Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

33 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

செல்லும் வழியில் மித்ரா வெளியே புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் அமைதியாக வருவதை கண்டவள் “என்ன ஆதி, என் மேல செம காண்டுல இருக்கியோ?” என வம்பிழுக்க

அவனும் புன்னகையுடன் “நீ அங்க பேசும் போது அப்படி தான் இருந்தது..இப்போ இல்லை..நான் அவங்க எல்லாரும் வேணும்னு எதிர்பார்க்கவும் இல்லை..வேண்டாம்னு விலக்கவும் இல்லை..அது எனக்கு நல்லாவே தெரியும்..ஆனாலும் நீ அவங்ககிட்ட என்னை பத்தி சொல்லும்போது என்னவோ மாதிரி இருந்தது..அங்க நான் ரொம்ப அன்கம்பர்ட்டா இருந்தேன்..ஆனா உண்மைய சொன்னா இப்போ கொஞ்சம் ஏதோ ரீலிப் ஆனமாதிரி இருக்கு…” என்றான் புன்னகையுடன் அவளும் புன்னகைத்தபடி “தட்ஸ் மை ஆதி..” என கொஞ்சினாள்..

 

“ஆனா தியா நீ ஏன் அவங்களை அவ்ளோ கேள்வி கேட்ட…கொஞ்சம் சங்கடமாகூட இருந்தது..”

 

“ஆதி, உலகத்துலயே கஷ்டமான விஷயம் மனசார நம்மகிட்டேயும் மத்தவங்ககிட்டேயும் தான் பண்ணது தப்புனு ஒத்துகிறது, அதோட தொடர்ந்து வர தண்டனை என்ன தெரியுமா? அந்த தப்பை உணர்ந்தும் குற்றஉணர்ச்சில வாழறது..

அந்த நேரத்துல மனசுல அவ்ளோ போராட்டம் இருக்கும்..

தப்பை உணர்ந்துட்டோம் ஆனா அவங்கள எப்படி நேருக்கு நேர் சந்திக்க போறோம்னு கூச்சப்படுறது, மன்னிப்பு கேட்க முடியாம தவிக்கிறது, மன்னிப்பு கேட்டா ஏத்துக்குவாங்களானு தயங்குறது, அதை பத்தியே நினச்சு நினச்சு வாழ்க்கையை அழிச்சுக்கறது..ரொம்ப கொடுமை ஆதி.. இவளோ நாள் நீ உங்க அப்பா பத்தி சொன்னதுல வெச்சு அவரு ஏதோ ஒரு வகைல தப்புனு உணர்ந்து தான் உன் அம்மாகிட்ட திரும்ப வந்திருப்பாரு….அப்டி யோசிச்சவரு கண்டிப்பா உன்னை திட்டிருந்தாலும் மனசார அதை அவரு சொல்லிருப்பாரான்னு ஒரு யோசனை இருந்திட்டே இருக்கும்..இன்னைக்கு நேர்ல பாக்கும்போது அவர் எல்லாத்துல இருந்தும் ஒதுங்கியே இருந்தாரு..அவருக்கு இன்னும் அந்த ஏக்கம் கவலை குற்றவுணர்ச்சி இருக்குனு புரிஞ்சது..மத்தவங்கள பத்தி எனக்கு ஐடியா இல்ல..ஆனா அத்தை சொன்னது, பாட்டிகிட்ட பேசுனதை வெச்சு அங்க பாட்டி ராஜ்யம் தான் இந்த வீட்லனு தெளிவா தெரிஞ்சது..உன் அப்பாகிட்ட நேராவே போயி உன்னை பத்தி சொல்லி அவர் சந்தோஷப்பட்டாலும் திரும்ப பழையமாதிரி பாட்டி என்ன நினைப்பாங்களோனு யோசிச்சா?.

அது இன்னும் இன்னும் வருத்தம் வலி தான்..எவ்ளோ நாளைக்கு இத இழுத்திட்டு இருக்கிறது..அதான்.நேரா பாட்டி என்ன நினைக்கிறாங்க குடும்பத்துல எல்லாரும் என்ன ஐடியால இருக்காங்கன்னே தெரிஞ்சுக்கலாம்னு எல்லார் முன்னாடியும் அப்டி கேட்டேன்..ஆரம்பத்துல அவங்க மாமா, அத்தை, சித்தி எல்லாரும் ஒருவேளை அப்டி இருக்குமோனு தான் இவளோ நாள் நினச்சு அதை அப்டியே விட்டுருக்காங்க..அதான் அவங்களுமே என்கிட்ட சத்தம்போட்டாங்க..ஆனா பாட்டி எல்லா விஷயத்தையும் சொன்ன பிறகு அவங்களுக்கும் விரும்பம் இருக்குனு தெரியும் போது யாருமே அதை குறையா சொல்லல..சொல்லப்போனா சந்தோசமா தான் ஏத்துக்கறாங்க..இதை இவளோ நாள் எல்லாரும் மனசு விட்டு பேசிருந்தாலே ஓரளவுக்கு சரி ஆகியிருக்கும்..

 

இவங்க இப்டி நினைச்சுப்பாங்களோ அவங்க அப்டி பீல் பண்ணுவாங்களோனு அடுத்தவங்க முடிவை நாம எடுக்க நமக்கு எந்த ரைட்ஸ்ம் இல்லை..சூழ்நிலைகள் தான் எல்லாத்தையுமே முடிவு பண்ணுது..யாருக்கு எப்போ எந்த மாதிரி சூழ்நிலை அமையும்னு யாருமே சொல்லமுடியாது..அப்பறம் ஏன் ரொம்ப யோசிச்சு கஷ்டப்படுத்தி இருக்கிற ஒரு வாழ்க்கையை இழக்கணும்? பேசி பாத்தா தெரியப்போகுது..புரிஞ்சுகிட்டா நல்லது, புரிஞ்சுக்கலேனா வருத்தம் தான் அதை ஏத்துக்க பழகிக்கலாம்..அதை விட்டுட்டு இங்கேயும் போகாம அங்கேயும் போகாம நாமளே முடிவு பண்ணி பின்னாடி எப்போவது தெரியவந்து ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமேனு யோசிக்கிறது..

அவங்க ஒருவேளை ஏத்துக்க ரெடியா இருந்தாங்கனு வை அப்போ பாதி வாழ்க்கையே போயிருக்கும்..அவ்ளோ ப்ரெஷர் எதுக்குன்னு தான் இந்த அதிரடி வைத்தியம்..”

 

மித்ரன் சிரிப்புடன் “இது எப்படி உனக்கு தோணுச்சு..”

“ம்ம்..புலி வருது வருது சொல்லிட்டு இருக்கிறதை விட ஒரு நாள் வரவெச்சு பாத்துட்டா  ஒண்ணு அதை அடுத்த தடவை சமாளிக்க தைரியம் வரும், இல்ல இது நமக்கு ஒத்துவராதுனு ஊரை காலி பண்ணிட்டு ஓடத்தோணும்..இரண்டுல எதுன்னாலும் முடிவு கிடைக்கும் நம்ம அதை எப்படி பாக்குறோம்னு நமக்கு தெளிவா தெரிஞ்சுடும்..அதைத்தான் இப்போ பண்ணேன்..” என சிம்பிளாக சொல்ல

 

அவள் சொன்ன உதாரணத்தில் வாய் விட்டு சிரித்த மித்ரன் “நீ இன்னும் வளரவேஇல்ல..” என அவள் தலையை கலைத்துவிட்டான்..

 

அடுத்து வந்த மாதங்களில் அவ்வப்போது குழந்தையை எடுத்து வந்து காட்ட காலை முதல் மாலை வரை அவர்களுடன் இருந்துவிட்டு வந்தனர்..இரு குடும்பங்களும் சந்தித்து பேசினர்..சில மாதங்களுக்கு பிறகு அவர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்கவே அங்கே குழந்தையுடன் தங்கவும் செய்தனர்..அப்போது எல்லாம் வீட்டில் அனைவரின் மகிழ்ச்சிக்கும் எல்லையே இருக்காது..வீடு முழுக்க மகன்கள், மகள்கள் அவர்களது குடும்பம், பேரன்கள், இப்போது கொள்ளுப்பேத்தி என அனைவரும் இருக்க வீடே நிறைந்திருந்தது..

ஒரு வருடம் போனதே தெரியவில்லை..மித்ரனின் குலதெய்வம் கோவிலில் மித்ரகலாவிற்கு மொட்டை அடித்து காது குத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அன்று இரு குடும்பத்தினரும் அங்கே கூடியிருக்க அப்டியே பொங்கல் வைத்துவிடலாம் என கூற அதையும் செய்தனர்..அனைத்தும் சரியாக நடந்தாலும் ஒரே ஒரு குறை மித்ரனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே எல்லாம் முழுதாக சரியாகவில்லை என்பது..

சந்தியா “ஏய் மித்து, இன்னுமா மித்ரன் அவங்க அப்பாகிட்ட அப்டியே இருக்காரு..அப்பான்னு கூட அவரு இப்போவரைக்கும் கூப்பிட்டு பாத்ததேயில்லை.. ”

“ஆமாக்கா.. அவரும் உரிமையா வந்து மகன்கிட்ட பேசமாட்டேங்கிறாரு..ஒரு தயக்கத்துலையே இருக்காரு..ஆதியும் அவரா போகமாட்டேங்கிறாரு…”

“ம்ம்…நீ மித்ரன்கிட்ட சொல்லிப்பாக்கலாம்ல?”

“இதுல நான் சொல்ல என்னக்கா இருக்கு..அது ஆதியோட விருப்பம் தானே..”

“இல்லடி, வேண்டாம்னு ஒதுக்க சொன்னவங்க சண்டைபோட்டவங்கனு வீட்ல மத்த எல்லார்கூடவும் மித்ரன் சாதாரணமா தானே பேசுறாரு..அவரு அப்பாகிட்ட மட்டும் என்ன பிரச்னை? அப்டி என்ன கோபம்?”

“எதுவா வேணாலும் இருக்கலாம்க்கா…மத்தவங்க எல்லாரும் எவ்ளோ சொல்லிருந்தாலும் அத்தை நம்பி வந்தது இவரை தானே..ஆனா அப்டி அவரு யோசிச்சிருந்தா அவங்க அம்மா அண்ணன், தம்பி குடும்பம்னு மட்டும் யோசிக்காம இவங்களை பத்தியும் கொஞ்சம் நினைச்சிருப்பாருல…அத்தைக்கு கடைசிவரைக்கும் இருந்த ஏமாற்றம் கவலை எல்லாமே தனியா வந்திட்டோம், பையன எப்படி வளத்தப்போறோம்ங்கிறத எல்லாம் விட நம்பி ஒருத்தனுக்கு கழுத்த நீட்டுனோம்..அவன் நமக்காக ஒரு பெர்ஸன்ட் கூட எந்த ரிஸ்க்குமே எடுக்கலையேங்கிறது தான்…எவ்ளோ கொடுமை கா..

ஆதியோட அப்பா யாருகிட்டேயும் பாசமா இல்லாம இருந்திருந்தா அவங்களுக்கு இவளோ வருத்தம் இருந்திருக்காது, அது அவரோட குணம்னு விட்டிருப்பாங்க.. மத்தவங்ககிட்ட பாசம் காட்ட பெத்த புள்ளைய ஒதுக்கிட்டாரேன்னு ஒரு வருத்தம் ஆதிக்கும் இருக்காதா என்ன?

இந்த வருத்தம் அவர் அப்போவோட செயல்ல இருந்து ஆதிக்கு கிடைச்ச வலி…மாத்தணும்னா அவங்க அப்பா தான் முயற்சி பண்ணனும்..அதை ஒருவேளை ஏத்துக்கிட்டா, ஆதி பேசுனா சந்தோசம் தான்..இல்லாட்டினாலும் நான் ஆதிய கம்பெல் பண்ணமாட்டேன்..மனுசங்க உணர்ச்சிக்கு கொஞ்சமாவது மதிப்பு குடுக்கணும்கா..மனசாட்சியே இல்லாம, எல்லாருக்குமே தானே பிரச்னை..நடந்ததை மறந்துட்டு போயி பேசுனு எல்லாம் நான் சொல்லமாட்டேன்..ஆதிக்காக இருந்த ஒரே ஜீவன் அவங்க அம்மா தான்..அவங்க இறந்தபோது கூட வந்து இறுதி சடங்கு செய்யல..ஆதிக்கு ஆறுதல ஒரு வார்த்தை பேசல..உன்னால தான்டா இவளுக்கு இந்த நிலைமைன்னு கஷ்டப்படுத்திட்டு வந்திருக்காரு..கேட்டா எனக்கு கவலை கஷ்டம்னு சொல்ராங்க..5 வயசு பையன் அவன் மட்டும் என்ன பண்ணுவான்..அவனுக்கு யாரு இருக்காங்கனு யோசிச்சாரா? இவங்க எல்லாரும் சொல்ற மாதிரி ஆதியும் திருப்பி சொல்லலாமே ‘நீங்க எல்லாரும் என் அம்மாவை வெளில அனுப்பாம இருந்திருந்தா இந்நேரம் அவங்க உயிரோட இருந்திருப்பாங்கன்னு..’ ஆனா ஆதி அப்டி எல்லாம் சொல்லி யாரையும் கஷ்டப்படுத்தல..அவரு சொன்ன ஒரு வார்த்தைல ஆதி யாருகிட்டேயும் அன்பா இல்லாம எவ்ளோ தன்னையே தனிமைப்படுத்திகிட்டான் தெரியுமாக்கா?

இப்போவும் இவங்களுக்கு பிரச்னைனதும் ஆதியா தான் முன்னாடி வந்து ஹெல்ப் பண்றேன்னு சொன்னான்..இங்க இருக்கிறவங்ககிட்ட அவன் யாருனு சொல்லணும்னு தோணுச்சு..அவ்ளோதானே தவிர மத்தபடி இங்க இருக்கிற எல்லாரையும் அவன் மன்னிக்கறது, நடந்ததை மறக்கிறது எல்லாமே ஆதியோட இஷ்டம் தான்..அதுல நான் அவனுக்கு எதுவுமே சொல்லமாட்டேன்..” என அத்தனை அழுத்தமும் கோபமுமாக கூற

சந்தியா “சரிடி, நீ அவன்கிட்ட சொல்லவேண்டாம்..நீயாவது அவரை மாமானு கூப்பிடலாம்ல..மத்தவங்களை நீ முறை வெச்சுத்தானே கூப்பிட்ற..இவரு மட்டும் தனியா இருக்கிறது நினச்சா கஷ்டமா இருக்கு டி..”

மித்ரா “ஆதி எப்போ அவரை அப்பான்னு கூப்படறாரோ, அந்த நிமிஷமே நான் அவரை மாமானு கூப்படறேன்..” என்று சொல்லிவிட சந்தியா இதற்குமேல் என்ன கூறுவது என அமைதியாகிவிட்டாள்..எழுந்து செல்ல பின்னால் முருகன் நின்றிருக்க மித்ராவும் எழுந்தவள் அவரை பார்க்க சந்தியா “மாமா, நீங்க மித்ரா பேசுனதை எதையும் தப்பா எ..”

“இல்லமா இல்ல..என்  மருமக சொன்னது எல்லாமே உண்மைதானே..தேவைப்படுற நேரத்துல நான் அவங்க கூட இல்ல..இப்போ சும்மா பேருக்கு இருந்து என்ன பிரயோஜனம்? இந்த மாதிரி என்னை அதட்டி சொல்ல தான் ஆள் இல்லை..

மித்ராவிடம் திரும்பி உன் புருஷனே என்னை இதெல்லாம் சொல்லி திட்டி 2 அடி அடிச்சிருந்தாகூட நான் நிம்மதியா இருந்திருப்பேன்மா…ஆனா அப்டி கூட அவன் என்கிட்ட வந்து பேசலெங்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு..சண்டை போடுற அளவுக்கு கூட இல்லாம அவன் என்னை வெறுக்கிற அளவுக்கு நான் மோசமா இருந்திருக்கேன்னு நினைச்சாதான் வருத்தமா இருக்கு….வேற எதுவுமில்லைமா..நீங்க இங்க கோவில் வேலைய பாருங்க..நான் ஒரு எட்டு வயலுக்கு போயிட்டு வந்திடறேன்..” என அவர் கூறிவிட்டு வருத்தத்துடன்

செல்ல சந்தியாவும் சென்றதும்

மித்ரா முருகனிடம் சென்று “அங்கிள் ஒரு நிமிஷம்..எப்போவுமே அவரு உங்கள ஒரு விஷயத்துல ரொம்ப நம்பினாரு..கண்டிப்பா அவரு அம்மாவை விடணும்னு நினைக்கல..அப்டி நினைச்சிருந்தா வேற பொண்ணை பாத்து போயிருப்பாருனு சொல்லுவாரு..அது எவ்ளோ உண்மைனு இங்க வந்தப்புறம் நல்லாவே தெரிஞ்சது..எனக்கு என்ன தோணுதுன்னா ஆதி மத்தவங்களையும் உங்களையும் ஒரே இடத்துல வெக்கல..உங்களுக்குனு தனிப்பட்டு ஒரு இடம் அவர் மனசுல இருந்திருக்கு..இல்லாம இருந்திருந்தா அவரு உங்களை கோர்ட்ல பாத்ததும் அவளோ வருத்தப்பட்டிருக்கமாட்டாரு..வெறுப்பினால தான் ஒருத்தர் நம்மகிட்ட பேசாம இருக்கணும்னு இல்லையே அங்கிள்..கோபத்துல, அவங்ககிட்ட நம்பி எதிர்பார்த்து ஒன்னு கிடைக்கலேனா உரிமைல கூட பேசாம இருப்பாங்க தானே..நீங்க யோசிங்க…” என கூறிவிட்டு புன்னகையுடன் அவள் சென்றுவிட்டாள் ..முருகன் யோசனையுடன் வயலுக்கு சென்றமர்ந்தார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

6 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சிவா கடுப்புடன் இருக்க மித்ரா எப்போதும் போல வந்து “ஹே சீனியர்ஸ்…செம ஜாலியா உக்காந்திருக்கிங்க போல?” மகேஷ் “எங்களை பாத்தா ஜாலியா இருக்கற மாதிரியா இருக்கு?” “பின்ன? பாத்தா தெரில? அதான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’

21 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஒரு முடிவுடன் காத்திருந்த சந்தியா, சிவா வந்ததும் “இங்க பாரு…” சிவா கையமர்த்தி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…இவளோ நேரம் நீ பேசுனது எல்லாம் நான் கேட்டிட்டு தான் இருந்தேன்..சோ அதே விஷயத்தை நீ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை