Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’

28 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

வெங்கடாச்சலம் “எனக்கு ஒன்னு புரியல மித்து….இவ்வளவும் உனக்கு தெரியுது..அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் எதுக்கு சரினு சொன்ன?”

தலை கவிழ்ந்தபடி “அது ஆதிக்கு ப்ரோமிஸ் பண்ணிருந்தேன் டாடி” என தங்கள் இருவருக்கும் நடந்த உரையாடலை சத்தியத்தை பற்றி கூற

அவர் புரியாமல் “அப்போ அவனே சொல்லிட்டான் தானே..அப்புறம் ஏன் இப்போ வேணாம்ங்கற?”

“ஆதிகிட்ட நீங்க மேரேஜ்க்கு கேட்டா ஓகே சொல்லுவேன்னு ப்ரோமிஸ் பண்ணேன்..ஆனா ஆதிய மறக்கணும்னு நான் ப்ரோமிஸ் பண்ணலையே டாடி. .. மறக்க முடியுமான்னு இப்போ யோசிச்சா என்னால முடியாதுனு தோணுச்சு..எந்த பிரச்னைனாலும் என்கிட்ட சொல்லுடானு சொல்லுவிங்கள டாடி..அதான் சொல்லிட்டேன்…” என அவள் அப்பாவியாய் பேச

 

“இருக்கறவனை பாத்து கல்யாணம் பண்றதே இந்த காலத்துல கொடுமையா இருக்கு..இதுல எங்க இருக்கான்னே தெரியாதவனை பாத்து என்னனு எப்படி கல்யாணம் பண்றது?… எல்லாருக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு..யாரும் என்கிட்ட பேசாதீங்க..” என அவர் தனியே சென்றுவிட்டார்..

 

மித்துவை உள்ளே அறையில் படுக்கவைத்துவிட்டு வெளியே வந்த கவிதா, சிவா இருவரும் “என்ன ஆன்ட்டி அங்கிள் இப்டி சொல்லிட்டு போறாரு…?”

“தன் பொண்ணு வாழ்க்கை என்னாகுமோங்கிற எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிற அதே கவலை பயம் தான்..அது சரி ஆகிடும்..” என்றவர் பெருமூச்சுடன் “சரி, நீ மித்ரனுக்கு மெயில் பண்றேன்னு சொன்னியே? ஏதாவது பதில் கிடைச்சதா?”

“இல்லை ஆன்ட்டி..எதுக்கும் நாம வெயிட் பண்ணி பாக்கலாம்..”

“ம்ம்..”

“ஆன்ட்டி நாம மித்துகிட்ட மித்ரன் என்கிட்ட சொல்லிட்டு போனதை பத்தி சொல்லிடலாமா? வேணா அவளையே மெயில் அனுப்ப சொன்னா எப்படி?”

“இல்ல சிவா..அது வேண்டாம்..மித்ரன் அங்க என்ன சூழ்நிலைல இருக்கானு தெரில…எதுவும் தெரியறதுக்கு முன்னாடி நம்ம மித்துக்கிட்ட சொல்லி அவளுக்கு ஹோப் குடுக்க வேண்டாம்..பதில் வரட்டும்..மித்ரன்கிட்ட முதல பேசிட்டு அப்றம் அவகிட்ட சொல்லிக்கலாம்..”

சிவாவும் யோசனையுடன் “ஓகே ஆன்ட்டி..ஆனா உங்களுக்கு அங்கிள் மாதிரி எந்த பயமும் இல்லையா ஆன்ட்டி?”

கவிதா புன்னகையுடன் “மித்துவை இவளோ நாள் குழந்தையாவே பாத்துட்டு அவ லவ் பண்றேன்னு சொல்லி பேசும்போது தான் அவ வளந்துட்டானே எனக்கு புரிஞ்சது..இந்த பொண்ணு விளையாட்டு தனமா இருப்பா, மனசுல எதையும் வெச்சுக்கமாட்டானு தான் இவளோ நாள் நினச்சேன்..ஆனா லவ் பண்ண பையன் வேண்டாம்னு சொன்னதை அது அவனோட விருப்பம்னு சரியான வழில ஏத்துக்கிட்டு இருந்திருக்கா..அவன் விட்டு விலகி போயும் அவனை நினைச்சுட்டே இவளோ நாள் சந்தோசமா இருந்திருக்கா..உள்ள கண்டிப்பா ஒரு ஒரத்துலையாவது அவனை மிஸ் பண்ணிருப்பா..ஆனா அத நினச்சு பீல் பண்ணி தன்னையோ, மத்தவங்களையோ வருத்திக்கறத எல்லாம் இல்லாம எவ்ளோ ஹாப்பியா எல்லாரையும் வெச்சுக்கிட்டா..என்கிட்டயும், அவ அப்பாகிட்டேயும் லவ் பத்தி சொல்லும்போது அவகிட்ட துளி கூட பயமில்லை..ஆதி மேல இருந்த காதலும், அவன் மேலையும் இவ எடுத்த முடிவு சரிங்கற நம்பிக்கை தான் எனக்கு தெரிஞ்சது..அவ்ளோ நிதானமா தெளிவா பதில் சொல்றா..அப்படி இருக்கிறவ அவ லைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டாளா என்ன? அப்றம் எதுக்கு எனக்கு பயம் வரப்போகுது சொல்லு..?” என கூறும்போது தன் மகளின் மீது அவர் வைத்த நம்பிக்கையும் பெருமையும் தெரிந்தது..அவர் கூறியதையும் ஒப்புக்கொண்ட சிவா மனநிறைவுடன் சென்றான்..

