Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’

அத்தியாயம் – 20

மறுநாள் காலை சஷ்டியும் மீராவும் அவர்களது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

எதுவுமே தெரியாமல் வழக்கம் போல அன்றைய நாளைத் தொடங்கினார்கள். புத்தம் புதிதாக பூத்த பன்னீரில் நனைந்த ரோஜாவைப் போல பிங்க் நிற உடையில் நின்ற மீராவைப் பார்த்துக் கொண்டேயிருக்க சொன்ன கண்களைக் கண்டிக்க முடியாமல் தடுமாறினான்.

“என்ன பார்வை இந்தப் பார்வை சஷ்டி”

“ஒண்ணுமில்லையே”

“என்னையே கண் சிமிட்டாம பாத்துகிட்டிருக்க மாதிரி இருக்கு”

“என் பார்வையே அப்படித்தான் கொஞ்சம் மாறுகண்ணு. அக்சுவலா  நான் அந்த அலமாரில இருக்குற டெஸ்டிங் லிக்விட்ஸத்தான் பாத்துகிட்டிருக்கேன்”

“அப்படியா” என்றவள் டக்கென சஷ்டியின் கன்னத்தில் கிள்ள,

“ஏய் மீரா வலிக்குது”

“நான் பக்கத்தில் இருக்குற பூந்தொட்டில பூவைப் பறிக்கப் போயி கை தவறி கிள்ளிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஷேவ் எல்லாம் பண்ணிட்டு, ஹேர் கட் பண்ணிட்டு முதல் முறையா கொஞ்சம் நீட்டா, சப்பியா பன்னு மாதிரி கன்னத்தை வச்சுட்டு நிக்கிற. அதுதான் கிள்ளணும் போல ஆசையா இருந்தது”

ஆவென்று அவளையே பார்த்தான் சஷ்டி.

“சஷ்டி உனக்கு நான் பிங்க் கலர் போட்டா பிடிக்கும்னு நோட் பண்ணேன். அதுதான் போட்டிருக்கேன். நல்லாருக்கா”

அய்யய்யோ இவ போற போக்கே சரியில்லையே.

“போ மீரா முறைப்பெண்ணாட்டம் விளையாடாதே. நம்ம வேலையை கவனிக்கலாம் இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு”

“சரி, சரி நம்ம பஞ்சாயத்தை ரீசல்ட் கண்டுபிடிச்சதும் வச்சுக்கலாம் என்ன”

சே இனிமே மீராவை சந்திக்கிறப்ப பிங்குவைக் கூட வச்சுக்கணும். இவ வெளிநாட்டுப் பொண்ணு. அங்க தொட்டு பேசுறதெல்லாம் சகஜம். இதைப் போயி நம்ம பாழும் மனசு நிஜம்னு நம்பி தினமும் டூயட் பாடுது. மீரா நம்ம விரதத்தைக் கலைச்சிடுவா போலிருக்கு. சரி பிங்கு எங்கே? ரெண்டு நாளா ஆளையே காணோம்.

“பிங்கு எங்க?”

“ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருக்கான். நம்ம அவனுக்காக வெயிட் பண்ணாம வேலையைத் தொடரலாம்”

பாட்டிலைத் திறந்து முகர்ந்துவிட்டு சொன்னான் சஷ்டி

“கண்டிப்பா இது நீ என்கிட்ட முதலில் காமிச்ச பெர்ஃப்யூம் இல்லை மீரா”

“என்ன சொல்றீங்க சஷ்டி? பாட்டில் இங்கேயேதானே இருக்கு”

“பாட்டில் இருக்கலாம் ஆனால் உள்ளே இருக்கும் திரவம் நிச்சயம் ஒண்ணு இல்லை. மாற்றபட்டு இருக்கு. நீ ஒரு அஞ்சு நிமிஷம் வெளி காத்தை சுவாசிச்சுட்டு வந்து முகர்ந்து பாரு தெரியும்”

அவ்வாறே செய்தாள் மீரா. அந்த சமயத்தில் அந்த வித்தியாசம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ரோஸ் ஆர்டிபிஷியல் சென்ட் தூக்கலா இருக்கு. அதுதவிர லாவென்டர் கூட ஓவர் பவரிங்கா இருக்கு. இதெல்லாம் முன்னாடி அமைதியா சட்டிலா இருக்கும்”

“இதிலிருந்து என்ன தெரியுது மீரா”

“எதிரிங்க நம்மை மோப்பம் பிடிச்சுட்டாங்க. வீட்டிலேயே வந்து பாட்டிலை மாத்திருக்காங்க”

வீட்டுக்குள்ளேயே வந்து சாவி போட்டுத் திறந்து பாட்டிலை மாற்றுவது என்றால் இந்த வீட்டின் ஒவ்வொரு இஞ்சும் தெரிந்த நபருக்கு மாத்திரமே அது சாத்தியம்.

“நம்ம பக்கத்திலேயே யாரோ ஒரு துரோகி இருக்கான்”

“இப்ப என்ன செய்றது சஷ்டி”

சற்று நேரத்திற்கு முன்னர் தெரிந்த மலர்ச்சி மறைந்து கண்கள் கலங்க கேட்டாள் மீரா. அவளை அணைத்து ஆறுதல் சொல்ல கைகள் துடித்தது. இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு கைகளை மாத்திரம் பிடித்துக் கொண்டான்.

“எதுவும் தெரியாத மாதிரியே இரு. இந்த பாட்டிலை வச்சு ஆராய்ச்சியைத் தொடரலாம். ஆனால் நம்ம உண்மையிலேயே ஆராய்ச்சு செய்யப்போறது உங்க அப்பவோட பார்முலாதான்”

“அது எப்படி?”

“என் மனசில் சித்திரமா செதுக்கி இருக்கேன். அது தவிர நான் ஒரு வாயிலில் ஊத்தி வச்சது நினைவிருக்கா”

“யெஸ் யெஸ் அது பத்திரமா இருக்கில்ல”

“ரொம்ப சேஃப்” என்றபடி அதனைத் தனது அறையிலிருந்து எடுத்து வந்து அவளிடம் தந்தான்.

“நீயே ரெண்டையும் செக் பண்ணிப் பாரு வித்யாசம் தெரியும்”

முதல் பார்வையில் பார்க்கும் பொழுது அந்த சிறிய குப்பியில் இருந்த திரவமும் பாட்டிலில் இருந்த திரவமும் அச்சு அசலாய் ஒரே மாதிரி இருந்தது. ஆனால் முகர்ந்து பார்த்தபொழுது நகலில் வித்யாசம் அப்பட்டமாய் தெரிந்தது.

“பாட்டில் எல்லாம் அப்படியே ஒரிஜினல் மாதிரியே இருக்கே மீரா. வழக்கமாய் போலிகளில் கொஞ்சம் பெர்பெக்ஷன் கம்மியா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்”

“பாட்டில் ஒரிஜினல் தான். அதுக்குள்ள இருக்குற சென்ட்டுதான் டூப்ளிகேட்”

“பாட்டில் மட்டும் எப்படி ஒரிஜினலா இருக்க முடியும்… ஒரு வேளை உங்க கம்பனி பாட்டிலை வாங்கி உள்ள இருந்த சென்ட்டைக் கொட்டிட்டு வேற ஒண்ணை வச்சிருப்பாங்களோ…”

“சஷ்டி… இந்த பிராண்ட் இன்னும் மார்க்கெட்டுக்கே வரல… ஒவ்வொரு பெர்ஃப்யூம் தயாரிக்கும் போதும் அதுக்கான பாட்டிலையும் வடிவமைப்பாங்க.  இந்த டிசைன் பாட்டில் எல்லாம் இந்த வருடம் வெளிவர இருக்குற புது  பெர்ஃப்யூம்காக ஸ்பெஷலா உருவாக்குனது.

பாட்டிலை அப்படியே மாத்தி வச்ச மாதிரிதான் தெரியுது. ஏன்னா இந்த மூடி எல்லாம் புத்தம் புதுசா இருக்கு பாருங்க. ஏற்கனவே நம்ம ஒரு பத்து தடவையாவது பாட்டில் மூடியைத் திறந்திருப்போம். அதனால அதை ஈஸியா திறக்க முடியும். இதைப் பாருங்க பயங்கர டைட்டா இருக்கு”

“யாரா இருக்கும்… ம்… ரேச்சல்?”

“யெஸ்… அவளேதான். அப்ப அவளுக்கு நீங்க உதவி பண்றது தெரிஞ்சிருக்கு. நம்மை மோப்பம் பிடிச்சு இந்த இடத்துக்கு வந்துட்டா”

 

“இனிமே என்ன செய்றது  மீரா”

 

“ஒண்ணும் செய்றதுக்கில்ல… இன்னும் ஒரு வாரத்தில் தாத்தா கிட்ட பார்முலாவைத் தரணும் சஷ்டி. ஆனால் இன்னமும் ஒரு முக்கியமான விஷயம் மிஸ் ஆகுது”

“ஒர்ரிஸ் வேரைக் கூடக் கண்டுபிடிச்சுட்டோம் ஆனாலும் இன்னும் ஒண்ணு குறையுதே”

“பேஸ் நோட்.. மீரா பேஸ் நோட்டில் எந்த எண்ணை கலந்திருக்கு”

“செடார்வுட்… அதான் தேவதாரு எண்ணைன்னு சொன்னிங்களே. யெஸ் சஷ்டி நீங்க சொன்னது சரியா இருக்கலாம். செடார் வுட் கூட ரொம்ப கொஞ்சமா வேற என்னமோ கலந்திருக்க மாதிரி இருக்கு. இன்னொரு தடவை அதை மட்டும் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா”

“சரி ஆரம்பிக்கலாம்”

மாலை வரை ஆராய்ந்ததில் இன்னும் ஒரு எண்ணை கலந்திருக்கிறது என்று உறுதிப் படுத்திக் கொண்டவர்களால் அது என்ன எண்ணை என்று மட்டும் நூறு சதவிகிதம் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.

“கண்டிப்பா சாண்டில்வுட் தான்”

“எனக்கு ரெண்டு விஷயம் டவுட்டா இருக்கு மீரா”

“ரெண்டா?”

“ஒண்ணு நம்ம கலந்திருக்குற ரோஸ்… அந்த ரோஸ் எண்ணையை வேறவிதமா பக்குவப்படுத்தி சேர்த்திருக்காங்க. அது ஏதாவது டெக்னிக்கா இருக்கலாம்”

“பெருசா மெஷின் வச்சோ காம்பினேஷனை வச்சோ உருவாக்கல சஷ்டி முழுக்க முழுக்க இயற்கை முறையில் அப்பா செஞ்சிருக்கார். அது மட்டும் ஒரு குறிப்பா எழுதி வச்சிருந்தா நல்லாருக்கும் சஷ்டி”

 

“உண்மைதான் அந்த முறை பத்தித் தெரியணும். ஒவ்வொரு ரோஜாவுக்கும் அது விலையிற மண்ணுக்கு ஏத்த மாதிரி வாசம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூக்குற பூவாக் கூட இருக்கலாம்.”

 

“ஆமாம்… அதை நம்ம கண்டுபிடிக்கணும். ரெண்டாவது சந்தன எண்ணைன்னு நீ சொன்னது. அதில் லேசா மிக லேசா ஒரு டிண்ட் தான் அந்த வாசம் இருக்கு. அதாவது ஒரு பக்கெட் தண்ணில ஒரு துளி சந்தன எண்ணையைக் கலந்தா எவ்வளவு மைல்ட்டா இருக்கும் அது மாதிரி. ஆனால் சில சமயம் பார்த்தால் அது சந்தனம் மாதிரியும் தோணல…”

 

“இப்ப என்ன செய்றது சஷ்டி இன்னும் நமக்கு ஒரு வாரம் கூட இல்லையே…”

 

“யோசிக்கலாம். இன்னும் சில நாட்கள் இருக்கே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

அத்தியாயம் – 5 வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’

அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது.  “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன்.  “இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’

அத்தியாயம் – 22 மலை கிராமத்து மனிதர்களிடம் கழித்த பொழுது நன்றாகவே இருந்தது சஷ்டிக்கும் மீராவுக்கும். பொழுது போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியினை விடுவதாக இல்லை இருவரும். விவரம் தெரிந்தது போலத் தெரிந்த நாலைந்து பேரிடம் அந்த