Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 36’ (final)

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 36’ (final)

36 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

அவள் மௌனமாக “ஆக்சிடென்ட் தான் ஆதி..”

அவன் ஓரக்கண்ணில் முறைத்தபடி “அது எனக்கு தெரியாது பாரு..அது எப்படினு தான் கேக்குறேன்..”

“ரோடு கிராஸ் பண்ணும் போது 4 வீலர் ஏதோ ஒண்ணு இடிச்சு நான் மயங்கிட்டேன்..” என தயக்கத்துடன் சொல்ல

“எந்த ஒரு விஷயத்தையும் நீ எப்படி சொல்லுவேன்னு எனக்கு நல்லா தெரியும்..இந்த விஷயத்தை மட்டும் கேட்கும்போது எல்லாம் நீ நல்லா மழுப்பற..சமாளிக்கிற..ஒழுங்கா இன்னைக்கு நீ எல்லாமே சொல்லு..திரும்ப ஒரு ஆக்சிடென்ட்னா எல்லாரும் வீட்ல எவ்ளோ பீல் பண்ணுவாங்கனு உனக்கு நல்லா தெரியும்..சோ நீ அவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்கமாட்ட..சொல்லு என்ன வண்டினு கூட பாக்கலைனு நீ சொன்னதை மத்தவங்க நம்பலாம்..நான் இல்லை..ஒழுங்கா அப்போ என்ன பிளான் பண்ண சொல்லிடு..என் மேல ப்ரோமிஸ் பண்ணிருக்க தியா..” என மிரட்ட தலை கவிழ்ந்தவள்

“சரி சொல்றேன்..ஆக்சுவலி நான் ஓகே சொன்ன அடுத்த 3 வீக்ஸ்ல மேரேஜ்னு சொல்லிட்டாங்க..மேரேஜ் ஓகே சொன்னாலும் உன்னை நினைச்சிட்டு டிஸ்டர்ப் ஆகி ரோடு கிராஸ் பண்ண போன வரைக்கும் உண்மை..ஆனா வண்டி அங்க வரும்போதே நான் பாத்துட்டேன்..சடனா ஒரு ஐடியா..இது யூஸ் பண்ணி பக்கத்துல வண்டி வரும்போது நாமளே நகுந்து போயி கீழ விழுந்தடலாம்..ஆக்சிடென்ட்ல கொஞ்சம் மிஸ் ஆன மாதிரி இருக்கட்டும்..வீட்ல கேட்கும்போது டைம் சரிஇல்லேனு கொஞ்ச நாள் தள்ளிப்போட சொல்லிட்டு மெதுவா டாடிகிட்ட விஷயத்தை ஓபன் பண்ணலாம்னு தான் பிளான் பண்ணேன்..அதிகபட்சம் கீழ விழுந்து சிராய்க்கும் அவ்ளோதான் நான் பிளான் பண்ணேன்…ஆனா..” என்று அவள் நிறுத்தி மித்ரனை பார்க்க அவனது மேலே சொல்லு என்பது போல காட்ட இவளால் அவனிடம் இருந்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை..பின் அவளே தொடர்ந்து “ஆனா வண்டி பக்கத்துல வரும் போது நான் நகறதுக்குள்ள ஒரு குட்டி நாய் குறுக்க வந்திடுச்சு..நான் அப்டியே போனா அது அந்த பக்கம் போயி வண்டில இடிச்சிடும்..சோ சைடுல

நான் நகரும்போது டிவைடர் இருந்ததை கவனிக்கல..அதுல இடிச்சு திரும்ப ரோடுக்கு வந்துட்டேன்..அப்போதான் லாரி இடிச்சிடிச்சு..நல்ல அடி அப்டியே மயங்கி விழுந்திட்டேன்…”

 

அவன் எழுந்து அறைக்கு சென்றுவிட்டான்..இவளும் பின்னாடியே சென்றவள் “ஆதி..ஒருநிமிஷம் இரு…நீ கேட்டேன்னு தானே சொன்னேன்..எல்லாமே சொல்லிட்டேன் ஆதி..இதுதான் உண்மை இதுக்கு மேல நான் எதுவும் பண்ணல..” என்றதும்

“அப்டியே அறைஞ்சன்னா…ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் பத்தாதா? இதுக்குமேல எதுவும் பண்ணலையாம்..எது எதுல ரிஸ்க் எடுக்கிறதுனு இல்ல? பேசாம போயிடு தியா..” என அத்தனை கோபத்தையும் அடக்க சன்னல் கம்பிகளை இறுக பற்றியபடி திரும்பி நின்றான்..

 

அவளும் தலை கவிழ்ந்தபடியே நின்றவள் பின்னால் அவன் தோளில் சாய்ந்தபடியே “ஆதி ப்ளீஸ் ஆதி..அப்போ எனக்கு வேற எதுவும் தோணல..அதுவும் அவ்ளோ சீரியஸ நான் நினைக்கல…

என்கிட்ட பேசு ஆதி ப்ளீஸ்…நான் மட்டும் என்ன எனக்கு ஏதாவது ஆகணும்னா அப்டி போயி விழுந்தேன்..எனக்கு உன்கூட வாழணும்னு ரொம்ப ஆசை ஆதி..ஒருவேளை அது நடக்காம போய்டுமோனு நினைச்சதுமே என்னால ஏத்துக்கமுடில..அதான் கொஞ்சம் அப்டி ரிஸ்க் எடுத்துட்டேன்..என்கிட்ட பேசேன்..என இறைஞ்சும் குரலில் கேட்டவள் இது எல்லாமே நான் உன்கூட வாழணும்னு தானே பண்ணேன்..இப்டி நீ மூஞ்சை தூக்கி வெக்கவா?” என குறைபட கடுப்புடன் திரும்பியவன் “ஒருவேளை அந்த ஆக்சிடென்டல ஏதாவது ஆகியிருந்தா அப்போ வாழ்ந்திருப்பியா?”

“கண்டிப்பா அப்டி நடந்திருக்காது ஆதி..எனக்கு தெரியும்..ஏன்னா நான் உன்னை அவ்ளோ லவ் பண்ணேன்..திரும்ப வண்டில இடிக்க போகும்போது ஐயோ ஆதிகூட வாழணும் அவனை பாக்கணும் தப்பிச்சிடுனு என் மனசு சொல்லிட்டே தான் இருந்தது..மயங்கும் போது ஒன் கன்போர்ம் தலைல அடிபடல..சோ எப்படியும் உன்னை மறக்காம திரும்ப உன்னை பாத்துடுவேன்னு தெரியும்..மத்த அடி எல்லாம் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்னு அப்போதான் ஒரு நிம்மதியே வந்தது..உன்னை நினைச்சிட்டே மயங்கிட்டேன்..எனக்கு எவ்ளோ வில் பவர் பாத்தியா?” என அவள் குழந்தைத்தனமாக பேசி பெருமைபட்டுக்கொள்ள அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..என்ன வகையான அன்பு இது என்று நினைத்தவன் கண்கள் கலங்க அவளது முகத்தை ஏந்தியவன் “எவ்ளோ வலி இருந்திருக்கும்..ஏன் தியா இப்டி பண்ண?”

“அட நீ வேற ஆதி..மயங்கி எனக்கு வலியே தெரில..வீட்ல வந்தும் அப்பாகிட்ட பேசி எல்லாம் ஓகே வாங்குற வரைக்கும் எனக்கு இதை பத்தி யோசிக்கவேமுடில..நீ மட்டும் தான் இருந்த..அப்புறம் எல்லாம் செட் ஆனதுக்கப்புறம் தான் எல்லாரையும் வலிக்கிதுன்னு வேலை வாங்கி டார்ச்சர் பண்ணிட்டேன்..என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி இம்சை பண்ணி எல்லாத்துக்கும் அவங்க தானே காரணம்..சோ நல்லா படட்டும்னு வெச்சு எல்லாரையும் செஞ்சுட்டேன்..அம்மா, டாடி, மகி, சிவா எல்லாருமே பொலம்பிருப்பாங்களே?” என கிண்டல் செய்து சிரிக்க

அவனும் அவர்கள் புலம்பியதை எண்ணி சிரித்தான்..ஒரு நொடி தான்..மறுகணமே “அப்போ அடிபட்டது தானே இடுப்புகிட்ட.?”

அவள் மேலும் கீழும் தலையசைக்க

“பேபியாவது வேண்டாம்னு சொன்னேன்..கேட்கவேயில்ல..மத்தவங்களை விட நீ பண்ண டார்ச்சர் இருக்கே..நீ அவளோ அடம்பண்ணி ஒரு விஷயம் கேட்கும் போது வேண்டாம்னு என்னால சொல்லமுடில..அதேசமயம் உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால யோசிக்கவும் முடில…உன்னை டெலிவரிக்கு உள்ள விட்டுட்டு யாராவது ஒருத்தர் தான் பொழைக்கவெக்க முடியும் போலன்னு சொல்லும் போது, ஆபரேஷன் நடந்த அந்த கொஞ்சம் நேரம் கடவுளேனு இருந்தது..அந்த சில நிமிஷம் என்னால இப்போவும் அதை நினைச்சா ரணவேதனையா இருக்கு..அப்போதான் புரிஞ்சது..நீ என் லைப்ல எவ்ளோ முக்கியம்னு..நான் நினைச்சது எல்லாம் விட அதிகமா நீ எனக்குள்ள இருக்கனு உணர்ந்தேன்..அடிபட்டத்தோட டெலிவரி டைம்ல எவ்ளோ வலி உனக்கு? இந்த ஒரு விஷயத்துல உன் பேச்சை கேட்காம குழந்தையே வேண்டாம்னு நின்றுக்கலாமோ? தப்பு பண்ணிட்டேனோனு தோணுச்சு..”

“ம்ச்..விடு ஆதி..இப்போ நீ ஒரு ஒருதடவையும் நம்ம பாப்பாவ பாக்கும்போது என் அம்மாவை எனக்கு திருப்ப காட்டிருக்க தியானு எவ்ளோ சந்தோசமா சொல்ற..அத ஹாப்பினஸ் முன்னாடி இது ஒரு விஷயமாவே தெரில ஆதி..அதோட நீ அப்டி சொல்லும்போது எல்லாம் நான் கேட்காமலே எனக்கு லவ் யூ சொல்லி கிஸ் பண்ணுவ..அப்போ எனக்கு செம ஜாலியா இருக்கும்..” என குழந்தையின் குதூகலத்தில் கூற அவன் வாய் விட்டே சிரித்துவிட்டான்..

அவளின் முகத்தை இருக்கைகளில் பற்றி அருகே இழுத்து “லவ் யூ டி செல்லம்..” என நெற்றியில் முத்தமிட அவளும் “தேங்க் யூ சோ மச்” என கட்டிக்கொண்டாள்..

“எப்படி தியா உனக்கு என் மேல இவ்ளோ லவ் வந்தது? நான் அப்டி உனக்கு என்ன பண்ண?”

அவளும் சற்று யோசித்தவள் “லவ் பண்ணனும்னு தோணுச்சு..உன் லவ்வ எனக்கானதா  எடுத்துக்கிட்டு அனுபவிக்கணும்னு தோணுச்சு..அவ்ளோதான்..அது ஏன் எப்படினு எல்லாம் எனக்கு தெரில ஆதி..அப்டி கேட்டாலும் எனக்கு கிடைக்கற ஒரே பதில் பிகாஸ் ஐ லவ் யூ…அவ்ளோதான்” என

அவனும் மகிழ்ச்சியில் அவளை அணைத்துக்கொண்டான்..

திடீரென எழுந்தவள் “ஆமா ஆதி, என் ஆக்சிடென்ட்ல டவுட் இருக்குனு சொல்லி கேட்ட..நான் தான் ஏதோ பண்ணிருக்கேன்னு சரியா சொன்ன? நான் சொன்னதை கேட்டு இவளோ ரியாக்ட் பண்றியே உண்மையா நீ என்ன தான் நினச்ச? எப்படி டவுட் ?”

அவன் அவள் தலையில் முட்டி “நீயா யாராவது ஆள செட் பண்ணி ஆக்சிடென்ட் பண்ண சொல்லிருப்பியோனு நினச்சேன்..

“ஓஓஓஓஓ….நல்ல ஐடியா தான்..கொஞ்ச டைம் கிடைக்கல..இல்லாட்டி இத பிளான் பண்ணிருப்பேன்…”

அவனோ முறைத்துவிட்டு “இந்த மாதிரி லூசுத்தனமா பிளான் பண்றதை விட்டுட்டு அமைதியா தூங்கு..”என புன்னகையுடனே உறங்கினர்.

 

ஒரு மாதங்களுக்கு கடந்துவிட அன்று மித்துவின் பிறந்தநாள் காலை முதல் மாலை வரை இரு குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்திருந்தனர்…சந்தியா கருவுற்றிருக்க, மகிளா – மகேஷ் திருமணம் முடிவாகியிருக்க அனைவரையும் கிண்டல் செய்தபடியே பொழுது கழிந்தது..மகிழ்ச்சியாக கொண்டாடியவர்கள் இரவு வரை இருந்துவிட்டு குழந்தையோட இருவரையும் ஆசிர்வதித்துவிட்டு சென்றனர்..

அன்று மித்ரன் அம்மா தந்த செயினை அவளுக்கு பரிசளித்தான்..இந்த மாதிரி ஒரு பிறந்தநாள்ல தான் அம்மா இதை உனக்கு தரணும்னு நினைச்சாங்கல..அதனால தான் இவளோ நாள் வெயிட் பண்ணேன்..ஹாப்பி பெர்த்திடே என கூறி இந்த குட்டி கலாகிட்ட இருந்து வாங்கிக்கோ என குழந்தையின் கையில் வைத்து அவளுக்கு குடுத்தான்…அவனே அதை பின்பு அணிவித்தான்..அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..அத்தையின் மறுஉருவமாக கருதும் தங்கள் மகளின் கையில் வாங்கியதும் அதை கணவன் அணிவிக்க அந்த நெகிழ்ச்சியில் அதை பார்த்தபடியே இரவு அமர்ந்திருந்தாள்..பின்னால் வந்து அணைத்தவன் “என்ன பெரிய மேடம் செயினை பாத்துட்டு இருக்கீங்க..ஹாப்பியா?”

அவளும் ரொம்பப..என அவனை அணைத்துக்கொண்டாள்..அவனும் தோளில் சாய்த்தபடி அவளின் தலையை வருடிக்கொடுக்க மித்து “ஏன் ஆதி..இந்த பெர்த்திடேக்கு உன்கிட்ட இன்னொரு கிப்ட் கேட்கவா?” என

“சொல்லு மா..”

“நம்ம கலா பாப்புக்கு என்னோட நெக்ஸ்ட் பெர்த்டேக்கு தங்கச்சி இல்ல தம்பி குடுக்கலாமான்னு யோசிக்கிறேன்..” என அவன் “அடி பின்னிடுவேன்..பேசாம இரு..ஒரு தடவ உன் டெலிவரில பாக்குறதுக்குள்ளையே நான் செத்து பொழைச்சிடேன்..நோ வே..ஓடிப்போய்டு..”

அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள

அவன் “எனக்கு நீ ஒரு விஷயம் சொல்லு..நீ இன்னொரு குழந்தை வேணும்னு கேக்றதுக்கு உண்மையான காரணம் என்ன? மறைக்காம சொல்லு..” என்றதும்

“அதுது… நீ குட்டிய கொஞ்சும்போது எல்லாம் ரொம்ப எக்சைட் ஆகி என்னை கொஞ்சுவ..அதோட அந்த ப்ரெக்நென்சி டைம்ல நீ என்கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணுவ..என்னை குழந்தை மாதிரி கூடவே வெச்சு பாத்துப்ப..எனக்கு அது ரொம்ப பிடிக்கும் ஆதி..முக்கியமா நீ என்னை அப்டி பாத்துக்கிட்டா தான் எனக்கு பிடிக்கும்..வேற யாரும் எல்லாம் கூட வேண்டாம்..அதான்..” என இழுக்க

 

அவளின் இந்த சிறுபிள்ளைத்தனமான ஆசையை எண்ணி சிரித்தவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்தபடியே “தியா உன்னை என்ன தான் பண்றதோ..நீ எப்போவுமே எனக்கு முதல் குழந்தைதான்..உன்னை நான் அப்டியே பாத்துக்கறேன்..அதுக்காக எல்லாம் உன் உயிரை பணயம் வெச்சு திரும்ப என்னால விளையாட முடியாது செல்லம்..சரியா..உன்னை நான் எப்போவுமே பத்திரமா பாத்துக்குவேன்.. இதேமாதிரி..இதைவிட பாசமா..யார்கிட்டேயும் குடுக்காம..சோ ரொம்ப பிளான் போடாம திங்க் பண்ணாம என் செல்லம் சமத்தா இப்போ தூங்குமாம் ஓகே? என

அவளும் புன்னகையுடன் உறங்கினாள்..

சிறிது நேரத்தில் இடிஇடிக்க ஒருபுறம் இருந்த குழந்தை சிணுங்க தட்டிக்கொடுக்க அது அமைதியாக உறங்கியது..அடுத்தகணமே மறுபுறம் உறக்கத்தில் இருக்கும் மனைவியின் சிணுங்கலை கண்டவனுக்கு இருவருக்கும் வளர்ச்சியை தவிர வேறேதும் வேறுபாடு இல்லை என நினைத்தவன் சிரிப்புடனே அவளை தட்டிக்கொடுக்க அவளோ கையை இறுக பற்றிக்கொண்டாள்..சின்னத விட இவளை சமாளிக்கிறது தான் கஷ்டம் என நினைத்தவன் புன்னகையுடன் அவளை அணைத்தபடியே உறங்கினான்…

இவர்களின் இணக்கம் போலவே வெளியே மழையும் காற்றும் ஒன்றோடொன்று கலந்து சில்லென்று வீசியது…

 

****************************************** முற்றும்  *****************************

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 26’

26 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “அன்னைக்கு ராத்திரியே…உன்னை விட்டுட்டு கொஞ்ச தூரம் நடந்து போனான்..கொஞ்ச நேரம் யோசிச்சேன்..நேரா சிவா வீட்டுக்கு போனேன்..” “அந்த நேரத்துலையா? அதுவும் சிவா பாக்க?” என ஆச்சரியமாக கேட்க “ம்ம்..அப்போவே தான் போனேன்…நான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

6 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சிவா கடுப்புடன் இருக்க மித்ரா எப்போதும் போல வந்து “ஹே சீனியர்ஸ்…செம ஜாலியா உக்காந்திருக்கிங்க போல?” மகேஷ் “எங்களை பாத்தா ஜாலியா இருக்கற மாதிரியா இருக்கு?” “பின்ன? பாத்தா தெரில? அதான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’

25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப?” “சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..” “என்ன பதில் சொன்னிங்க?” என ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு