Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’

32 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

மித்ராவிடம் கேட்க எப்போதும் போல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல..உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே நாம போலாம் ஆதி..என முடிவை அவனிடமே விட்டுவிட முதலில் தயங்கினாலும் இறுதியாக மித்ரன் செல்ல ஒப்புக்கொண்டான்.. அங்கே அனைவரும் இவர்களை  வரவேற்று நன்கு உபசரித்தனர்..மித்ரா அனைவரும் நன்றாக பேச அவளை எல்லாருக்குமே அங்கே பிடித்துவிட்டது..

அந்த வீட்டின் மூத்த பெண்மணி முருகனின் தாயார் கூடத்திற்கு வந்தமர்ந்து மித்ரனுக்கு நன்றி கூறினார்..எங்க என் பிள்ளைங்க எல்லாம் ஒருத்தர் ஒருத்தர் சண்டைபோட்டு காலம்காலமா வெச்சிருந்த நிலத்தை பிரிச்சு ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்களோ? இவங்களும் தனித்தனியா பிரிஞ்சுபோய்டுவாங்களோனு ரொம்ப கவலையா இருந்தேன்யா..நல்லவேளை நீ நல்ல நேரத்துல என் குலசாமி மாதிரி வந்து அவங்களை ஒன்னு சேத்திட்ட… எல்லா பிரச்னையும் உன்னால தான் தீந்திச்சு..உனக்கு என்ன செஞ்சாலும் எத்தனை நன்றி சொன்னாலும் எனக்கு பத்தாது சாமி..” என அவர் நெகிழ்ச்சியில் கூற மித்ரனுக்கு தான் சங்கடமா இருந்தது..

இருப்பினும் “இருக்கட்டும்ங்க..எல்லாம் நல்லபடியா நடந்து சந்தோசமா இருந்தா அதுவே போதும்..” என பொதுப்படையாக சொன்னான்..

 

பின் மித்ராவிடம் பாட்டி அத்தனை கதைகளையும் பேசி அளவளாவிகொண்டிருக்க அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது..எங்க அம்மா இவளோ சகஜமா யாருகிட்டேயும் பேசவேமாட்டாங்க..முக்கியமா சின்ன வயசு புள்ளைகிட்ட..அதுவும் இத்தனை வருசமா எங்க சண்டைல அவங்க எங்ககிட்டேயே பேசுறதை குறைச்சுக்கிட்டாங்க..ஆனா இப்போ உன் சம்சாரத்துக்கிட்ட எப்படி பேசிட்டு இருக்காங்க..எங்க வீட்டு பொம்பளைங்க எல்லாரும் அதான் அதிசயமா பாத்துட்டு இருக்காங்க.. என மித்ரனிடம் அனைவரும் கூற அவன் புன்னகை மட்டுமே புரிந்தான்..

 

“கண்டிப்பா ஒரு நாள் உங்க குழந்தையும் கூட்டிட்டு வரணும்..” என மித்ராவிடம் சொல்ல அவள் யோசனையுடன் அவர்களின் முன்னே “ஏன் ஆதி, இவங்க நிலம், வீடு, சொத்து எல்லா பிரச்சனையும் முடிஞ்சதில்லை…கண்டிப்பா பின்னாடி எதுவும் பிரச்னை வராதே?” என கேட்க

மித்ரன் எதுக்கு இப்போ இப்டி கேக்குறா என புரியாமல் இல்லை என்பது போல தலையசைத்தான்..

மீண்டும் மற்றவர்களிடம் “வேற ஏதாவது பிரச்சனை இருந்தா இப்போவே சொல்லுங்க..வேற எந்த பிரச்னையும் இலேல?” என மற்றவர்களும் புரியாமல் பார்க்க இல்லை என

 

மித்ரா “ஏன் கேக்கறேன்னா நாங்க எங்க குழந்தையை கூட்டிட்டு வர நேரம் பார்த்து ஏதாவது இங்க பிரச்சனை, வீட்ல யாருக்காவது முடிலனு தெரியவந்தா அப்போ எங்க குழந்தை வீட்ல கால் வெச்ச நேரம் சரிஇல்ல அதனால தான் இப்டி நடக்கிதுன்னு சொல்லிட்டீங்கன்னா.?” என சாதரணமாக சொல்ல அனைவர்க்கும் அதிர்ச்சியாக

 

மித்ரன் “தியா..நீ என்ன பேசிட்டு இருக்க?” என சற்று அடக்கும் தொனியில் கூற

அவளோ “என்னாச்சு ஆதி..நான் ஒன்னும் நடக்காத விஷயத்தை கேக்கலியே..என் டவுட் தானே கேட்டேன்..” என கூலாக சொல்ல

அந்த வீட்டு பெண் (மித்ரனின் அத்தை) ஒருத்தி “என்னமா மித்ரா…இவ்வளவு நேரம் நீ எவ்ளோ நல்லா பேசிட்டு இருந்த? உன்கிட்ட பேசவே ஆசையா இருந்தது..ஆனா இப்டி நீ எல்லாரையும் சங்கடப்படுத்துற மாதிரி ஒரு கேப்பேனு நாங்க எதிர்பார்க்கவேயில்லை..” என சிறிது வருத்தம் தெரிவிக்கும் தொனியில் கூற

 

மித்ரா சிரிப்புடன் “அட என்ன ஆன்ட்டி நீங்க..நான் யாரோ ஒரு பொண்ணு..என்னை நீங்க இவளோ நல்லா கவனிக்கிறீங்க..ஒரு உரிமைல நீங்க குழந்தையை பத்தி கேட்டீங்க..நானும் அதே மாதிரி சாதாரணமா என் சந்தேகத்தை கேட்டேன்..உங்களுக்கு பிடிக்காட்டி நீ இத பத்தி எல்லாம் பேசாத வெளில போமானு சொன்னா போகப்போறேன்..மத்தபடி எனக்கும் உங்களுக்கும் ஒண்ணுமே இல்ல..அதுக்கே நீங்க சங்கடப்படுத்துறேன் அது இதுனு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க..

இதுவே சங்கடமா இருக்குன்னா இந்த வீட்ல வாழ வந்த பொண்ண இதே காரணம் காட்டி அவ வெளில போகும்போது யாருக்கும் சங்கடமா இல்லையா?” என்றதும்

மித்ரன் “தியா..”

“ஆதி ரிலாக்ஸ்…நீங்க ஏன் எமோஷன் ஆகுறீங்க..நான் அவங்ககிட்ட கேக்குறேன்..அவங்களே அதை இல்லேனு மறுக்கல..அப்போ அது உண்மை தானே..இந்த வீட்டு மருமகளையே அப்டி கஷ்டப்படுத்தி அனுப்பிச்சவங்க என் குழந்தையை பாத்து அப்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்..?”

 

முருகன் அதிர்ச்சியாகினும் மௌனமாக அமர்ந்திருக்க அவரின் அண்ணன் “இங்க பாருமா நீ வெளில யாராவது இப்டி பேசுனதை கேள்விப்பட்டு இப்டி பேசுறியான்னு எங்களுக்கு தெரில..ஆனா கலைய நாங்க வீட்ட விட்டு எல்லாம் போக சொல்லல..”

 

மித்ரா “கரெக்ட் தான்..அப்டி நேரடியா சொல்லல..ஆனா அதைவிட கொடுமையா அவங்க பையன விட்ற சொல்லி கேட்டீங்க..அது மட்டும் சரினு சொல்ல வரிங்களா அங்கிள்?” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார்..

 

பாட்டியிடம் “ஏன் பாட்டி இத்தனை வருஷ கழிச்சும் கூட உங்க பசங்க சண்டை போடுறதையோ தனியா பிரிஞ்சு போறதையோ உங்களால ஏத்துக்க முடிலேனு சொல்றிங்க..பிறந்த கொஞ்ச நாள்லையே குழந்தையை விட்ற சொல்லி உங்க மருமகளை மட்டும் எந்த அடிப்படையில கேட்டீங்க?

கல்யாணம் ஆகி குடும்பத்தை பாக்குற உங்க பசங்க ஒத்துமை இல்லாம வெளில ஏமாந்துட்டு எவன்கிட்டயோ தோட்டத்தை இழந்துட்டு வந்தது உங்களுக்கு தப்பா தெரில..அதை குறை சொல்ல கூட உங்களுக்கு மனசு வரல..ஆனா தவழ கூட தெரியாத அந்த குழந்தைனால தான் எல்லா பிரச்னையும்னு நீங்க குறை சொல்லுவீங்க? அத அந்த அம்மா மட்டும் ஏத்துக்கணுமா? என்ன நியாயம் இது? எவளோ பெத்த புள்ளை தானே குறை சொன்னா என்னாகபோகுதுனு நினைச்சீங்களா?” என அவரோ மௌனமாக கண்ணீர் வடிக்க

 

“இங்க பாரு மா..நீ ஏன் இதெல்லாம் கேட்டிட்டு இருக்க? உதவி பண்ணீங்கன்னா நீங்க என்ன பேசுனாலும் கேட்கணும்னு ஒன்னும் எங்களுக்கு இல்லை..அதை தெரிஞ்சுக்கோ முதல..” என மாமன் ஒருவர் கத்த

 

மித்ரா “அச்சச்சோ அங்கிள் நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க..இவளோ நேரம் நான் ஏதாவது இப்டி பேசுனேனா? என் குழந்தையை பத்தி நீங்க கேட்டீங்க..அதே மாதிரி உங்க வீட்ல இருந்த குழந்தையை பத்தி நான் கேட்டேன்..அவ்ளோதான்..” என அவரும் அமைதியானார்..

 

“ஆனாலும் அங்கிள், நீங்க கேட்டது சரி, இதை நான் கேக்கறதை விட சம்பந்தப்பட்டவர் தான் கேட்கணும்..மித்ரன் அவளை பார்க்க அவனை நோக்கி வந்தவள் பின்னால் இருந்த முருகனிடம் சென்று “என்ன அங்கிள், உங்க மனைவி, பையன பத்தி மொத்த குடும்பமே முடிவெடுக்கிது..எங்கிருந்தோ வந்த நான் கூட பேசுறேன்..ஆனா நீங்க யாரோ மாதிரி அமைதியா இருக்கீங்க?

வாழ்க்கையில எல்லா நேரத்துலையும் இப்டி அமைதியாவே இருந்து சாதிச்சிட்டிங்கல? உங்க பையன வேண்டாம்னு இவங்க சொல்லும் போது, உங்க மனைவி வீட்டை விட்டு வெளில போகும்போது, அவங்களை நீங்க கண்டுபுடிச்சும் அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம வந்த போது, இப்போ கூட இதே அமைதி…பெருமூச்சுடன் ‘ரொம்ப அழுத்தம் தான் அங்கிள்..சில நேரம் நம்ம அமைதி பல பிரச்னைகளை அதிகமாக்காம தடுக்கும்னு சொல்லுவாங்க, ஆனா உங்களோட அமைதி எவ்ளோ கஷ்டம், எவ்ளோ இழப்பு இப்போகூட உங்களுக்கு அதை தப்புன்னே தோணலையா? உங்க மனைவி உண்மையாவே பாவம் தான்..உங்களை நம்பினதுக்கு…” என கூற

 

பாட்டி அழுகையுடன் “வேண்டாம்மா, இதுக்கு மேல என் பையனை எதுவும் சொல்லாத…அவன் மேல எந்த தப்பும் இல்ல..இப்போ எல்லாம் இவளோ நிதானமா பேசுற நான் அப்போ எல்லாம் நான் சொன்னதை தான் கேட்கணும்னு இருப்பேன்..இல்லாட்டி பேசாம அவங்களை கண்டுக்காம ஏன் செத்துக்கூட போய்டுவேன்னு மிரட்டிடுவேன்…மத்த பசங்களை விட முருகன் எல்லார்கிட்டயும் ரொம்ப பாசமா தான்மா இருப்பான்..இப்போவும் கூட..நான் அப்டி ஏதாவது பண்ணிக்குவேனோனு, குடும்பத்துல பிரச்னை வந்திடுமோனு தான் அவன் என்னை எதித்து எதுவும் சொன்னதில்லை..நீ சொன்னது நிசந்தான்.. என் பசங்க சண்டை போடுறதை பாக்க முடியாம ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சரிபண்ணுவோம்னு நினச்சவளுக்கு அப்போ அந்த குழந்தை தான் தெரிஞ்சது..அவனால தான் இவளோ இழப்புனு புத்திகெட்டுப்போய் நான் சொன்னேன் தான்….என் மருமகள் அந்த பச்ச குழந்தைய கூட்டிட்டு போனபிறகு இவங்க எவ்ளோ சண்டைபோட்டு திரும்ப நிலம் வரவரைக்கும் அப்டித்தான் நானும் நினைச்சிருந்தேன்…ஆனா அதுக்கப்புறமும் இவங்க பிரச்னை பண்ணிக்கும்போது தான் யார் சொல்லியும் கேட்காம சண்டை ஆகி கோர்ட்க்கு போயி அப்புறம் தான் நான் தனியா ஆகிட்டேன்..அப்போ யோசிக்கும்போது தான் புரிஞ்சது எவ்ளோ பெரிய தப்பை பண்ணிருக்கேன்..அந்த பாவத்துக்கு மன்னிப்பே இல்ல..

இருந்தாலும் அதுக்கப்புறம் என் மருமகளையும் குழந்தையும் எப்படியாவது கண்டுபுடிச்சு மன்னிப்பு கேட்கணும்னு முருகன்கிட்ட கேட்டேன்..எப்படியும் அவன் விசாரிச்சிருப்பானு நம்பிக்கை இருந்தது…ஏன்னா மத்தவிஷயத்துல அவன் என் வார்த்தைக்காகனு பாத்தாலும் அவனை இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லும் போது அவன் முடியவே முடியாதுனு சொல்லிட்டான்..என் கலை இருந்த இடத்துல இன்னொருத்திய என்னால யோசிக்கக்கூட முடியாதுனு..

அப்போவே புரிஞ்சது அவனுக்கும் மனைவி புள்ளைங்கன்னு பாசம், ஏக்கம் இருக்கு..நமக்காக தான் பாத்திருக்கானு..ஆனா அப்போ அதை ஏத்துக்க எனக்கு மனசில்லை..நான் மனசார என் தப்பை உணர்ந்து புரிஞ்சுகிட்டு வரும்போது என் மருமக தீ விபத்துல இறந்துட்டானு விஷயம் தெரிஞ்சது..மகராசி இனி வரமாட்டேன்னு சொன்னவ வராமலே போய்ட்டா என கண்ணீர் வடித்தார்..அதுக்கப்புறம் தான் பையன பத்தி விசாரிச்சியானு கேட்டேன்..அப்போதான் முருகன் சொன்னான் அப்போ இருந்த கவலை கோபத்துல கலை இறந்துட்டான்னு விஷயம் தெரிஞ்சதுமே அவனையும் உன்னால தான்னு திட்டிட்டேனு சொன்னான்..அதுக்காக ரொம்ப வருத்தப்பட்டான்…அதனால தான் அதுக்கப்புறம் நான் அந்த ஆசிரமத்துக்கு போகவே இல்ல..எனக்கு அவனை பாக்க மனசேயில்லனு சொன்னான்..இப்போ விசாரிச்சு பாப்போம்னு கேட்க சொன்னேன்..அவனும் கடைசி முயற்சியா எப்படி எப்டியோ ஆசிரமத்தை 6 வருசத்துக்கு முன்னாடி கண்டுபுடிச்சு விசாரிச்சிருக்கான்..ஆனா பையன் யாருகிட்டேயும் சொல்லாம எங்கேயோ போய்ட்டான்..அவங்க எங்க எப்படி இருக்கான்னு தெரிலனு சொல்லிட்டாங்க..அப்போ இருந்து அவனுக்கு இருந்த எல்லா நம்பிக்கையும் போச்சு..இந்த நிலம், வீடு பிரச்னைக்கு அவன் வரதே கலை எப்போவுமே இதெல்லாம் காலம் காலமா இருக்கணும்னு தான் ஆசைப்படுவா..அந்த கடைசியா நடந்த பிரச்சனைப்போ கூட இது எதுவும் வேண்டாம் வாங்கனு அவ கூப்பிடல..அவ கவலைப்பட்டது நம்ம பையன வேண்டாம்னு சொல்ராங்க அதுக்கு ஏதும் பேசாம இருக்கீங்களேன்னு தான் சண்டைப்போட்ட…இதுக்காக தான் கலையும் குழந்தையும் வெளில போனாங்க..இப்போ இதுவும் போச்சுன்னா அவ அவளோ கஷ்டப்பட்டதுக்கு விட்டுட்டு போனதுக்கே காரணமில்லாம போய்டும்மானு சொல்லுவான்…

இது எதுவுமே வீட்ல இருக்றவங்களுக்கு தெரியாது..இல்லனு ஆனவிஷயத்தை ஏன் எல்லாருக்கும் சொல்லி சங்கடப்படுத்தனும். இப்போ ஏதோ ஒரு முடிவில எல்லாமே பழைய படி மாறும்னு நம்பிட்டு இருக்கிறவங்களுக்கு இதை சொன்னா அப்டி அவங்கள வீட்டை விட்டு அனுபிச்சு பாவம் பண்ணிட்டோம்னு…எல்லாருமே அதை நினச்சு நினச்சு வருத்தப்படுவாங்கனு சொல்ல வேணாம்னு சொல்லிட்டான்..என் புள்ளைய என்கூட இருக்கவேண்டாம்னு ஒரு வேகத்துல சொன்னேன்..ஆனா அவனை பாக்க கூட எனக்கு கொடுப்பினை இல்லாம போச்சுன்னு அவன் வருத்தப்படாத நாளே இல்லமா..” என அவர் கண்ணீர் சிந்த..முருகன் தலை கவிழ்ந்தபடியே அமர்ந்திருந்தார்..

 

மித்ராவும் இதற்கு மேல் அவர்களை வாட்டாமல் மௌனமானாள்.. சற்று பொறுத்து முருகனிடம் திரும்பியவள் “அங்கிள், உங்க பையன் பேர் நீங்க கேட்கலையா? ஆசிரமத்துல விசாரிக்கும்போது…?” என அவள் இப்போது கிண்டலும் கோபமும் இல்லாமல் தன்மையாக தான் கேட்டாள்..

முருகனும் இல்ல என்பது போல தலையசைத்து “ஆசிரமத்துல கூட கலை பேர் சொல்லித்தான் கேட்டேன்..அவங்க அதுக்கு மேல கேட்டா என்னை யாருனு கேக்கறாங்க..நான் என்னனு மா சொல்லுவேன்..அவனோட பேர் கூட தெரியாத அப்பன்னா? இல்ல அவன் பிறந்தபோது வேண்டாம்னு சொல்லி விரட்டி விட்ட அப்பன்னா? விரக்தியாக புன்னகைத்தவர் அவன் எங்கேயாவது நல்லா இருப்பான்னு ஒரு நம்பிக்கை மனசுல…இப்டி ஒரு அப்பன்னு வெளில காட்டி அவனுக்கு நான் அவமானமா இருக்க விரும்பலமா..அதான் அப்டியே விட்டுட்டேன்..” என கூறும்போது அவர் கண்களில் நீர் வடிய அவர் கூறிய அனைத்தையும் கேட்ட மித்ரன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியமால் எழுந்து வெளியே வந்தான்..

 

அவர்கள் அனைவரும் வருந்த மித்ரா “தப்பா எடுத்துக்காதீங்க..நான் உங்க எல்லாரையும் காயப்படுத்த இதெல்லாம் கேட்கல..பண்ண தப்பை உணர்ந்திங்களானு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்..என்னை மன்னிச்சுடுங்க என அவள் கும்பிட”

பாட்டி “ஐயோ இல்ல தாயி…இத்தனை வருஷம் உள்ள வெச்சு அழுத்தினது இப்போ ஏதோ வெளில வந்தது நல்லதுதான்னு தோணுது..என்ன என் பேரனை பார்த்து மன்னிப்பு கேட்டிருந்தா இன்னும் கொஞ்சம் நிறைவா இருந்திருக்கும்..உனக்கு தெரியுமா?” என வினவ

மித்ரா சில கணம் மௌனமாக இருந்தவள் அங்கிருந்து ஒரு குழந்தையை அழைத்து மித்ரனை உள்ளே அழைத்துவரச்சொன்னாள்..

அவன் வந்ததும் “ஆதி..இவங்க ஒரு விஷயம் கேக்கறாங்க…” என அவன் புரியாமல் பாட்டியை பார்க்க “இல்ல  கண்ணு, இவளோ விஷயம் தெரிஞ்சுவெச்சிருக்கியே அப்டினா உனக்கு என் பேரனை பத்தி தெரியுமான்னு கேட்டேன்.. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்..அவனை ஒரே ஒருவாட்டி பாத்து பேசிக்கறோம்..அப்புறம் தொல்லையே பண்ணமாட்டோம்..”

 

மித்ரன் மௌனமாக இருக்க மித்து அவனையே பார்த்தபடி அமைதிகாத்தாள்..

பாட்டி “ஒருவேளை அவனுக்கு எங்களை பிடிக்காட்டி நாங்க கட்டாயப்படுத்தல..அவனை பத்தி சொன்னிங்கன்னா எங்க இருக்கான், எப்படி இருக்கானு தெரிஞ்சுக்கறோம்..முடிஞ்சா தூரத்துல இருந்து ஒருதடவை பாத்துக்கறோம்…அதுபோதும்..சொல்றியா கண்ணு?” என மித்ராவின் கைகளை பற்றி பாட்டி கேட்க முருகன் உட்பட அனைவரின் கண்களில் தெரிந்த ஒரு எதிர்பார்ப்பு மித்ரனை பார்க்க அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் மௌனமாக தலை கவிழ்ந்தபடி நிற்க மித்ரா ஒரு முடிவுடன் “அங்கிள், ஆன்ட்டி நீங்க எல்லாரும் நினச்ச மாதிரி அவரு  நல்லா படிச்சு பெரிய ஆளா தான் இருக்காங்க..வெளிநாட்டுல போயி வேலை பாத்திட்டு வந்தாங்க..கம்பெனி ஆரம்பிச்சாங்க..நிறைய பேருக்கு, ஆசிரமத்துலனு நல்லது பண்ணி விருது எல்லாம் வாங்கிருக்காங்க…” என கூற அவர்கள் முகத்தில் தெரிந்த பூரிப்பு, பெருமை மித்ரா புன்னகையுடன் மித்ரனை பார்க்க அவனோ ஒரு சிறு பதட்டத்துடன் “தியா..” என்றவன்

“ஏன் ஆதி, நீ சொல்றியா?” என

அவன் இடவலமாக தலையசைக்க அவளே தொடர்ந்து “உங்க பேரனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே பொறந்திருச்சு பாட்டி..அப்டியே உங்க மருமக மாதிரி…” என சொல்ல அப்டியா என அவர் கண்களில் தெரிந்த மகிழ்ச்சி ஆச்சர்யம்…

“தியா..வேண்டாம்” என அவள் அதை பொருட்படுத்தாமல் இறுதியாக முருகனிடம் “அங்கிள் உங்க பேத்தி பேர் ‘மித்ரகலா’ என்றதும் முதலில் அனைவரும் பேர் சொல்லிப்பார்க்க நல்லா இருக்கு என மருமக பேர் “மித்ராந்தியா..” உங்க பையன்  பேரு ‘மித்ராதித்தன்’… என்றதும் அனைவரும் ஏதோ யோசிக்க ஆரம்பித்தவர்கள் இறுதியில் அங்கிருந்த மித்ரனை பார்க்க அவனோ மௌனமாக இருக்க மித்ரனின் மாமா அத்தை, சித்தி அனைவரும் அவள் கூறியதை புரிந்துகொண்டவர்கள் “அப்டினா இந்த மித்ரன் தான் இந்த வீட்டு பையனா?” என மித்ரா புன்னகையுடன் மேலும் கீழும் தலையசைக்க அனைவரும் மகிழ்ச்சியில்

“முன்னாடியே சொல்லிருக்கலாம்ல….நீதான் எங்க பையனா? கலை சொன்னமாதிரி செஞ்சு காமிச்சிட்டா…உன்னால தான் சொத்து போச்சுனு அன்னைக்கு பேசுனோம்..இப்போ உன்னால தான் இந்த குடும்பம், சொத்து எல்லாமே கிடைச்சிருக்கு..ஆனா அது முழுசா ஏத்துக்கமுடியாம இருந்தது..இப்போ உன்னை பாத்தபிறகு தான் மனசு நிறைஞ்சு இருக்கு…எங்களை மன்னிச்சுடுபா..” என ஒவ்வொருத்தரும் பேச மன்னிப்பு கேட்க பெருமைப்பட அவனும் அதை ஓரளவிற்கு பேசினான்..

இறுதியாக முருகன் அவனிடம் வந்து கையெடுத்து கும்பிட்டார்…நல்லா இரு என கையுயர்த்தி ஆசிர்வதித்து விட்டு கண்ணீரில் நீர் ததும்ப தலை கவிழ்ந்தபடி மௌனமாக சென்றுவிட்டார்..

அவரின் இந்த செயலில் மன்னிப்பு, நன்றி, பெருமை, வலி, நிறைவு என அனைத்தும் இருந்தது..மித்ரனுக்கும் சிறிது வருத்தமாக இருந்தாலும் அவனுக்கும் எதுவும் பேசதோன்றவில்லை…

 

பின் வெகுநேரம் அவர்களோடு இருந்து பேசிவிட்டு கண்டிப்பா உங்க கொள்ளுபேத்திய உங்ககிட்ட கூட்டிட்டு வரேன் என பாட்டியிடம் வாக்கு தந்துவிட்டு ஆசீர்வாதம் வாங்கிவிட்டு சென்றனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

12 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சாப்பிடும் இடத்தில் ஒரு குழந்தை ஐஸ் கிரீம் கேட்டு அடம்செய்ய அவர்கள் காய்ச்சல் வரும் என தர மறுத்தனர்…இதேபோல மித்துவுடன் இருக்கும் போது நடந்து நிகழ்வு அழையா விருந்தாளியாக அவனுள் வந்தது.

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’

28 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   வெங்கடாச்சலம் “எனக்கு ஒன்னு புரியல மித்து….இவ்வளவும் உனக்கு தெரியுது..அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் எதுக்கு சரினு சொன்ன?” தலை கவிழ்ந்தபடி “அது ஆதிக்கு ப்ரோமிஸ் பண்ணிருந்தேன் டாடி” என தங்கள்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’

4 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   குணா “நீங்க எல்லாரும் என்ன ஜென்மங்கடா.. அவ அந்த திட்டு திட்றா.. கொஞ்சமாவது வந்து ஹெல்ப் பண்ணலாம்ல..” சிவா “நாங்க சொன்னோம்டா. ஆனா மித்து தான் வேணாம்னு சொல்லிட்டா..” “அவ சொன்னா