Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 12

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 12

அத்தியாயம் – 12 

றுநாள் காலை அரவிந்த் விழித்தபோது பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது. வெளிச்சத்தில் நன்றாக விழித்துப் பார்த்தான். அந்த வீட்டில், ரொம்ப நாட்களுக்கு முன்பு மாடியில் ஒரு  அறை கட்டி இருப்பார்கள் போலிருக்கிறது. அதனை சற்று பெரிதாக்கி ஒரு வீடாக்கும் முயற்சியில் ஆஸ்பெஸ்டாஸ் போட்ட சமையல் அறை மற்றும் பாத்ரூம் இணைந்திருந்தது. 

அது சற்று விசாலமான அறை. மூலையில் பீரோ ஒன்று இருந்தது.அதனை வேறு இடத்தில் இருந்து அங்கு நகர்த்தி இருப்பார்கள் போலிருக்கிறது. ஏனென்றால் மற்றொரு இடத்தில் ரொம்ப நாள் பீரோ இருந்த அடையாளம் தெரிந்தது. அந்த பீரோவில் இருந்துதான் திருட்டு போயிருக்கும் போலிருக்கிறது. இப்போது அதனை சரி படுத்தி புதிதாகப் பெயிண்ட் அடித்து வைத்திருந்தனர். 

பழைய கட்டிலில் புதிதாக மெத்தை, தலையானை  வாங்கிப் போட்டிருந்தனர். இரண்டு மூன்று இடத்தில் ஆளுயர விஜய் போஸ்டர். ஒ, இவளுக்கு விஜய்தான் பிடிக்குமா? சற்று மேலே பார்க்க  மணி ஏழு என்று சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் சொன்னது. பதறிப் போய் எழுந்தான். இவ்வளவு நேரமா அடித்துப் போட்டார் போல் உறங்கி இருக்கிறேன். 

“டேய் பாபு இங்க வாடா” என்று யாரோ அழைக்கும் சத்தம் தூரத்தில் எங்கோ கேட்டது. அரவிந்திற்கு மனதில் கடலின் இரைச்சல் கேட்க ஆரம்பித்தது.

ஹோசூருக்குப் போனதால் வாழ்க்கையில் திருப்பம் வந்தது. ஆனால் அதுக்கு நான் கொடுத்த விலை மிக அதிகம். பாபு ஏன் உன்னைப் பார்த்தேன்?  என்று உள்ளம்  கேட்கும் வழக்கமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான். 

பாபு ஒரு சராசரியான இளைஞன். என்னதான் அவன் அரவிந்திற்கு உதவினாலும் மற்ற எல்லாவற்றையும் விட பாபுவுக்கு அவனது நலம் மிகவும் முக்கியம். அரவிந்த் தினமும் தனக்காக வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லியும் பாபு தான் ஆபிஸிலிருந்து வரும் வழிதானே என்று சொல்லியே அவனை சமாதானப் படுத்தி விட்டான். அரவிந்த் அலுவலகத்தில் இருந்து வரும் பொழுது பெரும்பாலும் சைலஜா வேலை செய்யும் கடையில்தான் அமர்ந்திருப்பான். அதுவும் சைலஜாவை அளவெடுத்தவாறே. சில சமயம் அவளும் அவனோடு பேசுவாள்.

பாபு சைலஜா உரையாடலில் கவனித்தவரை அரவிந்துக்கு  நினைவிருந்தது “பாபு சொல்லிட்டிங்களா?” என்ற சொல்தான். 

திருமணத்திற்குப் பின்  அரவிந்த் கேட்காமலேயே சைலஜா சொன்னது-  தினமும் ஐம்பது நூறு ரூபாய்க்கு வெட்டியாய் பொருள் வாங்கும் கஸ்டமர் ஒருவர் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?

 அரவிந்த், பாபு சைலஜாவைப் பார்க்கும் பார்வையில் இருந்த வித்யாசத்தைக் கண்டு இரண்டொரு வார்த்தை அவனிடம் சொன்னான் “பாபு அந்தப் பொண்ணு மிடில் கிளாஸ் பாமிலி போல இருக்கு. அனாவசியக் கற்பனைகளை  வளர்த்து விட்டுடாதிங்க” என்று. 

அவனைப் பார்த்து திகைத்த பாபு பின்னர் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

“சைலஜாவை சொல்லுறியா? உனக்கு அவளைப் பத்தி என்ன தோணுது சொல்லு?” என்றான் 

“நல்ல பொண்ணு பாவம் பணக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்திருக்கு போலிருக்கு. அந்தப் பொண்ண மத்தவங்க நடத்துற விதத்தைப் பார்த்து நான் என் தங்கச்சிங்கள வேலைக்குப்  போக வேண்டாம்னு சொல்லிட்டேன்”  

சிரித்தவன் “சைலஜாவ நீ  நல்ல பொண்ணுன்னு சொல்லுற. அதே மாதிரி அந்தப் பொண்ணும் நீ நல்லவன்னு சொல்லுது ” என்று கண்ணடித்தான். ”என்ன விஷயம் அரவிந்த்?”. 

அரவிந்திற்கு யாராவது பெண்களைப் பற்றி பேசினாலே அலர்ஜியாகி விடும்.

“ஹய்யோ பாபு என்னை விட்டுடுங்க. அந்தப் பொண்ணப் பத்தி இனிமே பேசப் போறதில்ல”

 “நான் சைலஜா பத்தி உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அரவிந்த்” என்றுரைத்து விட்டு சற்று யோசித்த பாபு “சரி எக்ஸாம் நல்லபடியா முடியட்டும் அப்பறம் சாவகாசமா பேசலாம்” என்று சொல்லி விட்டான். 

அந்த சாவகாசமான நாள் வராமலே போய் விட்டது அவனது துரதிர்ஷ்டம்.

அரவிந்துக்கு அருகில் இருந்த டேபிளில் காபி ஒன்று ஆறிப் போய் ஏடு படிந்திருந்தது. யாரோ மாடி ஏறி வரும் சத்தம் கேட்டது. ஸ்ராவனியின் குரல் கிண்கிணிநாதம் போல் அவன் காதில் ஒலித்தது. ஸ்ராவநியுடன் சிரித்தபடியே மாடி ஏறி வந்த சித்தாரா, அரவிந்த் விழித்திருப்பதைப் பார்த்தாள். 

“என்ன அரவிந்த் காபி குடிக்கல. உனக்கு பில்டர் காபினா ரொம்ப பிடிக்கும்னு உங்க அம்மா சொன்னாங்க” 

காலைல எழுந்ததுமே இவகிட்ட ஏன் சண்டை என்று எண்ணியபடியே ஆறிப் போயிருந்த காபியை கட கடவென குடித்தான். அவன் குடித்த வேகத்தைப் பார்த்து சித்தாராவுக்கு ஆச்சிரியம். 

“அதை ஏன் அரவிந்த் குடிச்ச? அது காலைல ஆறு மணிக்கு வச்சது. இப்ப புதுசா சூடா போட்டு எடுத்துட்டு வந்திருக்கோம்” என்றாள் 

அப்பாடா என்றிருந்தது அரவிந்துக்கு. காலையில் அவனுக்கு சூடாகக்  காபி வேண்டும். 

“சரி சரி நீ தான் காபி குடிச்சிட்டியே, இது வேஸ்ட் ஆகாம நான் குடிச்சுக்குறேன்” என்றபடி வாசம் பிடித்து விட்டு கிளாசை உதட்டில் படாமல் ஒரு வாய் பருகினாள்.

“பரவயில்ல உங்கம்மா பர்ஸ்ட் டிகாஷன் எடுத்து ஸ்பெஷல்  காபி போட்டு தந்திருக்காங்க. எனக்குத் தந்த காபி சுமாராத்தான் இருந்துச்சு. அரவிந்த் ஒண்ணு செய், தினமும் காலைல உனக்குத் தர காப்பிய வாங்கி என்கிட்டத் தந்துடு. சரியா?”

“சரிங்க மேடம்”

“குட்பாய் இப்ப போய் குளிச்சிட்டு  சாப்பிட வா. இன்னைக்கு நான் தான் சட்னி அரைச்சது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும்”

“கவலைப்படாதே அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்குறேன்” அவள் சொல்லி முடிக்கும் முன்பே முந்திரிக்கொட்டாய் மாறி உறுதி அளித்தான்.

ஏனோ அது சித்தாராவைக் கவரவில்லை. “பச் அது உன் தலைவிதி நீ அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். மத்தவங்க கேக்குறப்ப  வெரி டேஸ்டி, வொண்டர்புல் அப்படின்னு சொல்லுற. ஓகே?”

அவன் சொல்ல வேண்டிய பதிலையும் அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு,  “சித்து எனக்கு” என்று கேட்ட ஸ்ராவனிக்கு ரெண்டு மூன்று வாய் காபி குடுத்து விட்டு 

“அவ்வளவுதான் வனி, சின்ன பிள்ளைங்க காபி குடிக்கக் கூடாது. உனக்கு வேணும்னா பூஸ்ட் போட்டுத் தரேன்” அவளுடன் பேசிக்கொண்டே ஸ்ராவணி சாப்பிட்ட எச்சில் கிளாசிலே சிதாராவும் குடிக்க ஆரம்பித்தாள்.

‘பாதகத்தி என்னை பச்சத்தண்ணிய குடிக்கவச்சுட்டு இவ மட்டும் ரசிச்சு சாப்பிடுறதப் பாரேன்’ என்று முதலில் கடுப்பான அரவிந்திற்கு அவளது செய்கை மனதை நிறைத்தது. 

“சித்து எனக்கு ப்ளூ ரோஸ் வாங்கிதரிங்களா?” என்று ஸ்ராவணி கேட்க, அவளுக்கு  கர்ம சிரத்தையாகப் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தாள் சித்தாரா.

‘சித்துன்னு கூப்பிடாதே’, என்று சொல்ல நினைத்தான் அரவிந்த் ஆனால் சித்து வேண்டாம் என்றாள் அவளை சித்தி என்று கூப்பிட சொல்ல வேண்டும் ஸ்ராவணி அவ்வாறு சித்தாராவை அழைப்பதை அவன் விரும்பவில்லை. சித்து என்றாள் மரியாதை சற்று குறைவாகத்தான் இருக்கும். ஆனா இவ மட்டும் நீ வா ன்னு ரொம்ப மரியாதையா என்கிட்ட பேசுறா பாரு அவ மரியாதை பத்தி கவலைப்பட என்று சமாதனப் படுத்திக் கொண்டான். 

இப்ப பிரச்சனை ஸ்ராவணி சித்து என்று கூப்பிடுவதாலா இல்லை ஸ்ராவணி  சித்தி என்று சித்தாராவை அழைப்பதை விரும்பாததாலா அரவிந்துக்குப் புரியவில்லை.

சித்தாராவும் அரவிந்தும் விசாவிற்கு விண்ணப்பித்து விட்டு வந்தனர். திருச்சிக்கு சென்று முக்கியமான உறவினர்களை பார்த்து விட்டு வீட்டிற்குத் திரும்பினர் அதிலே மூன்று நாட்கள் ஓடின. வீட்டில் இருப்பவர்களைத் தவிர விருந்தினர் அனைவரும் தங்கள் வீட்டுக்குச் சென்றிருக்க, கிட்டத்தட்ட சித்தாரா அரவிந்தின் வாழ்க்கை முன்னோட்டம் ஆரம்பித்தது எனலாம். 

சில டாகுமென்ட்ஸ் செராக்ஸ் செய்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான் அரவிந்த்.

“மாமா பக்கத்துல ஒரு கடையும் சரியில்ல நான் உங்களுக்கு நல்ல கடையைக் காண்பிக்குறேன்” என்று சொல்லிக் கூட வந்த எதிர் வீட்டுக்  ரியாசையும் அழைத்துக் கொண்டான். 

“என்னப்பா கடைக்கு நடந்துகிட்டே இருக்கோம்” பெருகி வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே கேட்டான்.

“இந்தா வந்துடுச்சு மாமா” என்று சொல்லிக் கொண்டே ஒரு கடையில் நுழைந்தவன் “அத்தா நம்ப கடைக்கு ஒரு புது கஸ்டமர்” என்றான்.

‘அடப்பாவி என்னை இந்த வேகாத வெயிலுல ரெண்டு கிலோ மீட்டர் நடக்க வச்சது அவன் கடைக்கு கஸ்டமர் பிடிக்கவா? இனிமே இந்தப் பயல எங்கேயும் கூப்பிடக் கூடாது’ என்று புத்திக் கொள்முதல் செய்து கொண்டான். 

“ஐ நம்ம பல் டாக்டர்”என்ற ரியாஸ்    அங்கு பைக் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த மற்றொரு வாலிபனைப் பார்த்து “என்ன டாக்டர் சார் நல்லா இருக்கிங்களா? என்ன இந்தப் பக்கம்?” என்றான்.

“வாடா ரெட்டவாலு. நான் எங்கடா இனிமே நல்லா இருக்குறது. உங்க அக்காவுக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சாமே. அவள நம்பித்தான் இந்த ஏரியாவுல கிளினிக் போட்டேன். இனிமே இழுத்து மூடிட வேண்டியதுதான். உங்க அத்தாகிட்ட கடைல வேலை ஏதாவது இருக்குமான்னு கேட்டுட்டு போக வந்தேன்.வரட்டா?” என்று கேட்டபடி பைக்கை ஒட்டி சென்று விட, அரவிந்துக்கு மனதில் பூகம்பம். 

இவனோட அக்கா நிஜமாவே சித்துதானா? சித்துவுக்கும் இந்த ஆளுக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பல் டாக்டர் வேற அவளுக்குப் பிடிச்ச விஜய் மாதிரியே இருக்கான். இவனப் பத்திக் ரியாஸ்  கிட்ட கேக்காட்டி நம்ம மண்டையே வெடிச்சுடுமே, எப்படி ரியாஸ்  வாய்ல இருந்து விஷயத்த வரவழைக்குறது என்று நினைத்தவன் 

 “ஏன்டா உங்க அக்காவுக்கு மூளை மட்டும் தான் இல்லைன்னு நெனச்சேன் பல்லு வேற இல்லையா? நாலஞ்சு பல்தான் இல்லையா இல்ல சுத்தமா ஒரு பல்லு கூட இல்லையா?”

இது போதுமானதாக இருந்தது அவனுக்கு “என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க? எங்க அக்காவுக்கு பல்லு எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா? அதுல ஒரு பல் கூடப் டூப்ளிகட் இல்ல. சித்து அக்கா ஒரு பையன அடிச்சுச்சில, அவனுக்கு ரெண்டு பல்லும் விழுந்துடுச்சு. அப்ப நானும் அத்தாவும் இந்த டாக்டர்கிட்டத்தான் அந்தப் பையனக்  கூட்டிட்டுப் போனோம். டாக்டர்  அவனுக்கு  ரெண்டு பல் கட்டினார்”

அரவிந்த் முகம் போன போக்கைப் பார்த்து விட்டு “கவலைப் படாதிங்க மாமா, நமக்கு பல் டாக்டர், புத்தூர் கட்டு இதுக்கெல்லாம் செலவு செய்ய முடியாது. இனிமே அடிக்குறதா இருந்தா ஊமைக் காயம் வர மாதிரி அடின்னு அத்தா சித்து கிட்ட கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆமா லண்டன்ல பல் டாக்டர், கண் டாக்டர் எல்லாம் நிறைய பேர் இருக்காங்களா?” என்று கேட்டு அவன் வயிற்றை இன்னமும் கலங்க வைத்தான்.

வீட்டிற்குத் திரும்பினான் அரவிந்த். சித்தாராவைப் பார்க்க யாரோ ஒரு தோழி வந்திருந்தாள். அவளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது அரவிந்தின் கண்களில் பட்டது. 

‘பாரு எப்படி சிரிக்கிறா? பல்லைப் பாரு தேங்கா பூவாட்டம். இவளுக்கு மட்டும் அழகா பல்லு இருக்கணும் மத்தவங்க பொக்கை வாயோட சுத்தணும் என்ன ஒரு நல்லெண்ணம்’ என்று திட்டினான் மனதுக்குள் தான். 

 வீட்டிற்குத் திரும்பிய அரவிந்துக்கு சித்து மேல் பயபக்தி ஜாஸ்தியாகி விட்டது. இரவு அறைக்கு வந்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். மாலையே திருவல்லிகேனியில் புத்தகக் கடைக்கு போன் செய்து சிவகாமியின் சபதம், கடல் புறா, யவன ராணி, மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகங்களை எடுத்து வைக்க சொல்லி விட்டான். ஊருக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு. 

என்ன இவ்வளவு அமைதியா இருக்கான், இவன் இன்னைக்கு மௌன விரதம் போலிருக்கு. நமக்கும் நல்லதுதான் என்று மனதிற்குள் சொன்னபடி உறங்கிவிட்டாள் சித்தாரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

  மறுபடியும் ஜிஷ்ணுவின் அறை முதலிரவு மேக்அப் போட ஆரம்பித்தது. எரிச்சலுடன் அறைக்கதவைத் தாள் போட்டான். ‘நானும் அம்மா உடம்பு சரியாகணும்னு பாத்தா தாலி கட்ட வச்சதுமில்லாம இப்ப முதலிரவாம். முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவாங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்குற விஷயத்துக்கும்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30   கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம். ஊரில் இருந்து நேரம் கெட்ட

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

மறக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு. “சொல்லு ஜிஷ்ணு” “இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”