Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 20’

20 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

காலையில் எழுந்தவன் சிவா சந்தியாவை காதலிக்கறேன் என கூறியதை தியாவிடம் கூற அவள் ஷாக் ஆக “என்ன ஆதி சொல்ற? இதெல்லாம் நடக்கற காரியமா? போச்சு, அப்பா, அக்கா இரண்டுபேருமே ருத்ரதாண்டவம் ஆடப்போறாங்க…உன் பிரண்ட் தானேனு சொல்லி என்னையும் திட்ட போறாங்க..” என

“ஹே தியா ஜஸ்ட் ரிலாக்ஸ்…என் தியாவா இப்டி பதறது?”

“ஐயோ ஆதி அக்காவை பத்தி உனக்கு தெரியல…அவ ரொம்ப பிடிவாதம்..முடிவு பண்ணா மாத்தறது ரொம்ப கஷ்டம்..”

“கரெக்ட் தான்..எனக்கு உன் அக்கா பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியா பத்தி நல்லா தெரியும்..அவ நினைச்சத, ஆசைப்பட்டதை எப்படியும் செஞ்சுகாட்டிடுவானு..உன்னோட அந்த பிடிவாதம் தான் எனக்கு தெரியும்..எனக்கு ரொம்ப பிடிச்சதும் கூட..சோ..”

“ஆனா..”

“ஷ்…உனக்கு சிவா சந்தியா அண்ணி மேரேஜ்ல ப்ரோப்லேம் இல்லேல..”

“எனக்கு டபிள் ஓகே..ஆனா அக்கா என்ன சொல்லுவாளோனு தான்..”

“அவங்களை நீ சமாளி..பேசி ஒத்துக்கவை..மாமா அத்தைகிட்ட நான் பேசுறேன்…ஓகே தானே..”

“ஓகேஏஏஏஏஏஏஏஏஏஏ..” என கத்திவிட்டு சென்றாள்..

 

அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் போது மித்து “டாடி, அடுத்து எப்போ டாடி பிளான்?”

வெங்கடாச்சலம் விழித்துவிட்டு “எதை பத்திடா மித்து மா கேக்கற?”

“வேற என்ன? அக்கா மேரேஜ் பத்தி தான்..” என்றதும் அனைவரும் மித்துவை அதிர்ச்சியாகி பார்த்துவிட்டு சந்தியாவை பார்க்க அவள் கை கழுவிவிட்டு அறைக்குள் சென்று பட்டென கதவை அடைக்க

கவிதா “ஏன் டா..இப்போ போயி..” என

மித்து சந்தியாவின் தட்டை காட்டிவிட்டு “உன் பொண்ணு முழுசா சாப்பிட்டத பாத்திட்டு தான் ஆரம்பிச்சேன்…நீயும் ஆதியும் அப்பாகிட்ட பேசுங்க..நான் அவகிட்ட பேசுறேன்..” என உள்ளே சென்றாள்..

வெங்கடாச்சலம் பெருமூச்சுடன் எழுந்து போக கவிதா “ஏங்க மித்து சொல்ற விஷயம்?”

“நான் என்ன வேண்டாம்னாமா சொல்ல போறேன்…ஆனா…”

“அப்புறம் ஏன் மாமா தயங்குறீங்க..சந்தியா அண்ணிகிட்ட நீங்க பேசலாம்ல..” என்ற மித்ரனிடம்

“எனக்கு ஆசைதாப்பா..ஆனா அவ இத்தனை வருஷம் கழிச்சு படுத்தபடுக்கையா இருந்து இப்போதான் உடம்பு தேறி வந்திருக்கா..ஏற்கனவே அவ முழுசா படிக்க முடில, அவ ஆசைப்பட்ட மாதிரி ஸ்போர்ட்ஸ்ல போக முடிலனு அப்பப்போ பொலம்புறதை பீல் பண்றதை நம்மளே பாக்குறோம்..அவளுக்கு கோபம் வேற பட்டுபட்டுனு வருது…டாக்டர்ஸ் இன்னும் அவ மனசளவுல அவங்களோட இத்தனை வருஷ வாழ்க்கையை இழந்ததை ஏத்துக்க முடியாம இருக்காங்க..அதனால இப்டி தான் ரியாக்ட் பண்ணுவாங்கனு சொல்லிட்டாங்க.. இது எல்லாம் சொல்லி ஒரு பையன பாத்தா ஓரளவுக்கு நல்லவனா இருந்தாலும் கூட அவன் குடும்பத்துல இருகிறவங்க என்ன சொல்லுவாங்களோனு இருக்கு..சில நேரம் வரதட்சணை அதிகம் கேட்டு குடுக்கறோம்னு நாம சொன்னாலும் அது இவளுக்கு புடிக்காது..என்னை இத்தனை வருசமா பாரமா தான் பாத்துகிட்டு இருந்திங்களா? பணத்தை குடுத்தாவது தள்ளிவிட்டா போதும்னு நினைகிறீங்களானு சட்டுனு கேட்டிருவா…அதையெல்லாம் என்னால தாங்கமுடியாது..” என

 

“இல்ல மாமா..அந்த மாதிரி எல்லாம் எந்த பிரச்னையும் இல்லாம அண்ணியோட குணத்தையும் பிரச்சனையும் புரிஞ்சுகிட்டவன பாக்கலாம்..”

“அப்டி ஒருத்தனை எங்கப்பா கண்டுபுடிப்பேன்?”

“நம்ம சிவா தான் மாமா..அவன் உங்களுக்கு ஓகே தானே..”

அவருக்கு அதிர்ச்சியாகி பார்க்க மித்ரன் “தப்பா எடுத்துக்காதீங்க மாமா…நம்பி வீட்டுக்குள்ள விட்டாதான் லவ் வரணும்னு இல்லை..அது உங்களுக்கே தெரியும்…எங்க இருந்து லவ் பண்ணாலும் கடைசிவரைக்கும் விடாம இருக்கணும், யாரையும் கஷ்டப்படுத்தாம பெரியவங்க ஆசிர்வாதத்தோட கல்யாணம் பண்ணனும்..அதை தான் அவனும் ஆசைப்படுறான்…அவனுக்கு அண்ணிய பாத்ததுல இருந்தே புடிச்சிருக்கு..கல்யாணம் பண்ணிக்க தானே ஆசைப்படுறான்..ஆனா அவங்களோட பிரச்சனை, மனசளவுல குழப்பம் இல்லாம ஸ்ட்ரோங்கா வரணும்னு தான் அவன் வெயிட் பண்றான்..இன்னமும் வெயிட் பண்ண அவன் தயாராத்தான் இருக்கான்..தியா இருக்கற வரைக்கும் ஓகே..அவ இல்லாதபோது அண்ணி அவங்களே தேவையில்லாம முடிஞ்சத பத்தி யோசிச்சு தன்னை தானே  வருத்திக்ககூடாதில்லை.. அதான் தியாவும் நானும் யோசிச்சது கண்டிப்பா அண்ணிக்கு லைப்ல ஒரு துணை வேணும்..அதுவும் இந்தமாதிரி சமயத்துல அவங்க குழப்பத்தை மாத்துற ஒருத்தர் வேணும்னு தோணுச்சு..அது சிவாவா  இருக்கிறது எங்களுக்கு சந்தோசம் தான் உங்களுக்கு எப்படினு நீங்க தான் சொல்லணும்….சிவாவை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்..யோசிச்சு முடிவு பண்ணுங்க மாமா..”

 

இதே தான் உள்ளே மித்து சந்தியாவிடம் கூற அவளோ மறுக்க வேண்டாம்னு சொல்ல காரணம் சொல்லு என மித்து வம்பு பண்ணிகொண்டு இருந்தாள்..

அறைக்குள் அனைவரும் வர சந்தியா “அப்பா, இவ ஒளறிட்டு இருக்கா…நீங்களாவது சொல்லுங்க..”

“நான் சொல்ல என்ன மா இருக்கு..நீ தான் பதில் சொல்லணும்..” என

“அப்பா நீங்களுமா?”

“தப்பில்லாத எந்த கேள்வியும் கேட்க பயப்படகூடாதுனு நீதான் சொல்லுவ சந்திமா..எனக்கு மித்து கேட்க்கிறதுல எந்த தப்பும் தெரில..”

சந்தியா “அப்போ எல்லாரும் பேசி வெச்சுட்டு என்னை கார்னெர் பண்றிங்களா?”

“அக்கா நீ தெளிவா பதில் சொல்லு..உனக்கு சிவாவை பிடிக்கலையா? இல்லை கல்யாணம் பிடிக்கலையா?”

“இரண்டுமே தான்….இப்போ எல்லாரும் ஏன் இந்த கல்யாணத்தை பத்தி பேசுறீங்க..நான் உங்களுக்கு அவ்ளோ இடைஞ்சலா இருக்கேனா..சொல்லுங்க வீட்டை விட்டு எங்காவது போய்ட்றேன்..”

கவிதாவும், வெங்கடாச்சலமும் பாவமாக மித்ரனை பார்க்க மித்து “தாராளமா..கல்யாணம் பண்ணிட்டு எங்கேயோ உன் புருஷன் கூட போ..”

“மித்து..ஷட் அப்..என்ன ஜாலியா, டாபிக் சேன்ஜ் பண்ண பாக்கறியா?”

“கிடையவே கிடையாது…எனக்கு கண்டிப்பா தெளிவா ஒரு பதில் வேணும்..நீதான் டாபிக் சேன்ஜ் பண்ணி எல்லாரையும் ஹர்ட் பண்ண பாக்குற..”

அவள் திரும்பி கொள்ள “நீ எப்போ ஊருக்கு போற?”

“ம்ச்..நான் கேட்டதுக்கு நீ முதல பதில் சொல்லு கா..”

“போதும் மித்து..இது தான் உன் லிமிட்..நான் யாருக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல..உனக்கும் தான்…நீ எதுக்கு டி என் வாழ்க்கைல தலையிடற?”

கவிதா, வெங்கடாச்சலம் “சந்தியா” “என்ன பேசுற?”

மித்து “மா, டாடி..கூல்..நீங்க ஏன் எமோஷனல் ஆகுறீங்க..அவ வீம்புக்கு பேசிட்டு இருக்கா…என்னை காயப்படுத்தி இந்த விஷயத்தை யாருமே எடுக்காத அளவுக்கு மாத்த ட்ரை பண்றா..ஆனா அக்கா நான் உன் தங்கச்சி எனக்கு பிடிவாதம் ஜாஸ்தி..உன்கிட்ட பேசணும்னு முடிவு பண்ணும்போதே எவ்ளோ எக்ஸ்ட்ரீம்ல பேசுனாலும் அதை கண்டுக்க கூடாதுனு முடிவுல தான் வந்திருக்கேன்..சோ இந்த மாதிரி சிம்பிள் மெத்தெட் எல்லாம் அம்மா டாடியோட வெச்சுகோ….”

 

“ஏன்டி எனக்கு என்ன குறை…இப்போ கல்யாணம் பண்ணாட்டி என் வாழ்க்கை ஒண்ணுமே இல்லாம போய்டுமா? படிப்பு, கரீர் எல்லாம் இத்தனை வருஷம் இல்லாததால எனக்கு எப்போவுமே அடுத்தவங்க தயவு வேணும்னு நினைக்கிறிங்களா? என்னால சமாளிச்சு தனியா வாழ முடியாதா? நான் யாருக்கும் யூஸ் ஆகாம இத்தனை வருஷம் இருந்ததால தானே என்னை யார் தலையிலேயாவது கட்டிவிடணும்னு பாக்குறீங்க?”

“ஒளறாதக்கா…உனக்கு உடம்பு சரியில்லாம இருந்ததால தான் இத்தனை வருஷம் விட்டாங்க..இல்லாட்டி எப்போவோ உனக்கு கல்யாணம் முடிஞ்சு இப்போ நான் உன் குழந்தைகூட இருந்திருப்பேன்..உனக்கு ஆக்சிடெண்ட் ஆகும்போது உனக்கு ஓரளவுக்கு விவரம் தெரிஞ்ச வயசு தான்..அதுவரைக்கும் கூட நீ கல்யாணமே வேண்டாம்னு எல்லாம் சொன்னதில்லை..இன்னும் சொல்லப்போனா உனக்கு அந்த மாதிரி ஒரு பேமிலி என்விரோன்மெண்ட், குழந்தைங்க எல்லாம் எவ்ளோ பிடிக்கும்னு எங்களுக்கு தெரியும்..அப்டி இருக்கும் போது இப்போ நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ல என்ன காரணம்னு தான் கேக்குறோம்..”

சந்தியா கோபத்தில் அருகில் இருந்த பென் ஸ்டாண்டை தூக்கி வீச, மித்ரா சளைக்காமல் பிளவ்வர் வாஷ் இரண்டையும் அவளை விட வேகமாக தூக்கி கீழே போட்டு உடைத்தாள்..

“காரணமே இல்லாம நீ கோபப்பட்டா நானும் அதுக்கு மேல தான் இருப்பேன் கா…”

கவிதா வெங்கடாச்சலம் இருவரும் பதற மித்ரன் அவர்களை தடுத்து அவளே பாத்துகிட்டும் என்றான்..

 

மித்ரா “எனக்கு ஒரு விஷயம் தான் புரில… நாங்க எல்லாரும் உனக்கு நடந்த விபத்தை ஒரு விபத்தா மட்டும் தான் பாக்குறோம்…நீ தான் அதை ஏதோ குறை மாதிரி பாக்குற..நாங்க இல்ல..

இப்போ என்ன ஆக்சிடெண்ட் ஆச்சு..கொஞ்ச வருஷம் ட்ரீட்மெண்ட்ல இருந்த..இப்போ சரி ஆகிடிச்சு..முடிஞ்சத விட்டுட்டு எப்போவும் போல நார்மல் லைப்ப வாழுனு சொல்றோம் அதுல உனக்கு என்ன கஷ்டம்?”

இவளை என்ன செய்வது என புரியாமல் சந்தியா ஒரு கட்டத்தில் அமர்ந்து அழத்துவங்கிவிட்டாள்…

சில நிமிடம் அவளை அழவிட்டு பின் அவளின் முன் மண்டியிட்டமர்ந்தவள் “அக்கா, நீயே ரொம்ப யோசிச்சு உன்னை வ்ருத்திக்காத கா..மத்தவங்க பண்ண தப்புக்கு, தெரியாம வாழ்க்கைல நடந்த ஒரு விபத்தை நினைச்சே நீ ஏன் கா உன் வாழ்க்கையை தொலைக்கணும்..” என கூற அவளின் தோள் சாய்ந்து அழுதாள் சந்தியா..

மித்ராவும் தன் கண்ணீரை அடக்கிகொண்டு “சரி இங்க பாரு..நீ எங்க யாருக்கும் பதில் சொல்லவேண்டாம்..ஆனா உன்னை ஒருத்தன் விரும்பறேன்னு சொல்றான்ல..அவனுக்கு உனக்கு தோணுச்சுனா பதில் சொல்லு..நீங்க இரண்டுபேரும் பேசி முடிவு பண்ணுங்க..அது எந்த முடிவுன்னாலும் எங்களுக்கு ஓகே..” என்றவள்

அனைவரையும் அழைத்துகொண்டு வெளியே வந்தாள்…ஹாலில் இருந்த சிவாவிடம் மித்து “நீ போயி பேசு..” என அனுப்பிவிட்டு இவர்கள் காத்திருந்தனர்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 15’

15 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   காலையிலேயே அனைவரும் எழுந்து வேலை செய்ய எங்கேயோ கிளம்ப சிந்து, சங்கர், கவிதா அனைவரும் வந்து எழுப்பியும்  “கடைக்கு நீங்களே போயிட்டு வாங்க மா..எனக்கு சொகமா தூக்கம் வருது..நான் இப்டியே இருக்கேன்..”

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’

3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’

2 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் குணா hod வாசுகி மேடம் முன் தலைகவிழ்ந்த படி நிற்க எதிரே நின்ற சிவா அவனை முறைத்தான். இதை கண்ட வாசுகி “சிவா இப்போ எதுக்கு குணாவ முறைக்கிற?” என தன்