Tamil Madhura யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 69

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 69

நிலவு 69

 

“கண்ணா, உன் ஆசை படி இந்தியா ஜெயிச்சிரிச்சி டா, என்னையும் என் குழந்தையையும் காப்பாத்தி கொடு” என்று அவன் நெஞ்சில் சாய அப்படியே மயங்கினாள்.

 

நினைவடைந்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு காரில் சென்று வேகமாக ஹொஸ்பிடலை அடைந்தான். 

 

அவளை அட்மிட் செய்தவன் உடனே வீட்டினருக்கு தொடர்பு கொண்டான். அவர்களும் ஹொஸ்பிடலை வந்து அடைந்தனர். நண்பிகள் மற்றும் நண்பர்களும் ஹொஸ்பிடலை அடைந்தனர். கிறுவைப் பரிசோதித்த டாக்டர், 

 

“சொரி மிஸ்டர் ஆரவ் உங்க குழந்தையை காப்பாற்ற முடியல்லை. உங்க வைப் ரொம்ப நேரமா உடம்பை கஷ்டபடுத்தி இருக்காங்க. அதனால் தான் மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க, அவங்க இன்னும் 2 மணி நேரம் கண்விழிக்க மாட்டங்க, அவங்களை பத்திரமா பார்த்துகொங்க” என்று கூறிச் சென்றார்.

 

ஆரவோ இடிந்து அமர்ந்தான். 

 

‘தன் குழந்தையை பார்க்க முன்னே இப்படி ஆகிவிட்டதே. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அனைத்துமே ஒரு நிமிடத்தில் தவிடு பொடியாகியதே’ என்று அமரந்திருக்க அவன் அருகில் தேவி அமர்ந்து அவன் தோள் தொட

 

“அம்மா” என்று கதறி அழுதான்.

 

“எங்க குழந்தை எங்களை விட்டு போயிருச்சு மா, அவ ரொம்ப ஆசையா போயிருச்சு” என்று அழுதான்.

 

தேவிக்கோ சந்தோஷம் தாங்கவில்லை. தன் மகன் தன்னோடு பேசி விட்டான். தன்னை தாயாய் ஏற்றுக் கொண்டான். ஆனால் அவனுக்கு மிகப்பெரிய இழப்பு இதை எவ்வாறு அவனுக்கு புரியவைப்பது என்று கலங்கி நிற்க,

 

ஆரவின் மறுபுறம் அமர்ந்த அருண் 

 

“ஆரவ் நீயே கலங்கினாய் என்றால் கிறுவிற்கு யாரு ஆறுதல் சொல்வது?, அவளை உன்னால் மட்டும் தான் ஹென்டுல் பன்ன முடியும். தைரியமா இரு. கடவுள் இருக்காரு” என்று ஆறுதல் கூற

 

“இல்லை பா, அவ ரொம்ப பாவம் பா, என்னால் தான் அவ விளையாட போனாள். என் ஆசைக்காக தான் அவ அடிபட்ட பிறகும் விளையாடினா” என்றான் குற்ற உணர்வின் மிகுதியில்.

 

“இல்லை ஆரவ் உன் மேலே எந்த தப்பும் இல்லை. இது விதி, தப்பை உன் மேலே போட்டுக்காத, கிறுவை சமாதானபடுத்துற வழியைப் பாரு” என்றார் தேவி.

 

தன் கண்களில் இருந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தவன் கிறுவின் அறையிற்குள் நுழைந்தான். வாடிய கொடியாய் உறங்குபவளை பார்க்கும் போது இதயத்தை எவரோ கிழித்தது போல் இருந்தது. அருகில் சென்றவன் ஒரு கையைப் பற்றி தன் இரு கைகளாலும் அவள் மூடிக் கொண்டு அவள் விழிக்கும் வரையில் காத்திருந்தான். 

 

வெளியே இருந்த அனைவருமே இருவரின் நிலையையும் பார்த்து கண்கலங்கி இருந்தனர். இரு மணித்தியாலங்களின் பின் கிறு கண்விழித்தாள். 

 

“கண்ணா” என்று கம்மிய குரலில் அழைக்க 

 

அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

 

“சொல்லு கண்ணம்மா” என்றான்.

 

“நம்ம குழந்தைக்கு ஒன்னும் ஆக இல்லையே, நல்லா தானே இருக்கா?” என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்க,

 

“கண்ணம்மா, கொஞ்சம் மனசை திடப்படுத்திக்க, நம்ம பொண்ணை கடவுள் திரும்ப அவர்கிட்டவே அழைச்சிகிட்டாரு. அவ நம்ம கையில் தவள்வதற்கு இன்னும் காலம் இருக்காம்” என்றான்.

 

“அப்போ குழந்தை இல்லையா?” என்று கூறவே அவள் தொண்டை கரகரத்தது.

 

“ம்ம், அதற்கு இன்னும் காலம் இருக்காம்” என்றான் அழுகையை கடினப்பட்டு அடக்கி.

 

அவள் கதறி அழ அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். 

 

“பிளீஸ் கண்ணம்மா அழாத, என்னால தாங்க முடியல்லை” என்றான்.

 

“நான் யாருக்குமே துரோகம் பன்னவே இல்லையே எதுக்காக எனக்கு இவளோ பெரிய தண்டனை” என்று அழ

 

“எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கலாம் கண்ணம்மா, கடவுள் எதையும் நல்லதுக்கு தான் பன்னுவாரு” என்று கூறினான்.

 

கிறுவின் அழுகை அதிகரித்ததே தவிற குறையவில்லை. ஒரு நிலையில் அவள் உடல் அவளிற்கு ஒத்துழைக்காமல் மீண்டும் மயங்க டாக்டரை ஆரவ் அவசரமாக அழைத்தான்.

 

“இவங்க ரொம்ப மென்டலா டிஸ்டர்பாகி இருக்காங்க. எப்போதும் சந்தோஷமா இருங்க. அவங்களையும் சந்தோஷபடுத்துங்க. தனியா விடாதிங்க” என்று குடும்பத்தினருக்கும், ஆரவிற்கும் அறிவுரை கூறிச் சென்றார். 

 

அன்று முழுவதுமே அவள் ஹொஸ்பிடலில் இருக்க மீடியா முழுவதுமே ‘கிறுவிற்கு என்னவாயிற்று என்பதை அறிய’ குழுமியது. அஸ்வின், வினோவே அவர்களின் கேள்விகளுக்கு சமாளிப்பாக பதில் கூறி அனுப்பி வைத்தனர். குடும்பத்தினர் அனைவரும் அன்றைய தினம் முழுவதுமே ஹொஸ்பிடலில் இருக்க மீராவை, அஸ்வினுடன் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர்.

 

அடுத்த நாள் கிறு கண்விழிக்க ஆரவ் அவளை விட்டு நகரவே இல்லை. மாலை நேரம் அனைவரும் வீடு நோக்கிச் சென்றனர். அவளை அறையில் கையிலேந்திச் சென்று ஆரவ் விட்டான்.

 

“கண்ணா, என் மேலே கோபமா இருக்கியா? என்னால குழந்தைக்கு இப்படியாச்சு என்று?” என்று கேட்க,

 

அவள் அருகில் அமர்ந்தவன் 

 

“என்னால் தான்டி இப்படியெல்லாம் நடந்தது. நான் சொல்லாவிட்டால் நீ விளையாடி இருக்கமாட்டியே? என்னை மன்னிப்பியா கண்ணம்மா?” என்று அழ

 

“லூசா டா நீ, உன்னால எதுவுமே இல்லை, கடவுள் நமக்கு கொடுத்து வைக்க இல்லை அவளோ தான். அதற்கு உன் மேலேயே நீ பழியை போட்டுப்பியா?” என்று அவன் அழுவதைப் பொறுக்க முடியாமல் திட்ட

 

“நீயும் அதை ஏத்துக்க முயற்சி பன்னு கண்ணம்மா, நானும் முயற்சி செய்றேன்” என்றான் ஆரவ்.

 

அவள் அவனை அணைத்துக் கொண்டு அழுது,

 

“ம்ம் சரி டா, முயற்சி பன்றேன்” என்றாள் விசும்பலோடு.

 

அவனும் கண்கலங்கி நின்றான். 

 

அன்றைய தினம் இவ்வாறு சென்றது. நாட்களின் நகர்வில் கிறு அதிலிருந்து வெளிவர முயற்சி செய்தாள். மீராவின் ஒன்பாதவது மாதத்தின் முடிவில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட அவளை ஹொஸ்பிடலில் அட்மிட் செய்தனர். மீராவின் துடிப்பை விட அஸ்வினின் துடிப்பே அதிகமாக இருந்தது. 

 

அவளது பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அழகான ஒரு ஆண் சிசுவைப் பெற்று எடுத்தாள். அவனுக்கு “நவீன்” என்றே பெயர் சூட்டினர். அவர்கள் வீடு விழாக்கோலம் பூண்டாலும் ஒருவராலும் முழுமையாக சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. தாத்தா தர்ஷூ, ஜீவியின் வளகாப்பின் போது இருந்த சந்தோஷம் ஒருவர் முகத்திலும் இல்லையே என்று கவலை கொண்டார்.

 

நாட்கள் அதன் படி நகர, கிறுவால் வீட்டில் இருக்க முடியவில்லை. தன்னால் தன் குடும்பம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது என்று ஆரவுடன் டெல்லியை நோக்கி பயணித்தாள். மாதங்கள் கடக்க கிறுவை ஆரவ் டாக்டரிடம் அழைத்துச் செல்ல 

 

டாக்டர், “இவங்களை இன்னும் இரண்டு மாதத்தில் அழைச்சிட்டு வாங்க, சில டெஸ்ட் எடுக்கனும். இப்போ அவங்க போர்டி அதற்கு சபோர்ட் பன்னாது” என்றார்.

 

இவ்வாறு இரண்டு மாத்திற்கு பிறகு செகப்பிற்கு சென்ற போது 

 

“கிறுவின் கருப்பை தற்போது குழந்தையை தாங்கும் வலிமை இல்லை” எனக் கூற 

 

ஆரவே அவளை முழுமையாக பார்த்துக் கொண்டான். அவளிற்கு தாயாக மாறி செய்ய வேண்டியவை, ஆறுதல் அனைத்தையும் வழங்கினான். இரண்டு வருடங்கள் கடக்க மீரா “ஆதர்ஷ்” என்ற ஆண் மகவை ஈன்றெடுத்தாள். 

 

மீண்டும் வேறு கைனகோலோஜிஸ்டிடம் ஆரவ் அழைத்துச் சென்றான். சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. அதற்கான ரிபோட்டை இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுக் கொள்ளுமாறு கூற பின்னர் ஆரவ் மாத்திரம் சென்ற போது கிறுவால் மீண்டும் தாயாக முடியாது என்ற முடிவு வர ஆரவ் இதை கிறுவிடம் கூறக் கூடாது என்று முடிவு எடுத்தான்.

 

இவர்களுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகிவிட்டது. கிறு தன் தாயின் வீட்டிற்குச் சென்றாள். ஆரவும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நவீன், ஆதர்ஷ் இருவரும் கிறுவை “அம்மு” என்றும் ஆரவை “அப்பு” என்று அழைப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். இருவருக்கும் கிறு, ஆரவ் என்றாள் மிகவும் பிடிக்கும். அதே போலே இவர்களும் நவீன், ஆதர்ஷையும் தங்கள் பிள்ளைகளாகவே நினைத்தனர்.

 

கிறு கொடிகாமத்தை அடைந்ததில் இருந்து ஆரவிடம் பேசுவதைக் குறைத்தவள், அவனைத் தவிர்க்கச் செய்தாள். முடியுமானவரை அவனை விட்டு தூரமாகினாள். அவன் பேசினாலும் அவன் மீது எரிந்து விழுவது என்றே இருந்தாள். இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்று ஆரவும் அறியவில்லை.

 

அவனும் டெல்லியில் இருந்து உடனடியாக கொடிகாமத்தை நோக்கி வந்தான். கிறுவோ அவனைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தாள். அடுத்த நாள் அனைவரும் பகல் உணவை உண்ணும் போது,

 

“மாமா நானும் கிறுஸ்தியும் நாளைக்கு டெல்லி கிளம்புறோம்” என்று கூற

 

“என்னால் எங்கேயும் வர முடியாது” என்றாள் தீர்க்கமாக.

 

“சரி அப்போ இன்னும் ஒரு மூன்று நாள் இருந்து, இரண்டு பேரும் சேர்ந்தே போலாம்” என்று கூற

 

“என்னால உன் கூட வர முடியாது” என்றாள்

 

அவன் கிறுவைக் கேள்வியாய்ப் பார்க்க,

 

“ஆரவ் எனக்கு டிவோர்ஸ் வேணும்” என்று கூறி முடியும் முன்னே ஆரவ் அவள் கன்னத்தில் அறைந்து இருந்தான்.

 

பெரியவர்கள் அதிர்ச்சியாய் பார்க்க நவீன், ஆதர்ஷ் இருவருமே தம் பாட்டிகளின் பின் சென்று நின்றுக் கொண்டனர்.

 

“ஆரவ் கன்ரோல் யுவர் செல்ப்” என்று அஸ்வின் கூற

 

“விடு டா என்னை, என்ன பேச்சு பேசுறா பார்த்தியா உன் தங்கை?” என்று கத்தினான்.

 

கிறுவின் புறம் திரும்பியவன், “ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க என்னை விட்டு விலகி போனாலோ என் மேலே எரிஞ்சி விழுந்தாலோ நான் உன்னை வெறுத்துருவேனா? என் காதலை பற்றி என்னை நினைசிட்டு இருக்க? லூசுத்தனமா ஏதாவது பன்ன நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்” என்றான் கோபமாக.

 

“இல்லை ஆரவ் என்னை விட்டு போயிடு, உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு” என்று கிறு அழுதுக் கொண்டே கூற மீண்டும் அறைந்தான்.

 

“இன்னும் ஒரு வார்த்தை பேசின கொன்னுடுவேன்” என்றான் கோபத்தின் உச்சியில்.

 

“ரூமிற்கு போயிடு கிறுஸ்தி இல்லைன்னா நானே உன்னை காயப்படுத்திடுவேன்” என்றான் மறுபுறம் திரும்பி தன் கேசத்தை அழுந்த கோதி.

 

சிறிது நேரம் இருந்தவன், ஏதோ ஞாபகம் வந்தவனாக அவள் இருந்த அறைக்கு வேகமாக ஓடினான். 

 

அறைக்கதவைத் திறந்தவன் பார்த்தது,

 

தூக்கமாத்திரைகள் இருந்த போத்தலை வைத்திருந்த கிறுவையே…. அவள் அருகில் வேகமாக ஓடியவன் அதைத் தட்டிவிட்டான். 

 

“யேன்டி இப்படி பன்ற? நீ செத்துட்டா நானும் செத்துருவேன் டி” என்றான் அவளை இறுக அணைத்துக் கொண்டு.

 

“இல்லை கண்ணா என்னால் இனி அம்மாவாக முடியாதுன்னு எனக்கு தெரியும் டா, உனக்கு ஒரு குழந்தையை பெத்துக் கொடுக்க முடியாத மனைவி நான். அதான் உன்னை விட்டு விலகி நீ என்னை வெறுக்கனும்னு நினைச்சேன், அப்போ தான் ஈசியா டிவோர்ஸ் வாங்க முடியும். நீ இன்னொரு பொண்ணை கல்யாணம் பன்னி குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருப்ப. நானும் அதைப் பார்த்து சந்தோஷமா இருப்பேன் டா” என்றாள்.

 

“லூசாடி நீ? உன்னை விட்டு இன்னொருத்தியை எப்படி பார்ப்பேன்? சரி இவளோ பன்னியே என்னை விட்டு உன்னால இருக்க முடியுமா?” என்று கேட்க 

 

“இல்லை டா” என்று அழுதாள்.

 

“அப்போ யேன் கண்ணம்மா உன்னையும் கஷ்டபடுத்தி என்னையும் சேர்த்து கஷ்டபடுத்துற?” என்று ஆரவ் கேட்க,

 

“உனக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்குமே, அதிலும் பொண் குழந்தைன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமே, என்னால பெத்து கொடுக்க முடியாதே டா” என்று சிறு பிள்ளையாய் கூற

 

“கண்ணம்மா, குழந்தை தான் வாழ்க்கை இல்லை டி, அதற்கு மேலும் இன்னும் இருக்கு. எனக்கு நீ குழந்தை, நான் உனக்கு நான் குழந்தை, நமக்கு வேறு குழந்தை வேணாம். கடவுள் கொடுத்தால் ஏத்துக்கலாம் ஓகே யா?” என்று அவன் பொறுமையாக கேட்க, 

 

‘சரி’ என்று தலை அசைத்தாள்.

 

“இதற்கு அப்பொறமா என்னை விட்டு தனியா போக நினைக்காத டி, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது டி பிளீஸ்” என்று கூற

 

“இதற்கு அப்பொறம் இப்படி பன்ன மாட்டேன், சொரி” என்றாள்.

 

அவள் நெற்றியில் இதழ்பதித்தவன்,

 

“நாம ஹனீமூன் போகலாமா?” என்று ஆரவ் கேட்க,

 

“மிஸ்டர் ஆரவ் கண்ணா உனக்கு ஏதாவது தலையில் அடிபட்டுச்சா?” என்று கிறு சிரிப்புடன் கேட்க,

 

“யேன்டி?” என்று ஆரவ் கேட்க,

 

“நமளுக்கு கல்யாணம் முடிந்து நான்கு வருஷமாச்சு” என்று கூற

 

“பரவால்லை நாம டாஸ்லின்க்கு பதினைந்து நாள் போறோம். நாளைக்கு கிளம்பலாம் தயாராயிரு” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு கீழிறிங்க அனைவரும் நிம்மதியாக உணர்ந்தனர்.

 

ஆரவின் அருகில் வந்த நவீன் “எதுக்கு அப்பு அம்முவை அடிச்ச? அவங்களுக்கு வலிச்சிருக்கும்” என்று கூற

 

“உன் அம்மு தப்பு பன்னாங்க, அதான் டா” என்று ஆரவ் கூற

 

“முதலில் வோர்ன் பன்னி இருக்கனும், அப்போதும் சொல் பேச்சு கேட்காவிட்டால் தான் அடிக்கனும் அம்மா சொன்னாங்க, நீங்க அம்முவை வோர்ன் பன்னிங்களா?” என்று கேட்க 

 

“இல்லையே” என்று கூற

 

“அப்போ அம்மு கிட்ட சொரி கேளுங்க” என்று நவீன் கூற

 

கிறுவைப் பார்த்து ” சொரி டி” என்றான் ஆரவ்.

 

கிறு புன்னகைக்க, அப்பு க்கூ (துக்கு) என்று ஆரவின் அருகில் இரண்டு வயதான ஆதர்ஷ் அருகில் வந்தான். அவனை தூக்கியவன்

 

“மாமா நாங்க மூன்று பேரும் கோயிலுக்கு போயிட்டு வரோம்” என்று கூறி கோயிலுக்கு அழைத்துச் சென்றான். 

 

அப்போது கிறுவின் அருகில் சென்ற சித்தர் “உன் துயர் அனைத்தும் நீங்கும்” என்று ஆசிர்வதித்தார். பின் அடுத்த நாள் இருவரும் டார்ஸ்லிங்கிற்குச் சென்று ஹனிமூனைக் கொண்டாடி வந்தனர். 

 

இருவரும் சிறிது நாட்கள் டெல்லியிலேயே இருந்தனர். பின் இரண்டு மாதங்களிற்கு பிறகு கொடிகாமத்தை அடைந்தனர். அங்கே கிறு சாப்பிட்ட உணவை ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். அவள் அருகில் வந்தவன்,

 

“இதான் அப்போவே சொன்னேன், ரொம்ப அதிகமா பச்சை மாங்காய் சாப்பிடாதன்னு கேட்டியா? வாய் கிழிய தத்துவம் மட்டும் பேசு” என்று திட்டினான் ஆரவ்.

 

“இதோ பாரு பொன்டாட்டிக்கு உதவி பன்ன முடியல்லன்னா போயிடு, திட்டாத” என்று கிறு கூற

 

“அப்பு அம்முவை திட்டாத” என்றான் நவீன்.

 

“நீங்க இரண்டு பேரும் சேர்ந்து தானே, சாப்பிட்டிங்க” என்றான்.

 

நவீன் சிரிக்க, கிறு மீண்டும் வாந்தி எடுக்க சாவி உடனே நாடியைப் பிடித்துப் பார்த்தார்.

 

“கிறுமா நீ கர்பமா இருக்கடா, எதற்கும் ஹொஸ்பிடல் போய் டாக்டரை பார்த்துட்டு வாங்க” என்று அனுப்பி வைக்க, ஆரவ் கிறு இருவராலும் அதை நம்ப முடியவில்லை. 

 

ஹொஸ்பிடலிலும் உறுதிபடுத்த வீடே மீண்டும் விழாக்கோலம் பூண்டது. ஆரவ் அவளை ஒன்பது மாதமாகப் பார்த்துக் கொண்டான். வளகாப்புவும் பிரம்மாணடமாக நடந்தது. 

 

அவளை விட்டு இமியளவும் ஆரவ் நகரவில்லை. அவளது சிறுசிறு ஆசைகளையும் நிறைவேற்றி சந்தோஷப்படுத்தினான். சிறியவர்கள் இன்னொரு குழந்தை தங்களுடன் விளையாடப் போவதை எண்ணி சந்தோஷம் அடைந்தனர். கிறுஸ்திகா பிரசவலியில் துடிக்க ஆரவினால் அதை தாங்க முடியாமல் அவன் துவண்டுப் போனான். பின் கிறுவின் சாயலில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு “ரித்விக்” என்று பெயர் சூட்டினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 30

நிலவு 30   அன்றைய நாள் மாலை மருதாணி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டு இருந்தன. அனைவரும், பச்சை மற்றும் படர் நிறத்தில் விதவிதமான ஆடைகளை அணிந்து இருந்தனர். கிறு, ஆரவ் அவர்களை விட சற்று வித்தியாசமாக தெரிவதற்காக, அவர்களது ஆடைகளில்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 49

நிலவு 49   “இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே விறுவிறுப்பா மெச் ஆரம்பமாக போகுது. இதுக்காக இங்கே உள்ள எல்லோருமே ஆர்வமாக இருக்காங்க, எந்த கம்பனி செம்பியன்ஷிப் எடுக்க போகிறாங்கன்னு பார்க்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. யேன்னா இங்க ஸ்டேட் லெவல்

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 61

நிலவு 61   ‘வணக்கம் தமிழ்நாட்டு எம்.பி ஜெகனாதனின் ஒரே மகனான அதர்வா சற்று முன் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபரும், இந்திய வலைப்பாந்தாட்ட சம்மேளத்தில் ஒரு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி’ என்று