Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

 

த்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான செய்முறைகளை நெறிப்படுத்தினான். அதற்குப் புதிதாக இயந்திரங்கள் தேவைப்பட வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தான்.

வேலையிலேயே அவனது முழு நேரமும் சென்றதால் அவனால் மற்றவற்றில் எண்ணம் செலுத்தாமல் தப்பிக்க முடிந்தது. அதற்கும் சில நாட்களில் வேட்டு வரும் போல் தெரிந்தது. ஜெயசுதாவை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் நாள் நெருங்கியது. ஜிஷ்ணு வேலையைக் காரணம் காட்டி அவர்களுடன் செல்ல யோசித்தான். ஜமுனா ஒரு மாற்று திட்டத்தோடு வந்தாள்.

“சொல்லு” என்றான் ஜிஷ்ணு சிகரெட்டுக்கு லைட்டரில் உயிர் தந்தவாறு.

“ஜிஷ்ணு… நீ சொன்னதை நல்லா யோசிச்சுப் பார்த்தேன். ஒரு வகைல உன் கோரிக்கை நியாயமாவே தோணுது… உன் உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது…”

“உப்…” ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். “தாங்க்ஸ் ஜமுனா… இந்தக் கல்யாணமே ஒரு பொம்மைக் கல்யாணம் மாதிரி… நம்ம அம்மா அப்பா அவங்க பெருமையை நிலை நிறுத்திக்க செய்த ஏற்பாடு… இதை நீ புரிஞ்சுகிட்டது எனக்கு சந்தோஷம்”

“நான் இப்பக் கூட டைவேர்ஸ் தந்துடுவேன் ஜிஷ்ணு… ஆனா அதுல சில சிக்கலிருக்கு”

என்ன எனக் கேள்வியாகப் புருவம் உயர்த்தினான்.

“முதல் சிக்கல் உன்னோட அம்மாவோட உடல்நிலை… அவங்க உடம்பு இருக்குற நிலைல நம்ம பிரிவைப் பத்தி உடனடியா பேச முடியாது. ரெண்டாவது அப்படியே மீறி சொன்னா அவங்க மேற்கொண்டு சிகிச்சை எடுக்க யுஎஸ் வர மறுக்கலாம். அது அவங்க உடல் நிலைக்கு நல்லதில்லை. மூணாவது, இந்தக் கல்யாணம் முறிஞ்சா எங்கப்பா உங்க மேல மானநஷ்ட வழக்குப் போட்டு கோர்ட்டுக்கு இழுப்பார். உங்கம்மா இருக்குற ஹெல்த் கண்டிஷன்ல அதெல்லாம் அவங்களால தாங்க முடியுமா? அப்பறம் நம்மக் கல்யாணம், உங்கம்மா சிகிச்சை, நமக்கு வாங்கின புது வீடு எல்லாத்துக்கும் எங்கப்பா ஏகப்பட்ட பணத்தை இன்வெஸ்ட் செய்திருக்கார். அதை எல்லாத்தையும் பைசா பாக்கியில்லாம எண்ணி வைக்க சொல்லுவார்”

“பணத்தைப் பத்திக் கவலைப்படாதே ஜமுனா என்னை வித்தாவது வட்டியோட தந்துடுறேன். ப்ளீஸ் இந்தப் பெல்லில இருந்து எப்படியாவது என்னை விடுதலை செஞ்சுடு… அது போதும்”

‘அதுக்குத்தானே வரேன்… என்னால நம்ம கல்யாணத்தை லேசில் விட முடியாது. மருந்து கொடுக்கும்போது குழந்தைங்க கையைக் காலை உதைச்சுட்டு அழுவாங்க… அதுக்காகத் தராம விட்டுட முடியுமா… கொஞ்சம் சக்கரையை சேர்த்து மருந்தைக் கொடுத்துட்டா பின்னாடி சந்தோஷமா இருப்பாங்க…

உன் காதலைப் பத்தி நீ சொல்லும்போது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா… ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பத்தி பேசுற மாதிரி இருக்கு… அந்தப் பொண்ணு மேல கொஞ்சம் கூட பொறாமையே வரல… என்னைப் பொறுத்தவரை நீயும் ஒரு குழந்தைதான் ஜிஷ்ணு… அருமையான வாழ்க்கையை, அழகான தாம்பத்யத்தை கண்ணை மூடிட்டு மறுக்குற முரட்டுப் பையன். உன்னை முதல்ல கண்ணைத் திறந்து என்னைப் பாக்க வைக்கிறேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா உன் வாழ்க்கைல அசைக்க முடியாத இடம் பிடிக்கிறேன்’ மனதில் நினைத்தவாறே ஜிஷ்ணுவிடம் பேசினாள்.

“பொறு ஜிஷ்ணு கடைசி சிக்கலையும் சொல்லிக்கிறேன். நீ லவ் பண்ணுறியே அந்தப் பொண்ணை நம்ம வீட்டுல ஏதாவது செய்துட்டா…” திகைத்தான் ஜிஷ்ணு.

அவனது முகத்தில் அதிர்ச்சியைக் கண்டு திருப்தியுடன் தொடர்ந்தாள் ஜமுனா. “பாவம் சின்ன பொண்ணு. இன்னும் பதினெட்டு வயசு முடியல… சோ மைனர் பொண்ணு… அது உனக்குப் பெரிய சிக்கலாகும், அப்பறம் அவளோட குடும்பம் நடுத்தரக் குடும்பம்னு கேள்விபட்டேன்… கிராமத்துப் பொண்ணு… அப்பா வேற உடம்பு சரியில்லாதவர் போலிருக்கு… அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா காப்பாத்தக் கூட ஆளில்லை… எனக்கு அவளை நினைச்சாத்தான் ரொம்பக் கவலையா இருக்கு ஜிஷ்ணு…”

“என்ன … மிரட்டுறியா?”

ஜமுனாவின் முகத்தில் நிஜமான வருத்தம் தெரிந்தது. “சத்தியமா இல்லை ஜிஷ்ணு… எங்கப்பாவும் உங்கப்பாவும் என்ன செஞ்சு உன் மனசை மாத்தலாம்னு பேசிட்டிருந்தப்ப நான்தான் தலையிட்டு அவளை ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொன்னேன்”

“ஒண்ணு பண்ணலாம் ஜிஷ்ணு… நீயும் நானும் ஒரே ஒரு வருஷம் சேர்ந்து வாழலாம். அதுக்குள்ளே எல்லா சிக்கலும் மறைஞ்சுடும். உங்கம்மாவும் நல்லாயிடுவாங்க. அப்பறம் நமக்கு ஒத்து வரலைன்னா உடனே டைவோர்ஸ் பண்ணிடலாம். உன்னைப் பிடிக்கலைன்னு இவங்ககிட்ட சொல்லி நானே மணவிலக்கு தரேன். பட் உன் மனசில் நான் ஒரு சதவிதம் மாற்றம் உண்டாக்கினாலும் நம்ம பந்தத்தைத் தொடரணும்…”

அருவருத்தபடி முகத்தை சுழித்தான் ஜிஷ்ணு.

“சேர்ந்து வாழறதுன்னா…”

“அதுக்குக் கூட அர்த்தம் தெரியாதவனா நீ… இல்லை நான் சொல்லிக் கேட்கணும்னு ஆசைப்படுறியா?” ஒரு வாக்கியத்தில் அதற்கான அர்த்தத்தை சொன்னாள் ஜமுனா.

“இந்தக் கல்யாணமே பிடிக்கலைன்னு சொல்றவனை உனக்குக் கணவனா நடந்துக்கச் சொல்லுறது ரொம்ப சீப்பா இருக்கு… இதுக்கு நான் சம்மதிக்கலைன்னா?”

“விவாகரத்துன்னுற ஒண்ணு உனக்குக் கிடைக்காது. காலம் முழுசும் நீ என் கணவனா வேலை பார்க்க வேண்டியதுதான்”

அவன் கண்முன் தான் கையெழுத்திட்ட விவாகரத்துப் பத்திரத்தை வைத்தாள் ஜமுனா.

“உனக்கு ஏற்பட்டிருக்குற பிரச்சனைகளைத் தீர்க்கவும், நீ உன் தொழில்ல ஸ்திரமாகவும், நீ காதலிக்குற பொண்ணுக்கு சட்டப்படி கல்யாண வயசு வரவும் இன்னும் குறைஞ்சது ஒரு வருஷமாவது ஆகும். ஆனா என்னோட நிலையை நினைச்சுப் பாரு… உன்னோட சூழ்நிலைக்காக, உன் அம்மாவோட சுயநலத்துக்காக என் கழுத்துல தாலி ஏறிடுச்சு. வேற கல்யாணம் செய்துகிட்டாலும் ஊரார் பார்வைல அது எனக்கு ரெண்டாங்கல்யாணம்… உனக்காக என் வாழ்நாள் முழுசும் அந்தப் பெயரை நான் சுமக்கணும். ஆனால் பதிலுக்கு ஒரே ஒரு வருஷம் என் கூட நீ வாழ மாட்ட… எவ்வளவு பெரிய சுயநலவாதி நீ…”

“வேற வழியே இல்லையா ஜமுனா… இந்தக் காண்ட்ராக்ட் கணவன் யோசனை எனக்கு சுத்தமா பிடிக்கல”

“ஆனா எனக்குப் பிடிச்சிருக்கு ஜிஷ்ணு… நீ ஒண்ணும் யோசனை சொல்ல வேண்டிய இடத்துல இல்லை. என் திட்டத்துக்குத் தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துல இருக்க… சொல்லப் போனா உன் வாழ்க்கையோட டிரைவர் இப்ப நான்தான். நான் கூட்டிட்டுப் போற இடத்துக்கு நீ வரணும், வந்தே ஆகணும்…

நீ கொஞ்சம் புத்திசாலி ஜிஷ்ணு… யோசிச்சுப்பாரு… நீ என்னோட நிபந்தனைக்கு சம்மதிச்சா நான் டைவர்ஸ் தர ரெடியா இருக்கேன்… அன்னைக்கு நானில்லைன்னா அங்க இருக்குற வேற யாராவது பொண்ணு கழுத்துல உன்னைத் தாலி கட்ட வச்சிருப்பாங்க… அப்படி மட்டும் நடந்திருந்தா உனக்கு இந்த ஜென்மத்துல விடுதலை கிடைக்காது… சோ அந்த நன்றிக்காக என்னோட இந்த ஒரு வருஷத்தை செலவு பண்ணு. எனக்கு ஒரு நல்ல கணவனா நடந்துக்கோ. அப்பறம் சத்தமில்லாம டைவர்சை வாங்கிட்டுப் போ. இதுதான் அந்த டீல். இதை அக்செப்ட் பண்ணுறதும் பண்ணாததும் உன் விருப்பம்” சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் ஜமுனா.

செல்லும் முன், “உங்கம்மா நமக்கு இன்னைக்கு முதலிரவு ஏற்பாடு பண்ணணும்னு சொல்லிட்டிருக்காங்க” என்ற தகவலையும் காதில் ஓதிப் போனாள்.

ங்கு நிற்கப் பிடிக்காமல் பால்கனிக்கு சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

‘ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்னு தானே சொன்னேன். அதுவும் நானும் சரயுவும் சேர்ந்து இருந்தது ஒரு சில நாட்கள்தான். அவளோட பிரெண்ட்ஸ்க்குக் கூட எங்க விஷயம் உறுதியாத் தெரியாது. ஆனா எங்க வீட்டுக்கு எப்படித் தெரியவந்தது. சரயு தமிழ் பொண்ணு, பதினெட்டு வயசு கூட ஆகல இதெல்லாம் எப்படி இவங்களுக்குத் தெரியும்…’ நிதானமாக யோசித்தான். விடை தெரிந்த போது ஜிஷ்ணுவின் இருதயத்தைக் குண்டு வைத்துத் தகர்த்ததைப் போலத் துடித்துப் போனான்.

செல்லில் அந்த நபரை அழைத்தான்.

“ஜிஷ்ணு எப்படி இருக்க…?” என்றான் வெங்கடேஷ்.

“ம்ம்…”

“நான் கூட அம்மாவைப் பாக்க பேமிலியோட வரணும்டா… அப்படியே என் கல்யாணப் பத்திரிக்கையைத் தரணும்”

“ஆமாம் வெங்கடேஷ்… இப்பத்தான் நீ எங்க கூட உறவுக்காரனா வந்து ஒட்டிக்கிட்டியே…”

குரலில் தெரிந்த மாறுபாட்டை உணர்ந்தான் வெங்கடேஷ்.

“ஜிஷ்ணு…”

“நான் உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன். எங்களோட காதலை, என் கனவுகளை உன் ஒருத்தன் கிட்டத்தானடா பகிர்ந்துகிட்டேன். என் அன்பை, கனவை, அழகான காதலைக் கலைச்சுட்டியேடா… ”

“ஜிஷ்ணு உன் நல்லதுக்காகத்தான்…”

“வாயை மூடுடா துரோகி… என் நல்லதுக்குன்னா அதை என்கிட்டதானே சொல்லிருக்கணும்… எனக்கு நட்பை, காதலை சொல்லித்தந்த உங்க ஊர் ஒரு துரோகியையும் அடையாளம் காட்டிருக்கு… இனிமே என் லைப்ல நீ கிடையாது… என் லைப்ன்னா அது சரயுவையும் சேர்த்துத்தான். இந்த தடவை உன்னை ஏன் சும்மா விடுறேன்னு தெரியுமா… என் சரயுவை நான் பாக்க நீ தான் காரணம்.. அந்த ஒரே ஒரு விஷயத்தால உன் உயிர் உடம்புல ஒட்டிட்டிருக்கு… இனிமே என் வாழ்க்கைல தலையிடணும்னு நீ மனசால நெனச்சாக் கூட உன் தலையை எடுத்துடுவேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

ஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை அதிகப்படுத்து என்பது அவளது வழக்கமாய் இருந்ததால்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து