Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),தமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’

வைஷாலியின் அருகில் நெருங்கவே முடியவில்லை சிவபாலனால். அவன் இருக்கும் திசைக்கே அவள் வருவதில்லை. சிவா சிநேகமாய்ப் புன்னகைத்தால் அவளோ அவன்மேல் பார்வையாலேயே  அனலைக் கக்கினாள். தன் அம்மா சங்கரிக்கு உதவியாக சமையல் செய்வாள், சில சமயம் சிவாவுக்கு சாப்பாடு கூட கட்டி வைப்பது உண்டு. ஆனாலும் அவனது டிபன்பாக்சை டேபிளில் வைத்துவிட்டு சென்றுவிடுவாள். சிவா நன்றி கூறினால் கதவை டமாரென அடித்து சாற்றுவாள். 

மென்மையான வைஷாலி ரௌத்திரமாக மாறியதற்கு பலமான காரணம் இருக்கும் என்று மனதுக்குப் பட்டது. எனவே அவளது கோவத்தை கண்டும் காணாமல் இருக்கப் பழகிக் கொண்டான். அவன் பொறுமைக்கும் ஒரு எல்லை வந்தது. 

அன்றும் மும்பையில் வழக்கம்போல் மழை கொட்டியது. குடையைப் பிடித்தபடி வீட்டிற்கு நடந்தவன், மழையில் நனைந்தபடி ஓட்டமும் நடையுமாய் வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வைஷாலியைக் கண்டான். 

“வைஷாலி இந்தாங்க குடை” என்று தடுத்து அவன் கையிலிருந்த குடையைத் தாராளமாக நீட்டினான். 

“நீங்க யாரு சார். எனக்குக் குடை தர. பெருசா வந்துட்டானுங்க…” முகத்தில் நீர்வழிய வார்த்தைகளைக் கோவத்தோடு கடித்துத் துப்பினாள்.

விக்கித்து நின்றான் சிவா, சில வினாடிகளில் சுதாரித்தவாறு வேகமாய் மழையில் நனைந்தபடி வைஷாலியை நெருங்கினான். 

“நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது? நமக்கு தினமும் சாப்பாடு போடுற பொண்ணாச்சே, மழைல நனையுதேன்னு பரிதாபப் பட்டு குடையை நீட்டினேன் பாருங்க, என்னை சொல்லணும்”

“எனக்கு ஏன் பரிதாபப் படணும்? இந்த மாதிரி பேச்சு எல்லாம் என்கிட்டே வேண்டாம். பொம்பளைங்கன்னா வந்துடுறானுங்க… ” வசவைத் தொடர்ந்தாள். 

ஒரு காலத்தில் எவ்வளவு இனிமையான குரல் என்று வாழ்நாள் முழுவதும் அவள் குரலைக் கேட்க ஆசைப்பட்ட சிவபாலனின் காதுகளில் தனது வார்த்தைகளால் திராவகத்தை  ஊற்றினாள். 

“ஆமாம் நீங்க பொம்பளைன்னு தான் குடை தரேன். மழை பெய்யுது, நான் நனைஞ்சா ஒண்ணுமில்லை. ஆனா உங்க உடையெல்லாம் நனைஞ்சு, நீங்க  ஊருக்கெல்லாம் காட்சிப் பொருளாரதை என்னால அனுமதிக்க முடியாது”

குனிந்து தனது உடையை பார்த்தவள், திடுக்கிட்டு துப்பட்டாவை நன்றாக சுற்றிக் கொண்டாள். 

“இதை பிடிச்சுட்டுப் போகலை, நான் உங்களுக்குக் குடை பிடிச்சுட்டே உங்க பின்னால் வருவேன்” பிடிவாதமாய் சொன்னான். 

“ம்ம்… பிடிங்க“ வலுக்கட்டாயமாய் குடையை அவளருகே நீட்ட, வைஷாலியின் கைகள் அதனை வாங்க நீண்டது.  

சற்று நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவுடன், ஈர உடைகளைக் களைந்து, காய்ந்த உடைகளை உடுத்தி வந்தபோது, சூடான இஞ்சி டீ அவனுக்காகத் தயாராகக் காத்திருந்தது. இரவு உணவின் போது மிளகு ரசமும் புதினா சட்டினியும் செய்து மழையில் நனைந்து வந்த சிவாவுக்குப் பரிமாறினார் சங்கரி. 

“குடை கொடுத்திங்களாம் சாலி சொன்னா… நன்றி தம்பி” வைஷாலி சொல்ல வேண்டிய நன்றி சங்கரியின் வாயினால் வந்ததாக நினைத்தான் சிவா. 

ஏனோ அன்று இரவு சந்தோஷமாகவே தூங்கி காலை மெதுவாய் எழுந்தான் சிவா. 

“நேத்து மழைல வேற நனைஞ்சிங்களா, உடம்புக்கு என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் தம்பி” தீபிகாவுக்கு உடல் துடைத்து வேறு உடை போட்டவாறு சொன்னார் சங்கரி. 

