Tamil Madhura பூவெல்லாம் உன் வாசம் தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3

சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் ஷஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி இருக்கும். அவனுக்கு ஒவ்வொரு முறையும் துணை நின்றவர் அவனது துறைக்கு கெஸ்ட் லெக்சரர் குமரேசன் மட்டுமே. அவனுக்கு தாவரவியலில் இருந்த காதலை அறிந்து ஆராய்ச்சி படிப்பிற்கும் உதவினார். அப்போது பகுதி நேரமாய் வேலை ஒன்றும் பொடானிகல் கார்டனில் கிடைக்கவும் அதை வைத்தே தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்தான். எவ்வளவு காலம்தான் தந்தைக்குப் பிடிக்காததே செய்வது. அந்த சமயம் அவர்களது கல்லூரியில் சேர்க்கை சற்று தொய்வடையவும் கல்லூரியின் மீது தனது கவனத்தைத் திருப்பினான். இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது குமரேசனை ஊட்டிக்கு சென்று சந்தித்து ஒரு வார இறுதியை அவருடன் கழித்துவிட்டு வருவான்.

மாலை குமரேசன் அழைத்ததும் ஷஷ்டி சொல்லிவிட்டான் “யாரு சார் அந்தப் பொண்ணு. என்னைப் பார்த்ததும் வேலைக்கு வர சொல்லுது. அதுவும் எங்க காலேஜுக்கே வந்து. லூசா ஸார் அது. சகாயம் வேற எங்கம்மா அப்பாகிட்ட போன் பண்ணிட்டான். அப்பா நான் வெளில வேலைக்கு ட்ரை பண்றதா நினைச்சுட்டு மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு இருக்கார்”

“உங்கப்பா கோபமல்லாம் உனக்கு புதுசா ஷஷ்டி. உங்கம்மாவை சமாதானத் தூதுவரா அனுப்பு”

“கஷ்டம்… எங்கம்மா வேற யாரு அந்தப் பொண்ணு. உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு. ஊர் பேரு தெரியாதவ வெளிநாட்டு கார்ல உன்னைப் பாக்க வராளான்னு கேட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்காங்க”

“என்னடா நீ இப்படி சொல்ற… அங்க மீரா என்னடான்னா நீ பண்ண அடிதடியெல்லாம் பாத்துட்டு, செம தில்லான ஆள்னு நம்பிட்டு இருக்கா. நான் வேணுனா அவளைக் கூப்பிட்டு சஷ்டி சரிப்பட்டு வரமாட்டான். முக்கியமா நீ உங்கம்மா அப்பா திட்டினாலே உச்சா போயிருவன்னு சொல்லிடட்டுமா”

அய்யோ அவ்வளவு அழகான பெண்ணிடம் இப்படியா என் பெயர் நாறவேண்டும் “ஸார்… விட்டுடுங்க… அந்தப் பொண்ணு யாருன்னே எனக்குத் தெரியாது. அவகிட்ட என் பேரை டேமேஜ் பண்ணிடாதீங்க”

“யாருன்னே தெரியாத பொண்ணு கிட்ட பேரு கெட்டு போகட்டுமே. இப்ப என்ன குறைஞ்சு போச்சு”

யாருன்னே தெரியலான்னாலும் அழகான பொண்ணாச்சே… என்றெண்ணியபடி.

“எனக்கு ஒண்ணு புரியல ஸார். நான் யாருன்னே தெரியாம எப்படி வேலை தந்தது அந்தப் பொண்ணு. ரீமா சோப்பு கம்பனிக்கு எதுக்கு என்னோட சேவை தேவை”

“இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியும். இருந்தாலும் நீ மீராகிட்டயே கேட்டுக்கோ. அதுதான் எஃபெக்டிவ்வா இருக்கும்”

“அந்தப் பொண்ணுதான் கோயம்புத்தூர் போயிருச்சே”

“பைக் இருக்குல்ல எடுத்துட்டு போ. ரியாட்லதான் தங்கி இருக்கா”

“என்கிட்ட நீங்களே பெர்சனலா அனுப்பிருக்குறதை பார்த்தா உங்க சொந்தக்கார பொண்ணா”

“அப்படி கூட சொல்லலாம்.மீராவோட அம்மாவும் அப்பாவும் என்னோட கல்லூரி நண்பர்கள். வெளிநாட்டில் வளர்ந்த பொண்ணு. ஊட்டில என் வீட்டுக்கு சில தடவை வந்திருக்கா. இப்ப ஒரு இக்கட்டான நிலைல மாட்டி இருக்கும்போது அவளோட அம்மா சுபத்ரா என்னைக் காண்டாக்ட் பண்ணி இங்க அனுப்பி வச்சா. எனக்கு இப்ப உன்னை விட நல்ல ஒரு நபர் அவளுக்கு ஹெல்ப் பண்ணக் கிடைக்க மாட்டாங்கன்னு ஒரு எண்ணம். அதுதான் உன்னைப் பாக்க சொன்னேன். நேத்து ராத்திரிதான் உன்னைப் பத்தி சொன்னேன். காலைல நேர்லயே உன் காலேஜுக்கு வந்துட்டா. அப்ப நிலமை எவ்வளவு சீரியஸ்னு புரிஞ்சுக்கோ” என்றார்.

“சரி ஸார் நான் அவங்களைப் பார்த்து விசாரிக்கிறேன்” என்று உறுதியளித்தான் ஷஷ்டி.

“ஆனா…”

“இன்னுமா உனக்கு பொண்ணுங்க கிட்ட பேசத் தயக்கம். அதுவும் இப்ப காலேஜ் விவகாரமெல்லாம் நீதான் கவனிச்சுக்குற போலிருக்கு. கிட்டத்தட்ட ஹீரோ லெவலுக்கு இறங்கிட்டாயாம்”

“தயக்கம் எல்லாம் இல்ல சார். அந்த மீரா பொண்ணுகிட்ட எல்லாம் ஓகே. ஆனால் ஒரு சென்ட்டு போட்டுட்டு வந்தா பாருங்க. பயங்கர ஸ்ட்ராங்க். எனக்கு தலையே வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. அவ கிளம்பி ரெண்டு மணி நேரத்துக்கு வாசம் சுத்திட்டு இருந்த்ததுன்னா பாத்துக்கோங்களேன்” என்று ஷஷ்டி சொன்ன அடுத்த நிமிடம் எதிர்முனையில் பலத்த சிரிப்பொலி.

“மை பாய், நான் உன்னை இதுக்கு செலெக்ட் பண்ணதுக்குக் காரணம் இருக்கு. மீராவை மீட் பண்ணு. உனக்கே புரியும்”

***

இன்று கோவையில் குளிர் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் வழக்கம் போலத் தூங்குவதற்கு முன் குளித்துவிட்டு, தனக்கு மிகவும் பிடித்தமான பிங்க் நிற பைஜாமாவை மீரா அணிந்தவுடன் புசுபுசுவென பிங்க் நிற பாண்டா கரடியைப் போலத் தோற்றமளித்தாள்.

ஏன் இந்தப் பிறவி என்று தத்துவார்த்தமாக சிந்திக்கத் தோன்றியது. எதற்காக இதற்கு ஒப்புக் கொண்டோம். ஏன் என்னால் செய்ய முடியாது என்று அனைவருக்கும் ஒரு பெரிய கும்பிடு ஒன்று போட்டுவிடு பாரிசிலிருக்கும் தனது வீட்டில் நிம்மதியாக அடைந்து கொள்ளக் கூடாது என்று பலமாக யாரோ அவளிடம் மனதில் சொன்னார்கள். அடுத்த வினாடி தாய்தந்தை முகம் மனதில் தோன்ற, எனக்காக இல்லை என்றாலும் இவர்களுக்காகவாவது வெற்றி பெற வேண்டும்.

சஷ்டியைப் பார்த்த சில நிமிடங்களில் அவள் மனதில் ஏகப்பட்ட புத்துணர்ச்சி. அந்த எனர்ஜி தனக்கு உதவியாக இருந்தால் நன்றாக இருக்கும். இப்போது இருக்கும் அவளது மனநிலையில் கதிரேசனைத் தவிர வேறு யாரையும் அவளால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் சில மாதங்களில் அவள் முதுகில் ஏராளமான குத்துக்கள். முதுகில் குத்துவது இருதயத்தில் வலி ஏற்படுத்துவது வியப்புத்தான்.

மணி எழுதான் ஆகிறது. வெளியே போகப் பிடிக்கவில்லை. ரெஸ்டாரண்ட்டை அழைத்தாள். பதினொரு மணி வரை உணவு கிடைக்கும் என்று அவர்கள் பதில் சொன்னதும் பசித்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி அப்போதைக்கு சூடாக சாக்லேட் மில்க் ஆர்டர் செய்தாள். லேசான மழையும் நல்ல குளிரும் இருக்கும் சமயத்தில் சூடான சாக்லேட் மில்க் அருந்துவது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

அறையின் கதவை தட்டுவதைக் கேட்டு “யெஸ் கம் இன்” என்று குரல் கொடுத்தாள். காலடி சத்தம் வரவேற்பறையிலேயே நின்றதைக் கேட்டு புத்தகத்தை விட்டு கண்ணை அகற்றாமல் “இங்க இருக்கேன்” என்று குரல் மட்டும் எழுப்பினாள். காலடித்தடம் அவள் குரல் இருந்த திசையை நோக்கி வந்தது. அதன்பின் அப்படியே நின்று விட்டது.

“சென்டர் டேபிளில் வச்சுட்டு போங்க எடுத்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவளது உலகில் ஆழ்ந்தாள்.

“மே ஐ கம் இன் மேடம்” என்று வெளியிலிருந்து ஒரு குரல் வரவும் தனது உலகிலிருந்து உலுக்கப்பட்டவளாக நிமிர்ந்தவள் கண்களில் கைகளைக் காட்டிக் கொண்டு அவளையே பார்த்தவண்ணம் எதிரே நின்றிருந்த ஷஷ்டி பட்டான். அப்படியே திகைத்துப் போய் எழுத்து நின்றாள். இவன் எப்படி இங்கே. யாராவது விசிட்டர் வருவதாக இருந்தால் வரவேற்பறையில் அழைத்து சொல்வார்களே.

“இந்த ஹோட்டலோட கோயம்புத்தூர் ப்ராஞ்ச் என் ஃப்ரெண்ட்தான் பிராஞ்சைஸ் எடுத்திருக்கான். நானும் அவனும் சேர்ந்துதான் ஏற்பாடுகளை செஞ்சோம். அதனால் நானும் இங்க ஒரு பார்ட்னர் மாதிரிதான்” என்றான் அவளது சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக”

பின்னால் நின்றுந்த பணியாளனிடம்

“குமார் இங்க வச்சுட்டு போ… அப்படியே எனக்கும் ஒரு காபி கொண்டு வந்துடு” என்று சொல்லிவிட்டு எதிரே இருந்த இருக்கையில் சாவாதனமாக அமர்ந்தான்.

“உட்காருங்க மீரா” என்று சொன்ன அதிரடிக்காரனை எந்த வகையில் சேர்ப்பது.

தானே தான் பேச வேண்டும் என்ற முடிவுடன் “டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் ரெஸ்டாரண்ட்ல போயி பேசலாமே” என்றாள்.

காலையில் தான் பார்த்த பிராக் மாதிரி இல்லாமல் உடல் முழுவதும் மூடி அழகாகத்தானே இருக்கிறது. அதுவும் இந்த பிங்க் உடைக்கும் இவளது நிறத்திற்கும் வித்யாசம் வேறு தெரியவில்லை என்று நினைத்தவண்ணம் “இந்த டிரஸ் நல்லாத்தானே இருக்கு” என்றான்.

“இது நைட் ட்ரெஸ். நான் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன். நீங்க அதுவரை லாபில காத்திருக்க முடியுமா ப்ளீஸ்” என்றாள்.

அடராமா… இந்தப் பெண் இரவு உடையைப் பகலிலும் பகல் உடையை இரவிலும் போட்டுக் கொண்டு சுற்றுகிறதே.

“நான் ரெஸ்டாரண்ட் போறேன். டேபிள் நம்பர் ஃபைவ் வந்துடுங்க. கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். இவனது அம்மா உடை மாற்றினால் இரண்டு மணி நேரமாகும். “ஏம்மா சேலையை கட்டுறீங்களா இல்லை நெய்யுறிங்களா… “ என்று அலுத்துக் கொள்வான். அவனது சகோதரி சித்தப்பாவின் பெண்கள் யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. இவள் எத்தனை நேரமாக்கப் போகிறாளோ…

வெளியே வந்தவன் எதிரே காபி கொண்டுவந்த ரூம் சர்வீசின்  தட்டிலிருந்த அவனுக்கான காபியை எடுத்துக் கொண்டபடி உணவு விடுதிக்கு நடந்தான்.

“யாருன்னே அது” என்று காதைக் கடித்த குமாரிடம்

“தெரியலப்பா… கேட்டு சொல்லுறேன்…” என்று பதிலுக்குக் கடித்துவிட்டு அவனது வீட்டு மக்களின் நலனை விசாரித்து முடிப்பதற்குள் காக்கி சீனோ மற்றும் வெள்ளை நிற காட்டன் ஷர்ட் அணித்து வேக நடையில் வந்துவிட்டாள் மீரா.

இருவருக்கும் ஸ்டார்டர்ஸ் ஆர்டர் தந்துவிட்டு

“சொல்லுங்க மீரா… என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்க. குளிக்கும் போதும், முகம் கழுவும்போதும் மட்டுமே சோப்பைத் தொடுற, ஜல்லிப்பாட்டில சாதாரண லெட்சரர் வேலைல இருக்குற என்னைத் தேடி வந்து ரீமா நிறுவனம் வேலை கொடுக்கும் காரணம் என்ன. அப்படி என்ன என்கிட்ட திறமை இருக்கு”

“அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹிஸ்டரி சொல்றேன். கொஞ்சம் போர் அடிச்சாலும் கதைல கனெக்ட் ஆக ஹெல்ப் பண்ணும். கேட்க நீங்க தயாரா”

நல்லவேளை தலை வலி செண்ட்டை இவள் போட்டு வரவில்லை என்று நிம்மதியாக உணர்ந்தவன்.

“கோபி மஞ்சூரியன் கூட ஹிஸ்டரியும் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று சம்மதமளித்தான்.

 

 

 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 8’

அத்தியாயம் – 8   மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு.  ரீமாவின்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 25 மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார். சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா