31 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்
“சரி சொல்லு..பாத்ததால என்ன? அவங்க எதுக்கு கோர்ட்க்கு வந்தாங்க? ஏதாவது ப்ரோப்ளமா? விசாரிச்சியா?” என்று மித்து வினவ
“ம்ம்..அவங்க பேமிலில கொஞ்சம் ப்ரோப்லேம் போல..இவங்க நிலத்துல ஏதோ பேக்டரி கட்ட ஒரு கம்பெனிகாரன் கேக்கிறானாம்…மத்த எல்லாருக்கும் ஓகேவாம்…இவரும் இவங்க அண்ணாவும் கம்பெனிக்கு குடுக்க ஒத்து வரமாட்டேங்கறீங்களாம்..பாதிய பாதியா வாங்க கம்பெனி ரன் பண்றவன் ரெடியா இல்லை..நிலத்து மேல அவரோட 2 மாமா, தம்பி எல்லாரும் கேஸ் போட்டுட்டாங்களாம்..அதுல இருந்து கேஸ் முடியறவரைக்கும் விவசாயமும் பண்ணகூடாதுனு பிரச்சனை….”
மித்து ஏதோ யோசித்தவள் “அத்தை வீட்டை விட்டு உன்னை கூட்டிட்டு வரும்போதே அவங்க எல்லாமே வித்திட்டாங்க..அது இதுனு சொன்னாங்க..இன்னும் எப்படி?”
“நீயும் ஞாபகம் வெச்சிருக்கியா? என புன்னகைத்தவன் ‘ஆக்சுவலி, அப்போ வேற காட்டுகாரன்கூட ப்ரோப்லேம் ஆகி தான் அவங்களுக்கு தீர்ப்பு ஆகியிருக்கு..அப்புறம் மறுபடியும் காடு இதெல்லாம் வித்து ஹைகோர்ட்ல கேஸ் அப்ளை பண்ணிருந்திருக்காங்க..அப்போதான் நான் பொறந்திருக்கேன்..என்ன இருந்தாலும் அப்போ அவங்களுக்கு கையில எதுவும் இல்ல..அதை சொல்லி என்னை காரணம் காட்டி பிரச்னை பண்ணிருக்காங்க..அப்புறம் ஒரு 5 வருசத்துல கேஸ் முடிஞ்சு இவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்திடுச்சாம்..ஆனா விவசாயம் பண்ண எதுவும் பணம் கையில இல்ல..கடன் ஏதாவது வாங்கலாம்னு இவரும் இவங்க அண்ணனும் யோசிச்சு அது விஷயமா அலைஞ்சிட்டு இருக்கறதுக்குள்ள மீதி இருக்கிற தம்பி, மாமனுங்க எல்லாரும் அந்த கம்பெனிக்கு குடுக்க ஆப்ஷன் இருக்குனு சொன்னதும் ஓகே சொல்லி அட்வான்ஸ் வாங்கிட்டானுங்க…அப்போ இருந்து ஆரம்பிச்ச பிரச்னை இது…”
“ஓஒஹ்ஹ..நீ சொல்றதை பாத்தா இந்த பிரச்னையே ஒரு பல வருசமா நடந்திட்டு இருக்கும்போல…இந்நேரம் அந்த கம்பெனி வேற பார்ட்டி பாத்து போயிருப்பானே..”
“அதெல்லாம் அப்போவே..ஆனா அட்வான்ஸ் வாங்கி இடத்தை குடுக்காம டிலே பண்ணதுல கம்பெனில இருக்கிறவனுக்கு பிரச்னை ஆகி லாஸ்ட் மின்ட்ல அவசரமா அதிக அமௌன்ட் குடுத்து வேற இடம் முடிச்சிட்டானுங்க..அந்த கடுப்புல இவங்ககிட்ட குடுத்த பணம் வட்டியோட வேணும்…இவனுங்க எல்லாரும் பிளான் பண்ணி ஏமாத்த ட்ரை பண்ணிருக்கானுங்கனு தனியா ஒரு கேஸ் வேற இவங்க மேல போட்டிருக்கானுங்க..இவங்க பணத்தையே தந்தாலும் கண்டிப்பா கொஞ்ச நாள் ஜெயில்ல வெக்கணும்னு கம்பெனிகாரன் கடுப்புல இருக்கான்..கம்பெனிக்கு விக்கிறதுக்காக கேஸ் போடபோயி இப்போ இது முழுசா பேமிலி பிரச்னையாகிடிச்சு..
‘இவங்க அவசரப்பட்டு அட்வான்ஸ் வாங்குனது தான் இவளோ பிரச்னைனு ஒரு சைடு சொல்ல,’
‘இவங்க அன்னைக்கே விக்கிறதுக்கு கையெழுத்து போட்டு இருந்தா இவளோ பிரச்னை இருக்காது அதுனால தான் இப்போ இந்த அளவுக்கு பிரச்னை வந்து நிக்கிதுனு இன்னொரு சைடு சொல்ல’
குடும்பத்துல இருக்கிறவங்களே கோர்ட்ல வெளில அப்டி அடிச்சுகிட்டு சண்டை போட்டுகிறாங்க…என பார்த்ததையும், விசாரித்ததையும் அவளிடம் விரிவாக கூறினான்..
“ஓகே..அவங்க ஒத்துமையா இல்லாம அவசரப்பட்டு அடிச்சுகிட்டு இப்டி ப்ரோப்லேம்ல மாட்டுனதுக்கு யாரு குறை சொல்லமுடியும்? எல்லாம் விதி..” என
அவனும் மௌனமாக “ம்ம்..யாரையும் குறை சொல்லல…ஆனா” என இழுத்தவன் அப்டியே இருக்க
அவனையே சில நிமிடம் பார்த்த மித்து “என்னாச்சு ஆதி, ரொம்ப வருத்தப்படுற மாதிரி இருக்கு? என்ன சொல்ல வரியோ அதை முழுசா சொல்லு ” என
“வருத்தம்னு..எல்லாம் இல்லை தியா..” என அவன் இன்னும் தலை குனிந்த படியே சொல்ல
“அப்புறம் என்ன ஆதி..பிரீயா விடு…” என அவள் செல்ல எத்தனிக்க
அவன் அவளின் கை பற்றி நிறுத்த அவளுக்கு புரிந்தது அவன் வாய் மட்டுமே வருந்தவில்லை என கூறியது..அவன் மனம் வேறு ஏதோ செய்ய தூண்டுகிறது என்று..
புன்னகையுடன் திரும்பியவள் “இப்போ நான் என்ன பண்ணனும் தியா…இவங்களால தான் நானும் அம்மாவும் வெளில வந்து, அம்மாவை இழந்து இருக்கவேண்டியதா இருந்தது..அம்மாவுக்கு அவங்க மேல எவ்ளோ கோபம்னு தெரியும்..ஆனா ஒருவேளை நான் இப்போ அந்த பேமிலில இருந்திருந்தா கண்டிப்பா எக்கேடோ கெட்டு போகட்டும்னு விட்டிருக்கமாட்டேன்..அம்மாவுக்கு பிடிக்காதவர்களுக்கு ஹெல்ப் பண்ணணுமானு இருக்கு? அதே சமயம் கண் முன்னாடி கஷ்டப்படுறாங்களேனு இருக்கு.. எனக்கு என்ன முடிவு பண்றதுனு தெரில தியா..நீ சொல்லு…” என
“உன் மனசு சொல்றதை கேளு ஆதி..நீ சொன்ன இரண்டு விஷயமுமே உண்மை..அது உனக்கு நல்லா தெரியும்போது நானோ, மத்தவங்களோ சொல்ல ஒண்ணுமே இல்ல..உக்காந்து கொஞ்ச நேரம் யோசி..உனக்கு ஹெல்ப் பண்ணனும்ன்னு தோணுச்சுன்னா தாராளமா பண்ணு..தப்பு பண்ணவங்களுக்கு பிரச்னை வந்தா அப்போ ஹெல்ப் பண்ணக்கூடாது, நல்லது பண்ணகூடாதுனு யாருமே சொல்லல..அத்தையும் சொல்லமாட்டாங்க..இந்த மாதிரி உதவிகளை அட்வான்டேஜ எடுத்துக்கிட்டு அவங்க திரும்பி தப்பு பண்ணாம இருந்தா சரி..மத்தபடி உன் மனசுக்கு எது சரினு படுதோ அதை பண்ணு..அதுக்காக நான் என்ன நினைப்பேன், மத்தவங்க என்ன சொல்லுவாங்கனு ரொம்பா டீப்பா யோசிச்சா ரொம்ப உன்னை கஷ்டப்படுத்திக்காத..நல்லது தானே பண்ணணுன்னு நினைக்ற? பண்ணு..வரத அப்புறம் பாத்துக்கலாம்..” என அவள் முடிவை அவனிடமே விட்டுவிட்டு சாதாரணமாக சென்றுவிட யோசித்தவன் சிறிது நேரம் கழித்து கீழே வந்தவன் அவளை பார்த்து புன்னகை புரிந்துவிட்டு குழந்தையுடன் விளையாட, வீட்டில் அனைவரிடமும் பேச என சகஜமாக இருந்தான்…அவளுக்கும் புரிந்தது அவன் தெளிவாக முடிவு எடுத்துவிட்டான் என்று.. அவளும் புன்னைகையுடன் நகர்ந்தாள்..
