Tamil Madhura வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 19’

19 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்

 

மித்து அழுகையை நிறுத்தவே இல்லை..கலை கவிதா அனைவரும் அழுக மயக்கம் தெளிந்த பப்பு விழித்ததும் மித்துவின் கண்ணீரை கண்டவன் “மிட்டு பாப்பா..” என்றதும் தான் அனைவருக்கும் உயிரே வந்தது..

“டேய் பப்பு, கண்ணா, எந்திரி மா..இந்தா தண்ணீ குடி…” என அவன் சற்று ஆசுவாசப்படுத்தியதும் அவனிடம் என்னாச்சு என விசாரித்தனர்..

பப்பு “இல்ல மா..வேணும்னு போகல..நானும் மிட்டுவும் வராண்டால விளையாடிட்டு இருந்தோமா..அங்க நாய் ரொம்ப கத்துச்சு…மிட்டு பயந்துட்டா..அதான் நான் அதை விரட்டி விடலாம்னு போனேனா..அப்புறம் தான் அந்த பள்ளத்துக்குள்ள பாத்தேன்..பாவம் மா..அதோட குட்டி நாய் போல..எப்டியோ கீழ விழுந்திடிச்சு..அதுக்கு வர தெரியாம கத்திட்டு இருந்திருக்கு..நான் அப்புறம் பாப்பாவை தூக்கிட்டு வந்து ரூம்ல உட்க்கார வெச்சுட்டு அந்த குட்டி நாய தூக்கி விடலாம்னு வந்துட்டேன்.. எக்கி தூக்குறதுக்குள்ள நானும் கால் தவறி உள்ள விழுந்துட்டேன் மா..ரொம்ப நேரம் கத்தினேன்..அந்த நாயும் கத்திட்டு இருந்தது..யாருக்குமே கேட்கல போல..கொஞ்ச நேரத்துல மிட்டு பாப்பு அழகுற சத்தம் பக்கத்துல கேட்டது…நான்கூட பாப்புவும் இங்க விழுந்திட்டா என்ன பண்றதுனு பயந்தே போய்ட்டேன்..நல்லவேளை அவ உள்ள விழுகுல..கத்திட்டே இருந்ததுல எனக்கு மயக்கம் வந்திடுச்சு..என்ன ஆச்சுன்னே அப்புறம் தெரில..பாவம்மா…ஏம்மா அந்த குட்டி நாய் வெளில எடுத்தாச்சுல? மிட்டு பாப்பு ஏன் அழுகுறா..முள்ளு குத்திருச்சா?” என கேட்டவனை தன்னோடு அணைத்துகொண்ட கலை “இனிமேல் எதுன்னாலும் யாரையாவது கூப்பிடனும், இல்ல சொல்லிட்டு போகணும் சரியா?..பாப்பாக்கு ஒண்ணுமில்ல..அவ உன்னை பாக்க தான் அழுதிருக்கா.. இங்க பாரு..”

பப்புவிற்கு பாவமாக இருக்க அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு “மிட்டு பாப்பு நான் வந்துட்டேன்ல..அழக்கூடாது..சரியா..இந்தா பொம்மை வெச்சுகோ” என அவளை சமாதானப்படுத்த விளையாட்டு காட்ட அவளும் அழுகையினூடே சிரிக்க அனைவரும் “நல்ல புள்ளைங்க போ..டேய் பெரியமனுசா இனிமேல் நாய் விழுந்தது நரி விழுந்ததுனு தனியா எங்கேயும் போகாத..பெரியவங்க யாரையாவது கூப்புட்றா…” என கூறிவிட்டு செல்ல

கண்ணம்மா பாட்டி “நல்லவேளை, அந்த புள்ளை இல்லாட்டி இந்நேரம் இவன் அந்த பள்ளத்துக்குள்ள இருந்தானே யாருக்கும் தெரிஞ்சிருக்காது..கெட்ட நேரத்துலையும் ஒரு நல்ல நேரம் தான்..புள்ளைங்களுக்கு சுத்தி போடுங்க..” என அவர் கூறிவிட்டு சென்றார்..

 

கலை கவிதாவிடம் நன்றி கூற “என்ன கலை இது..இவன் தான் அவளை இவளோ நாள் பாத்துகிட்டான்..அதுக்கு நான் என்ன நன்றியா சொன்னேன்..குழந்தைங்க எதையும் எதிர்பார்க்காம எவ்ளோ அன்பா இருக்காங்க..இப்டியே எல்லாரும் எப்போவும் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்…

அடுத்த ஒரு நாளில் மித்துவின் பிறந்தநாள் வர கலை தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் போட்டு அவளுக்கென்று ஒரு செயின் எடுத்து பப்புவிடம் காட்ட அவன் அவளுக்கு நான் தான் போட்டு விடுவேன் என காத்திருந்தான்…

ஆனால் ஊரில் இருந்து பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று கால் வர கவிதா, சந்தியா, மித்து உடனே புறப்பட்டனர். அதுதான் அவர்கள் கடைசியாக கலை, பப்புவை பார்த்தது..

சந்தியா மட்டும் கூறிவிட்டு போக அங்கே வந்தாள்..அவளிடம் செயின் குடுக்க, “இது எல்லாம் எதுக்கு ஆன்ட்டி..”

“தெரிலடா சந்தியாமா…என் பையன் இன்னைக்கு நல்லா இருக்கான்னா அதுக்கு காரணமே அவ தான்..அது அவ தெரிஞ்சு செஞ்சாலோ, எதேச்சியா நடந்ததோ ஆனா எல்லாமே மித்துனால தான்னு எனக்கு படுது..அவ கூட இருக்கும்போது இவன் எவ்ளோ சந்தோசமா இருக்கான்..அது எல்லாம் பாக்கும் போது அவளுக்கு நிறையா செய்யணும்னு தோணுது..ஆனா இப்போதைக்கு இது தான் என்னால முடிஞ்சது மா..” என்றதும் சந்தியா அந்த செயினை வாங்கியவள் பப்புவின் முகம் பார்த்துவிட்டு அவரிடமே திருப்பி குடுத்துவிட்டு இதை மித்து வந்ததும் இவனே போட்டுவிடட்டும்..போயிட்டு ஒரு வாரத்துல நாங்க வந்துடறோம் சரியா? ” என அவன் முகம் அப்போதும் வாடி இருக்க

“மிட்டு பாப்பு என் கூடவே இருக்கமாட்டாளா? நான் அவளை பத்திரமா தானே பாத்துக்கறேன்..அப்புறம் ஏன்?” என பாவமாக கேட்க

கண்ணம்மா பாட்டி “அதுக்கு நீ அவளை கட்டிகோ.. அவ உன்கூடவே இருப்பா..” என கிண்டல் செய்ய

பப்பு “அப்போ உடனே அவளை நான் கட்டிக்கறேன்..” என்றதும் அனைவரும் சிரிக்க

சந்தியா “அதுக்கு நீ பெரியவனாகணும், வேலைக்கு போகணும்..” என கூற கலையும் இப்போதைக்கு இவனை சமாளிக்கணும் என அவரும் அதேபோல கூற

ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “மிட்டுபாப்புவை பத்திரமா பாத்துகோங்க..பெரியவனாகி வந்து நானே அவளை கூட்டிட்டு போயி சூப்பரா பாத்துக்கறேன்” என்றான்…]

 

இன்று

கவிதா மித்ரனிடம், “நாங்க திரும்பி வரதுக்கு ஒரு வாரம்கிறது ஒரு மாசமாகிடிச்சு. அங்கிருந்து வரதுகுள்ள இவருக்கு ப்ரோமோஷன் குடுத்து இங்க வந்துட்டோம்…அப்புறம் கொஞ்ச மாசம் கழிச்சு தான் தெரிஞ்சது அங்க நடந்த தீவிபத்துல கலை இறந்துட்டானு..பாலகிருஷ்ணன் அண்ணாவும் ஏற்கனவே குழந்தைங்க படிப்பு, கொஞ்சம் பாதுகாப்பான இடம்னு பாத்துட்டு இருந்ததால நடந்த தீவிபத்து இது எல்லாம் காரணமா வெச்சு அங்க இருந்த சில குழந்தைகளை தத்து குடுத்துட்டாங்க, சிலரை வேற ஆசிரமத்துக்கு அனுப்பிட்டாங்கனு சொன்னதும் நீயும் அப்டி எங்கேயாவது போயிருப்பேனு நினைச்சிட்டோம்.. அவரும் நாங்க கலைய எங்க கூடவே கூட்டிட்டு போறோம்னு சொல்லி கேட்டபோதே விட்டிருக்கலாம்…இப்போ தன்னால தான் கலை இறந்துட்டான்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்தாரு..அதுனால தான் உன்னை பத்தியும் எதுவும் கேட்காம விட்டுட்டோம்..” என்றார்.

வெங்கடாச்சலம், சிவா “எல்லாமே ஆச்சரியமா இருக்கு…இத்தனை வருஷம் கழிச்சு இவங்க தான் ஒன்னா சேரணும்னு இருக்கு..”

கவிதா, “ம்ம்..ஆமாங்க…ஒருதடவை நான் கலைகிட்ட கூட கேட்டேன்..நீயும் எங்ககூட வந்திடு..பையனோட படிப்பு எல்லாமே பாக்கணும்லனு..”

ஆனா அதுக்கு அவ சொன்ன பதில், “இல்லைக்கா, அப்டி நான் வந்தா என் பையன மட்டும் தான் கவனிக்க முடியும்..நல்ல படியா படிப்பை குடுத்து வளத்த முடியும்..ஆனா இங்க இருக்கற மத்த குழந்தைங்கள யாருக்கா பாத்துப்பாங்க..அதோட பப்பு வெளில வந்தாதான் நல்லபடியா வருவான்னு இல்ல கா.. அவனை பத்தி எல்லாரும் தப்பா சொல்லும்போது ஆதரிச்சு பாத்துகிட்ட ஒரே இடம் இந்த ஆசிரமம் தான்…அவன் இங்கிருந்தே தான் பெரியாளா வரணும்…இங்க நிறையா நல்லதை பண்ணனும்…கண்டிப்பா பண்ணுவான்..அவன சுத்தி எல்லாரையும் சந்தோசமா வெச்சுப்பான்கா..” என நம்பிக்கையுடன் கூறியதை சொல்லி  மித்ரனை தட்டிகொடுத்து “உன் அம்மா நம்பிக்கையை நீ பொய்யாக்கல..”

 

என கூறிவிட்டு நகர்ந்தார்..

அறையில் மித்து படுக்கையை ஒழுங்கிபடுத்தி கொண்டிருக்க உள்ளே வந்தவன் “தியா..”

“ம்ம்.. சொல்லுங்க ஆதி..” அவன் எதுவும் கூறாமல் அவளையே பார்த்துகொண்டிருக்க திரும்பி பார்த்தவள் கண்களாலையே என்னவென்று கேட்க அவளிடம் வந்தவன் “இன்னைக்கு அத்தை, அண்ணி எல்லாரும் சொன்னதை பத்தி நீ என்ன நினைக்கிற?”

அவள் “அதுல நான் நினைக்க இருக்கு ஆதி..புரில..”

தொண்டையை செருமிகொண்டவன் “இல்லை..அத நம்புறியா? உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கானு கேக்கிறேன்..”

அவள் மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு “என்ன ஆதி கேக்குற..நாலு வயசுல இருந்த உனக்கே எதுவும் ஞாபகம் இல்லை..தவழ்ந்திட்டு இருந்த குழந்தை எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும் சொல்லு..ஆனா இவளோ பேர் சொல்ரத இமாஜின் பண்ணி பாக்கும் போது ரொம்ப நல்லா இருக்கு..பப்பு, மிட்டு எல்லாமே சூப்பர்ல..சரி லைட் ஆப் பண்ணிடு…நான் தூங்கறேன்..” என அவள் படுத்தவள் திடீரென திரும்பி “ஆனா ஆதி நீ எப்போவுமே அத்தைய பத்தி சொல்லும்போது எனக்கு ஆசையா இருக்கும்..ச்ச..இவங்கள பாக்க முடிலையே கூட இருக்க முடிலேனு..இப்போ அவங்க இருந்திருந்தா அவங்களுக்கு என்னை பிடிச்சிருக்குமானு எல்லாம் நிறையா தோணும்..பட் இப்போ ஹாப்பியா இருக்கு..அத்தை என்னை பாத்திருக்காங்க..அவங்களுக்கு என்னை அவ்ளோ பிடிச்சிருக்குனு நினைக்கும் போது..செம ஹாப்பியா இருக்கு..” என குதூகலிக்க அவனும் புன்னகையுடன் ஆனால் காட்டிகொள்ளாமல் “சரி சரி போதும் தூங்கு..” என போர்த்திவிட

தியா கண்களை சுருக்கி அவனை பார்த்துவிட்டு “என்னை ஹாப்பியா பீல் பண்ணவிடமாட்டியே..ம்க்கும்..அதுனால தான் அத்தைக்கு உன்னை விட என்னை பிடிச்சிருக்கு…” என பழிப்பு காட்டிவிட்டு படுத்துகொண்டாள்..

மித்ரன் அவளருகே படுத்தவன் பழைய நிகழ்வுகளை அசைபோட்டான்..இத்தனை நாள் கனவு போல வந்த ஒரு குழந்தையின் சிரிப்பும் அழுகையும், ‘அவளால தான் என் பையன் எனக்கு திரும்ப கிடைச்சான்னு’ சொன்ன அம்மாவின் வார்த்தைகள்..இன்று அனைத்தும் தன் வாழ்வின் முற்பாதியில் நடந்த நிகழ்வுகள் என்றறிந்தவன் மேலும் நினைவுபடுத்திய ஒரு விஷயம் பாலா மாமா பல வருடம் கழித்து தீவிபத்தில் மிஞ்சியது அம்மாவின் ஒரு புடவையும், ஒரு செயினும் தான் என குடுத்தது பற்றி….அது தனக்கானதாக இருக்குமென எண்ணினான்..இருந்தும் அவனால் அந்த செயினை போடமனம் வரவில்லை..அது ஏனோ தனக்கானது அல்ல என்ற எண்ணம் ஓடிகொண்டே இருக்கும்..அதற்க்கான பதில் இன்று அவனுக்கு புரிந்தது..”அருகே இருந்தவளை வெகு நேரம் பார்த்தபடியே உறங்கினான்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’

29 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் மித்துவிற்கு வளைகாப்பு நிகழ்ந்தது.. அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் அன்றும் அவள் சுற்றிக்கொண்டே, ஏதாவது வேலை செய்ய, பேசியபடியே இரவு தூங்க வெகு நேரம் ஆகிவிட்டது..மித்ரனுக்கு சொல்லி சொல்லியே களைத்துபோனதுதான் மிச்சம்..அடுத்த நாள்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 13’

13 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அதன் பின் நடந்தவை,  கனடா வந்தது வரை அனைத்தையும் அசைபோட்டவன் அப்டியே உறங்கியும் விட்டான். ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது..எதிலும் ஆர்வமும் இன்றி பிடிப்பும் இன்றி அவன் தனது அன்றாட பணிகளை

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 14’

14 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   மறுநாள் கால் வர “ஹலோ..” “குட் மோர்னிங் இன்னும் 2 மினியானும் எந்திரிகலையா?” “ஹா ஹா ஹா..பெருசு ஆதி எழுப்பறதுகாக வெய்ட்டிங்…எழுப்பிட்டா இன்னொன்ன அது பாத்துக்கும்..” “சரி..எந்திரிச்சு பிரெஷ் ஆகிட்டு உன்