி இப்பொழுதெல்லாம் சரியாகப் படிப்பதில்லை. மதிப்பெண்கள் குறைவாக வாங்குகிறாள் என்று அகிலா குத்திக் காண்பிக்கிறாள். 

“புத்தி படிப்பில் இருக்கணுமினு உன் பொண்ணுக்கு சொல்லி வை.. இல்லைன்னா வீணா படிப்புக்கு செலவு செய்ய வேண்டாம். இன்னும் ரெண்டு வருசத்தில் ஊரு பக்கமா ஒரு பய்யனை பாத்துக் கட்டிக் கொடுத்திரலாம். அங்க போயி சட்டிதான் சுரண்ட வேண்டியிருக்கும். அதுக்காக நம்ம ஏன் காசு செலவு பண்ணனும்?” பிரசாந்திடம்.

கணவனை கரித்துக் கொட்டி அனுப்பியாகிவிட்டது. மருமகளைத் திட்டி விரட்டிவிட்டு மற்றோரு வேலைக்காரியைக் கொண்டு வந்தாகிவிட்டது. மகளிடம்தான்  பாசமில்லை. பேரப்பிள்ளையிடம் கூடவா ஈரமில்லாத ஒரு ஜென்மம் இருக்கும்? அகிலாவின் பாசம் எல்லாம் காரியத்திற்காகத்தான். அவளது சொல்பேச்சைக் கேட்டு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பேயாட்டம் ஆடி விடுவாள். 

பிராசந்த் மட்டும் எப்படி அம்மாவின் இத்தனை டார்ச்சரையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான்? அதற்கும் போன மாதம், ஒரு இரவு அவன் அளவுக்கு மீறி குடித்துவிட்டு வந்து அவர்களது அறையில் புலம்பியதிலேயே புரிந்துவிட்டது.”கிழவி இந்த வீட்டை மட்டும் ஏன் பேரில் எழுதி வச்சிருந்தா, இந்நேரம் எங்கேயாவது அனுப்பி வச்சிருப்பேன்.  “

இந்த வீட்டுக்காகவா இத்தனையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறான் என்று பத்மினிக்கும் வியப்பு தான். விஷ்ணுப்ரியாவிடம் பேசியதின் மூலம் இந்த ஊரில் இத்தனை சவுகரியமான ஒரு வீடு அப்பார்ட்மெண்ட் என்றாலும் கூட, வாங்குவதற்கு கோடிக்கணக்கில் பணம் வேண்டும்.  அதைத்தவிர அகிலா தனது தங்கை புவனாவின் மூலம்  லட்சக்கணக்கில் வட்டிக்கு கொடுத்திருக்கும் பணம். அத்தனையும் அவ்வளவு  சுலபத்தில் தூக்கியெறிய மகனுக்கு மனமில்லை.  மானம்கெட்ட மானம் முக்கியமா இல்லை கோடிக்கணக்கில் வரவு முக்கியமா?

பிரசாந்த் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொன்னது ஒரு வகையில் சந்தோஷமாக கூட இருந்தது. ராத்திரி அகிலாவும் இதே போல் மயக்கத்தில் கிடந்தால் அவள் கொஞ்சம் படுக்கவாவது செய்யலாம். விஷ்ணுபிரியாவின் நிலைமையை கண்டதும் மத்தியானம் டப்பாவாலாவிடம் கட்டிக் கொடுத்த சாப்பாட்டை யார்  சாப்பிட்டார்கள் என்ற கேள்வி எல்லாம் மறந்து விட்டது. இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே ஆசை விஷ்ணு பிரியா உடல் குணமாகி விட வேண்டும் என்ற வேண்டுதல் தான் ‘கடவுளே எப்படியாவது ஆண்ட்டியை காப்பாத்திடு’ என்று வேண்டிக் கொண்டாள்.

வேலைகளை முடித்துவிட்டு கடைசியாக மூலையிலிருந்த டிபன் பாக்ஸை  எடுத்து கழுவப்  போட்டாள். அதன் அடியில் ஒரு புதிய கடிதம் என்னை எடுத்து படி என்று அவளை தூண்டியது.

அதனை எடுத்துக்கொண்டு சாவகாசமாக அறைக்கு சென்று பிரித்து படிக்க ஆரம்பித்தான் ஆரம்பித்தாள்.

வணக்கம் என்னோட பேர் பாலாஜி. நான் கௌரி சோப் கம்பெனில வேலை பார்க்கிறேன். கம்பெனி  விலாசம் நம்பர் 14, 18 வது தெரு அம்பேத்கர் நகர். இது ஒரு தொழிற்பேட்டை பல கம்பெனிகள் அருகருகே இருக்குது நான் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவன்.

 போன வாரம் லட்சுமி விலாஸ் என்ற ஒரு தமிழ்நாட்டு சாப்பாட்டுக்கடையில பணத்த கட்டி எனக்கு மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் இந்த டிபன் பாக்ஸ் தான் ரெண்டு நாளா வந்துகிட்டு இருக்கு.

 நீங்க லட்சுமி விலாஸ் ல இருந்து தான் சாப்பாடு அனுப்புறிங்களான்னு எனக்கு தெரியல. உங்க கடிதத்தை படிச்சதும் தவறான உணவை சாப்பிடுறதா எனக்கு மனசு உறுத்தலா இருக்கு. இந்த வார கடைசியில் லட்சுமி விலாசுக்கு போய் என் விலாசத்தை சரி பார்க்கிறேன். நீங்களும் நீங்க உணவு அனுப்புற விலாசம் சரியானது தானா என்று உங்களது டப்பாவாலாகிட்ட விசாரிச்சுக்கோங்க. தவறான விலாசமாக இருந்தது மீண்டும் சரியான விலாசத்திற்கு அனுப்பிடுங்க. தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

ஆனால் ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். இந்த ரெண்டு வேளை சாப்பாடு நீண்ட நாட்களுக்கு பிறகு என் வயிறை மட்டும் இல்லை மனதையும் குளிர வைத்தது. அதற்கு உங்களுக்கு எனது நன்றிகள். 

என்று முடிந்த அந்த கடிதம் மீண்டும் ஒரு அதிர்ச்சி அவளுக்கு. இவ்வளவு நாள் வேறு யாருக்கோ அனுப்பி இருக்கிறாளா? ஆனால் இந்த விலாசம் சரியான விலாசம் தானே. இதை தானே பிரசாந்த்தும் ஷாம்லியும் சொன்னார்கள்.

நேராக ஷாமிலி அறைக்குச் சென்றாள்.

என்ன என்பது போல் ஷாமிலி அவளை பார்த்தாள்.

“உங்க அப்பாவோட ஆஃபீஸ் விலாசம் எனக்கு தெரியணும்”

“அதான் ஏற்கனவே எனக்கு எழுதி கொடுத்தேனே” அவளது குரலில் எரிச்சல்

“நம்பர் 14, 18வது தெரு, அம்பேத்கர் நகர் தானே”

“ஆமா அதே தான். உனக்கு தான் தெரியுதுல்ல. அப்புறம் ஏன்  மறுபடியும் கேக்குற?”

“அது தவறான விலாசம்”

“அப்படியா எனக்கு தெரிஞ்சது அந்த விலாசம் தான். அது சரியா தப்பான்னு நீ அப்பாட்டயே  கேளேன்”

“எனக்கு உண்மையான விலாசம் தெரியனும் ஷாமிலி. ஏன்னா ஒன்னு உங்க அப்பா எனக்கு தவறான விலாசம் தந்து இருக்கணும்.இல்லன்னா நீ எனக்கு எழுதி தந்தது தவறா இருக்கணும். ஏன்னா இந்த சாப்பாடு தவறான நபருக்கு போய் இருக்கு”

அலட்சியமாக கால் மேல் கால் போட்டு கொண்டு கைகளை தலைக்கு மேல் முட்டுக் கொடுத்துக் கொண்டு அவளைப் பார்த்தவள். 

“ ஆமா தவறான விலாசம் தான். சரியான விலாசத்தை தெரிஞ்சுட்டு இப்ப நீ என்ன செய்யப் போற?”

“என்ன செய்யப் போற வா? தினமும் காலையில உங்களுக்காக மாங்கு மாங்குன்னு சமைக்கிறேன். சமைச்சு  கடைசில போய் சேர்ற இடம் தவறான ஒரு நபருக்கா இருக்குது. உங்க அப்பா கிட்ட போய் சேரல. நீ சாப்பாடு நீ சாப்பிட மாட்டேங்குற. ஏன் இப்படி யாரோ ஒருத்தங்களுக்கு சமைச்சு போடுறதுக்காக என்னைய கஷ்டப்படுத்துறீங்க. சரியான விலாசத்தை தருவதற்கு கூட உங்களுக்கு அப்படி என்ன பிரச்சனை?”

அன்று என்னவோ ஷாமிலி சற்று உக்கிரம் குறைவாக இருந்தாள்.

“நீ சொல்றத பார்த்த அந்த சாப்பாட்ட சாப்பிட்ட நபர் நல்லவனா இருப்பான் போல இருக்கு.. தப்பான விலாசம்னு எப்படியோ உன்கிட்ட தெரியப்படுத்தி இருக்கான். உனக்கு இன்னொரு உண்மை சொல்லட்டுமா?

