Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’

29 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

மறுநாள் மித்துவிற்கு வளைகாப்பு நிகழ்ந்தது.. அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் அன்றும் அவள் சுற்றிக்கொண்டே, ஏதாவது வேலை செய்ய, பேசியபடியே இரவு தூங்க வெகு நேரம் ஆகிவிட்டது..மித்ரனுக்கு சொல்லி சொல்லியே களைத்துபோனதுதான் மிச்சம்..அடுத்த நாள் அவள் வெகு நேரமாகியும் உறங்க மித்ரன் சத்தம் எழுப்பாமல் எழுந்து ஆபிஸ் கிளம்பினான்..இருந்தும் கண் விழித்தவள் “ஆதி, கிளம்பிட்டியா? இரு..நான் எந்திரிச்சி…” என முடிக்கும் முன் “நான் கிளம்பிக்கறேன்..நீ ஒழுங்கா எழுந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு..அதுவே போதும்” என்றான்..

முகம் தொங்கியபடி அமர்ந்திருந்தவளை நெருங்கி என்னாச்சு என வினவ

“எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப  வலிக்கிது ஆதி..ரொம்ப டயர்டா இருக்கு..”

அவன் முறைத்தபடியே “அதுக்கு..இப்டியே தூங்கிட்டு நேரா மதியம் சாப்படலாம்னு பாக்கறியா? அவள் மௌனமாக இருக்க அவன் தொடர்ந்து ‘ரொம்ப சேட்டை பண்ற தியா நீ..சொன்னா கேக்றதே இல்லை..ரெஸ்ட் எடுன்னு எவ்ளோ தடவை சொல்றேன்..குழந்தையா நீ? இப்டியே நீ பண்ணிட்டு…”

“ஆதி ப்ளீஸ்..காலைல எழுந்ததும் திட்டாத..அப்புறம் இன்னைக்கு முழுக்க திட்டா வாங்குவேன்..நான் எதுவும் சொல்லல..எனக்கு வலிக்கல..நீ பாத்து போய்ட்டு வா..நான் சாப்பிட்டுக்கறேன்..” என அவள் பாவமாக தலை கவிழ்ந்தபடியே சொல்ல பின் எழுந்து பிரெஸ் பண்ண உள்ளே சென்றாள்… அவனுக்கு தான் ஐயோவென்றானது…

 

சமையலறை செல்ல சந்தியா, கவிதா இருவரும் “டிபன் ரெடி பா..இரு எடுத்து வெக்கிறேன்..”

“இல்ல அத்தை..நான் தியாவுக்கு குடுத்திட்டு அப்டியே சாப்பிட்டிருக்கறேன்..பிலேட்ல மட்டும் தாங்க..”

சந்தியா “என்னாச்சு மேடம்க்கு…உன்னை வேலை வாங்க ஆரம்பிச்சிட்டாளா?”

“அதெல்லாம் இல்லை அண்ணி, காலைல எழுந்ததும் நானும் திட்டிட்டேன்..அமைதியா போய்ட்டா..அவளையே விட்டா திட்டுனதை நினைச்சுட்டே சரியா சாப்பிட மாட்டா..அதான் நானே குடுத்திடறேன்..”

கவிதா “இருந்தாலும் நீ அவளை இவளோ தாங்குறது சரி இல்லை..நீ கொஞ்சம் இடம் குடுத்த ரொம்ப செல்லம் கொஞ்சுவா..”

மித்ரன் புன்னகையுடன் “இருக்கட்டும் அத்தை…வேற யாருகிட்ட அவ எதிர்பார்க்கப்போறா.. அதோட அவளும் பாவம் தானே..” என்றதும் அவர்களும் புன்னகையுடன் சாப்பிட அனைத்தும் கொடுத்து அனுப்பினர்.

