Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 25

மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார்.

சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து நடந்துக் கொண்டிருக்கிறது. ரே எல்லாவற்றையும் உதறிவிட்டு ஊருக்குப் போய்விட்டது அவளுக்காக திட்டம் போட்டு அடி எடுத்து வைத்த ரேச்சலுக்கு பேரிடியாக இருந்தது. நாம் ஆயிரம் பிளான் போடலாம் ரேச்சல் கடைசியில் இறைவன் போட்ட பிளான்தான் வொர்க் அவுட் ஆகும்.

சுமித்ரா ஊட்டியிலேயே செட்டில் ஆகிவிட்டார். மாமனார் மாமியார் இருவரும் அவளிடம் மன்னிப்பை வேண்டியும் அவள் ஊட்டியிலேயே தங்கிவிடுவதில் உறுதியாக இருந்தார்.

“உங்ககிட்ட அங்கீகாரத்தைத் தான் வேண்டினேனே தவிர உங்களோட பொருளையே பணத்தையோ இல்லை. ராஜீவும் நானும் பொழுதை செலவிட்ட இடத்திலேயே எனது வாழ்க்கையைக் கழிப்பதாக முடிவு செஞ்சுட்டேன். உங்களை அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்” என்று மறுத்துவிட்டாள்.

 

மீரா வேறு ஜல்லிப்பட்டியிலேயே தங்கப் போவதாகவும், மேலும் ஒவ்வொரு வருடமும் அவளும் சஷ்டியும் சேர்ந்து புதிய பெர்ஃப்யூம் கண்டுபிடிக்கப் போவதாகவும் கேள்வி.

கண்ணன் எங்கே என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடாத குறை. அவனது துரோகச் செயலுக்கு பதிலாக மல்கோத்ரா குடும்பத்தின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். மீரா ஒரு ஏமாற்றுக் காரியாக காண்பிக்கப்பட்டபோது குட்டி ரேணுவுக்கு கண்ணனின் திருட்டுத்தனம் ராஜதந்திரமாகப் பட்டது. மீரா தான் உண்மையான வாரிசு இந்த வீட்டில் முறையற்ற உறவில் பிறந்த தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்ததே அதிகம் என்பதை ரே உணர்ந்தபோது, மல்கோத்ரா குடும்பத்தினருக்குப் பிடிக்காத கண்ணன் தேவை இல்லாத ஆணியாகத் தோன்றினான். எனவே பிடிங்கி காயலான் கடையில் போட்டு விட்டாள்.

அண்ணா அண்ணா என்று அவன் பின்னாலேயே சுற்றித் திரிந்த பிங்கு அப்பாலே போ சாத்தானே என்பது போல ஒதுக்கிவிட்டான். குமரேசன் வீட்டின் உறவையே தனது சுயநலத்துக்காக பலி கொடுத்துவிட்டானே என்று கண்ணனின் பெற்றோரும் கடுப்பாக இருக்க, அமைதியற்ற வாழ்க்கைதான் மிச்சம்.

பிங்கு சில மாதமாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை சஷ்டியிடம் கேட்டான் “அது எப்படின்னா ஸ்டெப் பை ஸ்டெப்பா நீங்க எழுதினதை காப்பி அடிச்சும் குட்டி ரே தோத்து போனா”

“அங்கதாண்டா சாமி காப்பாத்துச்சு. கடைசி ரெண்டு மூல பொருட்கள் அகில் கட்டையும், ஸ்பெசலா தயாரிக்கப்பட்ட ரோஜா அத்தரும் தொழில் ரகசியம். இந்த மண்ணில் விளைஞ்ச ரோஜாவை எடுத்து பல நாட்கள் பிராசஸ் பண்ணி உருவாக்கப்பட்டது. நாங்க எழுதின குறிப்பில் பொருட்களை மட்டும்தான் எழுதிருந்தோம். பிராசசிங்க் பத்தி நோட் கூட எழுதல. அங்கதான் ரே சறுக்கிட்டா. நாங்க ஜெயிச்சுட்டோம்”

“அதுதான் நீ டீட்டைலா எதுவும் எழுத வேண்டாம்னு சொன்னியா. உனக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு”

“டேய், நீ வேற, மூலப்பொருட்களை எல்லாம் கண்டுபிடிச்சதும் கடைசியா ரெண்டு நாள்தான் எங்களுக்கு அவகாசம் கிடைச்சது.  சென்ட்டு தயாரிக்கவே நேரமில்லை, இதில் எழுதிட்டு டைம் வேஸ்ட் பண்ணாதே.  நேரடியா தயாரிப்பில் இருங்கிருவோம். அதுக்கப்பறம் எழுதிக்கலாம்னு சொல்லிருந்தேன்.

