ஸ்காட்லாந்தில் ப்ரோச் என்ற என்ற வட்ட வடிவமான கட்டடங்கள் மிகவும் பழமை வாய்ந்தது. 2000 வருடங்களுக்கு மேல் இருக்கலாம் என்பது தொல்லியல் நிபுணர்களின் கூற்று.
இது போல ஒரு இருநூறு கட்டடங்கள் வரை கண்டறிந்து இருக்கிறார்கள். சுமார் 13 மீட்டர் உயரம் இருக்கும் ப்ரோச்சுகள் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து மக்களைக் காவல் காக்கும் போர் வீரர்கள் தங்குமிடமாகவோ இல்லை வெளி ஆட்களிடமிருந்து கிராமத்தையும் கால்நடைகளையும் பாதுகாக்கும் இடமாகவோ இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. ஏனென்றால் சில இடங்களில் செம்மறி ஆடுகள் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.
அதை எல்லாம் விடுங்க. இப்ப எதுக்கு இதெல்லாம். நம்ம ஊரில் இல்லாத புராதன இடங்களா? இல்லை நமக்கு இல்லாத வரலாறா? ஆனால் இந்த வரலாற்றைப் பாதுகாக்க நாம் செய்யும் முயற்சி ரொம்பவே குறைவு. ஆனால் அவங்களோ இந்த இடங்களை ஆராய்சி செய்து புனரமைக்கும் பணியில் இறங்கி இருக்காங்க. டிஜிட்டல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த இடத்தின் உள்ளமைப்பையும் வெளித்தோற்றத்தையும் அப்படியே வடிவமைச்சு இருக்காங்க பாருங்க.
அடுத்த கட்டமா கட்டுமானப் பணிகளையும் தொடங்க இருக்காங்க. இப்படி பழமையை மீட்டெடுக்கும் நல்ல காரியத்திற்கு நம்ம வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே சமயத்தில் நமது தமிழ் நாட்டில் இருக்கும் பழைய கட்டிடங்களையும் நினைவுச் சின்னங்களையும் நாமும் பாதுகாக்க வேண்டும்னு ஒரு உறுதி மொழியையும் ஏற்றுக் கொள்வோம்.