 

அறைக்கு சென்றதும் அவள் முடியாமல் மீண்டும் படுக்கையில் அமர்ந்திருக்க அவளை பார்க்கவும்  அவனுக்கு பாவமாக இருந்தது..ஊட்ட சென்றதும் அவள் மௌனமாகவே இருக்க கையில் தலையணை வைத்து அதன் நுனியை பிடித்து சுருட்டிக்கொண்டிருக்க “தியா, இப்போ வாய திறக்க போறியா இல்லையா?” என்றதும் அவள் வாயை திறக்க ஊட்டியவன் அவள் மௌனம் கண்டு “உன்னை திட்றதுக்காகவா அப்டி சொல்லுவாங்க..நீயே சொல்லு…உனக்கு ஹெல்த் வீக்கா இருக்குனு ஏற்கனவே டாக்டர்ஸ் சொல்லிருக்காங்க..நேராநேரத்துக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னா நீ கேக்கிறியா? ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி உக்காந்தே இருந்து முதுகு வலிக்கிதுன்னு சொல்ற..வளைகாப்பு ஏழாவது மாசமே வெக்கலாம்னு சொன்னா நீ அதுவும் கேட்கல..9த் மந்த்னு சொல்லிட்ட..திங்ஸ் வாங்க எல்லாத்துக்கும் நீயும் கூட வருவேன்னு அடம்பண்ற..எவ்ளோ அலைச்சல்..சொன்னா ஏதாவது கேக்கிறியா?” என அவன் கூற

 

“நான் என்ன எல்லாமே வேணும்னா பண்றேன்..நம்ம பாப்பாக்கு நீ நான் இரண்டுபேரும் எல்லாமே சேந்து பண்ணனும்னு ஆசையா இருந்தது…7த் மந்த் வெச்சா உனக்கு ஆபிஸ், ப்ராஜெக்ட்னு எவ்ளோ பிஸியா இருந்த..அதுக்கு இடையிலையே என்னை நீ 2 டைம்ஸ் பாக்க வருவ, அப்றம் இங்கேயும் என்னை தூங்க வெச்சுட்டு ஒர்க் பண்ற..எனக்கு பாவமா இருக்கும்..அதோட வளைகாப்பு குழந்தைக்கு திங்ஸ் வாங்குறதுனு நான் இன்னும் அடிஷனலா சொல்லி உனக்கு அது எவ்ளோ ஸ்ட்ரைன் ஆகும்..அதனால தான் நான் இரண்டு மாசம் கழிச்சு சொன்னேன்..எப்படியும் 9த், 10த் மந்த் டெலிவரி எதிர்பார்க்கலாம்னு இருக்கிறதால நீ அதுக்குள்ள ஒர்க் எல்லாம் அலைன் பண்ணிக்குவ….இப்போ கடைசி இரண்டுவாரமும் நீதான் எல்லாத்துக்குமே என் கூட வர..நம்ம பாப்பாவுக்கு நம்மளே எல்லாமே வாங்குறோம்ல….பின்னாடி எப்போவாது நம்ம பாப்பு வளந்து இதெல்லாம் கேக்கும்போது அம்மா அப்பா இரண்டுபேருமே தான் எல்லாமே பண்ணோம்னு சொல்லும்போது எவ்ளோ ஹாப்பியா இருக்கும்….நீயும் பர்ச்சஸ் எல்லாமே பண்ணும்போது எவ்ளோ ஹாப்பியா இருந்த?  இதெல்லாம் அக்கா, அம்மா, அப்பா, சிவானு நாங்க முன்னாடியே பண்ணிருந்தா நீ எல்லாமே மிஸ் பண்ணிருப்பேல? அதுக்கு தான் பாத்தேன்..மத்தபடி நான் வீம்புக்கு பிடிவாதம் எல்லாம் பிடிக்கல..” என்றதும்

 

மித்ரனுக்கு அவள் தனக்காக தான் யோசித்திருக்கிறாள் என தோன்ற சிறு புன்னகையுடன் இருந்தாலும் தனக்காக பார்த்து அவளை வருத்திகொள்கிறாளே என எண்ணி வருந்தினான்..அவளுக்கு முழுவதும் ஊட்டிவிட்டு நெற்றியில் முத்தமிட்டு விட்டு நகர்ந்தான்..

 

கவிதா, சந்தியா இருவரும் “நல்லா இப்டியே உக்காந்துக்கோ..எல்லாமே மித்ரனே பாக்குறதால உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடிச்சு…” என கிண்டல் செய்துகொண்டிருக்க அவள் பின்னே வந்த மித்ரனையே பார்க்க சந்தியா “இவ எங்க மா நம்மள கவனிக்கிறா? அங்க பாரு..” என மித்ரன் வந்ததும் என்னவென்று வினவ சந்தியா நடந்தவற்றை கூற அவன் புன்னகையுடன் மித்துவை பார்த்து என்னவென்று கேட்க

“ஆதி..அது..நீ இன்னைக்கு என் கூட இருக்கியா ப்ளீஸ்..” என தயங்கி தயங்கி கேட்க

“ஏன்டா மா..என்னாச்சு?” என அவளருகில் அமர்ந்து கேட்க

அவளோ “அது ஒண்ணுமில்ல..சும்மா தான்..தோணுச்சு..கேட்டுட்டேன்..” என கூற

 

கவிதா “இவளுக்கு வேற வேலையே இல்லை..அவரு கிளம்பும்போது நீ தொல்லை பண்ணாம இருக்கமாட்டியா?”

சந்தியா “ஏண்டி எப்படியும் போயிட்டு இன்னும் ஒரு 3 4 மணி நேரத்துல திரும்ப வந்திடுவாரு..அதுக்கு எதுக்கு நீ இவளோ சீன் போடுற?” என கிண்டல் செய்ய

சட்டென மித்து முகம் சுருக்கி அவர்களை பார்க்க கவிதா அதை பொருட்படுத்தாமல் “அவளை விடுப்பா…அவளே சும்மா சொல்றேன்னு தானே சொல்லிட்டு இருக்கா.. நீ போயிட்டு வா..எப்படியும் குழந்தை பிறந்ததும் உன்னை இந்தப்பக்கம், அந்த பக்கம் நகர விடமாட்டா.. இப்போ ஏதாவது ஆபிஸ் போனாதான்..” என அவளும் ஏனோ பேருக்கு “டாடா பை” என  கையசைத்தாள்..அதில் ஜீவனே இல்லை..அவனும் தயங்க வீட்டில்  அனைவரும் நாங்க பாத்துக்கறோம்..என கூற அவனும் சரியென சென்றான்..

 

அவளிடம் கனடாவில் கல்யாணம் பற்றி கேட்ட அன்று அவள் கேட்டது “இன்னும் கொஞ்சநேரம் என்கூட இருக்கியா?” என்பது..அதன்பின் இன்றுவரை அவள் கேட்டதேயில்லை..கருவுற்ற நாள் முதல் அப்டி யோசிக்ககூட அவன் இடமளிக்கவே இல்லை..அவள் நினைக்கும் முன் அவளிடம் இருந்தான்..இல்லையெனில் போன் செய்து பேசிவிடுவான்..ஆனால் இன்று அவள் கேட்டதே அவனுக்கு மனதில் ஓடிக்கொண்டிருக்க வண்டியை நிறுத்தியவன்…ஆபிஸ்க்கு கால் செய்து செய்யவேண்டுவனவற்றை கூறிவிட்டு வண்டியை திருப்பியவன் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்தான்..

 

சிவா உட்பட அனைவரும் “என்னடா போய்ட்டு உடனே வந்துட்ட?”

“அது அவ கேட்டால அதான்..” என அவன் திணற அவர்களும் சிரித்துவிட்டனர்..

“நல்ல புருஷன் பொண்டாட்டி..”

பின் அப்டியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மித்ரன் “தியா எங்க அண்ணி?”

“இவளோ நேரம் எங்ககிட்ட உன்னை கிளம்ப சொன்னதுக்கு மூஞ்சை தூக்கிவெச்சுட்டு இப்போதான் தண்ணி குடிக்கறேன்னு கிச்சன்குள்ள போனா….நான் கொண்டுவந்து தரேன்னு சொல்றேன்..ஒன்னும் தேவையில்லைனு போய்ட்டா…இப்போ உன்னை பாத்ததும் நல்லா குதிக்க போறா” என அவனும் புன்னகைத்தான்..

 

திடீரென கிச்சனில் இருந்து சத்தம் வர அனைவரும் பதற கவிதா “என்னாச்சு மா? வரவா?”

“ஒண்ணுமில்லமா… அதெல்லாம் வேண்டாம்..பூனை திடிர்னு வந்ததும் செம்பு கீழ போட்டுட்டேன்..நானே வரேன் இருங்க..” என்றாள் மித்து..

அனைவரும் ஆசுவாச மூச்சுவிட மித்ரன் மட்டும் “நான் பாத்துட்டு வரேன்” என அடியெடுத்து வைக்க “அதான் அவளே வரேன்னு சொல்லிட்டாளே..” என அவன் மனம் கேட்காமல் ‘இல்ல நான் போறேன்’ என எட்டு வைக்கும்முன் சிந்திய தண்ணீரில் கவனிக்காமல் கால் வைக்க “ஆதி” என கத்தியபடியே மித்து விழுந்து அடிபட்டு மயங்கிவிட்டாள்.. இவன் வேகமாக உள்ளே சென்று பார்க்க அவனுக்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டது..செயலற்று நின்றவன் அடுத்த கணமே அவளை கையில் ஏந்தினான்…மருத்துவமனையில் சேர்த்தி வெளியில் காத்திருக்க மித்ரனின் கைகள் நடுங்கின..

 

நிலையில்லாமல் பதட்டத்துடன் நடந்துகொண்டேயிருக்க சிறிது நேரத்தில் வெளியே வந்த டாக்டர் என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு “ஆபரேஷன் பண்ணனும்..அவளுக்கு ஏற்கனவே ஹெல்த் ப்ரோப்லேம் இருக்கு..இதுல கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு…நான் முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றேன்..ஒருவேளை என தயங்கியவர் ‘இரண்டுபேர்ல யாராவது ஒருத்தர் தான் காப்பாத்த முடியும்னா..’ அவர் தயங்க மற்றவர்கள் யோசிக்கும் முன் மித்ரன் “என் தியாவ எனக்கு திருப்பி குடுத்திடுங்க டாக்டர்…” என்றதும் அனைவரும் “அவசரப்படாத..கொஞ்சம்..”

“இல்ல நான் தெளிவா தான் சொல்றேன்..தியா தான்..எல்லாருக்குமே அப்பாவாகுறது ரொம்ப சந்தோஷமான விஷயம் தான்..ஆனா என் லைப்ல எல்லாமே எனக்கு என் தியாவால தான் கிடைச்சது..எனக்கும் சேத்தி என் வெற்றியை கொண்டாடுனது, சந்தோசப்பட்டது அவ..அவ ஹெல்த் ப்ரோப்லேம், நார்மல் ப்ரெக்னென்ட் லேடீஸ் விட இவளுக்கு காம்ப்ளிகேஷன்ஸ் இருக்குன்னு தெரிஞ்சும் அவ இதை சந்தோசமா தான் ஏத்துக்கிட்டா..ஆனா என்னால அதை இத்தனை நாளும் பாக்கமுடில.நான் அன்னைக்கே சொன்னேன்..நீங்க யாரும் தான் கேட்கல..கேர் பண்ணி கொஞ்சம் நல்லா பாத்துக்கிட்டா போதும்னு சொன்னிங்க..ஆனா அவளோட வலிய யாரு என்ன பண்ணமுடியும்….பாவம் டாக்டர் அவ இவளோ பெயின் தாங்கமாட்டா…..என் தியாவ எனக்கு திருப்பி குடுத்திடுங்க டாக்டர்..அது போதும்..” என அவன் கண்கள் கலங்க அதற்கு மேல் யாரும் எதுவும் சொல்லமுடியாமல் நிற்க டாக்டர் “ஒரு டாக்டர நான் அன்னைக்கு சொன்னது தான் இப்போவும் சொல்றேன்.. ஆனா இது எதிர்பாராம நடந்தது..திடிர்னு விழுந்து அடிபட்டு மயங்கிருக்கா…அதான்..சரி நீ கவலைப்படாத மித்ரன்..இரண்டுபேரையுமே காப்பாத்திடுவோம்னு நம்புவோம்..” என அவர் ஆறுதல் கூறிவிட்டு செல்ல அடுத்து சில மணி நேரம் மித்ரனுக்கு சூனியமாக தான் இருந்தது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 18’

18 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சந்தியா “நம்ம ஊர்ல பழைய வீட்ல இருந்தோம்லப்பா..பாலகிருஷ்ணன் அங்கிள் கூட அங்க தானே முதல ஆசிரமம் ஆரம்பிச்சிருந்தாரு..நீங்க நம்ம மித்து குட்டியோட பஸ்ட் பெர்த்டே சமயம் பாம்பேல வேலை விஷயமா ஒரு ட்ரெயினிங்னு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 8’

8 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அடுத்து வந்த நாளில் மேட்ச் என்றாக சிவா, மித்ரன் இருவரும் இம்முறை ஜெயிக்க வேண்டுமென்பதில்  தீவிரமாக இருந்தனர். அதேபோல போட்டியில் வெற்றியும் பெற இங்கே சிவா, மித்ரன் பிரண்ட்ஸ், மித்ரா அவளது தோழிகள்