Tamil Madhura சிந்தனை துளிகள் இன்று ஒரு தகவல் -10

இன்று ஒரு தகவல் -10

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதவை

 

பால் ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகும். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பாலுடன் சில உணவு பொருட்களை ஒருபோதும் சேர்க்கக்கூடாது.

மீன் – பால்:  இவை இரண்டும் சேர்ந்த கலவையானது உடலில் ரசாயன மாற்றங் களுக்கு வழிவகுக்கும். உடலில் சம நிலையின்மையை உருவாக்கும். மீன் மட்டுமின்றி பிற இறைச்சி வகைகளையும் பாலுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. அவை செரிமான பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

பாலுடன் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் அல்லது அமிலப் பொருட்களைக் கலக்காதீர்கள். வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் பாலுடன் உட்கொள்ளக்கூடாது. ஏன் தெரியுமா? பால் ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் எடுக்கும். ஒருவர் பால், எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்களை ஒன்றாக சேர்க்கும்போது பால் நொதித்துவிடும். வாயு மற்றும் நெஞ்செரிச்சலை வரவழைத்து, உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும். சிலருக்கு நெஞ்செரிச்சல், சளி, இருமல், தடிப்புகள் மற்றும் ஒவ்வாமைைய ஏற்படுத்தலாம்.

பால் மற்றும் உப்பு எதிர்மறை பண்புகளைக் கொண்டவைகளாகும். எதிர்மறை பண்பு கொண்டவைகளை உட்கொண்டால், அது உடலுக்கு தீங்கைத் தான் உண்டாக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

இன்று ஒரு தகவல் -1இன்று ஒரு தகவல் -1

ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்

இன்று ஒரு தகவல் -15இன்று ஒரு தகவல் -15

கிறுக்குசாமி கதை ‘கிறுக்குசாமி’ இப்படி ஒரு பெயரா என்று உங்களில் பலர் எண்ணக்கூடும். என்ன செய்வது அதுதான் அவரது காரணப்பெயர். கிறுக்குசாமி பழனிக்கு அருகில் இருக்கும்  நெய்க்காரப்பட்டியில் திவ்யமாய் சொந்த வீடு, கடை, தோப்பு துரவுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஒரு கெட்ட

இன்று ஒரு தகவல் -7இன்று ஒரு தகவல் -7

எலுமிச்சை அளவு சாதம்!   ஒரு தேசாந்திரி ஓர் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிட உணவு கொடுக்கும்படி அந்த உணவு விடுதி நடத்தும் பெண்மணியிடம் கேட்டான். அவளோ சாப்பாடெல்லாம் ஆகிவிட்டது ஒன்றும் இல்லை என்றாள். “அம்மா பசி காதை அடைக்கிறது. ஒரு