Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -20

இன்று ஒரு தகவல் -20

பெண்கள் அன்றைய நாட்களில் வழக்கமாக வீட்டு வேலை செய்யவும், துணி துவைக்கவும், பாத்திரம் தேய்க்கவும், சமைக்கவும் மற்றும் அழகுப் பதுமைகளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். காலம் காலமாக அவர்களுக்கு பொருளாதார சுதந்திரமும், தன்னிச்சையாக முடிவெடுக்கும் சுதந்திரமும் தரப்பட்டது இல்லை. இந்த நிலை நமது நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல காலமாக இவ்வாறே பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த சமயத்தில் ஒரு பெண் சீரியல் கில்லர் ஒருவர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்தார் என்பது நமக்கெல்லாம் ஆச்சரியமான விஷயம்தான். ஏனென்றால் பெண்கள் மென்மையானவர்கள், இளகிய மனம் கொண்டவர்கள் என்பதே நமக்கு காலம் காலமாக போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அந்தத் தொடர் கொலையாளியின் கதையைப் பார்க்கலாமா?

லோகஸ்ட்டா ‘கவுல்’ என்ற கிராமத்தை சேர்ந்த பெண்மணி. அவர் தாவரவியலைப்  பற்றியும்,  தாவரங்களைப் பற்றியும் நன்கு தெரிந்தவர். சிறுவயதிலிருந்து மூலிகைகள் பற்றிய அறிவு அவருக்கு போதிக்கப்பட்டு இருந்தது. அவருடன் படித்தவர்கள் அனைவரும் இந்த அறிவினைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்தும், நோயாளிகளை குணப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, இவர் மட்டும் விஷச் செடிகளை வைத்து எப்படி லாபம் சம்பாதிப்பது என்று யோசித்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

ஒரு சமயத்தில் அவர் கிராமத்தில் இருந்து ரோமுக்கு குடிபெயர்ந்தார் . அந்த காலத்தில் ரோமாபுரியில் எப்பொழுதுமே பகைக்கு பஞ்சமே இல்லை. மக்கள் தங்களது எதிரிகளை பழிவாங்க விஷச் செடிகளை வைத்து, மூலிகை விஷத்தைத் தயாரித்து கொடுத்த லோகஸ்ட்டாவை மிகவும் விரும்பினார்கள். அதனால் அவருக்கு வாடிக்கையாளர்களும் பெருகினார்கள்.

இதனால் அவள் செய்தது தப்பு இல்லை என்று அர்த்தமில்லை. லோகஸ்டா அவளது தப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டாள். எனினும் அதிர்ஷ்டம் லோகஸ்ட்டாவுக்கு சாதகமாக வேலைசெய்தது.

அந்த நாட்டின் மகாராணி அக்ரிபினா தனது மகனுக்காக அரியணையை தக்கவைத்துக் கொள்ள தனது கணவரையே கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக லோகஸ்டோவை சிறையிலிருந்து விடுதலை செய்து, தனது கணவன்  கிளாடியசைக் கொல்ல விஷம் தயாரிக்குமாறு கட்டளையிட்டார். கணவனை கொல்ல உதவி செய்தால், அவளை விடுதலை செய்வேன் என்றும் வாக்களித்தார்.

லோகஸ்டா அதனை ஏற்றுக்கொண்டார் அவளது கணவனை  கொல்ல விஷத்தை தயார் செய்தார். பின்னர் அரசர் மிகவும் விரும்பி உண்ணும் காளானில் அந்த விஷத்தைக் கலந்தார். உணவு வேளை வந்தது. கிளாடியஸ் தயக்கமின்றி மனைவி பரிமாறிய காளான்களை சாப்பிட்டான்.

ஆனால் அரசனாகிய அவளுக்கு பல எதிரிகள் இருந்ததால் எப்பொழுதும் யாராலும் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று எண்ணி அவன் கைகளில்  இறகுகளை வைத்திருப்பான். உணவில் விஷம் இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனே இறகுகளைத் தொண்டையில் குத்தி வாந்தி எடுத்து விடுவான்.

ஆனால் இந்த முறை அவன் உணவில் விஷம் இருப்பதாக சந்தேகப்பட்டு அந்த இறகுகளை பயன்படுத்தியும் தப்பிக்க முடியவில்லை. ஏனென்றால் அதிலும் விஷத்தை ஊற்றி வைத்து இருந்தாள்.

இப்படித்தான் அக்ரிபேனாவின் மகன் நீரோ அரியணையை கைப்பற்றினான். அரியணையைக் கைப்பற்றிய நீரோ மேலும் லோக்கஸ்டாவைப் பயன்படுத்த முடிவு செய்தான். அவன் தனது சகோதரன் பிரிட்டானிக்கஸ் அரியணையின் போட்டியாளராக வருவான் என்று பயந்தான். அதனால் லோகஸ்ட்டாவிடம் சொல்லி தனது தம்பியும் விஷம் வைத்து கொல்ல உதவி செய்யுமாறு கேட்டான்.

ஆனால் பிரிட்டானிகஸ் உண்ணும் உணவு அனைத்தையும் மெய்க்காப்பாளர் சோதனை செய்து,  அவர்கள் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே உண்பான். அதனால் அவனைக் கொல்வது சற்று கடினமான விஷயமாகவே இருக்கும். அந்த சவாலை லோகஸ்டா எப்படி சமாளித்தாள் என்று பார்க்கலாம்.

நீரோ தனது சகோதரனுக்காக ஒரு விருந்தினை ஏற்பாடு செய்தான். விருந்தில் அவனது சகோதரன் பிரிட்டானிகசுக்கு மிகவும் பிடித்தமான, ஆனால் முற்றிலும் பாதிப்பில்லாத ஒரு சூடான ஒயின் வழங்கப்பட்டது. உணவை சுவைத்த மெய்காப்பாளர் அதில் எந்த பாதிப்பும் அடையவில்லை. ஆனால் பிரிட்டானிகஸ் பருக்கியவுடன் அவனுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

மதுவில் விஷம் இல்லை ஆனால் எப்படி எப்போது விஷம் கலக்கப்பட்டது? லோகஸ்டா மதுவில் விஷத்தைக் கலக்கவில்லை. ஆனால் அவருக்கு தரப்பட்ட மது நன்கு சூடான வெப்பநிலையில் தரப்பட்டது. எனவே, அதன் சூட்டைக் குறைக்க பிரிட்டானிக்கஸ் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தினான். அந்தக் குளிர்ந்த நீரில் தான் விஷம் கலக்கப்பட்டு இருந்தது.

நீரோ விருந்தினர்களிடம் தனது சகோதரனுக்கு ஏற்கனவே வலிப்புநோய் இருந்ததாக பொய் சொன்னான். இப்படியாக, மிகச் சுலபமாக தனது சகோதரனைக் கொன்று, அரியணையை உறுதி செய்தான் நீரோ.

இவ்வளவு கொடுஞ்செயல்கள் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இல்லவே இல்லை!

எந்த மகனுக்காக கணவனையே கொன்று அரசாணையை பரிசளித்தாரோ அந்தத் தாயையே நீரோ கொலை செய்தான். லோகஸ்ட்டாவும் ஜெயிலில் அடைக்கப்பட்டாள். பின்னர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள். நீரோவும் தற்கொலை செய்து கொண்டான்.

எனவே தப்புக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று வரலாறு மற்றுமொருமுறை நிரூபித்தது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -6இன்று ஒரு தகவல் -6

தெனாலி ராமன் கதைகள் – தங்க மஞ்சள் குருவி!   விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள்

இன்று ஒரு தகவல் -14இன்று ஒரு தகவல் -14

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு

இன்று ஒரு தகவல் -17இன்று ஒரு தகவல் -17

ஸ்காட்லாந்தில் ப்ரோச் என்ற என்ற வட்ட வடிவமான கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. 2000 வருடங்களுக்கு மேல் இருக்கலாம் என்பது தொல்லியல் நிபுணர்களின் கூற்று. இது போல ஒரு இருநூறு கட்டடங்கள் வரை கண்டறிந்து இருக்கிறார்கள். சுமார் 13 மீட்டர் உயரம்