Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_16’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_16’

அத்தியாயம் – 16

 

முதல் கதையைத் திருத்தம் செய்து முடித்ததும் இரண்டாவதாக ‘மினுக்கி மீனுக்குட்டி’ கதையை திருத்தம் செய்ய எடுத்திருந்தாள். அது அவளது முதல் படைப்பு என்பதால் அவளது மனதிற்கு மிக நெருக்கம். ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு மனப்பாடம். அதனால் திருத்தம் செய்வதும் எளிதாக இருக்கும் என்ற நம்பிக்கை.

உற்சாகப் பூங்கொத்தான மினுக்கி, மிடுக்கி மீனுக்குட்டி எப்படி பொருந்தாக் காதலில் விழுகிறாள். ஒழுக்கம் தவறிய ஒருவனை எந்த நம்பிக்கையில் மஞ்சள் கயிறு மாஜிக் செய்து திருத்தும்? கணவன் என்னும் ஒரு வார்த்தை அவன் செய்த கொடூரங்களை மறக்கடிக்குமா? அவளது புத்தியை மழுங்கடிக்குமா? என்ற கேள்விகளை வாசகர்கள் மனதினுள் எழுப்பி, கடைசியில் மீனுக்குட்டி எப்படி பரிதாபமாகத் தோற்றுப் போகிறாள் என்று முடிக்கும்போது படிக்கும் வாசகர்கள் கண்களில் கண்ணீர் குளம் கட்டும்.

உலகம்மை கூட “வெண்ணிலா சுபமான முடிவு இருக்குற கதைகள்தான் என்னோட சாய்ஸ். ஆனால் இந்தக் கதைல தினமும் கற்பழிக்கற ஹீரோவோட சேர்த்து வச்சு, டூயட் போட்டு, சுபம் போடுன்னு உன்கிட்ட கேட்கக் கூட எனக்கு நா கூசுது. இதுதான் அவளுக்கு சரி” என்றார்.

ஒரு சோகமான முடிவு கூட வரவேற்கப் பட்டது இந்தக் கதையில்தான்.

ஆனால் அதில் எழுதியிருந்த திருத்தங்களைப் படிக்கும்போதே விக்கித்துப் போனாள்.

கூடவே இதை அவளால் செய்ய முடியுமா என்ற மலைப்பும், அதினனின் நிறுவனத்திற்குக் கதையைத் தந்து தப்பு செய்து விட்டோமோ என்ற வருத்தமும் அவளது மனதில் நிரம்பியது.

இந்த மனத்தாங்கலை அவளால் தோழர்களுடன் கூடப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஒன்று அவளிடம் சொல்லிக் காண்பிப்பார்கள், இரண்டாவது அதினனை தலை மூழ்கிவிட்டு நம் வேலையைத் தொடருவோம் என்பார்கள். இரண்டாவது சொன்னது அவளால் முடியுமா என்றே தெரியவில்லை. இந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே அவன் அவள் மனதில் அந்த அளவுக்கு இடம் பிடித்திருந்தான்.

அதினனின் கையெழுத்தில் எழுதி இருந்ததைப் படித்தாள்.

‘மீனுக்குட்டி மிகவும் நல்லவள், வல்லவள் என்ற வண்ணமே கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. கொடுமைக்கார உறவினர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் விதம் படிப்பவர்களுக்கு பரிதாபம் வர வேண்டும் என்றே வலிந்து எழுதப் பட்டது போலத் தெரிகிறது. பல இடங்களில் அவளை உண்மையின் மறுவுருவம் தியாகத் திருவுருவம் என்ற கோணத்தில் படைத்திருப்பது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இதனை மாற்றினால் என்ன? கொஞ்சம் சுவையைக் கூட்ட அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் என்று காட்டினால்?’

அதற்கு மேல் அவளால் பொறுக்க முடியவில்லை. மணி பதினொன்று ஆனது கூட உறைக்காமல் அதினனின் எண்ணுக்கு அழைத்தாள்.

இரண்டே ரிங்கில் அவளது அழைப்பு எடுக்கப்பட்டது. அதினனின் குரல் ஒலித்தது.

“மீனுக்குட்டியைப் படிச்சுட்டியா வெண்ணிலா?”

“படிச்சேன் அதினன். அதில் நீங்க கைப்பட எழுதி இருந்த குறிப்பையும் சேர்த்துத்தான் சொல்றேன்”

“நானே எழுதினதுன்னு எப்படி சொல்ற?”

“இந்தக் கதைல மட்டும் கையெழுத்து மாறி இருந்தது. அது மட்டுமில்லாம நீங்க மீனுக்குட்டி மேல காட்டின அதீத ஈடுபாடு”

அதினன் புன்னகைப்பது அவளது மனக்கண்ணில் தெரிந்தது “நீ புத்திசாலியாச்சே. அப்ப நான் எதுக்காக உன்னைத் தேர்ந்தெடுத்திருப்பேன்னும் கண்டு பிடிச்சிருப்பியே”

“மீனுக்குட்டி என்னோட கதை. அவளைப் படைச்ச பிரம்மா நான். என் கையாலையே அவளைப் பத்தி வேற கோணத்தில் எழுத வைக்கிறேன்னு ஒரு கங்கணம் கட்டிட்டு இருக்கிங்க”

“நோ நோ… பெரிய வார்த்தை அது. கங்கணம் எல்லாம் இல்லை. மீனுக்குட்டி மாதிரி கேரக்டர் எல்லாம் இந்த காலத்தில் இருக்கவே முடியாதுன்னு நம்புறேன். அதை உன் மனசிலும் பதிய வைக்க ட்ரை பண்றேன்”

“இதனால உங்களுக்கு என்ன லாபம்?”

“என்ன லாபமா? பணத்துக்காகவும் சுய லாபத்துக்காகவும் காதல் கல்யாணாம்னு ஆண்களோட வாழ்க்கைல விளையாட நினைக்கும் பெண்களை உனக்குத் தெரியுமா? வேணும்னே பெண் என்ற கேடயத்தைப் பயன்படுத்தி, கண்ணீரை ஆயுதமாக்கி நடக்காத ஒண்ணை, இல்லாத ஒண்ணை ஜோடிச்சு ஆண்களை கேவலப் படுத்தும் பெண்களும் இந்த உலகத்தில்தான் இருக்காங்க.

ஆனா உன் கதை புல்லா பாரு பெண்கள் வீட்டின் கண்கள், பெண்கள் கஷ்டப்படுறாங்க, ஆண்கள் ராட்சசர்கள், அவளை தினமும் அடிக்கிறான், உதைக்கிறான், ரேப் பண்றான். இப்படி பெண்களை மலை உச்சில ஏத்தியும், ஆண்களை படு பாதாளத்தில் தள்ளியும் விடுறது என்னால டைஜெஸ்ட் பண்ண முடியல.

 

அதனால ஆண்கள் சார்பா நான் உன்கிட்ட கேள்வி கேக்குறேன். அப்படியே உன்னை மாதிரி ஒரு படைப்பாளியோட மனசை மாத்தினா, கொஞ்சம் கொஞ்சமா ஆண்களும் ஒரு மனுஷங்கதான். அவங்களுக்கும் குடும்பம், குழந்தை, மானம், மரியாதை, பாசம் எல்லாம் இருக்குன்னு இந்த சொஸைட்டில நம்புவாங்க இல்ல”

“இங்க பாருங்க அதினன். ஆண்கள் எல்லாரும் கெட்டவங்க இல்லை. அதை கதையில் சொல்லிருக்கேன். ஆனால் எல்லாரும் நல்லவங்கன்னு என்னால ஒத்துக்க முடியாது”

“அதே மாதிரி பெண்கள் எல்லாரும் நல்லவங்கன்னு நீ சொல்றது பச்சை பொய்”

“இப்படி மாறுபட்ட கருத்து இருக்கும்போது உங்க கூட எப்படி என்னால வேலை செய்ய முடியும் அதினன்”

“அக்ரிமெண்ட் போட்ட ஒரு மாசத்துக்குள்ள வித்ட்ரா பண்ணாததால நீ இந்த வேலையை செஞ்சே ஆகணும். மீனுக்குட்டியை என் விருப்பப் படிதான் நீ எழுதணும்” என்றான் பிடிவாதக் குரலில்.

எப்படி இந்த ஒரு மாதத் தவணையை கவனிக்கத் தவறினேன் என்று தன்னையே திட்டிக் கொண்டாள்.  மீனுக்குட்டியை முதலில் படித்திருந்தால் அப்போதே மறுத்திருப்பேனோ? இப்போது தனது கருத்தில் உறுதியாக நிற்பதா இல்லை வாங்கிய பணத்திற்காக அதினனின் மனப்போக்கின் படி மீனுக்குட்டியை திருத்தி எழுதுவதா?

மீனுக்குட்டி கதாபாத்திரம் அவளது மனக்கண்ணில் கண்கள் சிவக்க நின்று “வெண்ணிலா இதுக்கு என்னை முதல் அத்தியாயத்திலேயே கொன்னுருக்கலாம்” என்று திட்டியது.

வெண்ணிலா சட்டியில் இருந்து தப்பித்து அடுப்பில் விழுந்துவிட்டாளோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_13’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_13’

அத்தியாயம் – 13 தங்கரதிக்கும், வெற்றிவேலுக்கும் அரைப்பரீட்சை ஆரம்பித்திருந்த சமயம்தான் உலகம்மை மறுபடியும் வெண்ணிலாவை அழைத்தார். “அதினன் படம் ஆரம்பிக்கத் தயாராயிட்டான். காண்ட்ராக்ட் காப்பி ஒண்ணை அண்ணனுக்கு அனுப்பிருக்கான். அண்ணனும் அதை நம்ம வக்கீல்கிட்ட காமிச்சு ஓகே பண்ணிட்டாங்க. உனக்கு ஒரு

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’

அத்தியாயம் – 8   சில வினாடிகளில் யோசித்து ஒரு முடிவெடுத்தான். “இதுவரைக்கும் யோசிக்கல, பட் இந்த எழுத்தாளர் எப்படி கதையை நகர்த்திட்டு போறாங்கன்னு பாக்கணும். கதை தலைப்பை சொல்லுங்க…” “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” மனைவியிடம் பேசியவர் மின்னஞ்சலில் கதையை

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_24’

அத்தியாயம் – 24   இது நிஜமா? ஒரு தாயால் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? பெற்ற குழந்தையே கொல்லத் துணியுமா மனம்? பெறாத பிள்ளைகளுக்கு  அன்னையாக வாழ்பவளின் மனதிற்கு  லஸ்யாவின் விஷகுணம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத