Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 11’

திருமணத்துக்குத் திரண்டு வந்த கூட்டத்தைப் விழி விரியப் பார்த்தாள்  வைஷாலி. இரவு முழுவதும் நடந்த விருந்தும் நடனமும் எங்கோ வழி தவறி தன் மந்தையிலிருந்து வேறு மந்தைக்குள் புகுந்துவிட்ட வெள்ளாட்டைப் போல மிரள வைத்தது. எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கை குவித்தே கைகள் இற்றுப் போயின.

“உலகத்தில் நான் பார்த்த அழகிய பெண்களில் உங்க மனைவியும் ஒருத்தங்க சுமன்” என்று சுமனிடம் அறுவது வயதைத் தொட்ட பெரியவர் ஒருவர் சொல்ல, என்ன பதில் சொல்வது என்று சொல்லாமல் விழித்தாள் வைஷாலி. 

“நீ இந்த மாதிரி பாராட்டுக்கு மெல்லிசா புன்னகைக்கணும்” அவள் காதுகளில் மெதுவாக முணுமுணுத்தான் சுமன். கணவன் பேசிய முதல் வார்த்தைகள், முகம் மலர்ந்து சிரித்தாள்.

“அழகான புன்னகை கூட. நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இந்த பெண்ணை பத்திரமா பாத்துக்கோங்க” என்று சொல்லி விடை பெற்றார். 

அவரை குரோதத்துடன் வெறித்தன இரு விழிகள். அதை விட ஆத்திரத்துடன் வைஷாலியை நோக்கினாள் அந்தப் பெண். சற்று உயரம் கம்மிதான். ஆனால் நல்ல அரிசிமாவில் செய்த பொம்மை போலிருந்தாள். 

அவள் பேர் என்ன என்று நினைவு படுத்த முயன்றாள் சாலி.ஹாங்… ஸ்வப்னா… சுமனுடன் படித்தவள். மிகுந்த அறிவாளி. இப்போது அவனது கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியில் இவளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. சுமனும் ஸ்வப்னாவும் சேர்ந்துதான் நிர்வாகம் செய்வார்கள் என்று யாரோ சொன்னார்கள். அவள் பார்வையில் என்னுடையதை அபகரித்து விட்டாயே என்ற குற்றச்சாட்டு இருந்தது. அந்தப் பார்வையில் தெரிந்த உக்கிரத்தில் சற்று நடுங்கிப் போனாள் வைஷாலி. 

அவள் கைகளில் நடுக்கத்தை உணர்ந்த சுமன், அவளது பார்வை வட்டத்தில் ஸ்வப்னா இருந்ததையும் அவ்வப்போது அவளைக் கண்டு முறைத்ததையும் கண்டு கொண்டான். அவனுக்கு வேர்க்க ஆரம்பித்தது. துடைக்க வேண்டும் என்று நினைத்தபோது எங்கிருந்தோ அங்கிதா ஓடி வந்தாள். 

“என்ன சுமன்”

“கீதா, ஸ்வப்னா இங்க பார்த்து முறைச்சுட்டே இருக்கா” என்று மெதுவாய் சொன்னான். 

“நான் கவனிச்சுக்குறேன். நீ கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா நில்லு” 

‘அப்பாடா… இனி கீதா பார்த்துக் கொள்வாள்’ நிம்மதிப் பெருமூச்சு விட்டான் சுமன். 

“ஸ்வப்னா… வீட்டுக்குக் கிளம்பு” அவள் கைகளைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றாள் அங்கிதா. கட்டடத்தின் வெளியே கார் நிறுத்துமிடத்தில் ஸ்வப்னாவின் காரில் ஏற்றி உக்கார வைத்தாள். 

“என்ன கீதா…. இதுதான் நீங்க கல்யாணத்துக்கு வந்த விருந்தாளியை கவனிக்குற லக்ஷணமா”

“விருந்தாளின்னா கவனிக்கலாம். நீ விரோதம் பாராட்ட வந்தா விரட்டித்தான் விடணும்”

“எங்க கல்யாணத்த நீ தடுக்காம இருந்திருந்தா நான் ஏண்டி விரோதம் பாராட்டுறேன். பத்து  வருஷமா சுமன் என் மனசில் இருக்காண்டி. அவனுக்காகவே அவன் படிச்ச கோர்ஸ் படிச்சேன். அவன் கம்பனில வேலை வாங்குனேன்” ஆத்திரத்தில் ஸ்வப்னாவின் உடல் நடுங்கியது. 

“நீ லவ் பண்ண… ஆனா சுமன் உன்னை லவ் பண்ணலையே” இளக்காரமாய் மறுமொழியளித்தாள்.

“லவ் பண்ணிருப்பான். ஆனா உனக்கு பயந்து வெளில சொல்லிருக்க மாட்டான். என் மேல ஆசை  இல்லாமையா ‘நீ கீதாகிட்ட பேசு அவ ஓகே சொன்னதும் கல்யாணம் செய்துக்கலாம்’னு சொன்னான். 

உன்கிட்ட அவ்வளவு கெஞ்சினேனேடி.. இரக்கமில்லாதவடி நீ….  நோன்னு ஒரே வார்த்தைல மறுத்ததோட மட்டுமில்லாம கையோட அவசர அவசரமா வேற ஒரு பொண்ணோட கல்யாணம் செய்து வச்சுட்ட”

“நல்லாருக்கே நீ பேசுறது…. நான் சொன்னதெல்லாம் சுமன் கேப்பானா? அவன் மனசில் உன் மேல காதல் இருந்திருந்தா மறுத்திருப்பானே”

“எப்படிடி மறுப்பான். ஆனா ஓண்ணா பைக் எடுத்துட்டு ஆக்சிடென்ட் ஏற்படுத்திட்டு பெட்ல படுத்துக்குறியே. கை கால்ல கட்டு போட்டுட்டு  உருக்கமா டைலாக் பேசி உன் காரியத்தை சாதிச்சுக்குற. இவன் தங்கச்சி தங்கச்சின்னு உன்னை நம்பி நாசமாத்தான் போகப் போறான்”

“தெரியுதுல்ல ஸ்வப்னா… நான் நினைகிறதைத்தான் சுமன் செய்யணும். செய்ய வைப்பேன்” இறுமாப்பாய்  சொன்னாள். மேலும் தொடர்ந்தாள்

“ஸ்வப்னா… நீ இந்த அளவு புத்திசாலியாய் இருக்குறதுதான் உன்னோட பெரிய மைனஸ் பாய்ன்ட். ஒரு உரையில் ரெண்டு கத்தி இருக்க முடியாது. ரெண்டு அறிவாளிங்க சுமன் வாழ்க்கைல வர முடியாது. 

உன்னை வீட்டுக்குள்ள விட்டேன். நீ என்னை வீட்டை விட்டு அனுப்பிடுவ. அப்படி இருக்கும்போது உன்னை எப்படி சுமனுக்குக் கல்யாணம் செய்து வைப்பேன். எனக்கு நானே குழி வெட்டிப்பேனா… போடி போ… இனி சுமனை மறந்துட்டு வேற யாரையாவது பிடிக்கப் பாரு”

“நீ ஒரு சாடிஸ்ட்… உன் கல்யாண வாழ்க்கை நல்லா அமையலைன்னு எல்லாரும் நாசமா போகணும்னு நினைக்கும் ஈகோ பிடிச்ச பேய். கல்யாணப் பொண்ணு மேல எனக்குக் கோவம் இருந்தது. இப்ப நெனச்சா…. ஓ மை காட்… பாவம் அவ.. உன்கிட்ட என்ன பாடு படப் போறாளோ” 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புல்தரையில் அங்கும் இங்குமாய் கூட்டம் நிறைந்திருந்தது. காதம்பரி கல்பனாவுடன் நுழைந்த பொழுது அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது உரையாடலை நிறுத்திவிட்டு காதம்பரியையே வெறித்துப் பார்த்தனர். அவர்கள் பார்வையிலிருந்து எதையுமே அவளால் ஊகிக்க முடியவில்லை. அங்கிருந்த சிலர் உடனிருந்தவர்களிடம்

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’

சுமனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வைஷாலிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அன்று யாரும் வீட்டுக்கு வரவில்லை . விடியும் தருவாயில் வீட்டுக்கு வந்த சுமனின் அம்மா வைஷாலியின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளினார்.  “பாவி, பாவி தங்கமாட்டம் இருந்தாளே….