Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’

அத்தியாயம் – 15

ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது. 

“எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன். 

“இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்” என்ற படி பத்து பதினைந்து சிறு பாட்டில்களை எடுத்து மூன்று பாகங்களாக பிரித்து அந்த பெரிய மேஜையில் வைத்தாள். 

“காலைல நான் சொன்னது நினைவிருக்கா”

“மூணு பொருள்தானே மீராக்கா… பேஸ் நோட், மிடில் நோட், டாப் நோட்தானே”

“மூணு நோட் தாண்டா அந்த மூணையும் எவ்வளவு பொருட்களை எந்த ஸ்ட்ரெந்த்ல மிக்ஸ் பண்றோம்னுதான் சரியா கண்டுபிடிக்கணும். இப்ப ரோஜாவின் வாசத்தை இயற்கையான ரோஜாவில் தயாரிச்ச ரோஜா எண்ணையை வச்சும் கொண்டு வரலாம் இல்ல ரெண்டு மூணு வேதியல் பொருட்களைக் கலந்தும் கொண்டு வரலாம்”

 

முதல் ஸ்டெப் நம்ம ரெண்டு மூணு பேசிக் காம்பினேஷனைத் தயாரிக்கலாம். பேஸ் நோட்டில் ஒரு டிராப், மிடில் நோட்ல ரெண்டு டிராப், டாப் நோட்டில் மூணு டிராப் போட்டு ஒரு சுலபமான சென்ட்டைத் தயாரிங்க. 

 

“ரோஜால ரெண்டு வகை ஒரே மாதிரி செண்ட்டு இருக்கே”

 

“யெஸ், அதில் ஒண்ணு இயற்கையா ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிச்சது. இன்னொன்னு செயற்கையா வேதியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கினது. இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் நிச்சயம் இருக்கும். அந்த வித்தியாசத்தை பவர்புல் ஆல்ஃபாக்டரி சென்ஸ் இருக்கவாங்க கண்டிப்பா கண்டு பிடிச்சிருவாங்க. நீங்க உங்க முயற்சியை  ஆரம்பிக்கலாம்” என்று மீரா சொன்னதும் ஆர்வத்தோடு பிங்குவும், சஷ்டியும் ஆரம்பித்தார்கள். 

“என்ன வாசம் என்ன வாசம்… என்று பிங்கு ஒவ்வொரு பாட்டிலையும் நுகர்ந்து பார்த்தான். 

“டேய் பிங்கு ரொம்ப நேரம் வாசம் பிடிக்காதடா… தலைவலிக்கும்” மீரா சொல்லி முடிப்பதற்கு முன்பே

“அய்யோ தலைவலி” என்றான் பிங்கு. “என்னை வாசமே இல்லாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்களேன். வாந்தி வர்ற மாதிரி இருக்கு” தலையைப் பிடித்துக் கொண்டு சேரில் அமர்ந்து கொண்டான்.

“சரி கையை மோந்து பாரு” என்றாள் மீரா…

“நிஜமாத்தாண்டா… வாசம் ஓவர் டோஸா போகும்போது மணிக்கட்டை மோந்து பார்த்தா தாக்கம் கொஞ்சம் கம்மியாகும்”

“நிஜம்தான் மீராக்கா. ஆமாம் உங்க ஊரில் சென்ட்டில் தானே குளிப்பாங்க. அவங்க கையை மோந்து பாத்தாலும் வாசம் போகாதே”

“நிஜம்தான்… வாசனைகளின் தலைநகரத்தில் மணக்க மணக்க இருக்கணும்னு நினைக்கிறது தப்பா“ என்றாள் எதிர்கேள்வியாக.

“பாரிஸ் தானே பெர்ஃப்யூம் காபிடல்… எப்படிக்கா நிறையா பூ வளருமா”

“பூ எல்லாம் வளரும். ஆனாலும் அந்தக் காலத்தில் பிரான்ஸ் மக்களுக்கு குளிக்குற பழக்கம் கம்மிதான். ஏன்னா தண்ணி அசுத்தமா இருக்கும். அதில் நிறைய வியாதி பரவும்னு அங்கிருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை. அதுவும் இல்லாம அவங்க போட்டுக்குற தோல் கிளவுஸ், உடை எல்லாம் ஒரு நாத்தம் வேற அடிக்கும். இதையெல்லாம் சுத்தப்படுத்துறதுக்கு பதிலா சென்ட்டு போட்டு பாடி ஓடரை மறைச்சுக்கிறது அவங்க வழக்கம்” உண்மையை உடைத்து விட்டாள்.

“இதெல்லாம் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்” என்றான் சஷ்டி மூக்கைப் பொத்திக் கொண்டு.

“தாங்க முடியாமத்தான் சஷ்டி மாதிரி ஒரு புனிதாத்மா அங்க பூத்துக் குலுங்குற லேவண்டர், ரோஜா, மல்லிகை எல்லாம் வச்சு ஆராய்ச்சி செஞ்சு பெர்ஃப்யூம் கண்டுபிடிச்சார்”

“டன் டன்னா ரோஜாவை நசுக்கி ரோஸ் ஆயில் எடுத்திருப்பாங்க இல்லக்கா”

“உண்மைதான் வாசனைகளின் ராணின்னு நாங்க சொல்றது ரோஜாவை இல்ல ஜாஸ்மினை. பெர்ஃப்யூம் தேவைக்கு உலகத்தில் இருக்குற ஜாஸ்மின் எல்லாம் எடுத்துட்டாலும் பத்தாக்குறைதான். அதனாலேயே பல இடங்களில் செயற்கை ஜாஸ்மின்தான்”

“இயற்கை இருக்கும்போது செயற்கை எதுக்கு வீணா?”

“இயற்கை எப்போதும் செலவு பிடிக்கும் விஷயம். ஆனால் செயற்கை சீஃப். இயற்கை வாசம் சீக்கிரம் மறைஞ்சுடும். உதாரணத்துக்கு ஒரு இயற்கை மூலப் பொருளால மட்டும் சென்ட் செஞ்சு போட்டுக்குறேன்னு வச்சுக்கோயேன் ஆறு மாசத்தில் வாசம் போயிடும்”

“ஆமாம்டா இயற்கை இயற்கையோட கலந்துடும்” என்றான் சஷ்டி. 

“அதே செயற்கைன்னா ஒரு வருஷம் வரை வாசம் அப்படியே இருக்கும்”

“பேப்பருக்கும் பாலிதீனுக்கும் இருக்கும் வித்யாசம். ரெண்டாவதில் சேதாரம் அதிகம்” என்ற சஷ்டி மீராவிடம் ரோஸ் என்று போட்ட இரண்டு பாட்டில்களில் ஒன்றினை மட்டும் எடுத்துக் காட்டினான். இது இயற்கை வாசம். மத்த ரோஸ் செயற்கை” என்றான். 

மீராவின் முகம் சந்தோஷத்தால் விகாசித்தது “அதெப்படி சஷ்டி” என்றாள் ஆச்சிரியத்துடன். 

“உன்னை மாதிரி டன் டன்னா ரோஜாவையும் மல்லிகையும் நசுக்கி எடுத்த எண்ணையை நான் வாசம் பாத்து வளந்தவன் இல்லை நான். ஆனால் நான் பூவை செடியில் வச்சு அந்த அழகை ரசிச்சும், வாசத்தை அனுபவிச்சும் வளந்தவன். எனக்கு என் உணர்வுகளுக்கு உண்மை எது பொய் எதுன்னு தெரியும். ஆனா எப்படின்னு சொல்லத் தெரியல.” என்றான். 

மீராவின் மனது தான் தேர்ந்தெடுத்த ஆள் சோடை போகவில்லை என்றெண்ணி மகிழ்ந்தது. “புரியுது சஷ்டி. எங்கப்பா கூட அப்படித்தான் பூவோட பேசுவார். பூக்களை ரசிப்பார். இந்த ஊரில் கொஞ்சம் நிலம் வாங்கி பூந்தோட்டம் போட்டிருக்கார். அதில் பாதி இடம் பக்கத்தில் இருக்குற குடியிருப்பு நிலத்தில் இருக்க குழந்தைகள் தோட்டம் அமைக்கத் தந்திருக்கார். சீக்கிரம் நம்ம வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு ஒரு நாள் போயிட்டு வரலாம்” என்றாள் மீரா. 

அவன் தேர்ந்தெடுத்த நறுமணங்கள் கூட இயற்கைதான். அவளது அப்பாவைப் போலவே. அந்த இயற்கை பொருட்களைக் கொண்டு அவன் உருவாக்கிய பெர்ஃப்யூம் ஏகலைவனின் வில்வித்தையை நினைவூட்டியது மீராவுக்கு.

ஏனென்றால் வெறும் மூன்று பொருட்களை மட்டுமே வைத்து அவன் உருவாக்கி இருப்பான் என்று நினைத்த மீராவிற்கு நாலாவதாக அவன் சேர்ந்திருந்த ஒரு பொருள் ஆச்சிரியத்தைத் தந்தது.

“சஷ்டி இதில் நாலாவதா லாவண்டர் கலந்திருக்கிங்க போலிருக்கு”

“ஆமாம் மீரா எனக்கென்னமோ தயாரிச்சு முடிச்சதும் மூணு நோட்டும் தனித்தனியா இருக்குற மாதிரி இருந்தது. இந்த லாவென்டர் போட்டால் மூணும் பிளண்ட் ஆகும்னு பட்டது. அதுதான் சேர்த்தேன்”

வியந்து சொன்னாள் மீரா “எக்ஸலண்ட் சஷ்டி.. இந்த மூணு நோட்டையும் ப்ரிட்ஜ் பண்ண நாலாவதா ஒரு நோட் சேர்ப்போம் அதுதான் ப்ரிட்ஜ் நோட். லாவென்டர் அந்த ப்ரிட்ஜ் நோட்டில் ஒண்ணு”

“அது மட்டும்தானா வேற ஏதாவது விட்டுப் போயிருக்கா?”

“கேரியர்… என்னதான் நம்ம மண்டையை உடைச்சு காம்பினேஷனைத் தயாரிச்சிருந்தாலும் கேரியர்தான் உபயோகிப்பவர் கிட்ட நம்மை சேர்க்குது”

“அப்பாடா.. தினமும் காலைல நம்ம ஈஸியா ரெண்டு செகண்ட்ல ஸ்ப்ரே பண்ணிட்டு போற இந்த சின்ன பாட்டிலில் இவ்வளவு விஷயமிருக்கா… பாட்டிலில் முதலில் வர்ற டாப் நோட் வாசம், அது மறைஞ்சதுக்கு அப்பறம் வரும் ஹார்ட் வாசம், பல மணி நேரம் நீடிச்சு நீக்குற பேஸ் நோட். இதை எல்லாம் ஒண்ணோடு ஒண்ணா கோர்த்துத் தர பிரிட்ஜ் நோட் வாசம். இந்த வாசத்தை சுமக்குற கேரியர்… இந்த ஒவ்வொரு நோட்டும் பல வகையான பொருட்களை சேர்த்து உண்டாக்கினது. இண்டரெஸ்ட்டிங்… “ என்றான் சஷ்டி

 

“அதேதான் சஷ்டி… உங்களையே உதாரணமா சொல்லட்டா? பார்த்ததும் கரடு முரடா முரட்டுத்தனம் காட்டுற சஷ்டி பேஸ் நோட். அது மறைஞ்சதும் தென்படுற பிடிவாதம் ஹார்ட் நோட். உழைப்பும், அறிவும், அன்பும் சஷ்டிக்கிட்ட இருக்குற பேஸ் நோட். இதையெல்லாம் என்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட சேர்க்குற உங்க குழந்தைத்தனம்தான் கேரியர் நோட்” என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே. 

அவளது கண்களில் தெரிந்த அந்த இனம் புரியா மொழியில் சிக்கித் தவித்தது சஷ்டியின் மனம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

அத்தியாயம் – 8   மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு.  ரீமாவின்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் ஷஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’

அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.