உன் லாப்டாப்பை வேற நீ வச்சிருந்தியா, அதனால மைக்கேலுக்கு சப்மிட் பண்ண வேண்டிய ரிப்போர்ட்டை பிளைட்டில் என்னோட மொபைலில் உக்காந்து டைப் பண்ணிட்டு வந்தோம். அப்ப கடுப்பா இருந்தது. ஆனால் இப்ப எல்லாத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு படுது”

சஷ்டிக்கு இந்த மாதிரி கேள்விகள் என்றால், அவனது அப்பா செந்தில்நாதனோ பொறாமைப்பார்வைகளால் எட்டு திசைகளில் இருந்தும் தாக்கப்பட்டார்.

“செந்தில்நாதா… நீயும் உன் பொண்டாட்டியும் சஷ்டி டாக்டருக்குப் படிக்கல படிக்கலன்னு பொலம்பி எங்களை எல்லாம் திசை திருப்பிட்டு, ரீமா சோப்பு கம்பனி பொன்னையே வளைச்சுப் போட்டுட்டீங்களே. திறமைதான்” என்று ஊரே சொல்ல தனது அங்கவஸ்தரத்தை கெத்தாகத் தூக்கி விட்டுக் கொண்டார் செந்தில்நாதன்.

 

“அங்கிள் நீங்க சாப்பிடுங்க” என்று மணப்பெண்ணாக இருக்கும்போது கூட உபசரித்த மருமகளைப் பார்த்து பார்த்து பூரித்துப் போனார்.

“வேணி உன் மகன் செஞ்சதிலேயே உருப்படியான காரியம்”

“பாட்டனி படிச்சதுதான்னு ஒத்துக்கோங்க”

“என்ன படிச்சிருந்தா என்னடி, எந்தக் கிறுக்குத்தனமும் பண்ணாம மீராவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் அவன் செஞ்ச ஒரே நல்ல வேலை. நான் கும்பிட்ட முருகன் என்னைக் கைவிடல… மீரா மாதிரி மருமக வந்தா நல்லாருக்கும்னு நெனச்சேன். மீராவையே மருமகளா அனுப்பிட்டார். உன் மகன் மட்டும் வழக்கம் போல ஏதாவது ஏறுக்குமாறு பண்ணிட்டு இருந்தான் அப்பறம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்னு சொல்லி வை”

நம் உளவுத்துறையின் தலைமை உளவாளி விசு கவிதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் “நான் அப்பவே சந்தேகப்பட்டேன். அது நடந்துடுச்சு பாத்தியா”

“நீங்க எங்க சந்தேகப் பட்டீங்க நான்தான் சந்தேகப் பட்டு இந்தப் பொண்ணுக்கும் சஷ்டிக்கும் என்னவோ இருக்குன்னு உங்க எல்லார்கிட்டயும் எடுத்து சொன்னேன்”

 

“நீ இப்பதானடி சந்தேகப்பட்ட… எனக்கு இந்த சஷ்டியை பாட்டனி  சேர்த்து விடும்போதே செந்தில்நாதன் ஏதோ பிளானோடத்தான் சேர்த்து விடுறார்னு தீர்மானிச்சுட்டேன். ஆனாலும் மனுஷன் இந்த அளவுக்கு விவரமா இருப்பார்னு நான் எதிர்பார்க்கல”

 

“என்னங்க மாமா சொல்றீங்க”

 

“அவள் காதருகே ரகசியமாக சொன்னான். சஷ்டியை டாக்டருக்குப் படிக்க வச்சிருந்தா எப்படி ரீமா சோப்பு ஒனர் வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்க முடியும். அதுனாலயே பிளான் பண்ணி சஷ்டியோட அப்பா பாட்டனி படிக்கக் காலேஜுல சேர்த்து விட்டிருக்கான். சஷ்டி கேம்பு, டிரிப்புன்னு போக வர இருக்கப்ப இந்தப் பொண்ணு கண்ணில் பட்டிருக்கான்.

அந்தப் பொண்ணு என்னமோ ஆராய்ச்சி பண்ணப்ப சஷ்டி ஏதோ உதவி பண்ண, இவனோட குருட்டு அதிர்ஷ்டம் அந்த சென்ட்டு பிச்சுக்கிட்டு பண மழை கொட்டிடுச்சாம். இதில் அந்தப் பொண்ணுக்கு இவன் மேல காதலாயிருச்சு. பணவரவு தாத்தா பாட்டியும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டிருச்சு. சஷ்டியோட பெரியப்பா மகனுக்கு ரீமா சோப்பு கம்பனி வச்சு நடத்துற ஹாஸ்பிட்டல்ல வேலை போட்டுத் தந்திருக்காங்களாம். செந்தில்நாதனுக்கு வந்த வாழ்வைப் பாத்தியா?”

“நிசமாலுமேவா”

“நிசமாத்தான் சொல்றேன் கவிதா… நம்ம நாளைக்கே சஷ்டி படிச்ச காலேஜுக்குப் போயி நம்ம பிள்ளை பாட்டனி படிக்க ஒரு அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்துடுறேன்”

“அய்யோ அவன் எஞ்சினியருக்கு படிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்கான். அத்தோட அவனுக்குப் படம் வரையவே பிடிக்காது. பன்னெண்டாவது ரெக்கார்டு பூரா நான்தான் வரைஞ்சிருக்கேன்”

“அத்தோட சேர்ந்து காலேஜுக்கும் வரைஞ்சுக் கொடுத்துடு. சஷ்டிக்கு ரீமா சோப்புன்னா நம்ம வீட்டுக்கு கீமா சோப்பு கம்பனிலயாவது மருமக வரவேண்டாமா?” என்று முடிவு சொன்னான் விசு. அவனுக்கு எங்கே தெரியப் போகிறது அடுத்த வருடம் ஜல்லிப்பட்டியில் பாட்டனி மேஜருக்குத்தான் கடுமையான டிமாண்டாம்.

திருமணம் முடிந்த புதுமண ஜோடி தங்களது தேனிலவுக்காகத் தேர்ந்தெடுத்தது நீங்கள் ஊகித்தவாறு ராஜீவின் தோட்டமேதான்.

“நீ பூவாசம் அடிக்கிறியா இல்ல பூவெல்லாம் உன் வாசம் அடிக்குதாண்ணே இன்னமு-ம் என்னால கண்டுபிடிக்க முடியல”

சஷ்டியின் மடியில் சாய்ந்துக் கொண்டு அவனது விரல்களைக் கோர்த்தவாறு கேட்டாள் மீரா.

“சஷ்டி உங்களோட இண்டரெஸ்ட், பேஷன் எல்லாமே வேற, என்னோட இந்தத் துறைல தேவை இல்லாம உங்களையும் இழுத்து விட்டுட்டேனா?”

“அப்படியெல்லாம் இல்லை மீரா… முழு மனசோடத்தான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன். இந்த சில மாசத்தில் பெர்ஃப்யூம் பேசிக் நோட்ஸ் மட்டும் இல்லாம வாழ்க்கையோட நம்ம வாழ்க்கையோட பேசிக்  நோட்ஸ் கூட கண்டுபிடிச்சு வச்சிருக்கேனே…”

“சொல்லுங்க சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்குறேன்”

“நம்ம டாப் நோட் அதுதானே முதலில் நம்மை வசீகரிக்கும் விஷயம். அது உன்னோட போட்டி, அதுக்காக நம்ம செஞ்ச முயற்சிகள்… “

“அப்பறம்… “

“பேஸ் நோட், கொஞ்சம் கொஞ்சமா நம்ம ரெண்டு பேரும் நமக்கு நடுவில் இருந்த வேற்றுமைகள் எல்லாத்தையும் மறந்துட்டு உன்னோட வெற்றியை நம்மோட வெற்றியா மாத்திக்கிட்ட நேரம். அதாவது உயிரோட உயிரா கலந்த நேரம்”

வெட்கத்தோடு சிரித்த மீரா “அடுத்து சொல்லுங்க”

“அடுத்தது நம்ம ஒருத்தருக்காக ஒருத்தர்னு முடிவான நேரம் ஹார்ட் நோட். ஆனால் அது… “

“என்ன அது சஷ்டி… “

“அதை விளக்கமா சொல்றதுக்கு முன்னாடி சுபம் போட சொல்லிடலாமா… பிரைவசியே இல்லை… பாரு எல்லாரும் மொச்சைக் கொட்டையாட்டம் கண்ணை முழிச்சு முழிச்சு படிச்சுட்டு இருக்காங்க“

“அடுத்த வரிலேருந்து எங்க பிரைவசியை மதிச்சு கண்ணை மூடிட்டுப் படிங்கன்னு சொல்லிடலாமா”

கலகலவென மீராவின் நகைப்போடு, சஷ்டியின் வெட்கத்தோடு கலந்த  காதல் பூவின் வாசம் அவ்விடமெங்கும் பரவியது.

 

 

சுபம்

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 10’

அத்தியாயம் – 10 மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள்.  அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5 வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 11’

அத்தியாயம் – 11 “ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி.  “இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே”