Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24

 

இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பயங்கரமாய் தோன்றியது.

“ஆன்ட்டி ஒரே ஒரு ரெக்வெஸ்ட்” தனது பட்டாம்பூச்சி இமைகளை சிமிட்டிக் கொண்டு கேட்ட மித்துவின் கன்னங்களில் முத்தமிட்டுவிட்டு கேட்டாள்.

“சொல்லும்மா”

“ரதி, வெற்றி மாதிரி நானும் உங்களை அம்மான்னு கூப்பிடவா?” ஏக்கத்துடன் கேட்ட அந்தக் கண்களை வியப்புடன் பார்த்தவளது தலை தானாக ஆடியது.

“தாங்க்ஸ் ஆன்ட்டி சாரி அம்மா…” என்று சொல்லி அந்த இடத்தை விட்டு

“ஹே எனக்கும் அம்மா கிடைச்சுட்டாங்க” என்றபடி கத்திக் கொண்டே ஓடினாள்.

அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா…

“தாங்க்ஸ் நிலா. மித்து மனசளவில் ரொம்ப பாதிக்கப் பட்டிருந்தா. வீட்டை விட்டு வெளிய போகவே பயந்தா… அதனாலதான் அம்மா அப்பாவோட சென்னைக்கே வந்துட்டேன். ஆனாலும் பெரிய முன்னேற்றமில்லை. அப்பத்தான் கடும் கோடைல அடிச்ச குளிர்ச்சியான தென்றல் காற்று மாதிரி நீ வந்த.

ட்ரீட்மெண்ட்லயும், மருந்து மாத்திரையிலும் வெளுத்துப் போயிருந்த மித்து… ரதியையும், வெற்றியையும் பார்த்ததும்தான் சிரிச்சா, பேசினா… அதனாலதான் இங்கே வீட்டை வாடகைக்கு எடுத்துட்டு வந்தேன். வெளிய போகவே பயந்தவ இப்ப பட்டாம்பூச்சி மாதிரி சிறகடிச்சு பறக்குறா. தாங்க்ஸ் என் மகளை மீட்டெடுத்து தந்ததுக்கு”

“நான் ஒண்ணுமே செய்யல அதின்”

“உன் கிட்டேருந்த அந்த பாஸிட்டிவிட்டி மித்துவுக்கும் பரவி அமைதி தந்திருக்கு. இங்க கிடைச்ச அன்பு மனசோட ரணத்தை ஆற்றி இருக்கு.  உன்னோட கதையை தெரிஞ்சுக்கிட்ட நிமிஷம் அவளோட தேடல் முற்று பெற்றிருக்கு.

அவளுக்கு மட்டும் இல்லை. லஸ்யாவின் கொடூரமான நடத்தையாலயும், நாலாபக்கமும் என்னை ஒரு விற்பனை பொருளா பார்த்த இந்த உலகத்தோட மோசமான பக்கத்தாலும் நானும் கூட மனசளவில் காயப்பட்டிருந்தேன். ஊரில் எல்லாருக்கு முன்னாடி என்னை ஒரு பெண் பித்தன்னு ப்ரஜெக்ட்  பண்ணிட்டு ரகசியமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவங்க எத்தனை பேரு தெரியுமா?

உன் கூட இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் என் மனசு தன்னால அமைதியாகுது”

வெண்ணிலாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

“மீனுக்குட்டி…” என்று மெல்லிய குரலில் அழைத்தான் அதினன்.

“அந்த நாவல்ல வர்ற மீனுக்குட்டி நீதானே?”

கண்களில் நீர் நிறைய தலையாட்டினாள் வெண்ணிலா.

“ஓ மை காட், உன் வலியோட என் வலியை ஒப்பிட்டிருக்கேன்… அந்த மீனுக்குட்டி… ஓ மை காட் மீனு… ஐ லவ் ஹர். எவ்வளோ பப்ளி கேரக்டர். அவ எப்படி இந்த மாதிரி ஒரு கல்யாணத்தில் மாட்டிக்கலாம்னு ஒரு எரிச்சல். அவளை அறைக்குள்ள வச்சு குடும்பத்தையே கூண்டோட கொன்னுடுவேன்னு மிரட்டி, தினமும் அவன் தாம்பத்யம் என்ற பெயரில் கொடூரமா வதைச்சப்ப என் மனசு இங்க வலிச்சது நிலா…

தினமும் இந்த வேதனையை எப்படித் தாங்கிக்கிட்ட? ஒரு கட்டத்தில் நானே கதைக்குள்ள போய் அவளோட வேதனையை மாத்தலாம்னு நினைச்சேன். ஆனால் படைப்பாளி நீதானே. நான் எப்படி மாத்த முடியும். நீ உன்னை எல்லாரும் கொண்டாடனும்னே மீனுக்குட்டியை எங்க இதயம் தொடுற மாதிரி படைச்சேன்னே முடிவு பண்ணிட்டேன்…

அவ கொஞ்சம் கெட்டவளா இருந்தால் இந்தக் கஷ்டம் கூட ஓகேன்னு ஒரு ஜஸ்டிபிகேஷன். கடைசியில் அவள் கெட்டவளாத்தான் இருப்பா… ஆண்கள் மட்டுமே இங்க தப்பா ப்ராஜெக்ட் பண்ணப்படறதா ஒரு வெட்டியான வாதம். எல்லாம் சேர்ந்து மீனுக்குட்டில லஸ்யாவை பிட் பண்ண நினைச்சேன். ஆனால் கடைசி வரை மீனுக்குட்டி அவளோட தனித்துவத்தை இழக்கவே இல்லை”

கதையை அனுபவித்து அதில் வாழ்ந்த ரசிகர்களின் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் படைப்பாளிகளுக்குத் தெரியும். ஆத்மார்த்தமான அந்த வார்த்தைகளை அவள் உணர்ந்தாள்.

மலைக்கோவிலில் விளக்கு ஏற்றப்பட, அவர்கள் இருவரையும் மேலிருந்து குழந்தைகள் கத்தி அழைத்தார்கள்.

“இருட்டப்போகுதாம். சீக்கிரம் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்குப் போகணும்”

“நிலா… “

“சொல்லுங்க… “

“வந்து… மித்து அம்மான்னு கூப்பிட சம்மதிச்சதை என் கூட வாழ்க்கை முழுசும் நீ வர சம்மதிச்சதா எடுத்துக்கலாமா?”

“அதின்”

“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” என்றான்.

“நான் சூடுபட்ட பூனை அதின்.உங்களை முழுசுமா என் மனசு நம்புது. சம்மதிக்க சொல்லிக் கெஞ்சுது. ஆனால் பயம் என்னை விட்டு முழுசுமா போகல… “

“நேரம் எடுத்துப்போம் நிலா… வெண்ணிலாவின் வரவுக்காக வானம் எப்போதும் காத்திருக்கும்”

3 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_19’

அத்தியாயம் – 19 அதினன் வீட்டை சுத்தம் செய்து குடி வந்து ஒரு மாதமாகப் போகிறது. தினமும் காலை எழுந்து குளித்து பத்து மணிக்கு ரெடியாகி விடுவான். அதற்குள் வெண்ணிலாவும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_20’

அத்தியாயம் – 20   “என்னடி ஓடுகாலி, அடிக்கடி வெளியூருக்குப் போயிட்டு வர்றியாம், விதவிதமா புடவை கட்டிக்கிறியாம். எவனேவனோ வீட்டுக்கு வேற வரானாம்? ஊருக்கு வெளிய வீட்டை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்ணிட்டு இருக்கியா?” சட்டை பட்டன் பிய்ந்து சட்டை கழண்டிருப்பது கூடத்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_22’

அத்தியாயம் – 22   பாபு கத்திச் சென்றதற்குப் பின் கூனிக் குறுகி நின்றுவிடாமல் மனதை தனக்குத் தானே தைரியப்படுத்திக் கொண்டபடி அதினனின் வீட்டு பால்கனியில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. யாருக்கும் சாப்பிடக் கூட மனமில்லை. “அதினனைப் பத்தி முதல் முதலில் தப்பா