 

இரு நாட்களுக்காக யோசித்த வெங்கடாச்சலம் மித்ராவிடம் “இப்போ நீ என்னதான் முடிவு பண்ணிருக்க?”

“நான் கோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் டாடி..”

“அப்புறம்?”

“வேலைக்கு..”

“அப்புறம்?”

“நான் என்ன சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்கிறிங்க டாடி?” என்றாள் புன்னகையுடன்

“கல்யாணம்னு ஒன்னு உன் ஆப்சன்ல இருக்கா இல்லையா?”

“இவ்ளோதானா? என சிரித்தவள் “டோன்ட் ஒர்ரி டாடி..கண்டிப்பா இருக்கு..அதுவும் ஆதி கூட..அதுல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு..”

“ஒரு வேலை அவன் கிடைக்கலேன்னா? நீ இப்டியே இருக்க போறியா? ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்க? என் பொண்ணு வாழ்க்கை இப்டி ஆகிடிச்சுனு நான் நினச்சு நினச்சு பீல் பண்ணனுமா?” என அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டே போக

“டாடி..டாடி..டாடி…ரிலாக்ஸ்…கண்டிப்பா நான் ஆதிய சந்திப்பேனு எனக்கு தோணிட்டே இருக்கு..நான் அதை நம்புறேன்..ஊர்ல இருக்கிறவங்க என்னை வளத்தல..எனக்கு ஒரு பிரச்னைனா அவங்க அழமாட்டாங்க டாடி..நீங்க தான்…  சோ உங்க விரும்பமும், சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.. இப்போ உங்களுக்கு என்ன பயம் என்னை பத்தி?”

 

“சரி நம்ம இரண்டுபேரும் ஒரு ப்ரோமிஸ் பண்ணிக்கலாம்..நான் படிச்சி ஒரு ஒன் இயராவது வேலைக்கு போறேன்..அதுக்குள்ள ஆதிய மீட் பண்ணா அவன் லவ் ஓகே சொன்னா உங்ககிட்ட கூட்டிட்டு வரேன்..ஒருவேளை அப்டி மீட் பண்ணலேன்னா அதுக்கு அப்றம் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எந்த பையன காட்டிருங்களோ நான் பண்ணிக்கறேன்..இது என் ப்ரோமிஸ்..”

 

கவிதா “மித்து..நீ என்ன பண்ற? யோசிச்சுட்டு..”

“மா..ரிலாக்ஸ்..நான் சொல்றேன்..” என்றவள் அப்பாவிடம் திரும்பி

 

“அதேமாதிரி, அப்டி வேற ஒருத்தனை நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றது ஊர் உலகத்துல, சொந்தகாரவங்க எப்போ கல்யாணம்னு கேக்கறாங்கங்கிற காரணத்துக்காக இருக்கக்கூடாது..உங்க மனசுல எந்த நிமிஷம் என் பொண்ணு இப்போ இருக்கிறதை விட இவன்கூட இருந்தா சந்தோசமா இருப்பான்னு தோணுதோ அப்போ என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணிவைங்க..நல்ல ஞாபகம் வெச்சுக்கோங்க டாடி..அப்டி ஒரு நல்ல பையன நீங்க ஈஸியா பாத்திடலாம்..ஆனா நான் அங்க சந்தோசமா இருப்பேனான்னு யோசிக்கும்போது உங்க மனசுல துளி கூட சந்தேகமோ, தயக்கமோ, வருத்தமோ இல்லாம எஸ் ஆதியில்லாம இவன் தான் அவளுக்கு சரியானவன்னு நீங்க ஏத்துக்கணும்…அப்டி தோணும் போது என்கிட்ட நீங்க கல்யாணத்தை பத்தி பேசுங்க..அப்டி ஒருத்தனை நீங்க பாத்துட்டு மனசார கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க…இது நீங்க ப்ரோமிஸ் பண்ணனும்….

பொய்யா ப்ரோமிஸ் பண்ணா, இல்ல ப்ரோமிஸ மீறினா அந்த லைப் ஒண்ணுமே இல்லாம போய்டும் டாடி..இது நம்ம இரண்டுபேரோட ப்ரோமிஸ்க்கும்  பொருந்தும்.. தான்..அம்மா தான் ஐ விட்னெஸ், சாட்சி..என்னமா ஓகே தானே..” என

அவளே ஆச்சரியமாக ஓகே என்றாள்..

 

தைரியமாக அன்று சத்தியம் செய்தாலும் வெங்கடாச்சலத்தால் அப்டி தயக்கம் ஏதுமின்றி கல்யாணம் செய்யஇயலவில்லை..அவள் ஆதியை பற்றி சொன்னது, கேட்ட கேள்விகளே சுற்றி சுற்றி வந்தன..அதனாலையே அவரும் திருமண பேச்சை எடுக்கவேயில்லை..]

 

அனைத்தையும் கூறிமுடித்தவள் “இதுதான் நடந்தது..அதனால தான் திரும்பி அப்பாகிட்ட பேசவரும்போது அவரு இவளோ நாள் டிலே ஆன கோபத்துல உன்னை ஏதாவது சொல்லிடுவாரோன்னு தயங்குனேன்..ஆனா ஆதி நீ அப்பாகிட்ட பேசும்போது அவரு எதுவும் சொல்லலையா? எப்படி ஒத்துக்கிட்டாரு?”

 

“கால் பண்ணி நான் பேர் சொன்னதுமே அவர் புரிஞ்சுக்கிட்டாரு..

மித்துவை பாத்தியானு தான் கேட்டாரு..அப்றம் சொன்னேன்..

நம்ம கல்யாணம் பத்தி பேசுனதை..அவர்கிட்ட கேட்டேன்..’இத்தனை வருஷம் சொல்லாம கொள்ளாம போனமாதிரி திரும்பி போகமாட்டேனு என்ன நிச்சயம் நான் எதை நம்பி உனக்கு பொண்ணு குடுக்க முடியும்னு கத்துனாரு..உங்க கோபம் நியாயமானதுதாங்க..சோ நீங்க நல்லா யோசிங்க..தேவைப்படுற அளவுக்கு டைம் எடுத்துக்கோங்க..என்னை எப்போ நம்பி உங்க பொண்ணை கட்டிகுடுக்க தோணுதோ அப்போ குடுங்க..நான் வெயிட் பண்றேன்.. அது எத்தனை வருஷமானாலும் சரி..

அதுவரைக்கும் நாம பேசுன விஷயம் உங்க பொண்ணுக்கு தெரியவேண்டாம்..அவளுக்கு நான், நீங்க எல்லாருமே ரொம்ப முக்கியம்னு நினைப்பா..நமக்குள்ள இப்டி நம்பலேங்கிற மாதிரி பேசுறோம், ஆர்கியூ பண்றோம்னு தெரிஞ்சாகூட சங்கடப்படுவா..இப்போ இருக்கிற மாதிரியே வேலை இது அதுனு அப்டியே இருக்கட்டும்…அவ இங்க இருக்கிறதால நீங்க பயப்படவேண்டாம்..கண்டிப்பா உங்க பொண்ணை அப்டியே தான் நான் பத்திரமா பாத்துக்குவேன்..கல்யாணத்துக்கு அப்புறம் என் மனைவியா அவளை இன்னுமே ரொம்ப சந்தோசமா கூடவே வெச்சு பாத்துக்குவேன்.. வெச்சிடறேன் அங்கிள்னு சொல்லி வெச்சுட்டேன்..அப்புறம் கொஞ்ச நேரத்துலையே அவரு திரும்ப காண்டாக்ட் பண்ணாரு..

“என் பொண்ணு சரியான ஆள தான் புடிச்சிருக்கா.. எங்ககிட்ட இருந்து என்னை எதிர்பார்க்கிறிங்க?”

“என் தியாவோட சந்தோஷத்தை தினம் தினம் கூட இருந்து பாக்கணும்.. முடிஞ்சளவுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைங்க..அது போதும்..”

“ஹா ஹா ஹா…நான் இப்போ சரினு சொன்னா எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? ஒரு மாச..”

“ஒரு வாரத்துல..”

“என்ன? அதுக்குள்ளவா?”

“அடுத்த நாள்னு சொல்லிருப்பேன்..ஆனா நாங்க இங்க, நீங்க அங்க இருக்கிறதால தான் இவளோ டைம்..எனக்கு இங்க தான் கல்யாணம் வெக்கணும், இப்டி இருக்கனும், இவளோ பேர் கூப்பிடணும்னு எல்லாம் இல்லை அங்கிள்..பிரண்ட்ஸ், பாலா மாமா, என் தியா அவ மூலமா எனக்கு கிடைக்கிற சொந்தங்கள் நீங்க அவ்ளோதான்..சோ மேரேஜ் உங்க எல்லாருக்கும் அண்ட் தியாவோட விருப்படி இருந்தா அதுவே எனக்கு ஓகே..”

“அதெல்லாம் சரி..ஆனா இவளோ அவசரம் ஏம்பா?”

“அது..தியா என்கிட்ட எப்போவுமே நான் கிளம்பும்போது ஆதி ப்ளீஸ் கொஞ்ச நேரம் என்கூட இரேன்னு கேட்டுட்டே இருப்பா…நான் எப்போவுமே இருந்ததில்லை..ஆனா இன்னைக்கு அவ கேட்டா, நான் இப்போவும் நோ சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன்.. இதுவரைக்கும் நான் அவளுக்கு சொன்ன நோ போதும்..அதுலையே அவளை நான் ரொம்ப கஷ்டப்படுத்தின மாதிரி ஒரு பீல்..இனிமேல் அது இருக்கக்கூடாதுனு நினச்சேன்..அதான் இதுக்குமேல அவ கேக்கற அளவுக்கு கூட வெச்சுக்கக்கூடாதுனு தோணுச்சு..அதான் மேரேஜ் பத்தி உடனே உங்ககிட்ட பேசிட்டேன்னு” சொன்னேன்..

 

“ஹா ஹா ஹா..நல்லா மாமனாரை கவர் பண்ணிட்ட…இதுக்கு மேல எப்படி எங்க அப்பா வேணாம்னு சொல்லுவாரு …” என வாய் விட்டே சிரிக்க

மித்ரன் புன்னகைக்க மித்து “ஆனா ஆதி, இந்த டயலாக் எல்லாம் நீயாவா பேசுன? ச்ச…நாளைக்கு அப்பாகிட்ட இத கேட்கணும்…என்னால நம்பவேமுடில..”

அவனோ செல்லமாக முறைத்துவிட்டு “சரி நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு..அந்த ஆக்சிடென்ட்..” என முடிக்கும் முன்

“ஆதி போதும்..எனக்கு தூக்கமா வருது..முதுகு எல்லாம் வலிக்கிது…என்னை ஏன் டா இப்டி உக்கார வெச்சே டார்ச்சர் பண்ற?”

“அடிப்பாவி..நானா? உன்னை எல்லாம் அடிக்றதுல தப்பே இல்ல..அப்போ இருந்து நான் தூங்க சொன்னா உக்காந்து காதை விரிச்சு கதை கேட்டுட்டு இப்போ என்னை சொல்றியா?”

“சரி ரொம்ப பேசாத…இப்போ என்னை கொண்டு போயி பெட்ல ட்ராப் பண்ணிடு..” என “ஏதாவது நான் சொல்றத கண்டுக்கிறியா? உன்னை திருத்தவேமுடியாது…” என அவளை தூக்கி சென்று படுக்கவைத்தான்…அவன் கதவு சன்னல் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஒழுங்குபடுத்தி விட்டு வருவதற்குள் தியா தூங்கிவிட்டாள்..குழந்தை போல உறங்கும் மனைவியை ரசித்தபடியே அவனும் உறங்கினான்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’

31 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் “சரி சொல்லு..பாத்ததால என்ன? அவங்க எதுக்கு கோர்ட்க்கு வந்தாங்க? ஏதாவது ப்ரோப்ளமா? விசாரிச்சியா?” என்று மித்து வினவ “ம்ம்..அவங்க பேமிலில கொஞ்சம் ப்ரோப்லேம் போல..இவங்க நிலத்துல ஏதோ பேக்டரி கட்ட ஒரு கம்பெனிகாரன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

6 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சிவா கடுப்புடன் இருக்க மித்ரா எப்போதும் போல வந்து “ஹே சீனியர்ஸ்…செம ஜாலியா உக்காந்திருக்கிங்க போல?” மகேஷ் “எங்களை பாத்தா ஜாலியா இருக்கற மாதிரியா இருக்கு?” “பின்ன? பாத்தா தெரில? அதான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை