Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

“ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”

 

[“மித்து, என்னடா இங்க தனியா நிக்கிற?”

“ஒன்னுமில்லமா..சும்மாதான்..வேடிக்கை பாத்துட்டு நின்னுட்டேன்..”

“நம்பிட்டேன்..சொல்லு..நீ கல்யாணத்துக்கு ஓகே சொன்னதுல இருந்து உன் முகம் சரியில்ல..என்னனு சொல்லு..” அவள் மௌனமாக இருக்க “உன் அக்காவ அம்மா மாதிரி நினச்சு சொல்லுவ, ஆனா அம்மாகிட்ட சொல்லமாட்டியா?” என செல்லமாக கோபிக்க

புன்னகையுடன் மித்து “அயோ அம்மா, அப்படியெல்லாம் இல்லை..உன்கிட்ட சொல்லாம என்ன? நான் ஆதிய லவ் பண்றேன் மா..” என காலேஜில் படிக்கும்போதே காதலித்தது, அவனிடம் கூறி அவன் மறுத்தது, அவன் யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ சென்றுவிட்டது என அனைத்தும் கூறினாள்..2 வருஷம் ஆச்சு மா..இப்போவும் ஆதி எங்க இருக்கானு தெரில..இதுக்கு இடைல அப்பா, நீ, பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்றிங்க..எனக்கு ஏனோ மனசேயில்ல மா..டிஸ்டர்ப்பா இருக்கு..வாழ்க்கைல நடக்கிற எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கும்தான்..ஆனா இதுல…ம்ச்..”

பெருமூச்சுடன் “ஏதாவது மாறும்..பாத்துக்கலாம்..நீ ரொம்ப நேரம் முழிக்காத மா..உனக்கு ஒத்துக்காது..” என்றவளை அவளது தாய் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்க்க மித்து சகஜநிலைக்கு வந்தவள் “என்ன கவி என்னை சைட் அடிச்சிட்டு இருக்க? வா கீழ போலாம்..போய் முதல தூங்கு..” என அறையில் வந்து விட

கவிதா “நீ சந்தோசமா இருப்பியா டி?” என்று கேட்க அந்த தாயின் பரிதவிப்பை உணர்ந்தவளால் அவரிடம் “இருப்பேன்” என கூறமுடியவில்லை…”எது நடந்தாலும் நல்லதுக்கு தான் மா..யாரையும் கஷ்டப்படுத்தாத முழு மனசோட ஆசைப்படுற எந்த ஒரு விஷயமும் கண்டிப்பா நடக்கும்னு நீதானே மா சொல்லிவ..சோ பாக்கலாம்..ஒரு வேலை அப்டி நான் ஆசைப்பட்டது கிடைக்கலேன்னா நான் முழு மனசோட அத விரும்பல..இல்லை எனக்கும் ஆதிக்கும் இருக்கிற லைப்ல அவனுக்கு இதைவிட பெரிய கஷ்டம் வரும்போல..அதுக்காக தான் இப்போவே இது தடைபட்றிச்சுனு நினைச்சுக்கறேன்..நீ எதை பத்தியும்

போட்டு குழப்பிக்காம தூங்குமா..” என அவள் சென்றுவிட்டாள் மித்ரா..

 

மறுநாள் எப்போதும் போல மித்ரா அனைத்தையும் செய்தாலும் அவள் கவனம் இங்கே இல்லை என அனைவர்க்கும் புரிந்தது..சும்மா ஒரு வாக் போயிட்டு வரேன்னு போனவளை பற்றி அடுத்த ஒரு மணி நேரத்தில்  வந்த தகவல் விபத்து..மித்துவை ஹாஸ்பிடலில் சேர்த்தியிருக்க உயிர்க்கு ஆபத்தில்லை…கை கால்ல பலமான அடி சோ முழுசா குணமாக ஒன் மந்த் ஆகும்..நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..வீட்டுக்கு நாளைக்கே கூட்டிட்டு போய்டலாம் என்று டாக்டர்ஸ் கூறினார்..

 

கவிதா “இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என கணவரிடம் கூற வெங்கடாச்சலம் “என்ன கவிதா சொல்ற..அவ ஏதோ கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்ததால ஆக்சிடென்ட் ஆகிடுச்சு..கல்யாணத்தை தள்ளி வெச்சுக்கலாம்னு சம்பந்தி வீட்ல சொல்லிட்டாங்க..ஒண்ணும் பிரச்சனை இல்லமா…அவளுக்கு ஒன்னும் ஆகாது..நீ வருத்தப்படாத..நம்ம மித்துவே கல்யாணத்துக்கு சரினு தானே சொல்லிருக்கா…” என ஆறுதல் சொல்ல

கவிதா “அவ அதை விருப்பப்பட்டு சொல்லல..” என முந்தைய நாள் அவள் தன்னிடம் பேசியத கூறியவள் “மித்து என்னதான் விளையாட்டுத்தனமா இருந்தாலும் ரொம்ப பொறுப்பா கவனமா இருப்பா..ஏற்கனவே சந்தியாக்கு இப்டி ஆனதால நம்ம 2பேரும் எவ்ளோ உடைச்சுபோயிருந்தோம், இதுல மித்துவுக்கும் ஏதாவதுன்னா நாம ரொம்ப வருத்தப்படுவோம்னு அவளுக்கு நல்லா தெரியும்..நம்மள இன்னும் சங்கடப்படுத்தகூடாதுன்னே அவ சின்ன விஷயத்துல கூட ரொம்ப கவனமா இருப்பா..அப்பேர்பட்டவ இன்னைக்கு அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகுற அளவுக்கு கேர்லெஸ்ஸா ரோடு கிராஸ் பண்ணிருக்கான்னா அந்த அளவுக்கு அவ டிஸ்டர்ப்டா இருந்திருக்கா..வேண்டாம்ங்க..நமக்கு நம்ம பொண்ணு வேணும்…ப்ளீஸ் இதை நிறுத்திடிங்க..” என கவிதா கதறியழ அதிர்ச்சியில் இருந்த வெங்கடாச்சலத்திடம் சிவாவும் வந்து பேசினான்.. அவரோ இறுதியில் “என் பொண்ணுகிட்ட நான் பேசிக்கறேன்..அவ புரிஞ்சுக்குவா” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..

 

மறுநாள் அவளை வீட்டுக்கு அழைத்து வந்ததும் அவளின் அருகே அமர்ந்த வெங்கடாச்சலம் “மித்து வலி இப்போ பரவாயில்லையாடா?”

“கொஞ்சம் பரவால்ல..பட் இன்னும் கை கால் எல்லாம் ரொம்ப பெயினா இருக்கு டாடி..”

“ம்ம்..பாத்து ரோடு கிராஸ் பண்ணிருக்கலாம்லடா?” என அவர் உண்மையான ஆதங்கத்துடன் கேட்க

“சாரி டாடி..ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன்..அதான் கவனிக்காம..ம்ச்..உங்களை எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல..சாரி டாடி..” என வருந்த

அவரோ பெருமூச்சுடன் “இந்த கல்யாணம் உனக்கு வேணாம்னு யோசிச்சிட்டு போனியாடா?” என்று கேட்டதும் மித்து கவிதா, சிவா அனைவரையும் பார்த்துவிட்டு “டாடி…”

“மத்தவங்களை விடு..நீ சொல்லு..உனக்கு நான் தேர்ந்தெடுத்த மாப்பிளை பிடிக்கலையா?”

“ஐயோ டாடி..அப்டி எல்லாம் இல்லை..நான் ஒருத்தர விரும்பறேன்..உங்க எல்லாருக்காகவும் நான் ஓகே சொன்னாலும் என்னால அந்த வாழ்க்கைல இருக்கமுடியும்னு தோணல..அதான் யோசிச்சிட்டு போனேன்..”

“இங்க பாரு மித்துமா..லவ் பண்றவங்க எல்லாருக்குமே அவங்க வாழ்க்கை கல்யாணத்துல தான் முடியணும்னு இல்லை..சூழ்நிலை காரணமா வேற யாராவத கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழலையா? கொஞ்ச நாள்ல சரி ஆகிடும் டா..” என ஒரு சாதாரண தகப்பனாரை போல அறிவுரை வழங்க மித்துவின் மனதை மாற்ற முயற்சிக்க

மித்துவோ “ஆனா ஏன் டாடி அப்டி இருக்கணும்..யாருனு தெரியாத அடுத்தவங்களையே நாம ஏமாத்தக்கூடாதுனு சொல்லுவீங்க..அப்டி இருக்கும்போது நம்மளை நாமளே ஏமாத்திக்கறது ரொம்ப தப்பு தானே டாடி..?”

“என்ன மித்து பிடிவாதம் பண்றியா?” என்றார் கடுமையாக

அவளோ அதே மெல்லிய குரலில் “இல்ல டாடி புரியாம கேக்குறேன்…ஆசைப்பட்டவன விட்டுட்டு யாரோ ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கோ..போக போக கொஞ்ச நாள்ல சரி ஆகும்னு சொல்றிங்க..ஓகே..பட் அது எப்போ டாடி, ஒரு வாரமா? ஒரு மாசமா? இல்லை ஒரு வருஷமா?..அது வரைக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறவையும், என்னையும் நான் ஏமாத்திட்டு இருக்கேன், துரோகம் பண்ணிட்டு இருக்கேனு எனக்கு உறுத்தாதா டாடி?

புரிஞ்சிருக்கிறவனா இருந்தா தான் இதுவும்.. ஒருவேளை அப்டி இல்லாம அவன் மோசமானவனா இருந்தா நான் கடைசிவரைக்கும் எந்த மனநிலைல இருப்பேன்….அப்போவும் நீங்க எல்லாரும் தானே என்னை பாத்து சங்கடப்படுவீங்க…”

 

“இப்போ கடைசியா என்ன சொல்லவர? நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்ட..அதையும் மீறி போர்ஸ் பண்ணா ஏதாவது பண்ணிக்குவேன்னு பிளாக்மெயில் பண்ணுவ..உன் அம்மா உனக்கு சப்போர்ட் பண்ணுவா அதானே?” என கோபமாக வினவ

 

மித்து நிதானமாக “கண்டிப்பா இல்ல டாடி..நான் உங்களுக்கு பிடிக்காததை செய்யணும், கஷ்டப்படுத்தணும்னு எப்போவுமே நினைச்சதில்லை டாடி..நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆனதால தான் இப்டி ஒரு விபத்து நடந்தது..

ஆதி என் லவ்வ மறுத்த போது, அவன் விட்டு விலகி போகும்போது கூட நான் எப்போவும் போல தான் டாடி இருந்தேன்..ஏன்னா எந்த சூழ்நிலையிலையும் ஆதியை நான் மறக்க முயற்சி பண்ணதில்லை..அவன் மேல அன்பா இருக்கணும்னு தோணுச்சு, அதை அதிகமா காட்டிட்டே இருக்கணும்னு தோணுச்சு..அதை நான் பண்ணேன்..

ஆனா இதுதான் முதல் தடவ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொல்ராங்க….ஆதிய நினைச்சுட்டு இன்னொருத்தரோட வாழறது எப்படி? அப்போ ஆதிய நான் மறக்கணுமானு அந்த கேள்வியே என்னை ரொம்ப கஷ்டப்படுத்திடிச்சு டாடி..எனக்கு அதை ஹாண்டில் பண்ண தெரில டாடி..இதுவரைக்கும் நீங்க எனக்கு அன்பு செலுத்த தான் சொல்லித்தந்திங்களே தவிர காரணமே இல்லாம அதை திருப்பி எடுத்துக்க சொல்லித்தரல..அதான் எனக்கு என்ன பண்றதுனு புரியல..என் பிரச்சணை இதுதான் டாடி..” என்றவளை நேருக்கு நேர் பார்த்த வெங்கடாச்சலம் அவள் முகத்தில் இருந்த தெளிவு, நம்பிக்கை, தைரியத்தை கண்டவர்

“சரி, நீ விரும்புற அந்த பையன் யாரு? அவங்க பேமிலி பத்தி சொல்லு..” என்றார்.

 

கவிதா “அப்பாடி, ஒருவழியா இந்தளவுக்கு வந்துட்டாரே..”

சிவா மெல்லமாக “ஐயோ ஆன்ட்டி, இதுவரைக்கும் எப்படியும் மித்து பேசுனாலே சமாளிச்சுடுவானு தெரியும்..இதுக்கு மேல தான் மெயின் விஷயமே இருக்கே..” என்றதும் கலவரமான கவிதா சிவாவை பார்க்க “அங்கிள் மித்ரனை பத்தி கேக்குறாரு…”

கவிதா “ஆமால்ல..” என மீண்டும் அங்கே என்ன நடக்கிறது என பார்த்தனர்..

 

மித்து “அவன் பேரு மித்ராதித்தன்..எங்க காலேஜ் தான்ப்பா..சீனியர்..செம படிப்ஸ்..காலேஜ் டாப்பர்..ரொம்ப நல்லவன்ப்பா..ரொம்ப பொறுப்பா இருப்பான்..” என அவனை பற்றி கூறும்போது அவளை மீறிய புன்னகை அரும்பியது.. அதை கவனித்தவர் மேலே சொல்லும்படி கூற “ஆதி வளந்தது எல்லாமே பாலகிருஷ்ணன் அங்கிள் ஆசிரமத்துல தான்..” என்றதும் வெங்கடாச்சலம் ஏன் பேமிலி எங்க? என்னாச்சு என அனைத்தையும் கேட்டவர் அடுத்த போருக்கு தயாரானார்..

 

“என்ன சொல்ற நீ.. பேமிலி இருக்கிற பசங்களே புள்ளைங்கள எப்படி பாத்துக்குவாங்களோனு பெத்தவங்க கவலையோட இருக்கோம்..இதுல குடும்பம்ங்கிற சூழலையே இல்லாம வர ஒருத்தன் எப்படி நல்லா பாத்துப்பான்..தனியா அந்த பையன் நீ சொல்றமாதிரி நல்லவன்னே வெச்சுக்குவோம்..ஆனா பேமிலி லைப்ல அவன் எப்படினு தெரியாம இது எல்லாம் ஒத்துவராது மித்துமா..” என

 

மித்து “என்ன டாடி பேசுறீங்க..கேக்கிறவன் எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ(experience) கேட்டா பிரெஷ்ரா (freshers) யாரு கன்சிடர் பண்ணுவாங்க…” என அவள் முடிக்கும் முன் வெங்கடாச்சலம் முறைக்க உடனே தலை கவிழ்ந்தபடி “இல்ல டாடி..வேலை விஷயத்துக்கே நாம அப்டி கேள்விகேட்போம்ல.. எப்போவுமே திறமையும் மனுஷங்களையும் பாக்கணும்..அதை விட்டுட்டு எக்ஸ்பீரியன்ஸ மட்டுமே எதிர்பார்க்கிற முதலாளிங்க சரியான பைத்தியக்காரனுங்கனு  நீங்க கூட சொல்லுவிங்களே டாடி..” என்றதும்

அவர் நிமிர்ந்து அமர்ந்து “இப்போ என்னை பைத்தியக்காரன்னு சொல்றியா?” என அவள் வேகமாக இடவலமாக தலையசைக்க

இங்கே கவிதாவும், சிவாவும் “இந்த நேரத்துலையும் இவளுக்கு இந்த நேரம்பாத்து வாருற பழக்கம் போகமாட்டேங்கிதுல ஆன்ட்டி..?” என இருவரும் சிரிக்க வெங்கடாச்சலம் முறைக்கவும் அமைதியாகினர்..

 

மித்து “ஆதி நல்லவன்னு சொல்றேன் டாடி..அவன் எது பண்ணாலும் ஒரு காரணம் இருக்கும்..அது நல்லதாதான் இருக்கும் டாடி..எனக்கு நம்பிக்கை இருக்கு..”

 

“இங்க பாருடா.. கொஞ்சநாள் பழக்கத்தை வெச்சு எல்லாம் யாரையும் நம்பமுடியாது..அந்த பையன் எப்டியோ என்னவோ..அந்த நேரத்துக்கு கூட அப்டி பழகிருக்கலாம்ல?”

“நீங்க இப்போ எனக்கு பாத்து பையன், அவனோட பேமிலி எல்லாரும் உங்களுக்கு எத்தனை வருஷ பழக்கம் டாடி? எந்த  நம்பிக்கைல அவன் ஓகேனு முடிவு பண்ணீங்க?”

அவர் முறைக்க “சொல்லுங்க டாடி..”

“அந்த பையன் இப்போதான் ஒரு வருஷமா பழக்கம்..அவனோட அப்பா அம்மாவ ஒரு 10 வருஷமா தெரியும்..அந்த நம்பிக்கைல தான் அவனை சூஸ் பண்ணிருக்கேன்..”

“ம்ம்..அப்டி பாத்தா, எனக்கு ஆதிய 4 வருஷமா தெரியும்..உங்களுக்கும் பாலகிருஷ்ணன் அங்கிள 25

வருசமா தெரியும்..அவர்கிட்ட நீங்க கேட்கலாம்ல டாடி..அதோட என்னதான் சுத்தி எல்லாரும் அட்வைஸ் பண்ணாலும் நம்பிக்கை குடுத்தாலும் வாழபோற இரண்டுபேர் பிரச்னை பண்ணிக்கிட்டா முடியாதுனு சொன்னா யாரு என்ன பண்ண முடியும்..இப்போ எல்லாமே ஓகேனு நல்லபடியா பேசுறவங்க எல்லாம் பின்னாடி பிரச்னை பண்ணாமலா இருக்காங்க..அப்டி இல்லேனு சொல்லாதீங்க டாடி..அப்டி எல்லாருமே சொன்ன பேச்ச கேப்பாங்க, மத்தவங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணி வாழ்வாங்கன்னா இங்க இவ்ளோ டிவோர்ஸ் கேஸ் இருந்திருக்காதே டாடி….”

“அதுக்காக எப்படி என்னனு தெரியாத பையனுக்கு நான் எப்படி என் பொண்ணை கட்டித்தர முடியும்?”

“அப்டினா நான் வெயிட் பண்றேன் டாடி…உங்க எல்லாரோட சம்மதமும் இல்லாம இந்த லைஃப்ல முழுசா சந்தோசமா இருக்கமுடியாது டாடி..பட் தயக்கமே இல்லாம சந்தோசமா வெயிட் பண்ணமுடியும்…உங்களுக்கு எப்போ ஆதிய பிடிக்கிதோ நான் அப்போ அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்..அது எத்தனை வருஷம்னாலும் எனக்கு கவலையே இல்லை..கண்டிப்பா ஆதிய உங்களுக்கு சீக்கிரம் பிடிச்சிடும்…” என அவள் அவ்ளோ உறுதியாக அதுவும் தன் சம்மதத்திற்காக வருடக்கணக்கிலும் காத்திருக்கேன் என்று அவள் கூறவும் தன் மகள் தங்களுக்காக எவ்வளவு தூரம் பார்க்கிறாள் என நினைத்தவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல்

 

“சரி டா மித்து …நீ இவ்ளோ சொல்ற..அந்த பையன வர சொல்லு..ஒருதடவை பாத்து பேசிடலாம்..” என்றதும் தான் மித்து உட்பட அங்கே இருந்த மீதி மூவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

இறுதியாக மித்துவே “டாடி..”

“என்னமா?”

“ஆதி..ஆதி எங்க இருக்கானு தெரியாது..” என அவன் 2 வருடத்திற்கு முன் யாரிடமும் சொல்லாமல் சென்றது என கூறியதும் “லவ் பண்ணிட்டு இப்படியா சொல்லாம கொள்ளாம போவான்? அப்புறம் என்ன நல்ல பையன் அவன்? என குதிக்க

 

மித்து “இல்ல டாடி, அவன் என்னை இப்போவரைக்குமே லவ் பண்றேன்னு சொன்னதில்லை..நான் தான் அவனை லவ் பண்றேன்..” என்றதும் வெங்கடாச்சலத்திற்கு பிபி ஏறாத குறை தான்..”கவிதா இவ பண்ணிட்டு இருக்கா..?” என புலம்ப

கவிதாவோ “அதையும் என்கிட்ட சொன்னாங்க..நீங்க கொஞ்சம் தண்ணி குடிங்க..” என

அவரோ தலையில் கை வைத்தபடி “ஐயோ, பொண்ணு தான் ஒளரன்னா அவ அம்மா அதுக்கு மேல இருக்காளே?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 12’

12 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சாப்பிடும் இடத்தில் ஒரு குழந்தை ஐஸ் கிரீம் கேட்டு அடம்செய்ய அவர்கள் காய்ச்சல் வரும் என தர மறுத்தனர்…இதேபோல மித்துவுடன் இருக்கும் போது நடந்து நிகழ்வு அழையா விருந்தாளியாக அவனுள் வந்தது.

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 6’

6 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சிவா கடுப்புடன் இருக்க மித்ரா எப்போதும் போல வந்து “ஹே சீனியர்ஸ்…செம ஜாலியா உக்காந்திருக்கிங்க போல?” மகேஷ் “எங்களை பாத்தா ஜாலியா இருக்கற மாதிரியா இருக்கு?” “பின்ன? பாத்தா தெரில? அதான்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’

30 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் நண்பர்கள் அனைவரும் விஷயம் அறிந்து வர மித்ரனுக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும் அவன் எதற்கும் அசையவில்லை..அவன் முகத்தில் அவ்வளவு பதட்டம், கவலை அன்றுதான் அனைவரும் கண்டனர்..சந்தியா, கவிதா கூட அழுதபடி இருந்தாலும் மித்ரனின்