Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 21’

21 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

ஒரு முடிவுடன் காத்திருந்த சந்தியா, சிவா வந்ததும் “இங்க பாரு…”

சிவா கையமர்த்தி “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு…இவளோ நேரம் நீ பேசுனது எல்லாம் நான் கேட்டிட்டு தான் இருந்தேன்..சோ அதே விஷயத்தை நீ திரும்ப சொல்லணும்னு அவசியம் இல்ல..எனக்கு தேவை பதில் உனக்கு ஓகேவா? இல்லையாங்கிறது தான்..”

“ரொம்ப சௌரியமா போச்சு..அப்போ என் பதிலும் கேட்டிருப்பியே..”

“நீ காரணம் சொன்ன…பதில் இல்லை..உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“இங்க பாரு சிவா..இது சரி வராது…நீ வேற யாராவது கல்யாணம் பண்ணிட்டு..”

“ம்ச்..நான் உன்னோட பதில் தான் கேட்டேன்..என் வாழ்க்கைல என்ன முடிவு பண்றதுனு கேட்கல..”

சந்தியா கோபமாக “அப்புறம் எதுக்கு இங்க வந்து பேசிட்டு இருக்க..”

“நாம மேரேஜ் பண்ணிக்கலாம்னு நீ சொன்னா லவர், கொஞ்ச நாள் மனைவியாக போறேன்னு உன் பேச்சை கேக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு..நீ வேண்டாம்னு சொன்னா இப்போ இருக்கற மாதிரி ஜாலியா வீட்டுக்கு வர போக சைட் அடிக்கனு இருந்திட்டு போறேன்.. நான் வேற யாரையும் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்..எனக்கு தோன்ற வரைக்கும் வெயிட் பண்றேன்.. உனக்கு என்ன?”

“என்ன ப்ளாக் மெயிலா?”

“இதென்ன வம்பா இருக்கு…உன் முடிவை நீ சொல்ற..என் முடிவை நான் சொல்றேன்..”

“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்..”

“ம்ச்ச்.. கொஞ்சகொஞ்சமா தெரிஞ்சுக்கலாம்….என்ன அவசரம்..நமக்கு வாழ்க்கை முழுக்க டைம் இருக்கே…” என அவன் தைரியமாக நம்பிகையுடன் சொல்ல

சந்தியா “இங்க பாரு..இத்தனை வருஷ லைப், என் படிப்பு, ஸ்போர்ட்ஸ் எல்லாமே போச்சு..என்கிட்ட இப்போ எதுவுமே இல்லை..என் உடம்பை தவிர..ஒருவேளை அதுக்கு தான் ஆசைப்படுறியா?” என அவனை காயப்படுத்தி அனுப்பிவிடும் நோக்கத்தில் கேட்க அவன் சில நொடிகள் அவளை பார்த்தவன் “அதுவும் ஒன் பார்ட் ஆப் லைப் தானே செல்லம்..” என

அவளுக்கு பற்றி கொண்டு வந்தது “உன்..”

“போதும் சந்தியா, நீ ஏன் இவளோ ஸ்ட்ரைன் பண்ணி கடுப்பேத்த பாக்குற..நீ வெறுப்பேத்துனா நானும் அப்டித்தான் பண்ணுவேன்….டிகிரி படிப்பு இல்லாட்டி என்ன? அவங்க யாரும் வாழ்க்கை நடந்துலையா? மேரேஜ்க்கு அப்புறம் நீ படி என்ன ஆகணும்னு நினைக்கிறியோ ஆகு.. ஸ்போர்ட்ஸ் கண்டிப்பா உனக்கு பெரிய இழப்பு தான்..நம்ம குழந்தைகளை அவங்களுக்கு பிடிச்ச பீல்டு இல்லாம ஸ்போர்ட்ஸ்லயும் முன்னாடி கொண்டு வந்தடலாம்…

அதோட ஒன்னு நல்லா புரிஞ்சுகோ…நான் ஒன்னும் உன்னை கல்யாணம் பண்ணி இவனோட வைப்னு ஒரு ஐடென்டிட்டி குடுக்க இந்த மேரேஜ் கேட்கல…உனக்குன்னு ஒரு தனி ஐடென்டிடிய நீ உருவாக்கிக நான் சப்போர்ட்டா இருப்பேன்னு தான் சொல்றேன்..உன் வெற்றிக்கு பின்னாடி நான் இருக்கணும்னு ஆசையா இருக்குனு தான் கேக்குறேன்…அதோட என் லைஃப்ப உன்னை தவிர வேற யார்கூடவும் ஷேர் பண்ணிக்க எனக்கு தோணல..உனக்கு ஓகேன்னா உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்..இல்லாட்டி இப்டியே இருக்கலாம்…” என தெளிவாக சொல்ல

 

“சிவா…என்னால மேரேஜ் லைப்ல….உனக்கு எப்படி சொல்றது என திணறி, பெருமூச்சுடன் எனக்கு ஆக்சிடெண்ட் ஆகுறதுக்கு முன்னாடி நடந்த ப்ரோப்லம்ல ஐ லாஸ்ட் மை வெர்ஜினிட்டி..” என அழுதவள் தொடர்ந்து “அந்த கேம்ப்ல பசங்க கொஞ்ச பேர் ரொம்ப ப்ரோப்லேம் பண்ணாங்க..நான் அவங்களோட சண்டை போட்டேன்..ரொம்ப பேசுனதால கோபத்துல அடுச்சிட்டேன்…எல்லாரும் சமாதானப்படுத்தி ரூம்க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க…ஆனா நான் கண் முழுச்சு பாத்த போது கார்டன்ல ஒரு மூலைல டிரஸ் இல்லாம மேல ஒரு பெட்ஷீட் மட்டும் இருந்த மாதிரி கிடந்தேன்…எந்திரிக்ககூட முடில..உடம்பெல்லாம் அவ்ளோ வலி..நான் ரூம்க்கு போனேன்..எல்லாருமே நல்லா தூங்கிட்டு இருந்தாங்க..நான் குளிச்சிட்டு வந்த ரொம்ப நேரம் கழிச்சு தான் எல்லாரும் எழுந்து பேசிட்டு இருந்தாங்க..அப்போதான் தெரிஞ்சது இராத்திரி எல்லார் சாப்பாட்லையும் தூக்க மாத்திரை கலந்திருக்காங்கனு…அந்த ராஸ்கல்ஸ் தான் ஏதோ பண்ணிருக்கானுங்கனு புரிஞ்சது..ஆனா என் வாழ்க்கையை அழிச்சது யாரு, என்ன,  எத்தனை பேர்னு எதுவுமே எனக்கு தெரில… இத என்னால வெளிலையும் சொல்ல முடில…..பிரம்மை புடிச்சமாதிரி இருந்தேன்…அம்மா அப்பாகிட்ட நான் என்னனு சொல்றது..என் மேல தப்பில்லன்னு அவங்க புரிஞ்சுகிட்டாலும் அவங்களுக்கு இது தெரிஞ்சா எவ்ளோ கஷ்டம்னு யோசிச்சிட்டே இருந்தவ அங்கிருந்து கிளம்ப ரோடு கிராஸ் பண்ணும் போது  தான் ஆக்ஸிடெண்ட் ஆச்சு…அவங்களை தொல்லை பண்ணாம அப்டியே போய்டணும்னு தான் நினச்சேன்..ஆனா என் தலையெழுத்து இப்டி இத்தனை வருசமா அவங்கள கஷ்டப்படுத்திட்டேன்..என் அவசரத்தால இதுவரைக்கும் நான் எல்லாரையும் காயப்படுத்தினதே போதும்..ப்ளீஸ் இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காத விட்று..” என அவள் கதறி அழ

சிவா மௌனமாக இருக்க சந்தியா “பதில் சொல்லு சொல்லுன்னு கேக்கிறிங்களே…இதை என் தங்கச்சிகிட்ட சொல்ல சொல்றியா? அவ என்னை பத்தி என்ன நினைப்பா? இதெல்லாம் எதுவும் தெரியாம சும்மா லவ் பண்றேன்னு உளறிட்டு…போ இங்கிருந்து…” என கத்த

“இது தான் உன் பிரச்னையா? இப்போவும் சொல்றேன் சந்தியா அது உன் வாழ்க்கைல முடிஞ்சு போன ஒரு பகுதி..இப்போ நீ புதுசா பொறந்திருக்கிறதா நினைச்சுகோ…அதுல இருந்து நீ வெளில வா சந்தியா…” என சொல்ல

கோபத்தில் அவள் கைகள் நடுங்க “உனக்கு என்ன சொன்னாலும் புரியாதா…என்னால அந்த லைப்ல…” என முடிக்கும் முன்

“சந்தியா ஸ்டாப் இட்…முதல இவளோ பதறதை நிறுத்து…” என்றவன் அவளின் கைகளை அழுத்தமாக பிடித்தவன்

“உனக்கு இப்போ என்ன பிரச்னை ஒன்னு உன் தங்கச்சிக்கு இது தெரிஞ்சா என்ன நினைப்பானு தானே..உனக்காக சொல்றேன்..அவளுக்கு இது முன்னாடியே தெரியும்..” என்றதும் சந்தியா அதிர்ச்சியாக “என்கிட்ட மித்து இதை முன்னாடியே சொல்லிட்டா…ஆக்சிடெண்ட் ஆனதுமே  இங்க உன்னை கூட்டிட்டு வந்து ட்ரீட்மெண்ட் குடுக்கும் போதே வந்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்ல இருந்து உன் அம்மாக்கும், தங்கச்சிக்கும் தெரிஞ்சிக்கு…அதை ஒரு குறையாவும் எடுத்துகல, உன்னை ஒதுக்கியும் வெக்கல..உன் அப்பாகிட்ட கூட இப்போவரைக்கும் அவங்க சொல்லல…நான் உன்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சதும் என்கிட்ட மித்துவும் நிறையா பேசிட்டு தான் கடைசியா இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி அப்போவும் ஓகேவானு கேட்டா…ஒரு காலத்துல நீ அவளை குழந்த மாதிரி பாத்துகிட்ட…ஆக்சிடெண்ட் அப்புறத்துல இருந்து அவ இப்ப வரைக்கும் உன்னை அப்டித்தான் பாத்துகிறா..இப்போவும் உன் மேரேஜ் விஷயத்துல நீ கேக்கிரதை விட பல கேள்விகள் என்னை கேட்டு திணற வெச்சு தான் உன் தங்கச்சி என்னை இங்க பேச விட்டிருக்கா..வேற யார்க்கும் இதுவரைக்கும் உன்னோட பிரச்னை தெரியாது..தெரிஞ்ச மூணு பேரும் வெளில சொல்ல போறதில்லை…சோ தப்பா நினைப்பாளோனு உனக்கு எந்த தயக்கமும் இல்லாம இரு…

 

உன்னோட அடுத்த பிரச்னை கல்யாண லைப்ல உன்னால சாதாரணமா ஏத்துக்கமுடிலேனு சொன்னது…அது எனக்கு புரியுது..நான் வெயிட் பண்றேன்…எனக்கு உன்னோட லவ் தான் வேணும்…மீதி எல்லாம் அப்போ சொன்னதுதான்..நமக்கு வாழ்நாள் முழுக்க டைம் இருக்கே..சோ டேக் யுவர் ஓன் டைம்..எனக்கும் உனக்கும் இடைல மட்டும் தான் இந்த விஷயம்.. இது உன் தங்கச்சிக்கு கூட சொல்லணும்னு அவசியம் இல்ல…அவளும் உன்னை கேட்டு கஷ்டப்படுத்த மாட்டா…ஓகேவா? வேற ஏதாவது ப்ரோப்லேம் இருக்கா?”

 

அவள் சில கணங்கள் எதுவும் கூறாமல் இருக்க “யோசிச்சு எப்போ கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லு..மத்தபடி உனக்கு என்னை பிடிச்சிருக்குனு இப்போ எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்..” என அவன் கூற சந்தியா “அவ்ளோ தைரியமா உனக்கு..”

“பிடிக்கலேன்னு நீ ப்ரோமிஸ் பண்ணு பாக்கலாம்..” என அருகே அமர்ந்து அவன் இடித்து கொண்டே கேட்க  முறைக்க முயன்று சிரித்துவிட

திடீரென “ஐய்யயோ” என பதற

சிவா “என்ன..என்னாச்சு.?”

“நீ என்னைவிட சின்ன பையன் தானே…”

“இப்போவாது கேட்டியே…” என அவன் கால் நீட்டி அமர

“அதெல்லாம் இல்ல..இந்த கல்யாணம் நடக்கா…”

“கொஞ்சம் பேசவிடுறியா? நான் நீ ஒரே ஏஜ் தான்..”

நம்பாமல் பார்த்துவிட்டு “உண்மையாவா? அப்புறம் எப்படி மித்துகூட படிச்ச…”

“ஒரு 9த் வரைக்கும் நான் அம்மா அப்பா எல்லார் மாறியும்  நல்லாத்தான் பேமிலி இருந்தது…அப்புறம் என்ன ப்ரோப்லம்னு தெரில அம்மா அப்பா டிவோர்ஸ் அப்ளை பண்ணிட்டாங்க..என்னால அத ஏத்துக்கவே முடில…படிப்புல கான்செண்ட்ராட் பண்ண முடில.. 10த்ல 2 தடவ பெயில் ஆகினேன்.. நிறையா ப்ரோப்லேம் தினமும் வீட்ல  சண்டை ஒரு கட்டத்துல அம்மா ரொம்ப பேசிட்டாங்க.. அப்பா கோபத்துல அம்மாவை அடிச்சு அவங்க தலைல நல்ல அடி…அப்பா வேணும்னு செய்யலனு தெரியும்…இருந்தாலும் அப்பாவால அதை ஏத்துக்கமுடில..ஏன்னா இரண்டுபேரும் அவ்ளோ லவ் பண்ணாங்க…

 

‘அவசரத்துல இப்டி பண்ணிட்டேன்..நானும் உன் அம்மாவும் அவ்ளோ சண்டை போட்டு பிரிஞ்சு போக முடிவெடுத்ததுக்கு பதிலா உக்காந்து பேசிருக்கலாமோனு இப்போ தோணுது..அவ இல்லேனு மனசார உணரும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு..என்னால இதுக்கு மேல வாழ முடியாது..என்னை மன்னிச்சுடு சிவா’னு

 

லெட்டர் எழுதி வெச்சுட்டு அப்பாவும் சூசைட் பண்ணிட்டாரு..ஆம்புலன்ஸ்கு கால் பண்ணிட்டு வண்டிய பாத்து கூட்டிட்டு வரதுகுள்ள இரண்டுபேருமே இறந்துட்டாங்க…

என்ன பண்ணனும், எங்க போகணும்னு எதுவும் தெரில…அழுககூட இல்லாம அப்டியே இருந்தேன்..அப்பாவோட பிரெண்ட், பக்கத்து வீட்டுல இருந்தவங்க எல்லாரும் சேந்து தான் எல்லாத்தியுமே பாத்துகிட்டாங்க..அம்மா அப்பா லவ் மேரேஜ்னால யாரும் அவங்ககூட பேசாம இருந்தாங்க…ஒரு வாரத்துக்கு மேல வாசுகி பெரியம்மா வந்தாங்க…எல்லார்கிட்டயும் பேசி அவங்களே என்னை கூட கூட்டிட்டு வந்திட்டாங்க….நான் படிக்கல..அப்டியே சும்மா இருந்தேன்..ஹாஸ்டல்ல சேத்தினாங்க…அப்போவும் நான் எதுக்கும் ரியாக்ட் பண்ணல..எல்லா எக்ஸாம்ஸ்லையும் பெயில்…பல வருஷத்தை சும்மாவே கழிச்சேன்…ஸ்கூல்ல இருந்து அனுப்பிச்சிட்டாங்க…அப்புறம் தான் பெரியம்மா கூப்பிட்டு பேசுனாங்க….பல பேருக்கு படிப்பு, சாப்பாடு, இருக்க இடம் இதுகூட கிடைக்கறது ரொம்ப  கஷ்டமா இருக்கு…உனக்கு நீ கிடைச்ச எல்லாத்தையும் எவ்ளோ வேஸ்ட் பண்ணிட்டு இருக்கன்னு பாரு…நான் உன்னை திட்டவோ அட்வைஸ் பண்ணவோ போறதில்லை…அம்மா அப்பா போய்ட்டாங்கதான்..ஆனா நீ இந்த உலகத்துல இருக்கறதுக்கு கண்டிப்பா ஏதாவது ஒரு விஷயம் இருக்கும்…உன்னோட ப்ரேசென்ட்ஸ் இங்க இன்னும் தேவைபடுதோ என்னவோ..வாழணும்னு ஆசைப்பட்டா அதுக்கு ஏத்தமாதிரி முடிவு பண்ணு நல்லா படி..உனக்கு பிடிச்சதை பண்ணு…இல்ல வாழ பிடிக்கலேன்னாலும் தேவைப்படுறவங்களுக்கு அதை குடுத்துட்டு போய்டு…இப்டி எல்லாத்தையும் வீணாக்கிட்டு இருக்காது..எனக்கு ரொம்ப செண்டிமெண்ட்டா பேசுறது, எமோஷனலா ஒருத்தரை கட்டிபோடுறது எல்லாம் வராது…நானும் அப்டி இல்லை..நானே இண்டிபென்டென்ட்டா தான் இருக்கேன்..சோ உன்னை என் பேச்சை கேட்கணும்னு கட்டாயப்படுத்த மாட்டேன்..முடிவு உன்னோடது..” என சென்றுவிட்டார்…

பாட்டி “சிவா கண்ணு, எனக்கு தெரியும் நீ எங்க மேல எல்லாம் கோபமா இருப்ப..ஆனா ஏனோ காதலிச்சதால மட்டும் கோபப்பட்டு பேசாம வராம இல்லை..உன் பெரியம்மா கல்யாணம் முடிவான போது தான் உன் அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணி நகை எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிபோய்ட்டா..உன் தாத்தா இறந்துட்டாரு…ரொம்ப பிரச்னை, கடன் வேற, ஊரே உன் அம்மாவை பத்தி தப்பா பேசிச்சு..ஆனா உன் பெரியம்மா அவளை ஒரு வார்த்தை சொல்லல… சொந்தக்காரங்ககிட்டேயும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அவ வாழ போயிருக்கா…இனிமேல் அவளை யாரும் ஒருவார்த்தை சொல்லகூடாதுனு சொல்லிட்டா…அவங்களும் இவளையும் திட்டுட்டு போய்ட்டாங்க…யாருமே இல்லாம இவ மட்டும் தனிமரமா இப்டியே இருந்துட்டா..காலேஜ்ல வேலை வாங்கி கொஞ்ச கொஞ்சமா கடனை அடைச்சா..இப்போவும் உன் பெரியம்மா சொல்லி வருத்தப்படுற ஒரே விஷயம் ‘அவ காதலிச்சத சொல்லிருக்கலாமேனு தான்..’

மத்தபடி தன்னோட வாழ்க்கை, வயசு எல்லாமே போச்சுங்கிறத பத்தி அவ வருத்தப்படவே இல்ல…இப்போவும் விஷயம் கேள்விப்பட்டதும் நீ என்ன பண்ணுவியோன்னு தான் மனசு கேட்க்காம வந்து கூட்டிட்டு வந்துட்டா…அவளுக்கு பாசம் அதிகம் தான்..ஆனா அவ காட்டிக்கதான் மாட்டா…நான் ஏன் இதெல்லாம் உன்கிட்ட சொல்றேன்னா அவ வாழ்க்கைல ஒரு பிடிப்பு உன் மூலமாவது வரட்டும்னு தான்…”

சிவா அதன் பின் தனியாக யோசித்தவன் நேரே சென்று “நான் படிக்கறேன்…” என்றான்..

அடுத்து படிப்பு, ஸ்போர்ட்ஸ் என அனைத்தும் அவன் கேட்டது மட்டும் தான்.. அவன் கேட்பான், அவனது பெரியம்மா செய்வாள், இல்லையெனில் அதில் இந்த பிரச்னை இருக்கு பரவால்லையான்னு யோசிச்சு சொல்லு என கூறுவார்…அதன் பின்னும் அவன் கேட்டால் இஷ்டப்படி செய்ய சொல்லிவிடுவாள்…மற்றபடி இருவருக்கும் எந்த பற்றும் அதிக பேச்சும் இருந்ததில்லை..

சிவா “ரொம்ப அட்டாச்மென்ட் இல்லை..ஆனா அவங்க ரொம்ப நல்லவங்க..”

என் லைஃப்ல பெரியம்மா, பிரண்ட்ஸ் அவ்ளோதான்..இவங்க எல்லாரும் கூட தானா வந்தாங்க…நான் என் லைப்ல வேணும்னு ஆசைப்படுற ஒரு ஆள் நீ…இனி இருக்க போற லைப்பாவது நீ எங்கூட இருப்பியா சந்தியா? அந்த கேள்வியில் தெரிந்த காதல் ஏக்கம் அவளுக்கு அதன் பின் மறுக்க தோன்றவில்லை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 17’

17 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   சந்தியாவும் அழுகையுடன் அவள் முதுகை வருடி கொடுத்தபடி “டேய் மித்து….இங்க பாரு…அழக்கூடாது..நான் உன்னை வம்பிழுக்க தான் டா கேட்டேன்..சரி என்ன பாரு..” என அவளை வலுக்கட்டாயமாக நிமிர்த்தியவள் “என் மித்து குட்டி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’

5 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அவள் ஒரு நொடி இவளை மேலிருந்து கீழ் வரை யாரென பார்க்க “ஹாய் நான் மித்ரா..நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..உங்களுக்கு பதில் தானே வேணும்…எதனால விட்டு பிரியறதுக்கு சான்ஸ் இருக்குனு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’

20 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் காலையில் எழுந்தவன் சிவா சந்தியாவை காதலிக்கறேன் என கூறியதை தியாவிடம் கூற அவள் ஷாக் ஆக “என்ன ஆதி சொல்ற? இதெல்லாம் நடக்கற காரியமா? போச்சு, அப்பா, அக்கா இரண்டுபேருமே ருத்ரதாண்டவம் ஆடப்போறாங்க…உன்