“அஞ்சு நிமிஷத்துல காப்பி தரேன்”

“இருக்கட்டும்மா… இன்னைக்கு மெதுவா போனா போதும். பாப்பா இன்னைக்கு தலைக்கு குளிச்சாங்களா” 

“ஆமாம்” – சங்கரி. 

உடை மாட்டியதும் வேகமாய் சிவாவிடம் தவழ்ந்து வந்தாள் தீபிகா. அந்த வீட்டில் செந்திலின் குழந்தைகள் நல்ல தரமான உடைகளை அணிவதையும், தீபிகா பிளாட்பார்மில் வாங்கிய விலை குறித்த உடைகளை அணிவதையும் கண்டு வருந்தியிருக்கிறான் சிவா. 

அவனால் குழந்தைக்கு எதுவும் வாங்கித் தர முடியாது. அவன் வாங்கித் தந்த பிஸ்கட் பாக்கெட்டைக் கூட கண்முன்னே குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறாள் வைஷாலி. அதன் பின் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டான். 

இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு விடை வெகு விரைவில் கிடைத்தது எதிர் அப்பார்ட்மென்ட் சகபயணி மூலம். 

“செந்தில் வீட்டிலா தங்கிருக்கிங்க? உங்களுக்கு முன்ன அங்க ஒரு அம்பது வயசு ஆள் இருந்தான். எல்லாருகிட்டயும் ரொம்ப நல்லா பழகுவான். ஒரு நாள் வைஷாலி கையைப் பிடிச்சு இழுத்துட்டான். அவ விளக்குமாத்தை எடுத்து அடி பின்னிட்டா”

கோவத்தில் முகம் சிவந்தது சிவாவுக்கு. “வைஷாலியை இங்க விட்டுட்டு அவ புருஷன் என்ன பண்ணுறான்?”

“வைஷாலி டைவேர்சில்ல. கிட்டத்தட்ட ஆறுமாசமா அவங்க வீட்டில் இருக்கிங்க. உங்களுக்கு விஷயமே தெரியாதா சார்” ஆச்சிரியப்பட்டார். 

“எனக்கு எதுக்குங்க அவங்களைப் பத்தின விவரம்?” ஆர்வமில்லாதது போல் பேசினான். 

“அதுவும் சரிதான். செந்தில், அந்த  வீட்டை ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணுற சுமன் கிட்ட விலைக்கு வாங்கின கையோட குடிவந்தான். அவனும், அவன் பொண்டாட்டி சோனாவும் இருக்குற நிதி நிலமைல எப்படிடா இந்த வீடு வாங்க முடிஞ்சதுன்னு நாங்க அதிசயமா பாத்தோம். ஏதோ ஊருல இருக்குற சொத்தை வித்து வாங்கினேன், மத்தது லோன்னு சொன்னான். வந்த வேகத்தில் அதே சுமனுக்கு வைஷாலியைக் கல்யாணம் செய்து வச்சாங்க. சில மாசங்கள் கூட அங்க அந்தப் பொண்ணு வாழல” அதற்குள் அவர் இறங்க வேண்டிய இடம் வந்துவிட இறங்கிவிட்டார். 

வைஷாலியை சுற்றி அவளே போட்டுக் கொண்ட முள்வேலிக்கான காரணத்தை அறிந்தான். 

குறும்புச் சிரிப்பும், கரும்பின் இனிப்புமாய் வலம் வந்த பெண்ணை, காலம் உடைந்த இதயமும், வெறித்த பார்வையுமாய் மாற்றிவிட்டது அவனுக்கு மிகவும் வேதனையைத் தந்தது. 

‘கடவுளே, எனக்குத்தான் கசப்பைத் தந்தேன்னா நான் ஆசைப்பட்ட பெண்ணுக்கும் அதையே தந்திருக்கியே. இது நியாயமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’

“சாரி ஜான்…. இந்தக் கேவலத்தை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு மண்டகப்படியை அரேஞ் செய்துட்டு வரதுக்குள்ள தாமதமாயிடுச்சு. காதம்பரி விழாவுக்குப் போறதைத் தடுக்கக் கால் பண்ணேன். அவ அட்டென்ட் பண்ணல. செல்லையும் ஆப் பண்ணிட்டா”   “நான் உங்களைப் பத்தி அவ

காதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube linkகாதல் வரம் ஆடியோ நாவல் – 2 youtube link

வணக்கம் தோழமைகளே காதல் வரம் ஆடியோ நாவல் நீங்கள் கேட்டு மகிழ வசதியாக இப்பொழுது youtube லும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கேளுங்கள்… சேனலில் மற்ற நாவல்களைக் கேட்க வசதியாக சப்ஸ்க்ரைப் செய்துக் கொள்ளுங்கள். தங்களது ஆதரவிற்கு நன்றி. அன்புடன், தமிழ் மதுரா

உள்ளம் குழையுதடி கிளியே – 29உள்ளம் குழையுதடி கிளியே – 29

அத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற