Tamil Madhura தமிழ் மதுராவின் 'கோடை காலக் காற்றே' தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’

அத்தியாயம் – 12

 

நாட்கள் வேகமாய் உருண்டோடி மாதங்களாகியது. ஆனால் அதினனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.

“விட்டுத் தொலை போ” என்று சுலபமாக சொல்லிவிட்டான் கார்மேகம். ஆனால் கை நீட்டி காசு வாங்கிவிட்டு வேலை செய்யாமலிருப்பது வெண்ணிலாவின் மனதை உறுத்தியது.

ஒருவேளை கதையெல்லாம் வேலைக்காகாதுன்னு சொல்லிட்டாங்களோ. இரக்கப்பட்டு அதினன் பணத்தைத் திருப்பிக் கேக்காம இருக்கானோ.

தனது ஏழ்மை நிலமையைப் பார்த்து ஒருவன் அதுவும் அதினன் போன்ற ஊர் அறிந்த பெண்பித்தன் இரக்கப்பட்டு பணம் கொடுத்தால் அவள் அளவில் அது பிச்சை அல்லவா. அதனை ஏற்பதா? ஒத்தையா ரெட்டையா மனதினுள் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தவள் தைரியமாய் உலகம்மையை அழைத்துவிட்டாள்.

“அவகளுக்கு சரிப்பட்டு வரலைன்னா பணத்தைத் திருப்பித் தந்துடுறேன் அக்கா” சொல்லும்போதே இந்தப் பணத்தைத் எத்தனை ஆடுகளை விற்க வேண்டும், அப்பாவிடம் சொல்லி  கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவளது மனம் கணக்குப் போட்டுக் கொண்டேதான் இருந்தது.

“என்னாச்சு?”

“இல்லிக்கா, இத்தனை நாளாச்சு இன்னும் ஒரு பதிலும் இல்லை. ஒருவேளை சினிமா பிடிக்க என் கதை ஒத்து வரலையோ?”

“ஒரு கதையைப் படமாக்க எவ்வளவு தடைகள் இருக்கு தெரியுமா? பொறுமையா இரு… “என்று அவளைப் பொறுமை காக்கச் சொன்ன உலகம்மை தான் பொறுமையாக இல்லை. சிவகுருவை அரித்து அடுத்துவிட்டார். பலன் அடுத்த மூன்று வாரங்களில் காண்ட்ராக்ட் சைன் பண்ண மறுமுறை சென்னைக்குச் செல்ல வேண்டி இருந்தது வெண்ணிலாவுக்கு.

ஆனால் இந்த முறை சென்னைப் பயணத்தில் எத்தனையோ வித்யாசமான அனுபவங்கள் அவளுக்கு. ஒன்று அவளோடு குழந்தைகளையும் அழைத்துச் சென்றது, இரண்டாவது அதினனது கண்ணாடி வீட்டிற்குச் சென்றது, மூன்றாவது அவனது குடும்பத்தினரையும் முக்கியமாக அவனது மித்துவை சந்தித்தாள்.

சென்னையில் வேலையை முடித்துத் திரும்பியவுடன் பொன்னுமணியிடம் தெரிவித்தபொழுது அவள் நம்ப முடியாமல் சொன்னாள்

“அடேங்கப்பா…! அதினன் எத்தாசோடு பூசணிக்காயை சோத்தில் மறைச்சிருக்கான்? மித்துவைப் பத்தித் தெரிஞ்சா எந்த பத்திரிக்கைக்காரன் இவனைப் பத்தி கிசுகிசு எழுதுவான்?

ஒருவேளை எப்பப் பாத்தாலும் தன்னைப் பத்தியே மக்கள் பேசணும், நல்லதா இல்லைன்னாலும் திட்டுனாக் கூடப் பரவால்லன்னு நினைக்கிற வியாதி இவனுக்கும் இருக்குதோ?” என்று வெண்ணிலாவிடம் கேள்வியும் எழுப்பினாள்.

“இப்பல்லாம் பல பேருக்கு அது இருக்குது. நடிகை கன்னத்தைக் கடிச்சான், அறைஞ்சுட்டான், தண்ணியடிச்சுட்டு கெட்ட வார்த்தைல திட்டுனான் இப்படியெல்லாம் போட்டாத்தானே ஓடிப் போயி பாக்குறோம். இதே அதினன் ரசிகர்களோட பிள்ளைகளுக்கு காலேஜ் பீஸ் கட்டுனான், இலக்கியக் கூட்டத்துக்குப் போனான், கூத்துப் பட்டறைல இந்த கதாபாத்திரத்துக்காக சிறப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு நடிச்சான் அப்பிடின்னும் வந்திருக்கு நாமதான் இதெல்லாம் கண்டுக்குறதே இல்லையே”

“நம்ம மேலயும் தப்பிருக்கோ?”

“நாம் ஒரு விரலை நீட்டி மத்தவங்களைக் குறை சொல்லும்போது மத்த மூன்று விரல்களும் நம்மைக் காட்டி சிரிச்சுக்குமாம்”

5 thoughts on “தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_12’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_8’

அத்தியாயம் – 8   சில வினாடிகளில் யோசித்து ஒரு முடிவெடுத்தான். “இதுவரைக்கும் யோசிக்கல, பட் இந்த எழுத்தாளர் எப்படி கதையை நகர்த்திட்டு போறாங்கன்னு பாக்கணும். கதை தலைப்பை சொல்லுங்க…” “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” மனைவியிடம் பேசியவர் மின்னஞ்சலில் கதையை

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_15’

அத்தியாயம் – 15 “அம்மா படிக்க வாங்க” அவள் பிள்ளைகளைச் சொன்னது போய் இன்று பிள்ளைகள் அவளை அதட்டலாக அழைத்தனர். சென்னையில் அதினன் வீட்டை விட்டுக் கிளம்பும்போது பெரிய பைல்கள் நாலைந்தை எடுத்து வைத்தான். “குட்டீஸ் நீங்க ரெண்டு பேரும் ஹோம்

தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’தமிழ் மதுராவின் ‘கோடை காலக் காற்றே_23’

அத்தியாயம் – 23   லஸ்யாவின் விரல்கள் மித்துவின் முகத்தை அளந்தன. “வாவ்.. ரொம்ப அழகு நீ. அந்தக் கண்கள் என்னை மாதிரி இருந்தாலும் அதில் இருக்கும் உணர்ச்சிகள் அப்படியே அதின் மாதிரி” “நான் உங்களோட மகள்தானேம்மா” அழகான லஸ்யாவின் முகம்