 நான் சரியான விலாசம் கொடுத்தாலும் அதை எங்க அப்பா சாப்பிட மாட்டார்.  சாப்பாட்டை  அந்த ஆபீஸ்ல எவனோ ஒருத்தன் சாப்பிட்டு காலி டப்பாவை தருவான். யாருமே சாப்பிடைல்லைன்னா அங்க இருக்குற நாய்க்கு போட சொல்லிருக்காங்க பாட்டி. 

ஆளா நபரா யாரு சாப்பிட்டதுன்னு  கூட உனக்கு தெரியாது. அதுக்கு இப்ப தவறான விலாசம் என்று உன்கிட்ட சொன்னானே அந்த நல்லவனே சாப்பிட்டு போறானே”

“இப்படி என்னை ஏன் கொடுமைப்படுத்துறீங்க? அந்த அளவுக்கு நான் உங்களுக்கு என்ன ஒரு துரோகம் செஞ்சேன்? ஏன் என்மேல இவ்வளவு வெறுப்பை கக்குறீங்க? உன்னை ஏன்  சொந்த பொண்ணு மாதிரி தான் நான் பார்த்திருக்கேன். உனக்கு ஏன் என்மேல் இவ்வளவு கோபம்?”

“வாய மூடு பத்மினி நீ எனக்கு அம்மாவா?”

“இதுவரைக்கும் அம்மா என்னை கூப்பிட்டது இல்ல. சித்தின்னு கூட சொன்னது கிடையாது.. இந்த அளவுக்கு அவ மரியாதையா நடத்துற உன்கிட்டயும் நான் அன்பா தான் இருக்கேன். உங்களுக்கு ஏன் என்னை ஏத்துக்கிறதுல தடங்கல்?”

“உன் வயசு என்ன? 27.. என் வயசு என்ன தெரியுமா? 18. ஒரு 18 வயசு பொண்ணுக்கு 27 வயசுல அக்கா இருக்கலாம். அம்மாவும்  சித்தியும் இருக்க முடியுமா? அது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு ஒரு நாளாவது நீ நினைச்சு பார்த்து இருக்கியா?

 அதுவும் என்னோட அம்மா பிளேஸ்ல, எங்க அம்மா ரூம்ல எங்க அம்மா இடத்துல நீ இருக்கும் பொழுது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்? தெரியுமா பச்சையா சொல்லனும்னா எங்க அம்மாவோட படுக்கையில…… நான் அந்தளவுக்கு விவரம் தெரியாதவன்னு  நினைக்கிறியா?”

இன்றைக்கு பத்மினிக்கு ஷாமிலியின் உள்ளக்குமுறல் புரிந்தது.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் ஷாமிலி.. ஆனா ஒரு 50 வயசு ஆளோட 27 வயசு பொண்டாட்டினா, இதுக்காக நான்தானே உங்க மேல கோபப்படனும்? 

உனக்கு இப்ப 18 ஆரம்பிச்சுருச்சுன்னு சொல்ற.. 20 வயசுல இருந்தப்ப உங்க அப்பாவை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சாங்க. அந்தக் கல்யாணத்தப்பா நடந்த கலாட்டா பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கும்”

ஏதோ பேசக் குறுக்கிட்டாள் ஷாமிலி. 

“சரி அது என்னோட பிரச்சனைன்னு தெளிவா சொல்லுவ. அது என்னோட குடும்பத்தோட இயலாமையாவே இருக்கட்டும். இந்த மாதிரி ஒரு நிலைமை வந்ததுக்கு காரணம் உங்க அம்மா அப்பாவோட உறவு தான்.. அது உனக்குப் புரியுதா?

 உங்க அம்மாவும் அப்பாவும் சரியா வாழ்ந்து இருந்தா எனக்கு எங்க இடமே இல்லை.. இந்த நரக வாழ்க்கை எனக்கு தேவையும் இல்லை”

“நரக வாழ்க்கை வேணாம்னா நீ ஏன் இங்க இருக்க? கிளம்ப வேண்டியது தானே”

“கிளம்ப இடம் இருந்துருந்தால் எப்பயோ கிளம்பி இருப்பேனே”

“ஏன் இடமில்லை. நீ போயி உங்க அம்மா அப்பா வீட்ல இருக்கலாம்.. உங்க அம்மா அப்பா வீட்ல இருக்க முடியலன்னா எங்கேயாவது ஒரு ஹோமில் போய் சேரலாம் ஒரு தையல் தைச்சு வாழ்க்கை நடத்தலாம் பொம்பளைங்க வாழ்வதற்கு இடமா இல்ல”

யாரோ இவளுக்கு நன்றாக மூளைச்சலவை செய்து அவளது கோபத்தை எல்லாம் பத்மினி மேல் மடை மாற்றம் செய்திருக்கின்றனர். தனது தாய் தந்தை செய்த சுயநலமிக்க செயல்கள் ஷாமிலியின் மண்டையில் உறைக்காததற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

“அப்ப நீ வீட்டை விட்டு வெளியில் போன்னு சொல்ற.. நான் என் வீட்டை விட்டு வெளியில போகணும்? நானாவா இந்த வீட்டுக்கு வந்தேன் நீங்கதான்  வலுக்கட்டாயமாக கூட்டிட்டு வந்தீங்க.. இப்பவே வேலைக்காரியா தானே இருக்கேன். 

என்கிட்ட இவ்வளவு கோவப்படுற நீ, ஒரு நாளைக்காவது உங்க அம்மாகிட்ட கேள்வி  கேட்டிருப்பியா. நான் முதல்ல உன் அப்பா வாழ்க்கைல வந்து என்னால உங்க அம்மா அப்பாவுக்கு விவாகரத்து நடந்திருந்தா  என் மேல நீ கோபப்படுறதில்ல அர்த்தம் இருக்கு.

 சொல்றேன்னு தப்பா நினைக்காத.. உங்க அம்மா வேறொரு ஆள் கூட தொடர்பு வச்சுட்டு பிரிஞ்சு போனதா நானும் கேள்விப் பட்டிருக்கேன். அது உனக்கும் தெரியும்”

“வாய மூடு பத்மினி ஆயிரம் தப்பு செஞ்சு இருந்தாலும் அவங்க எங்க அம்மா. கிழவி  உன்னை பார்த்து கத்துற மாதிரி தான் எங்க அம்மாவ பாத்து கத்திக்கிட்டு இருந்தாங்க.

 ஒரு பிரெஸ்டேஷன் எல்லாம் எங்க அம்மா என்னமோ சின்ன  தப்பு செஞ்சுட்டாங்க.. ஆனா அந்த சமயத்துல நீ மட்டும் எங்க ஃபேமிலிக்கு குறுக்க வராம இருந்திருந்தா எங்க அம்மா அப்பா சேர்ந்து இருக்க கூட சான்சஸ் இருக்கு.. ஆனா அந்த ஒரு சந்தர்ப்பத்தை தராமா  நீ கெடுத்துட்ட”

“உங்க அம்மா குடும்பத்தை விட்டு போனது சரி.. நான் வேற வழி இல்லாம இருக்கறதுனால தப்புன்னு சொல்ல வரியா? அப்போ உங்க அம்மா செஞ்சு எல்லாமே சரியான விஷயம், உங்க அம்மா ஒரு தப்பும் செய்யல அப்படின்னு தான் உன்னோட கருத்தா”

 

“ஆயிரம் தப்பு செஞ்சிருக்கலாம்.. செஞ்சி இருந்தாலும் அவங்க எங்க அம்மா.. அவங்களுக்கு தான் நான் சப்போர்ட் பண்ணுவேன். நீ நூறு சதவீத நல்லவளா இருக்கலாம்.. என் வாழ்க்கையில எங்க அம்மா வாழ்க்கையில் குறுக்க வந்த நீ எனக்கு கெட்டவ தான் உன்னை அதுனால தான் எனக்குப் பிடிக்காது”

4 thoughts on “உன் இதயம் பேசுகிறேன் – 16”

  1. ஷாமிலி உன்னோட நியாயம் எனக்கு சத்தியமா புரியல…. உங்க அம்மா சரியாவே இருக்கட்டும்.ஆனா நீ
    பத்மினியை குறை சொல்லுரைத்தை தான் ஏத்துக்க முடியல…

    பாலாஜி நீ gem டா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – 20உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20 மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு

உன் இதயம் பேசுகிறேன் – 21உன் இதயம் பேசுகிறேன் – 21

அத்தியாயம் – 21 “சொந்தக்காரப் பொண்ணு கூடக் கல்யாணம்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் பெருசா ஒண்ணும் அவரைப்பத்திக் கேள்விப்படலை. மின்னலோனைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சு ஆன்ட்டி.  கடிதத்தைப் படிக்கிறப்ப பழசெல்லாம் நினைவுக்கு வருது. ஒரு தரம் நேரில் பார்த்தால் நல்லாருக்கும்னு கூடத் தோணுது.

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே