16 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்
மறுநாள் ஆசிரமத்தில் இருவருக்கும் கல்யாணம் நடந்தேறியது..அடுத்து பதிவு செய்துவிட்டு வீட்டிற்க்கு வந்து சிறிது நேரம் இருந்தனர். அவள் பொதுவாக செல்லும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தனர். அவள் வீட்டில் சந்தியாவின் அறையில் சிந்து, சங்கர், நண்பர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருடனும் பேசிகொண்டு இருக்க சிவா “மித்ரன், மித்துகிட்ட கிளம்பிறத சொன்னியா?”
“இன்னும் இல்லடா..சொல்லணும்…எவ்ளோ சந்தோசமா இருக்கா..இப்போ போயி சொல்லணுமான்னு பாக்குறேன்..”
வெங்கடாச்சலம் “எங்களுக்கும் நீங்க உடனே கிளம்புறது கஷ்டமா தான் மாப்பிளை இருக்கு…இப்போ அவளை பாக்க எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா? மித்து என்னதான் வெளில சாதாரணமா பேசினாலும் நீங்க ஊரை விட்டு போனதும் அவளோட இந்த உண்மையான சிரிப்பு அவகிட்ட இல்லை..அடுத்து கொஞ்ச மாசத்துலையே சந்தியாவையும் ட்ரீட்மென்ட்க்கு அனுப்பிச்சதும் அவ இங்க இருக்கமுடிலேனு தான் பெங்களூர் போனா..அவளுக்கு தோணுனதை செஞ்சா..”
கவிதா “ஆதி மட்டும் தான் மா என் லைஃப்லனு சொல்லுவா…அவனோட இருக்கணும்..அட்லிஸ்ட் அவன் சந்தோசமா இருக்கறத பாக்கணும் அதுலையே நான் ஹாப்பி ஆகிடுவேன்னு சொல்லுவா…உன்னை கண்டிப்பா பாப்பேன்னு அவ்ளோ நம்பிக்கையோட சொல்லுவா….அவ நம்பிக்கை வீண் போகல..
அதோட மித்ரன் உன்கிட்ட அவளை பத்திரமா பாத்துகோனு சொல்லவே வேண்டாம்..ஏன்னா அவ உன்கூட இருக்கும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கா நீ அவளை எப்படி பாத்துகறேன்னு கண் கூட பாத்துட்டோம்..பட் இன்னைகே கிளம்புறீங்கன்னு நினைச்சாதான் கொஞ்சம் சங்கடமா இருக்கு..”
“மாமா, வேணும்னா மித்து இந்த வீக் கூட இருந்திட்டு வரட்டும்..நான் முன்னாடி போயி ஒர்க் பாத்துக்கறேன்..எனக்கும் அவளை இங்கிருந்து அதுவும் இப்டி எல்லாரும் இருக்கும் போது கூட்டிட்டு போக ஒரு மாதிரி இருக்கு..” என அவளுக்காக சொல்ல
கவிதா “அது சரி..அப்புறம் என்னையும் என் ஆதியும் பிரிச்சிட்டீங்கனு உன் பொண்டாட்டி எங்களை பாவமே பாக்காம சபிச்சுடுவா..” என்றதும் அனைவரும் சிரிக்க
“இருக்கட்டும்ப்பா..பிள்ளைங்க எப்போவுமே நம்ம கூட இருந்தா சந்தோசமா தான் இருக்கும்…ஆனா அவங்கவங்க வேலை லைஃப்னு பாக்கணும்ல..என்னங்க நான் சொல்றது சரி தானே..”
“நிச்சயமா..அதோட நாங்க அவ மட்டும் போறான்னு பீல் பண்ணல..இப்டி எங்களுக்கு கிடைச்ச மகனும் போறானேன்னு தான் பீல் பண்றோம்..எங்களுக்கு நீங்க 2பேருமே இருந்ததா சந்தோசம்..சோ பத்திரமா போயிட்டு சீக்கரம் வரப்பாருங்க..” என்றார்..
இவர்களின் அன்பை கண்ட மித்ரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
மித்துவை தனியே அழைத்து “தியா..இன்னைக்கு நாம திரும்ப கனடா போறோம்..” என்றதும்
“ஒஹ்ஹ…சட்டென முகம் வாடினாலும் அடுத்த நொடியே சாதாரணமாக
சரி ஆதி..எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்..இல்ல நீ முன்னாடியே சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன்..” என்றான்..அவளும் புன்னகையுடன்
“அதானே பாத்தேன்..சரி எத்தனை மணிக்கு பிளைட் சொல்லு..” அவனும் நேரத்தை கூறிவிட்டு “தியா என் மேல உனக்கு கோபம் இல்லையா?”
கண் சிமிட்டி “ம்ச்..இல்லை..” என புன்னகையுடன் கூறிவிட்டு சென்றுவிட்டாள்..
பிளைட்டில் வரும்போதும் அவள் எப்போதும் போல அனைத்தையும் பற்றி பேசிகொண்டே வந்தாள்..சிறிது நேரத்தில் அவன் தோளிலேயே சாய்ந்து உறங்கியும்விட்டாள்..அவனுக்கு தான் மனது உறுத்தலாகவே இருந்தது..தான் செய்வது சரியா தவறா என புரியாமல் தவித்தான்..தியாவை பார்த்தான்..எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும் என அவள் சொல்வது நினைவுவந்தது..அவ சொன்னது தான்..சோ அவளே புரிஞ்சுப்பா..பாப்போம் என அவனும் உறங்கலானான்..
மித்ரா, மித்ரன் வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனது..வெளி வேலை, ஆபிஸ் வேலை என அவர்கள் உட்கார நேரமின்றி புது ப்ரொஜெக்ட்டில் சுற்றினர்..இருவரும் வீட்டில் இருக்கும் வேளையில் டிவி, சினிமா, பொதுவிஷயங்கள், குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசுவது, வேலை விஷயம் என அனைத்தையும் பற்றி அலசினர்..பல நேரங்களில் தியா பேசுவது, ஆதி கவனிப்பது, பதில் கூறுவது தான் அங்கே நடக்கும்.. ஆனால் அதற்காக தியா பெரிதாக கேள்வி கேட்பது, சண்டையிடுவது எல்லாம் இருக்காது..உனக்கு ரோபோனு வெச்ச நேம் கரெக்ட் தான்டா என அப்போதும் செல்லமாக அடித்துவிட்டு ஓடிவிடுவாள்..எவ்வளவு தான் பேசிகொண்டாலும் ஒரே அறையில் இருந்தாலும் ஒருவர்க்கு வேண்டுவதை மற்றோருவர் பார்த்து பார்த்து செய்தாலும் அவர்களுக்குள் ஏதோ ஒரு பனிதிரை இருந்துகொண்டே இருந்தது..அத்திரையை உருவாக்கிய ஆதியும் அதை விலக்கமுயற்சிக்கவில்லை..தங்களுக்குள் இந்த இடைவெளி ஏன் என மித்ராவும் ஒருபோதும் கேட்கவில்லை.. மாதங்கள் இப்டியே கடந்தன.. ஊரில் சந்தியாவிற்கு முழுமையாக குணமடைந்துவிட்டாள் என செய்தி வந்தது.
“ஆதி..ஆதி..அம்மா பேசுனாங்க..அக்காவுக்கு கான்ஷியஸ் வந்திரிச்சாம்..”
“ஹே சூப்பர் தியா..கிரேட் நியூஸ்…எப்போ? இப்போ எப்படி இருக்காங்க”
“இப்போ நல்லா இருக்காளாம்..எல்லார்கிட்டயும் பேசுனாளாம்..சின்ன வயசுல பாத்த பேசுன நிறையா விஷயம் சொன்னாளாம்..இப்போ நான் எப்படி இருகேன்? என் போட்டோல பாக்கமாட்டே நேர்ல தான் பாப்பேன்னு சொல்லிருக்காளாம்..இன்னொரு விஷயம் தெரியுமா அக்கா கண்முழிச்சு கேட்ட முத கேள்வி மித்து எங்கேனு தானாம்..” என அவள் மகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்க்க கூற ஆதி புன்னகையுடன் அவள் கன்னம் தொட்டு தன் தோளில் சாய்த்துகொள்ள “யூ டீசெர்வ் இட் டா..”
“அக்கா பாக்க போலாமா ஆதி?”
“கண்டிப்பா தியா..ப்ராஜெக்ட் கொஞ்சம் அலைன் பண்ணிட்டு நாம போயிட்டு வரலாம்..இல்ல நீ முன்னாடி போறியா?”
“இல்ல இல்ல ஆதி..நீயும் வா..நான் உன்கூட தான் போகணும்..” என மீண்டும் கட்டிகொள்ள அவனும் புன்னகையுடன் “சரி…வா” என அழைத்துச்சென்றான்..
அவள் அதன் பின் எப்போது போகிறோம் என கேட்கவில்லை..ஆனால் அனைத்து வேலைகளையும் விரைந்து முடித்தாள்..ஹோம் ஒர்க் முடிச்சாதான் விளையாடன்னு சொல்லும்போது குழந்தைங்க எப்படி வேகவேகமா எல்லாமே முடிச்சிட்டு வந்து நிப்பாங்களோ அப்டி தான் ஆதிக்கு தியாவும் இப்போது தெரிந்தான்..புன்னகையுடன் அவனும் நகர்ந்துவிடுவான்..முடிந்தளவு அவனும் அனைத்தும் ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த ஒரு வாரத்தில் கிளம்பினர்..வரும்வழி முழுவதும் அவளுக்கு அக்காவின் புராணம் தான்…
“அக்கா..”
அத்தனை வருடம் கழித்து தங்கையை பார்த்தவளுக்கு அழுகை வர இருப்பினும் “ஹே மித்து குட்டி..ம்ம்..என்னை பாக்க வர ஒரு வாரமா?..உனக்கு நான் எல்லாம் அவளோ முக்கியமில்லேல? உன் ஹஸ்பண்ட் தான் முக்கியமா? ” என வம்பிழுக்க
ஓடிவந்து அணைத்து கொண்ட மித்து அழுகையுடனே “அக்கா..எப்படி கா இருக்க? நீ எப்போ என்கிட்ட பேசுவேன்னு நான் எவ்ளோ நாள் காத்திட்டு இருந்தேன் தெரியுமா? எதுன்னாலும் நான் உன்கிட்ட தான் முதல வந்து சொல்லுவேன்..நீ எனக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா? மம்மி டாடிகிட்ட கூட நான் பொய் சொல்லிருக்கேன்.. ஆனா உன்கிட்ட எல்லாமே ஷேர் பண்ணுவேன்..அதுவும் உண்மையதான்..ஆதிய நான் லவ் பண்ணது கூட முதல உன்கிட்ட தான் சொல்லிட்டு போனேன்..ஆதி இங்கிருந்து போனதும் நான் இதுவரைக்கும் யாருகிட்டேயுமே சொல்லி பீல் பண்ணதில்லை உன்னைத்தவிர..அவன் போய்ட்டு நீயும் இல்லாம என்னால இருக்கவே முடில..லாஸ்ட் 2 இயர்ஸ் நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா? ஏன் கா நீ என்கிட்ட இவளோ நாள் பேசல..” என அவள் அழுதுகொண்டே பேச
அனைவருக்கும் அந்த சிறுவயது மித்துவும் அவளது ஏக்கமே தெரிந்தது..இத்தனை நாள் அவள் ஜாலியாக பேசியதை அனைவரும் குழந்தைத்தனம் என எண்ணியது தவறு என வருந்தினர்…