அடுத்த இரு வாரம் கழித்து இன்று விருந்து என அழைத்திருந்ததால் மித்ரன், மித்து இருவரும் முருகன் குடும்பம் வசிக்கும் கிராம வீட்டிற்கு சென்றனர்…செல்லும் வழியில் அவனும் நடந்தவற்றை அசைபோட்ட படியே சென்றான்…அன்று மித்துவிடம் பேசிய மறுநாள் முருகன் கேஸ் சம்பந்தப்பட்ட வக்கீலை பார்த்து பேசியவன் எதிர்த்தரப்பு வக்கீலுடனும் பேசினான்..அவர்களும் எங்களுக்கு இவங்க சமாதானமா போறதுல எந்த பிரச்னையும் இல்லை..ஆனா கம்பெனி பிரச்னை?
மித்ரன் அந்த கம்பெனியிடம் தானே பேசுவதாக கூறி அங்கேயும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு கேஸை வாபஸ் வாங்குவதற்காக பேசி ஒப்புக்கொள்ள வைத்தான்..அவர்களும் ஒரு வழியாக ஏற்றுக்கொண்டார்கள்…
மித்ரனிடம் அந்த கம்பெனி ஓனர் அவர் 50 வயதை எட்டிய மனிதர் இறுதியாக கேட்டது “இந்த சின்ன வயசுல இவ்ளோ சாதிச்சிருக்கீங்க..சமீபத்துல உங்களை பத்தி நிறைய கேள்விப்பட்டேன்..ரொம்ப சந்தோசம்…. இளைஞர்கள் எப்போவுமே முன்னாடி வரணும், நிறையா சாதிக்கணும்னு நான் எப்போவுமே சொல்லுவேன்..அந்த வகைல எனக்கு எப்போவுமே உங்க மேல தனிப்பட்ட மரியாதை இருக்கு தம்பி..நீங்களே இவ்ளோ தூரம் இன்வோல்வ் ஆகி சொல்றதால கேஸ் வாபஸ் வாங்கிடலாம்..அதுனால எனக்கு எந்த லாபமோ நஷ்டமோ இல்லை..ஆனா நீங்க இதுல இவளோ அவங்களுக்கு உதவி பண்ண காரணம் என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றார்..
அவரின் தன்மையான பேச்சு, மரியாதையாக நடத்திய விதம், அவரிடம் பதில் சொல்லாமல் போகவும் அவனுக்கு மனமில்லை..”அவங்க எல்லாரும் என் அம்மாவுக்கு ஒருவகைல வேண்டப்பட்டவங்க..அதான்..” என பொதுவாக கூறி முடித்தான்..
வக்கீல்களிடம் பேசி முருகன் மற்றும் அவரின் அண்ணா, தம்பி, மாமா அனைவரையும் வரவைத்து சமாதானம் பேசினர்..கம்பெனி ஓனர்கிட்ட பேசுனா அவங்க ஏதாவது சேர்ந்து அதுல விவசாயம் ஏதாவது பண்ணி பொழைக்கிறாங்கன்னாலாவது போனா போகுதுனு கேஸ் வாபஸ் வாங்கலாம்..அதுவும் இல்ல..குடும்பத்துல ஒத்துமை இல்லாம அடுச்சுக்கிட்டு சொத்தை பிரிக்கணும்னு நிக்கிறானுங்க…வித்தா அதை எப்படியும் வேற யாருக்கோ தான் குடுக்க போறானுங்க..அதுக்கு எதுக்கு நான் விட்டுகுடுக்கணும்னு கேக்கறாரு.. ஒருவேளை நீங்க உங்களுக்குள்ள சமாதானம் போய்கிறோம், சொத்தை பிரிக்காம ஒண்ணா இருந்துக்கறோம்னு சொன்னா அவரு கேஸ் வாபஸ் வாங்க வாய்ப்பிருக்கு..ஜெயிலுக்கு போகாம தப்பிக்கலாம்..விவசாயம் பண்றதுக்கு பேங்க்ல சொல்லி கூட கடன் வாங்க ஏற்பாடு பண்ணிக்கலாம்…என்ன சொல்றிங்க?” என வினவ
இரு குழுவினரும் யோசித்த பின் “எல்லாமே சரி தாங்க..ஆனா அந்த கம்பெனிகாரனுக்கு பணம் தரணும்ல..அதுக்கு எங்ககிட்ட இப்போ ஏது பணம்? அந்த நிலத்தை வித்தாதானே ஏதாவது கிடைக்கும்..அந்த பணத்தை அவன் கேட்காம விட்ருவானா?” என
அவரோ மித்ரனை காட்டி அந்த பணத்தை இவரு குடுத்திடுவாரு…என அவனுக்கே ஒரு நிமிடம் ஏன் இந்த வக்கீல் இப்டி கூறினார், தான் இதில் சம்பந்தப்பட்டதே தெரியாமல் அனைத்தையும் முடிக்கவேண்டுமென பார்த்தால் இப்டி அனைவரின் முன்பும் தான் உதவி செய்வதாக கூறிவிட்டாரே..என்ன சொல்வது என யோசிக்க
சுற்றி இருந்தவர்களும் “நீ யாரு தம்பி, நீங்க எதுக்காக எங்களுக்கு உதவி பண்ணனும்? எப்படி நம்புறது? இதுல இருந்து உங்களுக்கு என்ன லாபம்?” என வரிசையாக கேள்வி கேட்க
மித்ரன் அந்த 60 வயதை தாண்டிய அந்த பெரியமனிதரை ஒரு கணம் திரும்பி முறைக்க அவரோ வேறு புறம் திரும்பிக்கொள்ள இவர்களின் நேரம் எதிர் தரப்பு வக்கீல் அந்த பெரியவரின் மகன் தான்..அப்பா, மகன் இருவருமே எதிரெதிராக கேஸ் எடுத்து நடத்த மித்ரன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “அது அவரது மகனை கைகாட்டி நானும் இவனும் நல்ல பிரண்ட்ஸ்..வக்கீல் அங்கிள்க்கும் எங்க பிரண்ட்ஷிப் பத்தி ரொம்ப நல்லா தெரியும்.. சின்ன வயசுல இருந்து நானும் அவனும் நிறையா பிரச்னைகளை பேசிப்போம்..அதுக்கு வேற ஏதாவது வழி இருக்குமா பதில் கிடைக்குமான்னு யோசிப்போம்..” என அந்த பெரிய வக்கீல் அவனை ஏறிட்டு பார்க்க அவரது மகனோ புன்னகையுடன் அவன் கூறு பொய்யை கேட்டுக்கொண்டிருந்தான்..
“அப்டித்தான் இந்த கேஸ் விஷயமும் என்கிட்ட அவன் போனவாரம் சொன்னான்..இந்த மாதிரி ஒரு சொத்து பிரச்னைல தான் குடும்பம் பிரிஞ்சதுனு எங்க அம்மா சொல்லுவாங்க…அதோட அவங்களுக்கு வயலு, தோப்பு இப்டி எல்லாம் இருக்கிறது ரொம்ப பிடிக்கும்..ஆனா அதை மொத்தமா இழந்து கஷ்டப்பட்டு ஒரு கட்டத்துல அவங்களும் போயி சேந்துட்டாங்க…அவங்களுக்கு இப்போ நான் எதையும் திருப்பி தரமுடியாது..ஆனா உங்க பிரச்சனைய கேட்கும்போது அட்லீஸ்ட் உங்களுக்காகவாது உதவி பண்ணலாம்னு தோணுச்சு..அதோட தன் தொழில், வேலை பற்றி கூறியவன் நான் ஆசிரமத்துக்கு எல்லாம் உதவி பண்ணுவேன்..சிலர் அவங்களுக்கு படிக்க, இல்ல வேலைனு பிரச்னை சொல்லும்போதும் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிருக்கேன்..இதுவும் நான் அந்த மாதிரி தான் நினச்சேன்..வெறும் சொத்து பிரச்னைனு பாத்து ஏன் குடும்பம் பிரியணும்? நமக்கு இவளோ காலம் சோறு போட்டு வாழவெச்ச நிலத்தை ஏன் யாருக்கோ தூக்கி கொடுக்கணும்னு தோணுச்சு..உங்களுக்கு சரினா யோசிச்சு சொல்லுங்க..நான் முடிஞ்சவரைக்கும் உதவி பண்றேன்…நீங்க விவசாயம் பண்ணுங்க..கம்பெனிகு குடுக்கிற காசை கடனா வெச்சுட்டு உங்களால முடியும் போது திருப்பி குடுங்க..” என அவர்களிடமே முடிவை விட்டுவிட அவர்களும் ஒருவழியாக பேசி “நீங்க சொல்றதும் சரிதான் தம்பி..நாங்களும் மனசார இதை விக்க ஒத்துக்கல..ஏதோ வயித்து பொழப்புக்கு தான்..ஆனா அதுக்கு வழி இருக்குனு சொல்லும்போது நாங்க கண்டிப்பா இதை ஏத்துக்கறோம்..” என ஒரு முடிவுக்கு வந்தனர்..
மித்ரன் அனைவரும் சென்ற பின் அந்த பெரிய வக்கீலிடம் “என்ன சார்..நான் தான் சொன்னேன்ல..நான் இதுல இன்வோல்வ் ஆகுறதையே சொல்லவேண்டாம்னு அப்புறம் ஏன் சொன்னிங்க?”
“நீ சொல்லுவ..ஆனா அவங்க எல்லாம் கிராமத்து ஆளுங்கபா, சட்டுனு அடுத்தவனுக்கு உதவி பண்ண யோசிக்கவும் மாட்டாங்க, சம்பந்தமில்லாம தனக்கு ஒருத்தன் உதவி பண்றான்னா அதை நம்பவும் மாட்டாங்க..அப்புறம் பின்னாடி வெட்டு குத்து தான்..நீ வேற அவங்க வீட்டு பையங்கிற..விஷயம் எப்படியாவது தெரிஞ்சு இன்னும் அவனுங்க திருந்தாம, ‘வேண்டாம்னு சொன்னவன்கிட்ட எங்களை கைநீட்டி பணம் வாங்க வெச்சுட்டியேன்னு’ சொல்லி என்னை ஏதாவது பண்ணிட்டானுங்கனா..எனக்கு எதுக்கு வம்பு….அதான் சொல்லிட்டேன்..நீயும் லேசுப்பட்டவன் இல்லையே..அதான் என் பையனோட பிரண்ட், ஊரு, நிலம், அம்மா, பிரச்னைனு அளந்து விட்டு அவனுங்கள நம்ப வெச்சுட்டியே..அப்புறம் என்ன? அதான் எல்லா பிரச்னையும் முடிஞ்சதே..பிரீயா விட்டுட்டு போயி ஆகுற வேலைய பாரு ” என அனுப்பி வைத்தார்..
மித்ரன் சென்றபின் மகனோ “அப்பா, நீங்க சொன்னத உண்மையா?”
“ஹா ஹாஹா..ஆமானு சொன்னாலும் நீ நம்பவா போற? சரி உண்மைய சொல்றேன்..மித்ரன் நடந்த எல்லாமே சொல்லும் போது எனக்கு அவங்க அம்மா சொன்னதை நிறைவேத்த இந்த சான்ஸ யூஸ் பண்ணிக்கனும்னு தோணுச்சு..அதனால தான் அந்த பயலுங்ககிட்ட மித்ரன் தான் உதவி பண்ணானு சொன்னேன்..நீயே பாத்திருப்பியே மித்ரன அவனுங்க எல்லாரும் எவ்ளோ மதிக்கிறாங்க..இதுல இவனையும், இவன் சம்சாரத்தையும் விருந்துக்கு வேற கூப்பிடணும்னு சொல்லிட்டு போறானுங்க..எந்த இடத்துல அவன் இருக்கக்கூடாதுனு சொன்னாங்களோ அதே இடத்துக்கு அவனுங்களே கூப்பிட்றானுங்க…இதை பாத்தா கண்டிப்பா அவங்க அம்மா ஆத்மா சாந்தி அடைஞ்சிடும்டா..அந்த காட்டானுங்களுக்கும் பின்னாடி விஷயம் தெரிஞ்சாலும் ஒரு சின்ன உறுத்தல் கூடவா இல்லாம போய்டும்..அதுக்கு தான்…
மித்ரனை வேண்டாம்னு சொன்னவனுங்களே அவனை தாங்கணும்னு அவனை பத்தி சொன்னேன்..நல்லபடியா நடந்தா சரி.. ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு கலகம் ஆரம்பிச்சு வெச்சாச்சு…” என அவர் சிரிப்புடன் செல்ல அவரது மகனுக்கும் தன் தந்தையை எண்ணி சிரிப்பு வந்தாலும் அடுத்தவரின் உணர்ச்சிக்கு அவர் மதிப்பு குடுத்தது சரியென்றேபட்டது..
அடுத்து ஓரிரு தினங்களில் அனைத்தும் பேசி முடித்து பைசல் பண்ணிவிட பத்திரத்தை வாங்கிக்கொண்டு மகிழ்வுடன் அவர்களும் நன்றி கூறி புறப்பட்டனர்..